ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
கோவையில் இன்று பொதுக்கூட்டம் வைகோ, ராமதாஸ் பங்கேற்பு கோவை: இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்கக் கோரி கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை ராஜபக்சே அரசின் சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருகிறது. காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லாமல் ஈழத்தமிழர்கள் செத்து மடிந்து வருகிறார்கள். சிங்களர்களின் துப்பாக்கிகளுக்கு பலியான தமிழர்கள…
-
- 0 replies
- 665 views
-
-
நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை (18.02.09) தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 303 views
-
-
கலைஞருக்கு வழிகாட்டும் ஜோதிபாசு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்க முடியாமல் அடங்கிக் கிடக்கும் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களுக்கிருந்த முனைப்பையும் துணிவையும் பெறவேண்டும். 2009ஆம் ஆண்டு சனவரி 31ஆம் தேதி முதுபெரும் தலைவர் ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்காள தேசத்தின் குடியரசுத் தலைவராக ஷேக் ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டதை வாழ்த்தி வரவேற்றுள்ளார். அப்போது சில வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். "வங்காள தேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசி இந்திய வங்கதேச நதிநீர் உடன்பாடு ஒன்றைச் செய்வது என முடிவு செய்தோம். மேற்கு வங்காளத்திலுள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்" என்ற புண்ணியவான் ராஜீவ் காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.ஒரு இந்திரா காந்தியின் உயிருக்குப் பழியாக மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால், ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா. 01. தான் உருவாக்கிய பிந்தரன்வாலேயைக் கொன்றொழித்ததின் மூலம் சீக்கிய மக்களின் இன விடுதலைப் போரை ஒடுக்கி விட்டதாக நினைக்கும் இந்தியப் பேரரசு, ஒரு பிந்தரன் வாலேயைப் போலவே பிரபாகரனையும் ஈழ விடுதலைப் போரையும் நினைக்கிறது. அதனால்தான் நேரடியாக நரவேட்டையில் ஈ…
-
- 2 replies
- 758 views
-
-
வவுனியாவுக்கு சென்று வந்த ஒருவரின் தகவல் Eye witness account from Vavuniya – No one allowed to enter Refugee Camps My trip to Vavuniya Though I have been following the news about the war in Vanni, and the damages made to human lives and properties, I never thought it would be so bad until I went in person. I got a call from one of our parish members from one of the interim camps saying our foster son Rev. Daniel was killed in the war. The first time I experienced the steps in grief, which I had lectured several times to my students. “No, No, it can’t be” I cried. I straight away went to the Anglican Bishop’s office. I couldn’t control my tears when I saw …
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச சமூகம் வகிக்கும் பாத்திரங்களும் ஜெவ் (Jeff) மற் (Mutt) (நல்ல பொலிசும் கெட்ட பொலிசும்) - இவர்களின் செயல்பாடுகளும் தமிழாக்கம் - ம.தனபாலசிங்கம், சிட்னி>அவுஸ்திரேலியா இக்கட்டுரை தமிழ்நேசன் இணையத்தளத்தில் திரு நடேசன் சத்தியேந்தரா அவர்களால் எழுதப்பட்ட The Jeff and Mutt Act என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். இன்றைய நிலையில் சோர்வடைந்து விடாமல் தெளிவுடன் இயங்க இவை போன்ற வாசிப்பு அவசியமாகும். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்காளிகளாகச் செயல்படுவோருக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்னும் ஆதர்சத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. "சுருக்கமாகவும் நேர்மையாகவும் கூறுவதாயின் : சர்வத…
-
- 2 replies
- 761 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்ட சிறிலங்கா படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது சிறிலங்கா வான் படையினர் நேற்று நடத்திய வான் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்ட சிறிலங்கா படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது சிறிலங்கா வான் படையினர் நேற்று நடத்திய வான் தாக்குதலில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் பிழையானவை என்றும் அரசாங்கம் மக்களை பாதுகாப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திரிகளை சந்தித்து மறுப்புரையும் பொய்யுரையும் வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ Haugmanns gata இல் அமைந்துள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் நோர்வே செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 431 views
-
-
நான் உண்மைகளைப் பேசுகிறேன். அதனால் எரிச்சலடைந்த பலர் என்னை எப்படியாவது உள்ளே போட்டுவிடத் துடிக்கிறார்கள். என் இனத்துக்காக நான் குரல் கொத்துக் கொண்டே இருப்பேன், சிறை எனக்குப் புதிதல்ல என்கிறார் இயக்குநர் சீமான் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய வருவார்கள் என்ற நிலையிலும், சென்னையில் நடந்த முத்துக்குமார் அஞ்சலி நிகழ்ச்சியில் ஆவேச உரை நிகழ்த்தினார். கைதுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன், என் இன விடுதலைக்காக என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என அவர் ம…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் முதனிலை கணனி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை நிராகரித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், நாராயணமூர்த்தி சர்வதேச தகவல்தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இந்தப் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதென நாராயணமூர்த்தி, ஜனாதிபதி மஹிந்தவிற்கு கடித மூலம் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஐ.நா. செய்தியாளர் மத்தியூ ரஸ்ஸல் லீ அண்மைக்காலமாக தொடர்ச்சியாக ஐ.நா.வில் இலங்கை படுகொலைகள் பற்றி கேள்வி எழுப்பி ஐ.நா.வின் தமிழ்மக்களுக்கு எதிரான இந்திய யுத்தத்துக்கு துணைபோகும் இரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தி வருகிறார். நன்கு மதிக்கப்படும் செய்தியாளரும் சட்டவல்லுனருமான மத்தியூ லீயை ஈழத்தமிழ் மக்கள் நன்றியுடன் அணுகாத நிலையிலும் தனது மனிதாபிமான செயற்பாடுகளை மற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் செய்து வருகிறார். Matthew Russell Lee (mlee@innercitypress.com, Phone: 1(212) 963-1439, Address: Room 453-A, United Nations, NY NY 10017, U.S.A.) பெப்ருவரி 17ல் ஐ.நா. செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா. பேச்சாளார் மிச்சேல் மொன்ராசிடம் இலங்கையில் கொ…
