ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 23 AUG, 2023 | 03:03 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார். தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு, விஜயம் செய்து அதனை பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/163008
-
- 4 replies
- 584 views
- 1 follower
-
-
சீன கப்பல் இலங்கை வருவதற்கு முன்னர் இலங்கை வருகின்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் பெட்ரோலியப் பொருட்களை மாற்றுவதற்காக இரு நாடுகளையும் இணைக்கும் குழாய் திட்டத்தை அமைக்கும் இறுதி நோக்கத்துடன் இந்தியா முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். …
-
- 3 replies
- 655 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 25 AUG, 2023 | 10:34 AM யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காகச் சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், அவர் வியாழக்கிழமை (24) வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதுடன், தண்ணீர் இறைக்கும் மோட்டாரை கிணற்றினுள் தூக்கி வீசியுள்ளார். அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்த…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
பண்ணை நாக பூசணி அம்மனுக்கு கொட்டகை அமைக்க முயற்சி – காவல் இருந்த காவல்துறையினா் adminAugust 24, 2023 யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்டம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாக பூசணி அம்மனுக்கு , கொட்டகை அமைக்க முற்பட்டவர்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தியுள்ளனர். அம்மன் சிலைக்கு கொட்டகை அமைக்கும் முயற்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சிலர் ஈடுபட்டு இருந்தனர். அவ்வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அதனை அவதானித்து , யாழ் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனர். அதனை அடுத்து அங்கு வந்த பொறுப்பதிகாரி , சிலை விவகாரம் ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதனால் இப்பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும் ஆயின் , உரிய அனுமதிகளை பெற்று , அம…
-
- 1 reply
- 338 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 AUG, 2023 | 04:47 PM சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகிறேன். ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது, நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி…
-
- 2 replies
- 344 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 JUN, 2023 | 12:51 PM குமுதினி படகின் திருத்த வேலைகள் முடிவடைந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (20) படகு கடலினுள் இறக்கப்பட்டது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், படகின் திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (20) படகினை கடலுக்குள் இறக்க…
-
- 4 replies
- 430 views
- 1 follower
-
-
திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞர் : நீதிக்கோரி ஆர்ப்பாட்டம் Digital News Team திருகோணமலை பொலிஸில் தடுப்பில் இருந்த போது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஜமாலியா தக்வாநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளார். கைதானவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Thinakkural.lk
-
- 0 replies
- 367 views
-
-
Published By: VISHNU 24 AUG, 2023 | 12:06 PM யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில், புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம். வியாழக்கிழமை (24) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்ட…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
30ஆம் திகதி பாரிய பேரணி adminAugust 24, 2023 சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள் , மத குருமார்கள் என அனைத்து தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரியுள்ளனர். போராட்டத்திற்கு செல்வோருக…
-
- 0 replies
- 228 views
-
-
Published By: RAJEEBAN 24 AUG, 2023 | 10:58 AM காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதிவழங்கப்படும்என காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களை தேடும் பொறிமுறையை துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்த செயற்பாடுகள் வெளிப்படையாக இடம்பெறுவதாகவும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போன தனிநபர்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் முதற்கட்டத்தினை டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய …
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
24 AUG, 2023 | 09:57 AM நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்ட கால முதலீடுகள் ஆகிய 4 துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்க கூட்டத்தில் உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புற…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்துவதே யதார்த்தபூர்வமானது - தமிழ்த்தேசிய அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுக்கு அமெரிக்கத்தூதுவர் ஆலோசனை Published By: VISHNU 23 AUG, 2023 | 09:18 PM (நா.தனுஜா) இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இதனை யதார்த்தபூர்வமாக அணுகவேண்டியது அவசியம் எனவும், அரசியலமைப்புசார் மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் எவையும் இல்லாத நிலையில் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாகத்தை வலியுறுத்துவதே சிறந்தது என்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இவ்வாரம் வடமாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 AUG, 2023 | 02:57 PM ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 இல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் 2024 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சாக்களுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடு தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்சாக்களின் பிரதிந…
