ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
ஈழத்தமிழர்களை காக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலே தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயுமா? - கொளத்தூர் மணி ஆவேசம் இராணுவ வாகனங்களை - தோழர்கள் ஏன் மறிக்க முயன்றார்கள் என்ற உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், கடுமையான குற்றமாகக் கருதி தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தும் - தமிழக அரசின் பார்வையைக் கண்டிக்கிறோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். கோவையில் ஜூன் 8 ஆம் தேதி நடந்த கண்ட கூட்டத்தில் அவரது உரை: “இந்தக் கூட்டத்தில் நாம் பெரிதும் விவாதிக்க இருக்கும் செய்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுங்கள்; வழக்கை திரும்பப் பெறுங்கள் என்பதை வலியுறுத்துவதற்கு அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்…
-
- 1 reply
- 929 views
-
-
எமது கைகளில் இரத்தம் தோய்ந்துள்ளது: பேராசிரியர் சூரியநாராயணன் எமது கைகள் இரத்தம் தோய்ந்துள்ளதாக” இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் நிலையம், சென்னையில் கடந்த திங்கட்கிழமை நடத்திய நிகழ்வின் போது உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக புதுடில்லி அரசாங்கம் தமிழ் நாட்டை கலந்தாலோசிக்காது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளித்தது. இந்தநிலையில் இது குறித்து ஐ.நா. வாக்களிப்பின்போது இந்தியா வாக்களிக்காம…
-
- 0 replies
- 828 views
-
-
நாடகங்களைக் கைவிட்டு இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் - பிரதமர், தமிழக முதல்வருக்கு பழ.நெடுமாறன் தெரிவிப்பு திகதி: 10.06.2009 // தமிழீழம் நாடகங்களைக் கைவிட்டு இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற முதல்வர் கருணாநிதியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டினர். அ…
-
- 2 replies
- 606 views
-
-
ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன் புதன்கிழமை, ஜூன் 10, 2009, 11:55 [iST] டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது. அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன். இலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள பத்திரிக்கையாளர்கள் மேனனை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடையே மேனன் பேசுகையில், இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மறு சீரமைப்பு குறித்துதான் இருக்க முடியும். இதை இலங்கை அரசுதான் தீர்மான…
-
- 4 replies
- 1k views
-
-
வவுனியா, செட்டிக்குளம் தடுப்பு முகாம்களில் இரண்டு நாட்களில் 22 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 பேரும் திங்கட்கிழமை 8 பேரும் இறந்துள்ளனர். இவர்களின் உடலங்கள் மரண விசாரணைக்காக வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இறந்தவர்கள் அனைவரும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என வவுனியா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இயற்கை மரணங்கள் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் செட்டிக்குளத்திலேயே அதிகூடிய இறப்பு நிகழ்ந்துள்ளது. போதிய உணவு, குடிநீர் கிடைக்காமை, சீரற்ற சுகாதாரம், கடும் வெப்பம், மருத்துவ வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வயோதிபர்களை தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிப்பது தொட…
-
- 4 replies
- 507 views
-
-
ஈழத்தமிழர் அழிவுக்கு இந்திய அரசும், கருணாநிதியுமே காரணம்: இராமதாஸ் இலங்கையில் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் சாவுக்கு இந்திய அரசும், கருணாநிதியுமே காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் ஒரே நாளில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலகமே அவர்களுக்காக கண்ணீர் சிந்தியது. ஆனால் இதுபற்றி முதல்வர் கருத்து எதுவும் கூறவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று வலியுறுத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இலங்கை அரசு கடுமையாகச் சாடியுள்ளது.…
-
- 4 replies
- 748 views
-
-
வணங்காமண் கப்பலை திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற செயல்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வணங்காமண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற கொடிய செயல் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டினர். அவற்றை ‘வணங்காமண்’ என்னும் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது மனித நேயமற்ற கொடிய செயல். இந்நிலையில், இலங்கைத்…
-
- 0 replies
- 519 views
-
-
ஈழத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களை சர்வதேச அமைப்புகள் வழியே நிறைவேற்ற வேண்டும்: தா. பாண்டியன் http://www.meenagam.org/?p=4775 ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை இலங்கை அரசு மூலம் நிறைவேற்றாமல் அய்.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் வழியாகவே செயல் படுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் வற்புறுத்தியுள்ளார். அவரது முழுமையான உரை: “நம்மோடு இந்த மேடையில் இருக்க முடியாது சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ம.தி.மு.க. மாணவரணி பொறுப்பாளர் சந்திரசேகர், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் இலட்சுமணன் மற்றும் வேறு பல தோழர்கள் அநியாயமா…
-
- 0 replies
- 380 views
-
-
பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது: தமிழருவி மணியன் ஜபுதன்கிழமைஇ 10 யூன் 2009இ 09:03 மு.ப ஈழம்ஸ ஜப.தயாளினிஸ ஈழத்தில் வாடும் தமிழரும்இ புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். "அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்" என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங்இ நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந…
-
- 2 replies
- 1.3k views
-
-
தாயக மக்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'வணங்கா மண்' என்ற கப்பலை சிறிலங்கா அரசாங்கம் பொருட்களுடன் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: தாயக மக்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கப்டன் அலி' எனும் பெயர் கொண்ட 'வணங்கா மண்' கப்பலை சிறிலங்கா அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை திருப்பி அனுப்பியுள்ளது. சிரியா நாட்டில் பதிவுசெய்யப்பட்ட இந்தக் கப்பலில் இருந்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் இறக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புதினம்
-
- 3 replies
