ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143618 topics in this forum
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், கொடியேற்ற உற்சவத்தின்போது, குடாநாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கொடியேற்றத்தின் போது பக்தர்கள் முண்டியடித்ததால் அந்நேரத்தில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போதும் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடந்தவருடத்தை விட இம்முறை ஆலய வளாகப் பகுதிகளில் அதிக பந்தல்கள் போடப்பட்டுள்ளதுடன் தாகசாந்தியும் வழங்கப்பட்டன. தெல்லிப்பழை துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் மடம் ஆகியவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை இந்துசமய விவகாரக் குழுவினரால் வருடாவருடம் வெளியிடப்ப…
-
- 111 replies
- 8.8k views
-
-
இலங்கைப் படையினரின் தாக்குதலைக் கண்டித்து ஜெயலலிதாவின் தலைமையில் போராட்டம் தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். கச்சதீவை விட்டுக்கொடுத்ததிற்குப் பிறகு தமிழக மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமது போராட்டம் இராமேஸ்வரம் பாண்டியன் திடலில் இடம் பெறவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதாகப் பழி சுமத்தித் தமிழக மீனவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்திய விமானப்படையில் 11 பேருடன் இலங்கைக்கு பயனித்துக் கொண்டிருந்த எம்.ஜ.17 ரக உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறினால் மயிரிழையில் தப்பியதாகவும் விமானம் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வானூர்தி இந்தியாவில் இருந்து பயனித்த உலங்குவானூர்தி என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வானூர்தியை செலுத்தி சென்ற இந்திய விமானிகள் உடனடியாக அதனை அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கியுள்ளனர். விமானம் தரையிறக்கப்படாது இருந்தால் அது விபத்துள்ளாக நேர்ந்திருக்கும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இந்த உலங்குவானூர்தி இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது என விமானப்படையின் பேச்சாளர் வின் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். …
-
- 3 replies
- 3k views
-
-
பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
*மோதலில் மூவர் படுகாயம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் அண்மையில் மாணவியொருவர் பல்கலைக்கழக மார்ஷல்கள் (ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரி) சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 5 replies
- 1.8k views
-
-
இந்தியாவின் புதுச்சேரி, காரைக்கல் ஆகிய பகுதிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவியளிக்கும் பிரதேசங்களாக மாறியிருக்கின்றன எனும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இந்திய பொலிஸ் பணிப்பாளர் ஏ.எஸ்.கான் 'ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளரான நிக்ஷன் என்றழைக்கப்படும் க்ரிஷ்ண நீதன் என்பவர் என்பவர் புதுச்சேரியிலிருந்து சில பொருட்களை எடுத்துவரும்போது ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பொலிஸ் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டவை அல்ல எனவும், அவற்றை எந்தவொரு கடைகளிலும் வாங்கிக் கொள்ள முடியும் எனவு…
-
- 1 reply
- 833 views
-
-
பண வீக்கம், விலைவாசி என்பன கிடுகிடு என எகிறி வானைத் தொட்டு நிற்கும் பின்புலத்தில், அன்றாட சீவியத்துக்கான வயிற்றுப்பாட்டுக்கு உணவு பெற முடியாத இக்கட்டில் சிக்கலில் சாதாரண குடும்பம் ஒவ்வொன்றும் சிக்கித் தவிக்கும் பேரவல நிலைமை இன்று உருவாகியிருக்கின்றது. அடிப்படைத் தேவைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வரவு செலவுத் திட்டம் கையை மீறி விட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் சூடானின் டாபூர் நிலைமையை ஒத்த மோசமான பட்டினி நிலையை இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துக் கட்டம் சூழ்ந்து நெருங்கி வருவதாக முக்கிய ஆய்வு மையங்களும், நிறுவனங்களும் எச்சரித்திருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சாதா…
-
- 0 replies
- 810 views
-
-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பான குற்றச்சாட்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் அண்மைய அறிக்கையிலும் முன்வைக்கப்பட்டிருந்ததாக ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டபோது சுட்டிக்காட்டினார். ஒருவர் கடந்த ஜுலை மாதம் 14ஆம் திகதி வெள்ளைவான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருக்கும் அறிக்கையையும் ஹக்கீம் மேற்கோள்…
