ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது ? - கடற்படையினர் கச்சதீவையும் விட்டுவைக்கவில்லை என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் Published By: VISHNU 23 MAR, 2023 | 03:52 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள். அந்த சிலையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பொருளாதார மீட்சியில் இருந்து …
-
- 17 replies
- 694 views
- 2 followers
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:23 PM அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தை மண் நிரவி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வரை பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள இந்து மயானத்துக்கு எதிராகவுள்ள கண்டக்குழி குளத்திலிருந்து அந்தபகுதி விவசாயிகள் வயல் நிலங்களுக்கு நீரை பெற்றுவருவதுடன் கால்நடைகளும் அந்த குளத்து நீரை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த கால யுத்த சூழல் காலத்தில் அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 10:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார். 'ஒன்பது - மறைக்கப்பட்ட கதை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச 'அரகலய' ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 590 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:49 PM (எம்.ஆர்.எம்.வசீ்ம். இராஜதுரை ஹஷான்) முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. மாற்றுவழியை யாரும் முன்வைக்கவும் இல்லை. அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்பிற்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்த…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 09:40 PM யாழ்நகர் பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்து, காலாவதி திகதியை அழித்து விநியோகஸ்தர் ஒருவரினால் இன்று (26) விநியோகிக்கப்பட்டுள்ளதாக, யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் யாழ்நகர் கடைகளில் எழுமாறாக பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது காலாவதி திகதி கடந்த சோடாப்போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்தும் மற்றும் காலாவதி திகதியை அழித்தும் சோடாப்போத்தல்கள் கடைகளிற்கு விநியோகம் செய்யப்பட்டமை பொது சுகாதார பரிசோதகர்களால் க…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 APR, 2023 | 04:29 PM (எம்.ஆர்.எம்.வசீ்ம். இராஜதுரை ஹஷான்) தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் .மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் உள்ளடங்கும் தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரிக்கை முன்வைத்த போதும், மார்ச் மாதத…
-
- 1 reply
- 182 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 26 APR, 2023 | 01:07 PM காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமியொருவர் அதிகளவு பரசிட்டமோல் வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். உடுவெல்ல, உடுஹெந்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையொன்றில் 2ஆம் தரத்தில் கல்வி கற்றவராவார். கம்பளை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் சிறுமியின் பெற்றோர் மருந்தை பெற்றுள்ளனர். இருப்பினும், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவுக்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் குழந்தைக்கு வழங்கப்பட்…
-
- 2 replies
- 764 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 26 APR, 2023 | 04:20 PM யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக நீர் இறைக்கும் மோட்டர் திருட்டும் இடம் பெறுவதாக தந்தை செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். இதேவேளை, 75 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர்கள் 3 தடவைக்கு மேல் திருடப்பட்டுள்ளதாகவும், திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும…
-
- 1 reply
- 567 views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதற்கமைய, சுமார் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவண பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். https://thinakkural.lk/article/250836
-
- 2 replies
- 674 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 26 APR, 2023 | 02:30 PM பல்வேறு பதவி நிலைகளில் உள்ள நபர்களின் தேசிய அடையாள அட்டை, சம்பள விபர பட்டியல் சேவைக்கான சான்றிதழ்களையும் பயன்படுத்தி வங்கி கடனட்டைகளை (Credit Card) பெற்று பல இலட்சம் ரூபாய்கள் பண மோசடி செய்த நபர் ஒருவரை கம்பளை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் கைது செய்துள்ளனர். இதன்போது கம்பளை தெல்பிட்டிய வத்தேஹேனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். நாவாலப்பிட்டி இங்குறு ஓய புகையிரத நிலைய அதிபரின் விபரங்களை வைத்து நாவலப்பிட்டி பிரதேச வங்கி ஒன்றில் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கடனட்டையினை பெறுவதற்கு சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) முயற்சித்துள்ள…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 09:51 AM ஐடிஎன்னின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் பாலியல் துன்புறுத்தல்களிற்குள்ளானமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமுகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐடிஎன்னின் தலைவர் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசதொலைக்காட்சியொன்றின் பெண் ஊடகவியலாளர் பாலியல்துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்;துள்ளது. …
-
- 2 replies
- 456 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்திற்கு நீராடச்சென்ற சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் இருவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://thinakkural.lk/article/250854