- 798 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மூன்று மாத விடுமுறை வழங்கக்கூடாதென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்பொழுது வெளிநாடுகளிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கஜேந்திரன், எஸ்.ஜெயானந்தமூர்த்தி மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் சபைக்கு சமூகமளிக்கமுடியாததால் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்குமாறு சக பாராளுமன்ற உறுப்பினர் சிவசங்தி ஆனந்தன் மூலம் கோரிக்கைவிடுத்திருந்தனர். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்துக்கு எ…
-
- 0 replies
- 845 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு வெளிநாடு்ம் தலையிட முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு தீர்வு முயற்சியிலும், இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். இலங்கையும் இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத நெருங்கிய நண்பர்களாக உள்ளோம் என, புதுடில்லி வந்துள்ள இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை , இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்தியத் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மேலும் பேசுகையில், நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும். இலங்கையில் ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
Tamils problem larger than that of LTTE
-
- 7 replies
- 1.2k views
-
-
Ramakrishna Mission engaged in relief work for war victims
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் 6/10/2009 10:28:35 AM - கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்கு நேற்று இரவு வந்திறங்கிய சமயம் விடுதலை புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவதாகத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இராஜினாமாச் செய்வது என்ற தனது முடிவை ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென அமைச்சர் கூறினார். தனது கடமையை நாட்டுக்குச் செய்வதற்கு இதுவொரு சிறந்தவழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் முக்கிய பங்காற்றியிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ளுவாரா என்பது தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியா…
-
- 8 replies
- 3.1k views
-
-
இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! வாய…
-
- 2 replies
- 922 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கௌரவிக்கும் நோக்கத்துடன் 'கோத்தபாய றெஜிமென்ட்' என்ற இராணுவப் பிரிவை உருவாக்க வேண்டும் என கொழும்பு பௌத்த கோட்பாட்டு சபை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கௌரவிக்கும் நோக்கத்துடன் 'கோத்தபாய றெஜிமென்ட்' என்ற இராணுவப் பிரிவை உருவாக்க வேண்டும். கோத்தபாய நாட்டுக்குச் செய்த சேவைக்கு மதிப்பளித்து இதனை மேற்கொள்ள வேண்டும். கோத்தபாய படையினரை சரியான முறையில் வழிநடத்தியிருந்தார். நாட்டின் எல்லாப் பகுதியையும் படையினர் கைப்பற்றியது பாராட்டத்தக்கது. மகிந்த ராஜபக்சவின் பெயர் சரித்திரத்தில் ப…
-
- 2 replies
- 675 views
-
-
சென்னையில் சிறீலங்காவின் தூதரக உயர்அதிகாரியாக பணியாற்றிய அம்சா இலண்டனுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார் Sri Lanka rewards its man in Chennai with London posting CHENNAI: Sri Lankan President Mahinda Rajapaksa is turning Santa Claus, rewarding his men who fought the war against the LTTE, whether on the battle front or from behind the scenes. PM Amza, who is Sri Lankan Deputy High Commissioner in Chennai, has been posted to London. He is waiting for his orders and is likely to leave soon to take on the new post of deputy high commissioner in the London office. The posting is seen as a reward for weathering the storm during the final phase of the war a…
-
- 0 replies
- 764 views
-
-
தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்களையும் தமிழ் மக்களின் அவாக்களையும் உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டும் வகையில் அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். "அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்" என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் 'தமிழா... உன் கதி இதுதானா?' எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்…
-
- 0 replies
- 831 views
-
-
TNA to meet Indian Prime Minister
-
- 0 replies
- 508 views
-
-
மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிறிலங்கா, வடகொரியா ஆகிய நாடுகளின் நிலை தொடர்பாக நோர்ட்டிக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஐஸ்லாந்தில் கூடி ஆராயவுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐந்து நோர்க்டிக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஐஸ்லாந்தில் உள்ள றெக்ஜாவிகில் கூடி மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிறிலங்கா, வடகொரியா ஆகியவற்றின் நிலை தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆராயவுள்ளனர். இக்கூட்டத்தின் போது அவர்கள் நோர்ட்டிக் நாடுகளின் வெளிவிவகார கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பாகவும் ஆராய உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. புதினம்
-
- 0 replies
- 549 views
-
-
விடுதலை புலிகளிற்கு ஆதரவாக பேசும் இலங்கையரின் விசா இரத்துச் செய்யவேண்டும் :சுப்ரமணியம் சாமி வீரகேசரி இணையம் 6/9/2009 10:56:40 AM - இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் இலங்கை நாட்டவரின் விசாவை ரத்து செய்து அவர்களை உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,"இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்யும் அவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பேசுவதற்கு அந்நாட்டினருக்கு உரிமை கிடை…
-
- 16 replies
- 1.8k views
-
-
இலங்கை அரச பயங்கரவாதிகள் தமிழீழ மக்களை ஒரு பூச்சியை விட கேவலமாக நடத்துகின்றார்கள் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதலின் போது முல்லைத்தீவுப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய மூன்று இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் முகாமுக்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்ற ஒரு வயதானவர் தான் அங்கு கண்டவற்றை இங்கு விபரிக்கிறார். வவுனியாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மெனிக் முகாம் அமைந்துள்ளது. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய முகாம் இது. 160000 ற்கு மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கடும் எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இறுதி நேரத்தில் வெ…
-
- 0 replies
- 959 views
-