ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இனப் படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் ஆதரவு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மாபெரும் கண்டன ஊர்வலத்தை பாரிசில் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 548 views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் தெற்காசியாவின் கிட்லர் ராஜபக்சே. ராஜபக்சே நாசமா போவான் சபிக்கும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பேனரை வைத்த அப்பகுதி தமிழ் ஈழ உணர்வாளர்கள், ராஜபக்சேவின் படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பத்தால் கட்டிய மாலையும் அணிவித்திருந்தனர். படத்தை பார்க்க..... http://www.tamilskynews.com/index.php?opti...amp;Itemid=56//
-
- 2 replies
- 986 views
-
-
இந்திய மத்திய அரசு சொல்லும் எதனையும் பொன் வாக்காக எடுத்துக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் நேற்று தூத்துக்குடியில் வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கு உச்ச புகழாரம் சூட்டியுள்ளார். இதொடர்பாக கருணாநதி கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி அந்த விழா மேடையிலேயே என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா? இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான். அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி? தூத்துக்குடி விழாவில் அந்த …
-
- 11 replies
- 2.5k views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த புரூஸ் பின் லண்டன் விஜயம்: இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த புரூஸ் பின் லண்டன் விஜயம்: இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பின் லண்டனுக்கு வியம் செய்துள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் குறித்து வெல்ட்டோனில் புரூஸ் பின் விசேட உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெல்ட்டோனில் உள்ள ஐயப்பன் ஆலயமொன்றில் புரூஸ் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து பிரித்தானிய அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்த ராயபக்ச இந்தியா பற்றி குறிப்பிடும் கருத்துக்கள். இதை உங்களிக்கு தெரிந்த இந்தியர்களுக்கு அனுப்பி வையுங்கள்
-
- 0 replies
- 784 views
-
-
புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் video1/03/20009 Get Flash to see this player. http://www.tamilkathir.com/news/1108/58//d,view_video.aspx thanks www.tamilkathir.com
-
- 2 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.8k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் "தமிழீழம் பணியாது" என்ற தலைப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- தமிழீழம் பணியாது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதுவது வணக்கம் தமிழீழத் தமிழரான நாங்கள் தாயகத்தில் படும் துயரம் சொல்லில் அடங்காதவை. என்பதை நீங்கள் அறியாதவை அல்ல. எமது துயரம் முழுஉலகமும் அறியும் எனினும் நாங்கள் தன்மானத்துடன் வாழ விரும்புகின்றோம் என்பதை நான் உங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகின்றேன். "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பர்" இம்மொழி எமக்கு சாலவும் பொருந்தும்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொன்னான வாக்குகளைப் போடுங்கள் http://www.sundaytimes.lk/ simpoll/test_poll.php
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை இனப் பிரச்சனையை தீர்க்க எங்களால் மட்டுமே முடியும் என்று பாஜகவின் தமிழ் மாலில துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எச்.ராஜா, இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க பாஜகவால் மட்டுமே முடியும். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சர்வத்சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அவர் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கி, பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்தார். ஆனால் இப்போது உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு போனவுடனேயே திரும்பி வந்துவிட்டார். போன வேகத்தில் திரும்பி வந்தவர் தமிழர்கள் பற்றி என்ன பேசியிருக்க முடியும். போர் நிறுத்தம் செய்யப்படவே…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி. மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிம…
-
- 2 replies
- 839 views
-
-
ஜப்பானிய அரசாங்கம் இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி வந்த நிதிஉதவிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. நிதிஉதவிகளுக்கு பதிலாக கடன்களை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடியில் ஜப்பானும் சிக்கியுள்ளமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உலக பொருளாதார நெருக்கடி ஜப்பானையும் பாதித்துள்ள நிலையில் நிதி உதவிகளுக்கு பதிலாக கடனுதவிகளை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் வேறு நாடுகளுக்கு உதவியளிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிகளவு நிதி உதவிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளை வழங்கி வரும் ஜப்பான் நிதி உதவிகளை நிறுத்தி…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஈழத்தமிர்கள் பற்றி கவலைப்படவில்லை பிரபாகரனை பிடிப்பதில்தான் காங்கிரஸ் முனைப்பு - நாஞ்சில் ஈழத்தமிர்கள் பற்றி காங்கிரஸ்காரர்கள் கவலைப்படவில்லை பிரபாகரனை பிடிப்பதில்தான் முனைப்பு காட்டுவதாக ம.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற அரசியல் விளக்கமளிக்கும் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை…
-
- 0 replies
- 678 views
-
-
வீரகேசரி நாளேடு - வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்க…
-
- 10 replies
- 2.6k views
-
-
