ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
தமிழகம் கேட்டது போர் நிறுத்தம்; சிங்களம் தமிழருக்குக் கொடுப்பதோ கொத்துக் குண்டுக் கொலை ! யார் கோமாளிகள்? ஆய்வு:முரசத்திற்காக பத்மா ஆங்கில இலக்கிய மேதையான சேக்ஷ்பியர் உலகமே நாடக மேடை என்றார். கோமாளிகள் இல்லாத நாடகம் சப்பென்று சுவையற்றுப் போய்விடும். பொய்யனாக திகழ வேண்டிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று உண்மை உணர்வாளராகவும், மனித நேயமிக்கவர்களாக வாழ்ந்து வரும் பழ.நெடுமாறன் போன்றவர்களைக் கோமாளிகள் எனக் கூறிப் பலரின் கண்டனத்தையும் வயிற்றெரிச்சலையும் கிழப்பி விட்டுள்ளார். தமிழகச் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றுவதே இமாலய சாதனை என்பது சட்டசபையின் நாளாந்த நடவடிக்கைகளை கவனிப்பவருக்கு நன்றாகவே விளங்கும். அதுவும் எதிர்ப்பே இல்லாது ஒருமனதாக அன…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் வர்த்தகர்களிடம் படையினர் கட்டாய நிதி வசூல் திகதி: 01.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] போரிலே காயமடைந்த சிறிலங்காப் படையினர்களின் மறுவாழ்வுப்பணிகளிற்கும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் ஒவ்வொரு வர்த்தகரும் 5000 ரூபா வீதம் தமக்கு தரவேண்டும் என மன்னார் மாவட்டத்திலுள்ள சிறிலங்காப் படையினர் வர்த்தகர்களை எச்சரித்துள்ளனர். தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. படையினரின் இந்த நடவடிக்கையால் மன்னார் வர்த்தகர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சங்கதி
-
- 0 replies
- 853 views
-
-
படை நெருக்டியால் சிறார்கள் உளப்பாதிப்பு திகதி: 01.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ். குடாநாட்டிலுள்ள சிறார்களில் 70 வீதமானவர்கள் கடும் உளப்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் குடாநாட்டில் பிறக்கின்ற பிள்ளைகளில் 10 வீதமானோர் அங்கவீனர்களாக பிறக்கின்றனர் எனவும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது. போர் நெருக்குதல்கள், படைக் கெடுபிடிகள் என்பன இவற்றிற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 800 views
-
-
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
நீர்கொழும்பு சைவகோவில் நிர்வாகஸ்தர் சுட்டுப்படுகொலை புதன், 31 டிசம்பர் 2008, 23:49 மணி தமிழீழம் கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.30 மணியளவில் நீர்கொழும்பு காளிகோவில் நிர்வாகஸ்தர் அவர்கள் வீட்டுக்கு வேலையை முடித்துவிட்டு திரும்பும்போது உந்துருளியில் சென்ற இனம்தெரியாத ஆயுததாரியால் சுட்டுப்காயப்படுத்தப்பட்டு பின்னர் காயம் காரணமாக புதன்கிழமை கொழும்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரை முதலில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக் மாற்றப்பட்டு சாவடைந்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு
-
- 0 replies
- 862 views
-
-
தமிழருக்கு காங்கிரஸ் இழைக்கும் துரோகம் : இந்திய இணையம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை 'அதிகபட்சமானது', 'தேவையற்றது' என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளிய…
-
- 2 replies
- 2.1k views
-
-
விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்- நடேசன் வீரகேசரி இணையம் 12/31/2008 1:57:12 PM - விடுதலை புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். அசோசியேட் பிரஸ்ஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "நமது மண்ணினையும் , மக்களையும் பாதுகாப்பதற்கு பல முறியடிப்பு தாக்குதல்களையும், போர் வியூகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது.நேரமும். இடமும் சரியாக வரும் போது நாம் இழந்த மண்ணினை மீளப்பெறுவோம்"என பா. நாடேசன் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "விடுதலை புலிகள் அமைப்பு புதிய சாமாதாப் பேச்சுவார்த்தைக்கு தாயாரக உள்ளது.எனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்…