-
- 0 replies
- 677 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த ராப் இசைப்பாடகியான மாயா (மாதங்கி அருள்பிரகாசம்) பயங்கரவாதத்த்pற்கு ஆதரவு தெரிவிப்பதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். தான் பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிப்பவள் என்றும் அவர்களுக்காகப் பாடுபவள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும் தான் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். M.I.A.உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning brigh…
-
- 19 replies
- 2.8k views
-
-
சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதே தவிர எந்தவொரு நாட்டின் படையும் இலங்கைக்கு வரவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சார்க் மாநாட்டின்போது எந்தவொரு நாட்டின் படைகளும் இலங்கைக்கு வராதென சபை முதல்வர் கடந்த சபை அமர்வின்போது உறுதிவழங்கினார். ஆனால்,இந்திய யுத்தக் கப்பல்கள் வந்தன.அந்நாட்டின் ஹெலிகள் எமது வான் பரப்பில் பறந்தன.துருப்புகள் வந்தன. இவ்வாறான நிலையில் பொறுப்பு வாய்ந்த சபை முதல்வர் பொய்யான தகவல்களை வழங்கி சபையை தவறாக வழிநடத்தியுள்ளாரென ஐ.தே.க.எம்.பி.ரவிகருணாநாயக்க குற்றம்சாட்டினார். இதற்குப்பதிலளிக்கும் போதே, சார்க் நாடுகளின் தலைவர்கள் இலங்கை …
-
- 0 replies
- 948 views
-
-
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பெரியவிளான் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட உடலம் தொடர்பான விசாரணைகளில் திரும்பம் ஏற்பட்டுள்ளது. 57 அகவையுடைய ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டார். வெளிநாட்டிலிருந்து சென்றிருந்த இவர் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் பறிக்கும் நோக்கில் மூன்று பெண்களால் இவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்கின்றார். இந்த மூன்று பெண்களும் மல்லாகம் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜீவைத் தாக்கிய சொய்ஸா இருந்திருந்தால மன்மோகன், நாராயணனின் கதி என்னவாகியிருக்கும். இலங்கை மீதிருந்த கரும்புள்ளி கருவடுவாக மாறியிருக்கும் என்று அவர் குற்றஞ்சாட்டியனார். நாராயணன் வாடகை வாகனத்;தில் செல்லுமளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அமைச்சர்கள் வாடகை வாகனங்களில் செல்ல முடியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். நேற்று அவசரகால சட்ட பிரேரணை நீடிப்பின் போது பேசிய பா.உ லக்ஷ்மன் செனவிரத்தன மேலும் : இராணுவத்தினா படையை விட்டு வெளியேறும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கள நிலைமைகள் தெரிவிக்கினறன. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தத்தில் பயங்கரவாதிகள் தொடர்பான செய்தியை அறிவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த நிலையில் இராணுவத்தள…
-
- 0 replies
- 742 views
-
-
இலங்கை இராணுவத்துக்கு தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமென ஹெல உறுமைய பா.உ எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்துள்ளார். மேலும் : இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறினர். ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகிறோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம். அதே வேளை, தற்போது பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனேனில், இது தொடர்பில் எமக்க…
-
- 24 replies
- 3.4k views
-
-
அணுத் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கையுடன் சேர்ந்து தொழிற்படத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் முட்டாகி தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த ஈரானிய வெளிநாட்டமைச்சர் இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்பு நாடுகள், எல்லாத்துறைகளிலும் இரண்டு நர்டுகளும் இணைந்து தொழிற்படுகின்றன. அந்த வகையில் யரேனியத் தொழில்நுட்பம் தொடர்பாகவும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பற்றின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் தொழிற்படுகின்றன. அந்த நம்பிக்கையினதும் நட்பினதும் அடிப்படையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை பணத்தை இலங்கையின் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கென ஈரான் வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 762 views
-
-
