ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இந்தியா சென்றிருக்கிறார். சார்க் மகாநாட்டை முன்னிட்டு சிறிலங்கா வந்திருந்த உயர்மட்டக் குழு சம்பந்தரை சந்தித்து, இந்தியாவிற்கு தமிழர் மீது இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி அவரை மகிழ்வித்திருந்தது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு மகிழ்விப்பிற்காக சம்பந்தரை இந்தியா அழைத்திருக்கலாம். நீண்டகாலம் தனது சொந்தத் தொகுதியான திருகோணமலைக்கு செல்லாதிருந்த சம்பந்தர் சமீபத்தில் பலத்த பாதுகாப்புடன் திருகோணமலைக்குச் சென்று கந்தசாமியை தரிசித்துவிட்டு தற்போது இந்தியாவிலுள்ள சில நாராயணன்களை தரிசிக்கச் சென்றிருக்கிறார். அவர் என்ன செய்தி கொண்டு வரப் போகின்றார் என்ற ஆவல் விடயமறிந்த எ…
-
- 0 replies
- 895 views
-
-
வன்னி மக்கள் அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சொந்த மண்ணில் வாழவிடு இல்லாது போனால் அந்த மண்ணிலே சாகவிடு என்று தன்மானத்தைக் காத்துக் கொள்ளவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இப்படிக் கூறியுள்ளார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன. வன்னி மக்களை வவுனியாவுக்கு வருமாறு ஜனாதிபதி உட்பட அரச உயர்மட்டத் தலைவர்கள் அழைத்தாலும் அந்த மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு வன்னி மக்களை அழைக்கும் அரசின் முயற்சி குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:- யுத்தத்தைத் திணித்திருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிவாரணங்களையும் உணவுப…
-
- 0 replies
- 600 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஏழாம் வட்டாரத்தில் உள்ள வடிவேல் என்பவரின் வீடு கருணா குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது. கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதியின் தலைமையிலான குழுவினரே வீட்டுக்குத் தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8மணியளவில் இச்சம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த தீவைப்புக் காரணமாக ஒன்றரை லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பிரதேசத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும் சில தினங்களுக்கு முன்னர் இக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 786 views
-
-
அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் வன்னிக்குள் செல்வது வெள்ளி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் ஏ9 வீதிகளை நோக்கி படையினர்ஷெல் தாக்குதலை மேற்கொண்டு வருவதானாலேயே இந்தத் தடையை ஏற்படுத்தியதாகப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு செல்லும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் ஓமந்தையூடாக பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு கிளிநொச்சி நகரில் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் போரூட் அமைப்பினரின் கட்டிடத்திற்கு அருகிலிருந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கிளிநொச்சியில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகள் படை நடவடிக்கையால் பெரிதும் முடங்கிய…
-
- 0 replies
- 591 views
-
-
இலங்கைப் படையினருக்கு எதிரான இறுதிப் போருக்குத் தேவையான ஆயுதங்களை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஆயுத முகவர்களிடம் விடுதலைப்புலிகளின் தலைமை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக சிங்கள வார இதழ் குறிப்பிட்டுள்ளது. மோதல்களில் ஈடுபட்டுள்ள கெரில்லாக்களுக்கு தேவை எனக் கூறி விடுதலைப்புலிகள் நவீன ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும்; முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத ஆயுத விற்பனையாளர்களின் ஊடாக சீன உற்பத்தி ஆயுதங்களை விடுதலைப்புலிகள் அண்மைக் காலத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுத முகவர்கள் கறுப்பு பணத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதாக கூறப்படுகிறது. ரி 56 ரக துப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 85க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 280க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பை ஆதாரங்காட்டி ‘தமிழ்நெற்’செய்திவெளியிட்ட
-
- 4 replies
- 2.6k views
-
-
வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] வவுனியா மாவட்டத்தில் உள்ள தாலிக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 967 views
-
-
நல்லூர்க் கந்தனின் அடியார்களின் குறை தீர்க்கும் திருப்பணியில் சிறிலங்காவின் புதல்வர்கள். பல கோடி பெறுமதியான ஆடை அணிகலங்களுடன் எழுந்தருளி இருக்கும் நல்லூர்க் கந்தனின் திருக்காட்சி வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களின் தூக்குக் காவடி. அடியார்களின் தொண்டர்களாக சிறிலங்காவின் மைந்தர்கள் களப் பணியாற்றும் காட்சி.