-
- 5 replies
- 2.3k views
-
-
பிறக்கின்ற புத்தாண்டு என்ன ஆண்டு ? சிந்தனைச் செல்வர் எழிலன் எல்லாருக்கும் நீதியும் எல்லாருக்கும் அமைதியும் எல்லாருக்கும் சுதந்திரமும் எல்லாருக்கும் நிம்மதியும் எல்லாருக்கும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் நற்சுகமும் எல்லாருக்கும் வாய்ப்புகளும் எல்லாருக்கும் எல்லா நலமும் எல்லாருக்கும் இறை துணையும் கிட்டி எல்லாருக்கும் இனிதான,நலமான, வளமான புத்தாண்டாக 2009 அமைய வேண்டும் என்பதைத்தான் நல்ல எண்ணம் கொண்ட எல்லாருமே நினைத்து வாழ்த்துச் சொல்வார்கள் என்பதனால் முதன் முதலில் எனது இதயந்திறந்து மேற்சொன்ன அனைத்தும் கிடைக்க வேண்டுமென புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லிக் கொள்கிறேன். மணம் வீசும் மல்லிகையாய் நம் மனித மனங்கள் குணவியல்பில் மணம் வீசும்படி மலரட்டும். நீங்கள் அனைவரும்…
-
- 4 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் 14 படையினர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மாமடுவ வீதியில் நெடுங்குளத்திற்கும் கருவேல புளியங்குளத்திற்கும் இடையில் படையினரின் யுனிகோன் வாகனத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6.40 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த படைத்தரப்பினர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இந்தக் குண்டு வாகனத்தின் உள் இருந்தே வெடித்துள்ளதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இந்தக் குண்டு எந்த ரகத்தைச் சேர்ந்தது என இதுவரையும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/…
-
- 0 replies
- 929 views
-
-
இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை. இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூ…
-
- 4 replies
- 2.5k views
-
-
மரணமடைந்த பெண் புலிகள் - சிங்கள இராணுவத்தின் காம வெறியாட்டம் மனித வெடிகுண்டு தாக்குதல் புலிகளுக்கு மறந்து விட்டதோ?' என்ற சந்தேகம் பலருக்கு முளை விட்டிருந்த நிலையில், இலங்கைத் தலைநகரம் கொழும்பு அருகே வத்தளை என்ற இடத்தில் ஒரு மனிதகுண்டு தாக்குதலை நடத்தி அதிர வைத்திருக்கிறார்கள் புலிகள். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஆறு பேர் பலியாகி, பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னிப்பகுதியில் வகைதொகை இல்லாமல் ராணுவம் குண்டுமழை பொழியும் நிலையில், ஓர் எச்சரிக்கையாக புலிகள் தரப்பிடமிருந்து வெடித்திருக்கிறது இந்த மனித வெடிகுண்டு. இதற்கிடையே நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது ஒரு வீடியோ காட்சி. `இதயபலம் இருந்தால் மட்டும் பாருங்கள்' என்ற எச்சரிக்கையுடன…
-
- 0 replies
- 5.7k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் 12 மாதகாலங்களில் 191 படையினர் பலி! 247 படையினர் காயம். புதன், 31 டிசம்பர் 2008, 14:58 மணி தமிழீழம் [செய்தியாளர் முகிலன் ] அம்பாறை மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் சிறிலங்கா படைக்கும் ஒட்டுக்குழுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 7 ஒட்டுக்குழு உட்பட 198 படையினர் பலி 5 ஒட்டுக்குழு உட்பட 252 படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த 01-01-2008 தொடக்கம் 31-12-2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறிலங்கா படையினரது விபரங்கள் விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-123, இராணுவத்தினரத…
-
- 0 replies
- 615 views
-
-
ஐயன்கேணியில் விடுதலைபுலி உறுப்பினர் தற்கொலை வீரகேசரி இணையம் 12/31/2008 3:13:23 PM - மட்டக்களப்பு ஐயன்கேணி பகுதியில் விடுதலை புலி சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராணுவத்தினர் இந்நபரை தேடிவரும் நிலையில் நேற்றையதினம் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இவர் விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட பின் சடலமாக நேற்றுமாலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.சடலம் இளம் குடும்பஸ்தரான தவராசா சுரேஷ்குமார்(வயது 23) எனபவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருடன் மற்றுமோர் உறவினரான முத்துலிங்கம் ராஜேந்திரம் (வயது 28) என்பவரும…