-
- 3 replies
- 285 views
- 1 follower
-
-
13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சிதன்மையை வெளிப்படுத்தவேண்டும் Posted on August 23, 2023 by தென்னவள் 4 0 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் எனஇந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் சிறுபான்மையினத்தவர்களுக்கு சமஉரிமையை வழங்க முயலும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சர்ச்சைக்குரிய விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போது இது தொடர்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் தல…
-
- 8 replies
- 675 views
-
-
Published By: VISHNU 22 AUG, 2023 | 10:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரவில்லை. இரவு பொருளாதாரத்தை அமுல்படுத்தாவிட்டால் சுற்றுலாத்துறையில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. மதுபானங்களின் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் இல்லாவிடின் சாரயம் காச்சி குடிப்பவர்களினதும் போதைப்பொருள் பாவனையாளர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கும் அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான …
-
- 2 replies
- 275 views
- 1 follower
-
-
23 AUG, 2023 | 09:14 PM யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கும்பலை சேர்ந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பகுதிகளில் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் நேரம் கேட்பது, வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து வழிப்பறியில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. அத்தோடு இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஐந்து துவிச்சக்கர வண்டிகளையும் திருடியுள்ளனர். இவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசா…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 AUG, 2023 | 10:03 PM (எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்) நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்கள் ஒரு சாராருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அவை முழு நாட்டு மக்களினதும் சொத்தாகும் . என்றாலும் தொல்லியல் சின்னங்கள் அடையாளம் காணப்படும் போது அவ்விடத்தை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதனாலேயே பிரச்சினைகள் உருவாகின்றன என எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (22) நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் ஆ…
-
- 1 reply
- 371 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 AUG, 2023 | 08:22 PM 2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது. 45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் …
-
- 3 replies
- 730 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 AUG, 2023 | 07:46 AM கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது, எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனத…
-
- 22 replies
- 1.2k views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 23 AUG, 2023 | 11:32 AM போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர். இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தவரின் தாயார் வருகை தந்து வவு…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய எதிர்பார்த்த மாணவர்கள் சுமார் 5 வருடங்களாக கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவில்லை என அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த கொவிட் பருவத்தில், பல ஆசிரியர் கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன அதன் பயன்பாட்டிற்குப் பின்னர் அங்கிருந்த மெத்தைகள் மற்றும் தலையணைகள் அழிக்கப்பட்டதால் அவர்களின் பல வளங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கல்வியியலாளர் சேவை விரி…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
Published By: VISHNU 17 AUG, 2023 | 08:03 PM குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி, அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்கும…
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும் இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். (a) Tamilmirror Online || இன்சுலின் இல்லை
-
- 8 replies
- 863 views
- 1 follower
-
-
நான் ரஜனிகாந் அல்ல : மனோ கணேசன்! யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசுக்கு சொந்தமான ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது. இது மலையக மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏற்பட்டுள்ள அவமானமாகும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட முகாமையாளரை உடனடியாக கைது செய்யுங்கள். சம்பவம் இடம்பெற்றபோது அமைச்சர் ஒருவர் அங்கு சென்றார் என இவர்கள் கூறுகிறார்கள். எனக்கும் அங்கு…
-
- 3 replies
- 591 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் சென்று 200 ஆண்டுகளாகி விட்டாலும் அவர்களின் வாழ்க்கை என்னவோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மேம்படவில்லை. மலையகத்தின் மாத்தளை பகுதியில் மலையக தமிழர் ஒருவரின் வீடு ஒன்று, தோட்ட நிர்வாகத்தால் உடைக்கப்பட்ட நிகழ்வு அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமான பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர். வீட்டை உடைதெறிந்த தோட்ட உதவி…
-
- 1 reply
- 594 views
- 1 follower
-