-
- 12 replies
- 5.6k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 2505 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவை மேற்கோள்காட்டி ராவய செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 305 பேருக்கு அண்மையில் இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடி மறைந்து வாழ்வோர் உடனடியாக தங்களது படைப்பிரிவுகளுக்குச் சென்று சரணடைவதன் மூலம் தண்டனையிலிருந்து மீள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவப் பொலிஸாரும், சாதாரண பெலிஸாரும் இணைந்து கடந்த 2ம், 3ம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதலில் 80 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http…
-
- 1 reply
- 1.4k views
-
-
இராணுவத்தால் முழுவதுமாக மீட்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வவுனியா - மன்னார் வீதியில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கள முனைகளில் மோதல் நடந்துள்ளதாக இராணுவத்தை மேற்கோள் காட்டி பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோதல்களில் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
-
- 2 replies
- 2.8k views
-
-
வடக்குக் கிழக்கில் உள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு சயனைட் விஷத்தை முறிக்கும் மருந்துகளை அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஹோனானிகல இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்ட உணவில் சயனைட் கலந்திருந்தது என அறியப்பட்ட தகவலை அடுத்து சுகாதார திணைக்களம் இந்த நடவடிககையை எடுத்துள்ளது. படையினருக்கு வழங்கப்படும் உணவை இனிவரும் காலங்களில் நன்கு பரீட்சித்த பின்னர் வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உணவுபொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றை பெற்றுக்கொள்ளும் நபர்கள் குறித்து ஆவதானத்துடன் செயற்படுவது, உணவு பொருள் கொள்வனவு செய்வது முதல் அதனை முகாமுக்கு வழங்கும் வரையான முழுப் பொறுப்பையும் உணவு விநியோகஸ்தருக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
வேலைத்தளங்கள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முதல் ஏனைய பொது இடங்களில் உள்ள கணினிகளில் உள்ள screen saver அய் பயன்படுத்தி வன்னியின் மனிதாபிமான அவலக் காட்சிகளை ஏனைய சமூகத்தவர்களோடு பகிருவதற்கு ஒரு யோசனை. முதலில் இலவசமாக கிடைக்கும் Google Photos Screensaver போன்ற ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் http://pack.google.com/screensaver.html Google Photo Screesaver அய் install பண்ணி முடிந்த பின்னர் control panel இற்கு சென்று display அய் தெரிவு செய்யவும் முதலில் Screen Saver என்ற tab அய் தெரிவு செய்யவும் பின்னர் Google Photo Screen Saver அய் தெரிவு செய்யவும். 3 ஆவதாக settings அய் தெரிவு செய்யவும். 1- இணையத்தோடு தொடர்ச்சியாக இணைந்திருக்கும் கணனி ஒன்ற…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு இராணுவத்தைவிட்டுச் சென்ற அனைத்து படைவீரர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும், அனைத்துப் படைவீரர்களும் யுத்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இராணுவத் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு காரணங்களினால் இராணுவத்தைவிட்டுச் சென்ற அனைத்து படைவீரர்களும் உடனடியாக தங்களது படையணிகளில் இணைந்து கொள்ள முடியும் என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 3 replies
- 2.4k views
-
-
வடக்கே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் காயமடைதுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து படையினர் கூறுகையில்; கிளிநொச்சியில் அக்கராயன்குளம், மாணிக்கன் நடு, பகுதியில் வியாழக்கிழமை காலையும் பிற்பகலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன் ஆறு படையினர் காயமடைந்துள்ளனர். மணலாறில் ஆண்டாங்குளம், குருந்தன் குளம், உலாத்துவெளி பகுதிகளில் காலை, நண்பகல்,பிற்பகலில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் வேட்டை மான்குளம், பாலமோட்டை…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம், 117 பேர் இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நோயினால் 34 பேரே இந்த நோயினால் மரணமாகினர். தற்போது இந்த நோயினால் 3700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2600 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்தனர். கம்பஹா, களுத்துறை, மேல்மாகாணம், சப்ரகமுவ, கண்டி, தென்மாகாணம்,கேகாலை, ஆகிய இடங்களிலேயே தற்போது அதிகளவானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் காய்ச்சல் நீர், கால்நடைகள், நாய்கள், மற்றும் பூனைகளின் மூலம் பரவுகின்றன WWW.TA…
-
- 1 reply
- 869 views
-
-
இலங்கையில் எந்தச் சூழ்நிலையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகிறது என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என சர்வதேச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். குண்டுவெடிப்புக்கள் போன்ற வன்முறைச் சம்பவங்களிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக அவர்; கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாக சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மனித உரிமை மீறல்களைத் …
-
- 0 replies
- 979 views
-
-