-
- 3 replies
- 3.5k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 861 views
-
-
வணக்கம் நண்பர்களே... _/\_ இந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை + அது பற்றிய குறிப்பு இவை இரண்டையும் தயவுசெய்து உங்கள் விலாசக்கோவையிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் உடனடியாக அனுப்பவும் / அனுப்பி வைக்கவும். பிறக்கும் இந்த புத்தாண்டில் குறைந்தது 10000 தமிழரையாவது உலகெங்கும் உணர்வால் ஒண்றிணைப்போம். முடிந்தால் எண்ணிக்கையை 100000 ஆக்கலாம். எல்லாம் உங்கள் வேகத்திலேயே உள்ளது. தயவுசெய்து உடனடியாக இதை செயற்படுத்தி உலகத் தமிழரெல்லோரையும் விழிப்படைய வைப்பீர் நேரம் "31ம் திகதி இரவு" "00:00 மணியிலிருந்து 00:02 வரை" (புத்தாண்டு பிறக்கும் அந்த வேளை) உணர்வால் ஒன்றிணைந்ததற்கு நன்றி " தேச உணர்வுள்ள ஒரு நண்பன் "
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவின் உதவாத உதவிகள் திகதி: 31.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசரத் தேவையாகவுள்ள கூடாரங்களைக் கொண்டு செல்லத் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு அதற்குப்பதிலாக பாவனைக்குதவாத கிடுகுகளை வன்னிக்கு அனுப்பிவைத்துள்ளது. படை நடவடிக்கையினாலும், கடந்த மழை வெள்ளத்தினாலும் குடியிருப்புக்களை இழந்துள்ள மக்களுக்கு 42 ஆயிரம் வரையிலான கூடாரங்கள் அவசரத்தேவையென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டுத்தொண்டு நிறுவனங்கள் வழங்கும் கூடாரங்களை வன்னிக்கு எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ள அரசாங்கம், தற்போது ஒரு தொகுதி கிடுகுகளை அனுப்பிவைத்துள்ளது. அவை பல இடங்களில் ஏற்றி இறக்கி பயன்படுத்த முடியாத நிலையிலேயே வன்னிக்கு வந்த சேர்ந்துள்ளன. sankat…
-
- 0 replies
- 1.1k views
-
-
போரில் காயமடையும் சிறிலங்காப் படையினருக்கு சீனா மருத்துவ உதவி திகதி: 31.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வடக்கில் பெரும் ஆக்கிரமிப்பு போரில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திவரும் கடும் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பெரும் உயிரிழப்புக்களை சந்தித்து வரும் அதேவேளை பெருமளவான படையினர் படுகாயமடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த படையினருக்கு சீனா பெருமளவு மருந்துப் பொருட்களையும், மருந்துவ உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளது. நகரன்பிட்டிய மருத்துவமனைக்கு தற்போது இதன் ஒரு தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே, சீனாவின் பல்வேறு பௌத்த மத அமைப்புக்கள் போரில் பாதிக்கப…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார். பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்…
-
- 0 replies
- 1.9k views
-
-
2008 பதிவுகள் (பகுதி 1) வீரகேசரி நாளேடு 12/31/2008 12:38:04 PM - ஜனவரி உள்நாட்டு அரசியல் ஜன.01 * ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக்கொலை. ஜன.02 * யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள அரசு முடிவு. ஜன.03 * கொம்பனி வீதியில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 4 பேர் பலி. * உடன்பாட்டிலிருந்து விலகுவது மோதல்களை தீவிரமடையச் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பையும் பலவீனமாக்கும் என்கிறது நோர்வே. ஜன.4 * இலங்கையின் முடிவு குறித்து ஐ.நா. அமெரிக்கா, கனடா ஆழ்ந்த கவலை. இனப்பிரச்ச…
-
