Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படக்குறிப்பு, ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடைபெற்றபோது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவலின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன? கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகத்துடன், போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று மாலை விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போதே, போலீஸ் குண்டுத…

  2. Published By: RAJEEBAN 19 APR, 2023 | 05:04 PM சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையானதாகவும் எளிதானதாகவும் இருக்கவேண்டும் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்புவது என்றால் இரண்டு விடயங்கள் குறித்து கவனம் செலுத்…

  3. Published By: VISHNU 16 APR, 2023 | 10:51 AM “தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு த…

  4. Published By: VISHNU 19 APR, 2023 | 06:08 PM (நா.தனுஜா) இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மின்னேற்றப்பட்ட பற்றரி நிலையங்கள் இரண்டை ஸ்தாபித்து, நடாத்திச்செல்வதற்கு அவசியமான நிதியுதவியை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் கீழான இலங்கை சக்திவலு செயற்திட்டம் மற்றும் ஸ்லிங் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கிடையில் மேற்குறிப்பிட்ட நிதியுதவிக்கான இருதரப்பு ஒப்பந்தம் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிதியுதவின் ஊடாகக் கொழும்பில் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மினனேற்றப்பட்ட பற்றரி…

  5. யாழில் மீண்டும் கொரோனா யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. …

  6. காலி முகத்திடலில் இனிமேல் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் கொழும்பு – காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 220 மில்லியன் செலவில் காலி முகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் க…

  7. கப்பலில் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் விடுதலை ! கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஒவ்வொருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கடந்த மார்ச் 24ஆம் திகதி பனாமா மாநிலத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலுக்குள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் நோக்கில் நான்கு யாழ் இளைஞர்கள் இரகசியமாக பிரவேசித்துள்ளனர். கப்ப…

  8. 25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். திறைசேரி நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்த நிலையில் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1330422

  9. புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தவேகத்தில் நிலைமை சென்றால் நாங்கள் இன்று சுதந்திரமாக கருத்துதெரிவிப்பது பேசுவது போன்…

  10. இலங்கை வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கிறது பங்களாதேஷ்!! இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடனுக்கான முதல் தவணையை ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, பங்களாதேஷ் மத்த…

    • 4 replies
    • 391 views
  11. Published By: DIGITAL DESK 5 17 APR, 2023 | 12:44 PM முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்து குற்றுயிராய் கிடந்த பாம்பினை கையினால் தூக்கியதில் பாம்பு கடிக்கு இலக்காகிய நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார். மாங்குளம் கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/153001

  12. “1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது “தோல்வியடைந்த நாடாகவே உள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். த ஹிந்துவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார். காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக ம…

  13. Published By: DIGITAL DESK 5 18 APR, 2023 | 02:43 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பேரூந்துகளில் தொழிநுட்ப கோளாறுகள் எவையும் இல்லை. அரசியல் ரீதியில் வக்கிர எண்ணம் கொண்டவர்களாலேயே இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (18) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , அரசியல் ரீதியில் வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு வீதிகளில் புதிய பேருந்துகள் செல்வதைக் காண்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான் இவ்வாறான வதந்திகளைப் பரப…

  14. யாழ்ப்பாணம், பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் பிள்ளையார் சிலை கடையர்களால் உடைத்து எடுத்துச் செல்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலையே சில விசமிகளால் உடைத்து எடுத்துச் செல்வதற்கான முயற்சி நேற்றிரவு இடம்பெற்றிருக்கிறது. பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது. இந்நிலையில் சம்பவதினம் காலை அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்ட போது பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார். இ…

    • 2 replies
    • 710 views
  15. Published By: DIGITAL DESK 5 18 APR, 2023 | 03:25 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து அணைக்குழு வின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது 430 அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுப்படடுள்ளதுடன் தற்போது அரை சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு தங்கள் பஸ்களை சாதாரண பஸ்களாக அல்லது சொகுசு பஸ்களாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்…

  16. Published By: VISHNU 18 APR, 2023 | 04:55 PM (எம்.மனோசித்ரா) போர் விமானங்களை புதுப்பிப்பது தொடர்பில் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவிருந்தால் அது குறித்து பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். இவ்வாறான விடயங்கள் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட முன்னர், தேசிய பாதுகாப்பு சபையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்தோடு நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்க வேண்டியது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமை என்ற ரீதியில், இலங்கை அரசாங்கமும் அதன் அடிப்படையிலேயே செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.…

  17. நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் விதிகளின்படி நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமுல்படுத்தப்படவுள்ள நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்…

  18. உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள்! இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 24 எயார்பஸ் விமானங்கள் உள்ளதாகவும், அவற்றில் A 330-200 மற்றும் A 330-300 ரகத்தைச் சேர்ந்த 12 விமானங்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய 12 விமானங்கள் குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும், A320, A321, A320, A321 NEO மற்றும் W321NEO வகையைச் சேர்ந்த வ…

  19. Published By: DIGITAL DESK 5 18 APR, 2023 | 11:17 AM கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை தொடர்பான கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையர்கள் இந்தியாவுக்குச் செல்லும் சமீபத்திய முறை இதுவாகும், அங்கு தரகர்கள் மூலம் போலியான தகவல்கள் கொண்ட விசாவைத் தயாரித்து அதன் மூலம் அவர்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள். இதன் அ…

  20. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தமிழ் – சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 15 லீற்றர் வரை அதிகரிக்கப்படுகிறது. சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 05 லீற்றரில் இருந்து 8 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 7 லீற்றராகவும், கார்களுக்கான ஒதுக்கீடு 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. …

  21. Published By: DIGITAL DESK 5 17 APR, 2023 | 05:35 PM முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை சென்ற மீனவர்கள் அங்கு கடற்படை முகாமை முற்றுகையிட்டு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டநடவடிக்கையின்போது முல்லைத்தீவு கடலினை நம்பி 5ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் சாலை தொக்கம் கொக்கிளாய் வரையான கடற்பரப்பில…

  22. இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகளே காரணம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க Published By: Rajeeban 17 Apr, 2023 | 09:41 AM இலங்கையின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு, ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகள்தான் காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார். தெற்காசியா அறக்கட்டளை மற்றும் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜெர்னலிசம் (ஏசிஜே) சார்பில், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதர் மதன்ஜீத்சிங் நினைவு சொற்பொழிவு, இணையவழி வாயிலாக நடைபெற்றது. ஏசிஜே தலைவர் சசிகுமார் வரவேற்றார். மதன்ஜீத்சிங் அறக்கட்டளை (எம்எஸ்எஃப்) தலைவர் …

    • 2 replies
    • 614 views
  23. Published By: NANTHINI 16 APR, 2023 | 01:16 PM இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பாரியளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. மேலும், குறித்த படகு மற்றும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரைக்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. …

  24. தேசிய அரசாங்கத்தை அமைக்க யோசனை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதிய வசதி தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து அவர் இந்த அழைப்பை விடுக்க உள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அன்றைய தினம் அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த…

  25. 27 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவரை மோதர பொலிஸார் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை மோதர, றொக்ஹவுஸ் லேனில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயத்தாள் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இப்பண்டிகைக் காலத்தில் போலி நாணயங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/249352

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.