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழகத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஒரு மிகப் பெரிய தொழிற்சாலைக்கு அருகில் சாலையில் அதிவேகமாக விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி இந்த வாகனங்கள் எங்கே செல்கின்றன கேள்வியுடன் அந்த ஊர் அன்றிருந்தது... ******************************************************************************** ******** வருடம் 1983. அதே ஊர். ஈழத்தில் கறுப்பு ஜுலை படுகொலைகளைக் கண்டித்து முழு கடையடைப்பு நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் மாலை நேரம் ஊரின் விளையாட்டு மைதானத்தில் , மைதானம் என்றால் பெரிய கற்பனைகள் வேண்டாம் அந்த ஊரின் மிக அகலமான தெரு அது அவ்வளவே , கையில் ஹாக்கி மட்டைகளுடன் விளையாட கூடுயிருந்தனர் சில சிறுவர்கள், மீண்டும் ஒரு விளக்கம் ஹாக்கி மட்டை என்றால் பிரப…
-
- 2 replies
- 1.6k views
-
-
எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார். இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார். ’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உக்கிரமடைந்துள்ள சிறிலங்கா அரச படைகளின் இன அழிப்பு நடவடிக்கையால் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வரும் அப்பாவி தமிழ் மக்களின் அழிவு குறித்து தொடர்ந்தும் மெளனமாக இருந்து வரும் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் வகையில் தம்மை தாமே அக்கினியில் கரைத்துக்கொண்ட வீரப்புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. ஹைடில்பேர்க் சென். ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (19.02.09) மாலை 7:00 மணியளவில் இந்த மலர்வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் வீரப் புதல்வர்களுக்கும் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தாயக ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மலர்வணக்கம் செலுத்தப்படுவதுடன் நினைவுரைகளும் …
-
- 1 reply
- 856 views
-
-
'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு! புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 14:01 [iST] டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்…
-
- 5 replies
- 1.5k views
-
-
உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள் நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது. 1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் - தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்! ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி, “ எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான். இன்னைக்கு காலையில அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
President: Dr. Nithyanantha Sharma Secretary: Kopalakrishnan M.A. To Ban Ki‐Moon The Secretary General UN Head Quarters New York, USA Dear Sir, Ref: Your statement of 16/02/2009 Your aforesaid statement is biased and does not reflect the situation on the ground. For instance your statement that ‘‘the designation of the new safe zone has provided some respite for the tens of thousands of civilians.’’ is untrue. These Sri Lankan armed forces are continuing to attack the civilians of this so called safe zone with artillery shells, cluster bombs and aerial bombardments. Lives are lost on a daily basis. Dead bodies can be seen …
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
Bangalore, Feb 18 (IANS) Infosys Technologies chairman and chief mentor N.R. Narayana Murthy has declined to be the IT advisor to the Sri Lankan government, the IT bellwether said Wednesday. In a letter to Sri Lankan President Mahinda Rajapaksa, Murthy said he had decided to withdraw from being the advisor due to personal reasons. “I thank you for the courtesy shown to me during my recent visit to Sri Lanka. I have decided to withdraw from being the advisor to your government due to personal reasons,” the company quoted Murthy’s letter to Rajapaksa. Murthy was appointed Feb 13 as Rajapaksa’s international advisor on IT after he was invited to be the chie…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈனத் தமிழினமே, இன்னும் ஏன் தூங்குகிறாய். நீ உசுப்பிவிட சிங்களவன் எல்லாவற்றையும் சுருட்டுகிறான். போராட்டத்தையும் கூட. இங்கு பாருங்கள் செய்தியை Sri Lankan expatriates, live in the United States are expected to organize a massive protest rally at South of the White House, Washington D.C, on Friday, February 20, 2009. Organizers said that this peaceful rally to urge the US authorities to ....................................................., and to stand up against the............................that has plagued ........................................ This protest is scheduled to start at 10 am ,17th Street & Constitution Av NW Washington D.C. ...........…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது. சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள்…
-
- 0 replies
- 1.5k views
-