Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு நாள் சேவையின் மூலம் 5 ஆயிரத்து 294 பேர் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். பிரதேச செயலகங்கள் மூலம் இணையத்தளத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறைமையினால்…

  2. காணி கேட்டவர்களுக்கு பிஸ்கட் வழங்கிய கடற்படை நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த…

  3. இரு இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்றது. குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்திய…

  4. PreviousNext யாழ். மக்களுக்கான அரிய வாய்ப்பு! தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்று (15) யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது. குளோபல் பெயார் இன்றும் (16) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் உள்ள…

    • 0 replies
    • 329 views
  5. 16 JUL, 2023 | 02:04 PM மூதூர் - பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும், உயிரிழந்த பொது மக்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு, பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததுடன், இலங்கையின் வடக்கு, கிழக்கில் இதே 16ஆம் திகதி ஆடி மாதம் 1989ஆம் ஆண்டில் தமிழ் மக்களை இலக்குவைத்து பல்வேறு கிராமங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றமை தொடர்பான நினைவுரையையும் நிகழ்த்தியிருந்தார். …

  6. இந்திய விஜயத்திற்கு முன்னதாக சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்துக்கு முன்பதாக இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விகாமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் போது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. மேலும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை ந…

    • 1 reply
    • 530 views
  7. இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது – சிவாஜிலிங்கம் இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் அவரிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் நிரந்தர அரசியல் தீர்வை காண ஐ.நா.வின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க, அவுஸ்ரேலியா, இந்…

  8. அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கம் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்கும…

  9. சாரதியின் கவனக்குறைவால் விபத்து : 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி தெமோதர பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானமைக்கு சாரதியின் கவனக்குறைவே காரணம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விபத்தில் 21 பேர் காயமடைந்து 11 ஆண்களும், 9 பெண்களும் என பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் ஏறக்குறைய 30 பேர் பயணித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார். ht…

  10. மாணவியை தாக்கிய குற்றச்சாட்டு : யாழில் அதிபர் அதிரடியாக கைது யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபரை நாளை திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாளை முன்னெடுக்க உள்ள…

  11. கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீற்றர் நீளம் கொண்டது. இந்த செயற்கை கடற்கரைக்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் கட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/263397

  12. 16 JUL, 2023 | 11:07 AM யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 'மொபைல் வீடியோ கேம்'க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (15) தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புஷ்பராஜா எழில்நாத் (22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெற்றோருக்கு ஒரே மகனான இவர், வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்தபோது இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகிறது. இந்த மாணவர் மொபைல் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில…

  13. ஐந்து இஸ்லாமிய குழுக்களின் மீதான தடையை நீக்க அரசு முடிவு ! ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஐந்து அமைப்புகளின் தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . புலனாய்வு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் அடங்கிய குழு அளித்த பரிந்துரைகளின்படி, இந்தக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐந்து அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படுகிறது. அதன்படி, ஜம்இய்யதுல் அன்ஸாரி சுன்னத்துல் முகமதியா (JASM), ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ), சிலோன்…

    • 1 reply
    • 169 views
  14. நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு கல்கிசையிலிருந்து கே.கே.எஸ் வரை சிறப்பு ரயில் சேவை ! யாழ்ப்பாணம், நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு (KKS) விசேட புகையிரத சேவை ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து தொடரலாம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்த்துள்ளார் . வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் டிவி வசதிகளுடன் இருக்கும். டிக்கெட் விலை ரூ. 4000 இலங்கை ரயில்வே இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம். பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் என ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஆறு மாத புனரமைப்பு கா…

  15. குருந்தூர் மலையில் பௌத்தபிக்குகள் சிங்களவர்கள் அராஜகம் - இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு - சர்வதேச அமைப்பு 16 Jul, 2023 | 10:57 AM குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்துநிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்களபௌத்ததேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது. குருந்தூர் மலை ஆலயத்தில் பொங்கல் பொங்குவமை பௌத்தமதகுருமார் தலைமையில் சிங்கள கும்பலொன்று தடுக்க முயன்றமை அச்சுறுத்தியமை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை…

  16. பாரிய கடன் சுமையை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் வகையில் உலக வங்கியின் ஆதரவுடன் புதிய திட்டத்தை நிதியமைச்சு தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அரச வங்கிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு நூறு கோடி அமெரிக்க டொலர்கள் கடன்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடன் தொகை இதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் முப்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அறியப்படுகின…

  17. இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கும், சதர மகா தேவாலயத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, காசோலை மூலம் 1 கோடியே 32 இலட்சத்து 99ஆயிரத்து 10 ரூபாவை (1,32,99,010 ) செலுத்துமாறு உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை மின்சார வாரிய தலைமை பொறியாளர் எச். எஸ். பண்டாரவின் கையொப்பத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே உட்பட சதர மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேகளுக்கும் அனுப்பி வைக்கப…

    • 8 replies
    • 852 views
  18. 2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தர முயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கான கல்வி மறுசீரமைப்பு, கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்…

  19. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக் கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார். பல்கலைக்கழக…

  20. கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: NANTHINI 15 JUL, 2023 | 10:22 AM கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் ஈடுபட்டவர்கள் 'இனியும் கலவரம் வேண்டாம்', 'பிரிவினைகள் வேண்டாம்', 'சமூக ஒற்றுமையை குலைக்காதே', 'ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே', 'யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே', 'நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்திய…

    • 0 replies
    • 209 views
  21. இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 01:15 PM இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகி…

    • 0 replies
    • 220 views
  22. “பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 02:15 PM "பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு…

    • 2 replies
    • 338 views
  23. பட மூலாதாரம்,MOHAMED SHAFI கட்டுரை தகவல் எழுதியவர், சுனெத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 14 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை அனைத்தும் இலங்கையில், இஸ்லாமியர்களை வெறுக்கும் பெளத்த மதத்தினரிடையே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள். பெரும்பான்மையாக உள்ள பெளத்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கருத்தடை செய்வதன…

  24. யாழில் தொழில் பயிற்சி நிலையம் வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான காணியைப் பெற்றுத்தருமாறு, நான் யாழ் மாவட்ட செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் …

  25. Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 09:02 AM யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார், ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம், என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்திற்கு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார். நெடுந்தீவு பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.