ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
கொழும்பு பம்பலப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கிளை அலுவலகத்தின் மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/?p=26799
-
- 8 replies
- 1.3k views
-
-
இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம். இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
பண்டுல ஜெயசேகர VS டேவிட் பூபாலபிள்ளை செவ்வி வைகாசி 2008ல் நடைபெற்றது. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.3k views
-
-
வட பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்தவிடம் தொலைபேசி மூலம் கோரியுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி மாளிகைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் கால் மணித்தியாலங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 1 reply
- 620 views
-
-
சென்னை: தமிழர்களை ஏமாற்றும் வகையில் ப.சிதம்பரத்தின் நேற்றைய டெல்லி பேட்டி அமைந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் சிங்கள ராணுவத்தின் மரண வளையத்துக்குள் ஐந்தரை லட்ëசம் தமிழ் மக்கள் பீரங்கித் தாக்குதலாலும், விமானக் குண்டு வீச் சாலும் பேராபாயத்துக்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ மனைகள் மீதும் குண்டு வீசப்பட்டதில் கடந்த ஒரு வாரத்தில் 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் குழந்தைகள், சிறு வர்கள், தாய்மார்கள் அடங்குவர். இலங்கை அரசால் பாதுகாப்புப்பகுதி என்று சொல்லப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் ஜனவரி 27…
-
- 0 replies
- 688 views
-
-
உணர்வுள்ள சுதந்திர மாணவர் முன்னணி பல்கலைக்கழக மாணவ மணிகள் இணைந்து வன்னியில் துன்புறும் எமதுறவுகளுக்காக இன்று கொழும்பில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டிருந்தனர். இந் நிகழ்வுக்கு தமது கைச் செலவிலே யாருடைய உதவியும் இன்றி ஆடம்பர விளம்பரங்கள் இன்றி கொழும்பு இந்துக் கல்லூரிக்கும், இராமநாதன் மகளீர் கல்லூரிக்கும் இடைப்பட்ட டூப்ளிகேசன் வீதி யோரத்தில் மேடையமைத்து தமது உண்ணா நோன்பை ஆரம்பிப்பித்தனர். காலை 8:00 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமாகவிருந்தாலும் மேடைக்கருகே வீதிக்கு மறுபுறத்தில் உள்ள இராமநாதன் மகளீர் கல்லூரி அதிபர், சில மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர்; என பொலிஸாருக்கு அறிவிக்க அங்கு பிரசன்னமான காவல் துறை இந் நிகழ்வை தடுப்பதற்கு மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் ஊடாகவே நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பொதுமக்களே பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து மோதலில் ஈடுபட்டு வரும் தரப்பினர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச போர் சட்ட விதிகளுக்கு அமைவாக யுத்தத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கப் படையினரிடமும், விடுதலைப் புலிகளிடமும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது…
-
- 0 replies
- 657 views
-
-
ஊமை மகனைப் பேசவைக்க மன்னர் எத்தனையோ முயற்சிகள் எடுத்தார். அதற்கான பலன் ஒருநாள் வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். மன்னனுடன் பேசாமல் இருந்த அவரின் விதவை அக்காவும் பகையை மறந்து வந்திருந்தார். கூட்டத்தைப் பார்த்தான் மகன். அம்மாவை, அப்பாவை, அத்தையைப் பார்த்தவன் வாய் திறந்தான், ''அம்மா, எப்ப அத்தை மாதிரி ஆகும்?'' மன்னனுக்கு மட்டுமல்ல, மொத்தக் கூட்டத்துக்கும் அதிர்ச்சி! எப்போது பேசுவான் என்ற ஆதங்கத்தில் இருந்தவர்கள், இதற்கு இவன் பேசாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். இலங்கை விவகாரத்தில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கின்றன. விடுதலைப் புலிகளை அழிக்கும் போர்வையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு போடுவதை இந்தியா தடுக்க வேண்டும் எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சில விஷமிகள் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார். மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தாங்களும் தாங்களும் என்று மத்தியில் கூட்டாட்சி வடக்குகிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி கேட்டு ஒட்டுக்குரல் எழுப்பிய தமிழ் தேசிய, தமிழ் மக்கள் துரோக ஆயுதக் கும்பல்கள் இப்போ சிறீலங்கா சிங்கள பெளத்த சுதந்திர தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் உரிமை போதும் என்று தமிழ் மக்களின் உரிமைகளையே அமைச்சுப் பதவிகளுக்காக அடகு வைத்துவிட்டனர். இவர்களின் தமிழீழக் கனவை நம்பி உயிர்விட்ட இவர்களின் தோழர்களின் கதி...அதோ கதிதான்..! ------------------- அடுத்த வருட சுதந்திர தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாட முடியும்: டக்ளஸ் தேவானந்தா அடுத்த வருட சுதந்திரதின நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் கொண்டாடக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகும் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் …
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழின படுகொலையில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கத்தையும் அதன் படைகளையும் நம்பி இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்குவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கிமூனின் சிறப்பு பிரதிநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு எடுத்துக்கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
Nimalka Fernando மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர். கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல.. சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல், மனித…
