ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக நவனீதம்பிள்ளை குற்றச்சாட்டு : இலங்கையின் வடபகுதியில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களின் போது யுத்த குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் யுத்த குற்றங்களை புரிவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வன்னி யுத்த வலயத்தில் உள்ள சிவிலியன்களின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு கரையோரப் பகுதியில் சிக்கி அல்லலுறும் 180,000 சிவிலியன்களை …
-
- 2 replies
- 713 views
-
-
US Secretary of State Hillary Clinton telephoned President Mahinda Rajapaksa this evening. dailymirror.lk
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்கள்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கும் ஹிலறி கிளிண்டனுக்கும் இடையிலான இந்தத் தொலைபேசி உர…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
தாயகத்தில் மக்கள் படும் அவலங்கள் தொடர்பாகவும் புலம்பெயர் மக்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் வழங்கிய கருத்துக்கள் http://www.tamilnaatham.com/audio/2009/mar...an_20090314.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
In a call made to Sri Lanka's President Mahinda Rajapaksa, U.S. Secretary of State Hilary Clinton 'expressed the United States' deep concern over the deteriorating conditions and increasing loss of life occurring in the Government of Sri Lanka-designated 'safe zone' in northern Sri Lanka,' and 'stated that the 'Sri Lankan Army should not fire into the civilian areas of the conflict zone,' a press release issued by the U.S. State Department said. Meanwhile, US State Department South Asia official, Diane Kelly, commenting on 'distorted' accounts appearing on some Sri Lanka websites, said: "there was a call, but it was not the sunny news relayed." U.S. DEPARTMENT O…
-
- 1 reply
- 592 views
-
-
இந்திய மருத்துவர்களின் வருகையால் சிறிலங்கா மருத்துவர்கள் சீற்றம் யுத்தத்தால் காயமடையும் வன்னி பிரதேச மக்களுக்கு சிகிச்சையளிக்கவெனக் கூறிக்கொண்டு புல்மோட்டையில் இந்திய வைத்திய முகாம் அமைத்துள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதென அகில இலங்கை அரசாங்க வைத்திய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. புல்மோட்டையில் ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்திற்கு வைத்தியசாலை ஒன்று இருக்கும் பொழுது ஏன் வேறொரு வைத்தியசாலையை அமைக்க வேண்டும். இந்திய வைத்தியர்கள் புல்மோட்டை அரச வைத்தியசாலையின் ஊடாக ஏன் சேவையாற்ற முடியாது. இந்தியா மெதுவாக இலங்கையை தமது ஆக்கிரமிப்புக்கு கொண்டு வருகின்றது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. புல்மோட்டையில் அமைக்கப்பெற்ற இந்தியாவின் வைத்தியசாலை தொடர்பா…
-
- 1 reply
- 1.1k views
-
-
வரலாற்றில் என்றுமில்லாதவாறு, இவ்வருடம் இலங்கை பென்னம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சிஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. அக்கட்சியின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர் நோக்கப்போவதாக விவரித்திருக்கிறார். அதற்கான காரண காரியங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசைக் கொண்டு நடத்துவதற்கு நாட்டை இயங் கச் செய்வதற்கு மக்களின் வாழ்க்கை நிலை மேலும் ஆழமான குழிக்குள் விழாமல் தடுப்பதற்கு இந்த வருடத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபா தேவை. ஆனால் அரசாங்கம் 19 ஆயிரம் கோடி ரூபாவை மட்டுமே சர் வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டிரு…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல…
-
- 0 replies
- 740 views
-
-
தமிழ் மக்களது உணர்வுகளுக்கு எவ்வளவு தூரம் இலங்கை அரசாங்கம் முக்கியத்தும் அளித்து செயற்படுகின்றது என்பதனை அடிப்படையாக வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என தெற்காசிய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பூரணமாக பெற்றுக்கொள்ள கொழும்பு அரசாங்கம் காட்டும் முனைப்பைப் பொருத்து புலிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்கள் பாதுகாப்பற்ற தன்மையையே தற்போது உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மரபு ரீதியான இராணுவப் படைப் பிரிவொன்றையும், மரபு சாரா போரட்டக் குழுவொன்றினையும் ஒப்பீடு செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து தினசரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்: இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக் குழுவுக்கு தினசரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்து வருவதாகத் தெரிய வருகிறது. இதன்காரணமாகவும் இலங்கையின் நெருக்கடி நிலை காரணமாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவில் முக்கியமாகப் பேசப்படும் நாடாக இலங்கை விளங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக் குழுவின் பத்தாவது மகாநாட்டில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களையும் சுதந்திர ஊடகவியலாளர்களையும் கொண்ட ஒரு க…
-
- 0 replies
- 825 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல…
-
- 5 replies
- 981 views
-
-
தினமும் இலங்கை பிரச்சனை தொடர்பாக 10,000 மின் அஞ்சல்கள் வருகின்றன - நவநீதம் பிள்ளை மின் அஞ்சல் மூலம் அனுப்ப… Friday, 13 March 2009 ஜெனீவாவிவில் தற்போதை நடைபெற்று வரும் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான 10வது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்று வரும் மனித அவலம் குறித்தே முக்கியமாக பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அங்குள்ள நிலவரம் தொடர்பாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின் அஞ்சல்கள் தமக்குக் கிடைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். சுயமாக சிறீலங்காவிலிருந்து வந்திருந்த மனித நேய அமைப்பின் சட்டத்தரணி நிமல்கா பர்ணாந்து மற்றும் சுதந்திர ஊடகவிலாளர் ரவி சந்திரலால் ஆகியோருடன் கூடிய கு…