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 26 APR, 2023 | 03:25 PM யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் அருகில் இரத்த வங்கி அல்லது இரத்த தான முகாம்களை அமைத்து, இரத்த தானம் செய்வதற்கும், குருதி சேகரிப்பில் ஈடுபடவும் முன்வருமாறு கோரப்பட்டுள்ளது. குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கியினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இது குறித்து தகவல்களை பெறவும், அறிவிக்கவும் 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இருக்கவ…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 26 APR, 2023 | 10:12 AM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றார் என தெரிவித்துள்ளார். உயிர்தஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுமையை கடைப்பிடிக்க தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் இதுவரை உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் உலக நாடுகள் சிலவற்றில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடித்தன எனவும் தெரிவ…
-
- 2 replies
- 569 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 11:38 AM ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமானங்களில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர்மட்ட முகாமைத்துவம், பொறியியல் திணைக்களம், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசப…
-
- 4 replies
- 576 views
- 1 follower
-
-
இந்திய சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் - மத்திய வங்கியின் ஆளுநர் Published By: T. Saranya 26 Apr, 2023 | 10:42 AM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். 'இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கா…
-
- 0 replies
- 446 views
-
-
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்.. மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் சிவ சேனை கடந்த தைப் பொங்கலின் பின், மூன்று மாத காலத்தில், சிவபூமியில் 31 ஊர்களில் மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில் சைவ எழுச்சிப் பட்டியல் கீழே. இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம். ஊடகச் சந்திப்பு. சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள். உருளும் அந்நிய ஊடுருவல். வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம். மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள். தளர்வறியா மனத்துடன் 31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த சைவப் பெருமக்கள் திருக்கூட்டம். 1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில். 2. கோ…
-
- 19 replies
- 1.6k views
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 09:59 AM மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பிரதான வீதியில் கிரானுக்கும் சித்தாண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை …
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் ! Published By: T. Saranya 25 Apr, 2023 | 09:45 AM பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரத…
-
- 9 replies
- 518 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 03:17 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலியில் வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் செவ்வாய்க்கிழமை (25) காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பூட்டி விட்டு, வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தியுள்ளார். அவ்வேளை அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண்மணி அபாய குரல் எழுப்பவே , அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது , வீட்டி…
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:41 AM கொழும்பு 15, மோதரவில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து மருந்து வகைகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிகப்படும் மூலப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துகள் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் வலி நிவாரணி மாத்திரைகளை தயாரித்துள்ளதாகவும், இந்திய மருந்து வகைகளுக்கு நிகரான மருந்துகளை அவர் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப…
-
- 2 replies
- 714 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 03:08 PM (எம்.மனோசித்ரா) பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதிவசதிகளுக்கு இணையாக இலங்கையின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்திவங்கியால் 350 மில்லியன் டொலர்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன்வசதி மற்றும் 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவித் தொகையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கடன் தொகையை பெ…
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 02:35 PM (எம்.மனோசித்ரா) சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமானவகையில் 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய சட்ட விரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொழிலுக்குப் பிரவேசித்துள்ள தரப்பினர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உப முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக இணைத்துக் கொள்கின்ற செயன்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களை ஆபத்துக்குள்ளாக்குகின்ற பாரியளவிலான மோசடிகள் மற்றும் ஊழல்களைக் குறைப்பதற்கு இயலுமைகிட்…
-
- 1 reply
- 538 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 02:47 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது. அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஜனாதிபத…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 02:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை நோக்கி குறிப்பிட்டார். அமைச்சர் ஆற்றிய உரையில் 'புலிகள்' என குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அந்த சொல்லை ஹென்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார். ப…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-