-
- 10 replies
- 1.9k views
-
-
வன்னியில் இன்று சிறிலங்கா படையினர் பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 174 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் 5 பெண்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 422 views
-
-
நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...6&Itemid=68
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் இனி வலிந்து தாக்குதல்கள் செய்வதென்பது பகற்கனவு என்பது சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றாகும். அவரின் மதிப்பீட்டின்படி விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் தோற்கடிப்பதற்கு இன்னமும் சிறிது காலமே போதுமானதொன்றாகும். சரத் பொன்சேகாவின் இத்தகைய மதிப்பீட்டிற்கு இதுவரையிலான யுத்தத்தில் - அதாவது படையெடுப்பின் மூலம் 15,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டதான அவரது மதிப்பீடு காரணமாக இருக்கலாம். அத்தோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் வெகுவாகச் சுருங்கி விட்டதும் காரணமாக இருக்கலாம். இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் அளவு குறித்து அரச தரப்பிலிருந்தே குழப்பமான தகவல்க…
-
- 0 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவில் யுத்த நிறுத்தம் வருமா? - பிபிசி http://news.bbc.co.uk/2/hi/programmes/newsnight/7869633.stm http://news.bbc.co.uk/2/hi/programmes/newsnight/7869669.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்புக்குரிய தமிழகம் வாழ் தமிழ் பேசும் சகோதர சகோதரியருக்கு!வணக்கம். இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் வடகிழக்கு மண்ணின் மருதமும் முல்லையும் நெய்தலும் ஒன்றிணைந்த தமிழீழ மண்ணின் ஒரு பகுதியில் உள்ள காப்பகழிக்குள் இருந்து..... நாமே தயாரித்த குப்பி விளக்கொளியில்.........கையில் கிடைத்த காகிதத்தில்...... இந்த அஞ்சலை அஞ்சாமல் யான் வடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எமக்காக எமது மண்ணிற்காக இக்கணம் வரை வீரச்சாவடைந்த மானமாவீரரை நினைந்து, அந்நியனது அழிப்பில் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களை எண்ணியவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் வரைந்தனுப்ப முயல்கிறேன். கடந்த ஆண்டு இறுதிவரை நாங்கள் வாழ்ந்த வர்த்தக - நிர்வாக நகரினை விட்டேகி அங்குல அங்குல…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி மனிதப் பேரவலத்திற்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் அமைப்புக்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றையே இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை திணிப்பதற்கு அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ முற்படக் கூடாது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவ்வாறு திணிக்க முயற்சித்தால் போராட்டம் தொடரும் எனக் கூறினார். “வன்னியில் தொடரும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களால் ஒரு வாரத்தில் 733 பேர் கொல்லப்பட்டதுடன், 2615 பேர் காயமடைந்துள்ளனர்” என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என அரசாங்கம் கூ…
-
- 3 replies
- 906 views
-
-
உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் : பிரான்ஸ் வீரகேசரி இணையம் 2/6/2009 10:29:27 AM - இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத் தீர்வினை எட்ட முடியும் என பிரான்ஸ் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து நாட்டின் அனைத்து குடிமக்களது உரிமைகளையும் பேணும் வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பெருந்தொகையாக சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எ…
-
- 0 replies
- 607 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியதனால் அலுவலக கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டதுடன் அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3 தினமலரில் வந்துள்ள செய்தி. புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ: அவரது மின்னஞ்சல் முகவரி. cmcell@tn.gov.in ***
-
- 7 replies
- 2.4k views
-
-
வன்னியில் ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 2ம்திகதி வரையான காலப்பகுதிக்குள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களினாலும் 733 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான ஆதாரங்கள் புள்ளிவிபரங்கள் எம்மிடம் உள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் புலிகள் என்று கூறிவருவது கடைந்தெடுத்த பொய்ய…
-
- 0 replies
- 573 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையின் விளைவான உள்நாட்டுப் போர் மிக மோசமான கட்டத்தை அடைந்து. சிவிலியன்கள் பெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்படும் பேரவலம் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் இணைத்தலைமைகள் என்று தம்மை வர்ணித்துக்கொள்ளும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை ஒன்றிணைந்து விடுத்திருக்கும் ஒரு கூட்டறிக்கை பலத்த வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பியிருக்கின்றது. குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர் வாழும் தேசங்களில் இந்த நான்கு நாடுகளுக்கும் எதிரான உணர்வலைகளை இந்த அறிக்கை கிளப்பி விட்டிருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் ஒரே வழி என்று கூறிக்கொள்ளும் சர்வதேசம், மறுபுறத்தில் மேற்படி அறிக்கை மூலம், இராணுவத் தீர்வில…
-
- 0 replies
- 1.1k views
-