-
- 9 replies
- 1.9k views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்காக காத்திருக்கும் இலங்கை "ரூபாவும்' பங்குச்சந்தையும் [13 - March - 2009] சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலர் கடன் தொகையை பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கி பேச்சு வார்த்தை மேற்கொண்டுவரும் நிலையில் நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை இலங்கையின் நாணயமும் பங்குச்சந்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சாத்தியமான நிபந்தனைகள் தொடர்பான கேள்விகளையும் பதில்களையும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருக்கிறது. பிரதான விளைவு எத்தகையதாக இருக்கும் சாத்தியம் காணப்படுகிறது? சாதகமற்ற நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படாது என்று மத்திய வங்கி கூறுகின்றபோதிலும் கடனுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியா ஒருகாலத்தில் இலங்கைக்கு பலவந்தமாக பருப்பு கொடுத்தது. தற்போது அதேபோல் மருந்து கொடுக்க முயற்சிப்பதாக ஜே.வீ.பீயின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரிவினைவாதத்தை வெற்றிப் பெற செய்யும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை மூலம் தாம் நாடாளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்தியதாகவும் எனினும் அரசாங்கம் அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கம் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மக்களின் ஆணையை புறக்கணிக்க முயற்சிக்கின்றது. அது மாத்திரமல்ல நாட்டின் இறையாண்மை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையள…
-
- 0 replies
- 690 views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நாளாந்தம் பரவலாக கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் நிகழ்வில் 12 ந்திகதி வியாழக்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Ellesmere சந்திப்பில் நிகழ்த்தப்பட்ட கவனயீர்ப்பின் காட்சிகள் சில மேலும் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 699 views
-
-
பிரபல ஓவியரான மருது வினவு தளத்திற்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியத்தை இங்கே பதிவு செய்கிறோம். அவர் புதிய கலாச்சாரம், மற்றும் ம.க.இ.க அரசியல் இயக்கங்களுக்காக பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த ஓவியத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு ஈழமும் இந்திய தமிழக அரசியல்வாதிகளும். ஓவியர் மருதின் தூரிகையில் தீட்டப்படும் ஓவியங்கள் வினவில் தொடர்ந்து இடம்பெறும். ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் ஈழம் குறித்து பல ஓவியர்கள் வரைந்த கூட்டு நிகழ்வில் அவர் தீட்டிய ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை. வினவில் அவரது ஓவியங்களை தொடர்ந்து பதிவு செய்வோம். ஒவியங்கள்: http://vinavu.wordpress.com/2009/03/13/eelam29/ வினவு தளத்திலிருந்து http://vinavu.wo…
-
- 2 replies
- 1.6k views
-
-
திருகோணமலையில் ஐந்து அகவை சிறுவன் கடத்தல் – 10 இலட்சம் கப்பம் கோரல் திருகோணமலையில் ஐந்து அகவையுடைய சிறுவன் ஒருவன் இனம் தெரியாதோரால் கடத்தில் செல்லப்பட்டிருப்பதாக, அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவனைக் கடத்திச் சென்ற ஆயுத நபர்கள், குறிப்பிட்ட சிறுவனின் பெற்றொரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பாடசாலைக்கு முன்பாக இந்த சிறுவன் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், கடத்தப்பட்ட சிறுவன் பற்றிய மேலதிக விபரங்களை சிறீலங்கா காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. நன்றி பதிவு இணையத்தளம் இச் சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்
-
- 3 replies
- 1k views
-
-
ஈழத்தமிழரை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்? வரலாற்றுக் காலம் தொடக்கம் இந்தியாவின் நேசசக்தியாக ஈழத் தமிழினம் இருந்து வந்துள்ளது. மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீண்ட ஒரு வரலாற்று உறவு இந்திய இலங்கை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்தியா சந்தித்த வெற்றிகளின் போதும் தோல்விகளின் போதும் இந்திய மக்கள் அனுபவித்த அதே மன உணர்வை ஈழம் வாழ் தமிழர்களும் வெளிப்படுத்தினர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக எழுந்த இந்திய சீனப் போரின் போதும் இந்திய பாகிஸ்தான் யுத்தங்களின் போதும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பக்கமே நின்று குரல் கொடுத்தனர். ஆனால்இ இதற்கு மாறான உணர்வுலைகளையே சிங்கள தேசம் காலம் காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளது. இந்தியா வெளியிலி…
-
- 9 replies
- 1k views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 542 views
-
-
பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள உரிமைப் போருக்கு ஜரோப்பாவில் இருந்து செல்வோருக்கான வாகன ஏற்பாடுகளின் விபரம்
-
- 1 reply
- 784 views
-
-
ஈழ விடுதலைக்கு தொப்பூள் கொடி உறவுகளுக்காகத் தாய்த் தமிழகம் கிளர்ந்து எழும் வேளையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பான பேட்டி வருமாறு:- 'பத்துத் தடவை பாடை வராது பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா! செத்து மடிவது ஒருமுறைதானடா சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' என்று கேள்வி: கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? 1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ…
-
- 1 reply
- 1k views
-
-
திருகோணமலையில் கப்பம் கோரி சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவால் கடத்தப்பட்ட சிறுமி இன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-