Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு! வட மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான பொன்னான வாய்ப்பு ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான க்லோகல் பெயார் (Glocal Fair) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருந்ததுடன் அவற்றுக்காக பண விரைவு மற்றும் ஏமாற்றம் போன்றவற்றையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது ஆரம்பித்துள்ள வேலைவாய்ப்புக்களில…

  2. Published By: DIGITAL DESK 3 18 JUL, 2023 | 08:55 AM (நா.தனுஜா) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள நிலையில், இதன்போது விசேடமாக குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 21 ஆம் திகதி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இவ்வாறானதொரு…

  3. Published By: DIGITAL DESK 3 18 JUL, 2023 | 09:41 AM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கும் விவகாரத்தில் அமெரிக்கா அவதானம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான நிலைப்பாட்டை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிடம் வலியுறுத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு மிதவாதத் தலைவராக இருந்தாலும், அவரால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது என்றும்,…

  4. யாழ். நாவாந்துறையில் பதற்றம் : பொலிஸ் விசேட அதிரடிப் படை குவிப்பு 17 Jul, 2023 | 10:02 PM யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் மோதலுக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை. எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது. https://www.virakesari…

  5. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி! நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட வ…

  6. மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை : சர்வதேச இந்துமத பீடம் ! kugenJuly 17, 2023 இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரிதாக வரும் நிலையில், இன்றைய தினம் வரும் முதல் அமாவாசை தினம் ஆடி அமாவாசை தினம் அல்லவென சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.battinews.com/2023…

    • 6 replies
    • 927 views
  7. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடல் Share on FacebookShare on Twitter தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung கியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின் அமைதி நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரப்பகிர்வு, காணி விவகாரம் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…

  8. 2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை 2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக…

  9. டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பிக்கு. எப்படி நாட்டை ஆள முடியும் ? – மஹிந்தானந்த கேள்வி மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சந்திரிகாவின் அரசாங்கத்தில் அனுரகுமாரவிற்கு ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர்கள் அதனை பாதியிலேயே கைவிட்டனர் என்றும் …

    • 1 reply
    • 543 views
  10. ஜூன் இறுதிக்குள் 33 நிபந்தனைகளை நிறைவேற்றிய அரசாங்கம் 8 இல் தோல்வி ! சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுதல் என்பனவும் இதில் அடங்கும். மேலும் …

  11. 16 JUL, 2023 | 07:05 PM (எம்.நியூட்டன்) இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் உதவிகள் செய்ய வேண்டும் என கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமத்தில் சுந்தரகைலாச கட்டட திறப்புவிழா சனிக்கிழமை (15) நடைபெற்றது. இந்த நிகழ்வை தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா எமக்கு இந்த உதவியை செய்யவேண்டும்; இதனை செய்யவேண்டும்; அதனை செய்ய வேண்டும் என ஏன நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எமக்கும் உதவிகள் தேவை தான். ஆனால், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் …

  12. இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கும், சதர மகா தேவாலயத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, காசோலை மூலம் 1 கோடியே 32 இலட்சத்து 99ஆயிரத்து 10 ரூபாவை (1,32,99,010 ) செலுத்துமாறு உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை மின்சார வாரிய தலைமை பொறியாளர் எச். எஸ். பண்டாரவின் கையொப்பத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே உட்பட சதர மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேகளுக்கும் அனுப்பி வைக்கப…

    • 8 replies
    • 877 views
  13. மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுகின்றனர் : இரா. சாணக்கியன்! kugenJuly 17, 2023 பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சுற்றுலாத் துறையினை காரணம் காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொது மக்களினால் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். நேற்று (16) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் ந…

  14. கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீற்றர் நீளம் கொண்டது. இந்த செயற்கை கடற்கரைக்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் கட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/263397

  15. வவுனியாவில் 34வது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு 17 Jul, 2023 | 10:58 AM தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் 34வது வீரமக்கள் தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா, கோயில்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இவ்வமைப்பின் உபதலைவர் ராகவனால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்துடன், மறைந்த தலைவர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர் நீத்…

  16. இலங்கை 8% ஐ நிறைவேற்றவில்லை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் இலங்கையானது ஜூன் மாத இறுதியளவில் 8% வேலைத்திட்டங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன் 33% வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் எவ்வாறு வினைத்திறனுடன் செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க இலங்கையின் “வெரிட்டே“ நிறுவனத்தின் மூலம் IMF Tracker’ என்ற நிகழ்நிலைத்தளம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. (அறியப்படாதவை (Unknown) எனக் குறிப்பிடப்பட்டிருப்பது வேலைத்திட்டங்கள் குறித்த சரியான தரவுகள் வெளியிடப்படாதவையாகும்.) 2023 மே மாதத்தில் 4% ஆகவிருந்த தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் மற்றும் முழுமைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களின் எண்ண…

  17. 3 வகை மருந்து தொகுதிகள் பாவனையில் இருந்து நீக்கம்! நுண்ணுயிர் கொல்லி மருந்தின் 3 தொகுதிகளை தற்காலிகமாக பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்து தொகுதியை வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொகுதி மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் இரு நோயாளர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய தடுப்பூசி தொகுதி ஆகியனவே இவ்வாறு பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில…

  18. கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு நாள் சேவையின் மூலம் 5 ஆயிரத்து 294 பேர் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். பிரதேச செயலகங்கள் மூலம் இணையத்தளத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறைமையினால்…

  19. அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கம் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 250 பொருட்களுக்கான இறக்கும…

  20. நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைப்பு! நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில் சங்கிலியன் தோரண வாசலைப் புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரதீப் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் ,சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறு திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உத…

  21. காணி கேட்டவர்களுக்கு பிஸ்கட் வழங்கிய கடற்படை நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த…

  22. ஐந்து இஸ்லாமிய குழுக்களின் மீதான தடையை நீக்க அரசு முடிவு ! ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஐந்து அமைப்புகளின் தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . புலனாய்வு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் அடங்கிய குழு அளித்த பரிந்துரைகளின்படி, இந்தக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐந்து அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படுகிறது. அதன்படி, ஜம்இய்யதுல் அன்ஸாரி சுன்னத்துல் முகமதியா (JASM), ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ), சிலோன்…

    • 1 reply
    • 177 views
  23. இந்திய விஜயத்திற்கு முன்னதாக சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்துக்கு முன்பதாக இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விகாமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் போது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. மேலும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை ந…

    • 1 reply
    • 542 views
  24. 16 JUL, 2023 | 02:04 PM மூதூர் - பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும், உயிரிழந்த பொது மக்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு, பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததுடன், இலங்கையின் வடக்கு, கிழக்கில் இதே 16ஆம் திகதி ஆடி மாதம் 1989ஆம் ஆண்டில் தமிழ் மக்களை இலக்குவைத்து பல்வேறு கிராமங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றமை தொடர்பான நினைவுரையையும் நிகழ்த்தியிருந்தார். …

  25. இரு இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்றது. குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.