படையினர் வடக்கை கைப்பற்றும் தீர்க்கமான இந்த சந்தர்ப்பத்தில் ஊடகசுதந்திரத்தை வேண்டி மகஜரில் கையெழுத்து பொறுவதானது காலனித்துவத்தின் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தேசத்துரோக செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாதாந்த சஞ்சிகையான கிருளவின் முதலாவது இதழ் வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வன்முறைகளை தடுத்து நிறுத்தி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வீ.பீ உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் இணைந்து கையெழுத்தை பெற்றுவரும் கூட்டு மகஜர் குறித்து விமல் வீரவன்ஸ …
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை விமானப்படையில் பதிய பணித்தரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. இற்றைவரை Warrant Officer (WO) எனும் பணித்தரமே உயர்ந்ததாக இருந்து வந்தது. ஆனால் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து 19 அதிகாரிகள் (MWO) ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். புதிதாகப் பதவி உயர்த்தப்பட்ட 19 பேரும் விமானப்படை கொமாண்டர் றொசான் குணதிலக, எயர் வைஸ் மார்சல் பி.வி.பிரேம்சந்திர, பதில் எயர்வைஸ் மார்சல் எச்.டி.அபேவிக்ரம ஆகியோருடனிருந்து எடுத்த புகைப்படங்களும் ஊடகங்களால் வெளியிடப்பட்டள்ளன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 833 views
-
-
திருமாவுடன் தொடர்புபடுத்த முயன்றார்கள் -கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம் புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தக…
-
- 9 replies
- 2.6k views
-
-
சப்பென்று முடிந்த சார்க் மாநாடு! சார்க் நாடுகளின் 15-வது மாநாடுஇலங்கை கொழும்பு நகரில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கச்சத்தீவு பிரச்னை விவாதிக்கப்படும், தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அதுபற்றி உருப்படி யாக எந்தவொரு தீர்வையும் காணாமல் இந்த மாநாடு முடிந்திருக்கிறது. சார்க் என்பதும் ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பு போல, எட்டு நாடுகளைக்கொண்ட ஒரு கூட்ட மைப்புதான். இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாக 1985-ல் உருவாக்கப்பட்டதுதான் சார்க் என்பதாகும். பிராந்திய அளவில் அர…
-
- 0 replies
- 937 views
-
-
த.தே.தொலைக்காட்சியின் இன்றைய செய்திகள்- 06.08.08 http://www.nettamil.tv/play/News/NTT_Tamil_News_06082008
-
- 0 replies
- 1.2k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் அம்பலம் http://www.nettamil.tv/play/Eelam_Videos/Ambalam இதை மகிந்தருக்கு போட்டு காட்டணும். நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கையில் நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. போசாக்கின்மையைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சிறுவர்கள் போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதாக அரசாங்கத்தின் அண்மைய கணக்கெடுப்புகளின் மூலம் அறிந்துகொள்ள முடிவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள சிறுவர்களில் 22 வீதமானவர்கள் சராசரி எடையைவிட குறைவான எடையைக் கொண்டவர்கள் என சுகாதார மற்றும் போசாக்கு அமைப்பும், குடிசன மதிப்பீட்டுத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 18 வீதமான சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. “நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால…
-
- 0 replies
- 652 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்தியாவிலிருந்து கேபிள் மூலம் மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதென்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இதன் மூலம் எந்த நேரமும் எமது நாட்டை இருளில் மூழ்கடிக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல், பொருளாதார பிரச்சினையில் நேரடியாக இந்தியா தலையிடும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் கலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தில…
-
- 0 replies
- 1k views
-
-
மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலி;ருந்து வெளிமாவட்டங்களுக்கும் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான புதிய பாதுகுக்ப்பு நடைமுறைகள் கைக்கொள்ளப்படுவதாக இராணுவம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறைகள் குறித்து யாழ் பிராந்திய ஆயுதப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 200க்கும் மேற…
-
- 0 replies
- 944 views
-