- 7 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்ப்பு தொடர்பாக சிறிலங்கா விளக்கம் [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பு பேச்சாளர் உதய நாணயக்கர கூறியுள்ளதாவது: முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண்: 911780313 V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டது. அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால் அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்புக்கு எதிரான பரப்புரைக்காக அது உர…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
மல்லாவி வைத்தியசாலை விடுதிகள் எறிகணை வீச்சில் சேதம் திகதி: 31.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சியிலுள்ள மல்லாவி வைத்தியசாலை சிறிலங்காப் படையினரின் எறிகணைவீச்சில் சேதமடைந்துள்ளது. நேற்றுப்பிற்பகல் 4.35 மணியளவில் வைத்தியசாலைப் பகுதியை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இதில் வைத்தியசாலையின் விடுதிகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை கிளிநொச்சி பொதுமருத்துவமனை மீதும் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சங்கதி
-
- 0 replies
- 785 views
-
-
வன்னிக்குச் செல்லாத படைச் சிப்பாய்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் துண்டிப்பு புதன், 31 டிசம்பர் 2008, 13:30 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்காப் படையினருக்கு கடந்த இரு மாதங்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என யாழ்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்காச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளனர். மாதா மாதம் தாம் வழங்கிய வங்கிக் கணக்கு ஒன்றிற்கு அனுப்பப்படும் தமது மாதாந்தக் கொடுப்பனவு கடந்த இரண்டு மாதங்களும் வங்கியில் வைப்பிலிடப்படவில்லை எனவும் தனது சம்பளத்தினை நம்பி வாழும் தனது குடும்பத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தட்டாதெருவுக்கு அண்மையாக கடைமையில் இருந்த சிப்பாய ஒருவர் எமது யாழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகக் கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து உறுதியளித்தபடி கொழும்பு பயணம் மேற்கொள்வது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 806 views
-
-
வீடியோ கமராவில் பதிவாக வேண்டும் என்பதற்காகவே எனக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்: அமைச்சர் நிமால் பெரேரா [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:36 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] தமிழகம் சென்றிருந்த சிறிலங்காவின் பிரதி அமைச்சர் நிமால் பெரேராவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம், வீடியோ கமராக்களில் பதிவாக வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு நிமால் பெரேரா அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது எனது வாகனத்தை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்தனர். எனது பிள்ளைகள் வாகனத்தை விட்டு இறங்கினர். அப்போது சண் தொலைக்காட்சி உள்ளிட்ட சில கமரா குழுவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர். நான் …
-
- 2 replies
- 1k views
-
-
நாள் குறிக்கும் அறிவிப்புகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாது [31 டிசம்பர் 2008, புதன்கிழமை 10:45 மு.ப இலங்கை] கடந்த 2007 நவம்பரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்டாடுவதுதான் அவரது கடைசிப் பிறந்த நாள் என்றும், அடுத்த பிறந்த நாள் கொண்டாட அவரை விட்டு வைக்க மாட்டோம் என்றும் 2007 நவம்பரில் சூளுரைத்திருந்தார் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அதிகம் செல்வாக்கு உடையவராகத் திகழுபவருமான கோத்த பாய ராஜபக்ஷ. ஆனால், கடந்த நவம்பரில் பிரபாகரனின் அடுத்த பிறந்த நாளும் தாண்டிப் போய்விட்டது. பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியுமா என்பது வேறு விடயம். அதற்கும் இப்போது காலக்கெடு விதித்திருக்கிறார் இலங்கை…
-
- 0 replies
- 699 views
-