ஆட்கடத்தல்களை ஆட்சேபித்து நீதிமன்றக் கதவைத் தட்டுங்கள்! 06.09.2008 பெரும்பான்மையினமான பௌத்த சிங்கள சமூகத்தின் பேரினவாதச் சிந்தனைக்குச் செயலுருக் கொடுப்பனவாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அமைந்து இருப்பினும், வெளிப்படையாகப் பெயருக்கேனும் சமத்துவத்தைக் காட்டும் சட்ட ஏற்பாடுகளும், சட்டமாக எழுதப்படாத இயற்கை நீதியும் இந்த நாட்டில் இருக்கவே செய்கின்றன. இலங்கைத் தீவில் அடக்கி ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனங்கள் இந்த வசதிகள், வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தி நியாயம் தேடவும், நீதி பெறவும் தம்மால் இயன்ற அளவுக்கு முயற்சிக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளில் வெற்றிகிட்டாமல் போகலாம். நீதியை நிலைநாட்ட இயலாமல் போகலாம். ஆனால், ஆகக் குறைந்தது நியாயம் தேடும் …
-
- 0 replies
- 615 views
-
-
பேரினவாத ஒடுக்கு முறையாளர்களின் போர் மாத்திரையால் மயங்கி நிற்கும் சிங்கள மக்கள் விரைவில் உண்மைகளை உணரும் நிலை வரும் [06 - September - 2008] காலகண்டன் "பயங்கரவாதத்தை முறியடிப்பேன். பிரபாகரனை எனது காலடிக்கு கொண்டு வருவேன். வடக்கு மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்பேன். கிழக்குப் போன்று வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவேன்' மேற்கூறிய வசனங்கள் அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சூளுரைகளாக முன்வைக்கப்பட்ட கருத்துகளாகும். இவை வெறும் உரைகளாக அன்றி வடக்கு நோக்கி முடுக்கி விடப்பட்ட போரின் நடுவே கூறப்பட்டு வந்த பேரினவாத உணர்ச்சி மிக்க வரிகளுமாகும். இவற்றின் மொத்த வெளிப்பாட்டை இன்றைய வன்னிப் போர்க்களம் வெளிப் படுத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்ற போதிலும், அவற்றின் மீது நீதியற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட, வேர்ல்ட் விசன் நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட பணிகள் தொடர்பான வீடியோ தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த வீடியோ காட்சிகள் இலங்கையின் தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் எவ்வாறான பணிகளை மேற்கொண்டிருக்கின…
-
- 0 replies
- 829 views
-
-
வடக்கில் இருந்து யாழ்ப்பாணம் அரியாலை அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 வருடங்களின் பின்னர் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடவுள்ளனர். 103 ஏக்கர் வயல் காணியில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 73 விவசாயிகளுக்கு இந்த கமத்தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் விவசாயம் செய்வதற்கான அனுமதியை யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் இருந்து தெற்குக்கு அரிசி, வாழை, மிளகாய் மற்றும் வெங்காயம் ஏற்றுமதி செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என யாழ் கட்டளைத் தளபதி கூறியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 1 reply
- 974 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்த த நேஸன் பத்திரிகையின் ஆசிரியர் குழு மேற்கொண்ட முடிவினை நிராகரித்தமையினால், அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் உப ஆசிரியர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. த நேஸன் பத்திரிகையின் ஆசிரியர் முன்சா முஸ்தாக், உப ஆசிரியர் எம். டேவிட் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ளனர். ரிவிர மீடியா கோப்பரேசன் நிறுவனம் அந்தப் பதவி விலகல் கடிதங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பத்திரிகையின் உரிமையாளர்கள் ஜனாதிபத…
-
- 0 replies
- 778 views
-
-
வன்னேரிக்குளம் மோதலில் 50 படையினர் பலி: 120 பேர் காயம்: படைத்துறை ஆய்வு ஊடகம் [சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2008, 09:34 மு.ப ஈழம்] [க.நித்தியா] அக்கராயன் வன்னேரிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 50 என்று சிறிலங்கா படைத்துறையை மேற்கோள் காட்டும் படைத்துறை ஆய்வு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை 13 படையினரே கொல்லப்பட்டனர் என்று படைத்தரப்பு தெரிவித்து வரும் நிலையில் இத்தகவல் வெளியாகியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அக்கராயன் வன்னேரிக்குளம் முறியடிப்பில் படையினரின் 22 உடலங்களையும் நாச்சிக்குடா முறியடிப்பில் படையினரின் 7 உடலங்களையும் கைப்பற்றியிருந்தனர். …
-
- 0 replies
- 950 views
-
-
இலங்கையில் ஈழப்போர் தீர்மானக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போரில் விரைவில் வடக்கையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்போகும் அதிகாரப் பேரளிப்பு தீர்வானது, 20 வருட யுத்தத்துக்குக் கூலியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையத்தளத்தின் கருத்தாகவுள்ளது. மறுபுறத்தில் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை மற்றும் அந்தப் பிரச்சினையால் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள அகதிகளின் நிலைப்பாடு குறித்து அந்த இணையத்தளம் விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை அகதிக…
-
- 3 replies
- 2.9k views
-
-
-
- 125 replies
- 12k views
-
-
மல்லாவியில் ஒருபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை புலிகள் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவ உயரதிகாரி ஒருவரை ஆதாரம்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை இராணுவபேச்சாளர் உதய நானயக்கார மறுத்துள்ளார். இதன் மேலதிக செய்திகள் விரைவில்...... http://www.tamilskynews.com/
-
- 12 replies
- 5.7k views
-