புது தில்லியின் தமிழர் எதிர்ப்புச் சதி adakki vaasikkappaduhiRathu?! - தமிழ்நெட் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் முற்று முழுதான நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான கோரிக்கையை மழுங்கடிக்குச் செய்யும் நோக்குடன் இந்தியா தனது குரலை சற்று மாற்றி பிரணாப்பினூடாக தர்காலிக மோதல் தவிர்ப்பொன்றை புலிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏற்றுக்கொள்ளுமாறு சிங்களத்துக்கு ஆலோசனை கேட்டிருக்கிறது. ஆனால் இதற்கான பதில் என்னவென்பதை சதிகார இந்திய ஆளும்வர்க்கம் அறிந்திருந்தும் இதைக் கேட்பது முற்றுமுழுதான் ஏமாற்று வித்தை அன்றி வேறில்லை. தொடர்ந்து வாசிக்க......... New Delhi's stratagem seeking 'pause' [TamilNet, Saturday, 28 February 2009, 22:13 GMT] India's External Affairs Minister Prana…
-
- 7 replies
- 1.8k views
-
-
இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது..உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது. எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழ…
-
- 28 replies
- 3k views
-
-
இந்திய அரசை வழிநடத்தும் காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான். தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை. மதி.மு.க. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்து மதி.மு.க. சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றும் சரியான தீர்வாக இருக்க முடியாது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறு…
-
- 0 replies
- 940 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூரமான போருடன் ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படுவதைக் கண்டித்தும் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதனைக் கண்டித்தும் 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் ந.வித்தியாதரன் கடத்தி பின்னர் கைது செய்யப்பட்டதனை கண்டித்தும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
தமிழரை முற்றாக அழிக்கும் சிங்களவனின் போருக்குத் தலையாட்டும் ஐ.நா - தமிழ்நெட் UN nods ‘fight to the finish’ [TamilNet, Saturday, 28 February 2009, 04:04 GMT] The position taken by UN Security Council Friday indicating no go beyond ‘hearing’, and the considerate briefing of John Holmes largely endorsing and trusting Colombo’s agenda and assurances for civilians, are read between the lines by international political observers as a ‘knowing wink’ at Colombo to pursue its offensive. Alternatively, the UN stance either paves way for intervention by interested powers outside of the UN or perhaps reveals an actuality that the UN can be shaken not when people face genocid…
-
- 12 replies
- 1.6k views
-
-
தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் நமது மக்களின் தேசியப் பங்களிப்பும் திகதி: 01.03.2009 // தமிழீழம் // [] உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழ் பேசும் மக்கள் முன் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எழுந்துள்ள பல கேள்விகளுள் முதன்மையானது, நம் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பங்களிப்பு பற்றியதுமாகும் என்பதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எமது சுதந்திரப் போராட்டம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகி முப்படைகளுடன் வெற்றிநடையிட்டும் வருகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் சிங்கள சிறிலங்கா அரசு இறுதியாகச் செய்த "யுத்த நி…
-
- 0 replies
- 830 views
-
-
வன்னியில் ஒரு கிலோ செத்தல் மிளகாய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மீன் கிலோ ஆயிரம் ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படும் அதேவேளை எந்த ஒரு மரக்கறியும் கிலோ ஆயிரத்து ஐநூறு ரூபாவுக்கு அதிகமாகவே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எந்த ரகத்தைச் சேர்ந்த அரிசியும் கிலோ முந்நூறு ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தீப்பெட்டி, பனடோல். கொத்தமல்லி, கடுகு, சீரகம், மிளகு போன்றவற்றிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய்யை பார்ப்பதே அரிதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 896 views
-
-
TNA நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் சதாசிவத்தின் செயலாளர் கடத்தப்பட்டுள்ளார் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் சதாசிவத்தின் செயலாளர் செல்லத்துரை சபாநாதன் (50) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சனியன்று மாலை மூன்றரை மணியளவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஒரு பெண் உட்பட 10 பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் 250‐2142 இலக்கம் கொண்ட வெள்ளைநிற வானிலேயே இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். அவர் கடத்தப்படுவதைத் தடுத்த அவரது மனைவியையும் பொருட்படுத்தாது கடத்தல்காரர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட செல்லத்துரை சபாநாதனுடைய மனைவி வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் …
-
- 0 replies
- 548 views
-
-
முற்றான தமிழர் அழிவை விரும்பும் புஷ்ஷின் ஆவி - தமிழ்நெட். வரலாற்றின் பாடங்களின்படி எப்போதுமே இனக்குழுக்கள் வென்றதாகவோ அல்லது தோற்றதாகவோ இருக்கவில்லை. அது எப்போதுமே அடக்கப்பட்டவர்களதோ அல்லது ஆக்கிரமிப்பாளர்களதோ வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ தான் எழுதப்பட்டிருக்கிறது. இறுதிவரையான யுத்தம் என்பது வெல்பவர்களினதும், தோற்பவர்களினது மீதமிருக்கும் எச்சங்களை அல்லது பிணங்களை உண்ணக் காத்திருந்து மேலே சுற்றி வட்டமிடும் பிணந்திண்ணிக் கழுகுகளின் விருப்பமான மேடையாகத்தான் இருந்திருக்கிறது. இறுதிவரையான யுத்தம் என்பதுதான் அடக்கப்பட்ட அல்லது அழிக்கப்படும் மக்களுக்கு முன் இருக்கும் ஒரே தீர்வானால் அவகளுக்கும் அதை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை.........தொடர்ந்து வாசியுங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன் மீதான விசாரணையின் தொடர்ச்சியாக மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் மீதும் விசாரணைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-