ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
வடக்கு கிழக்கில் சைவக்கோவில்கள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் Published By: Digital Desk 5 30 Mar, 2023 | 09:50 AM வடக்கு கிழக்கிலுள்ள சைவசமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது சமூகமளி…
-
- 1 reply
- 515 views
-
-
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது - ரிசேர்வ் வங்கியின் தலைவருடன் மொராகொட ஆராய்வு Published By: Rajeeban 30 Mar, 2023 | 10:58 AM இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திஹன்ட தாசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் உயர் அதிகாரிகளுடனான தனது ஈடுபாட்டை தொடரும் இலங்கை தூதுவர் மும்பாயில் இந்திய ரிசேர்வ் வங்கியின் தலைமையகத்தில் ரிசேர்வ் வங்கியின் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். …
-
- 0 replies
- 292 views
-
-
வடமராட்சியில் மீண்டும் கடற்படை பாஸ் நடைமுறை? Published By: Digital Desk 5 30 Mar, 2023 | 10:05 AM யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்தொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். சுருக்கு வலை மீன் பிடி உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அத…
-
- 0 replies
- 521 views
-
-
அரசியல்வாதிகள் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு எதிராக புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம்: சாகர காரியவசம் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தமது நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்களையும் தலைவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையிலும் அத்தகைய சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்கள் மற்றும் தலைவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
தமிழர்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கும் செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்கிறார் வினோ எம்.பி. Published By: VISHNU 29 MAR, 2023 | 03:07 PM தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அதனோடு இணைந்த பிரதான சூலாயுதம் அதனோடு ஏனைய விக்கிரகங்கள் பிடுங்கப்பட்டு எறியப்பட்ட விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய ந…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
இலங்கைக்கு மேலும் 7 பில்லியன் டொலர் கடன்! மேலும் இரு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 07 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தே இந்த கடன் தொகை கிடைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான நீண்ட கால கடன் வசதிக்கு அனுமதி கிடைத்தன் பின்னர் மீண்டும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328713
-
- 6 replies
- 435 views
-
-
எழுவைதீவின் பனைவளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சிறீதரன் எம்.பி உறுதி Published By: VISHNU 29 MAR, 2023 | 04:12 PM எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும், கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (28) எழுவைதீவில் நடைபெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட இக் கலந்துரையாடலில், அவர்களது அழைப்பின் பேரில் …
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
குறைகிறது எரிபொருள் விலைகள் ! புதிய விலைகள் இதோ ! Published By: T. SARANYA 29 MAR, 2023 | 11:44 AM இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும், அதன் புதிய விலை 340 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றரின் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 375 ரூபாவெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அதன் புதிய விலை 325 ரூபாவெனவும்…
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் : நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ! kugenMarch 28, 2023 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது.ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆ…
-
- 1 reply
- 342 views
-
-
சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால்…
-
- 2 replies
- 519 views
-
-
யாழில் போதைப்பொருள் விற்ற பெண்ணும் வாங்க சென்ற மாணவன் உள்ளிட்ட 10 பேரும் கைது 29 MAR, 2023 | 11:00 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று (29) மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும், கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. போதைப் ப…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
இன – மத ரீதியான வன்முறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது - டக்ளஸ் தேவானந்தா Published By: T. Saranya 29 Mar, 2023 | 10:45 AM இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய…
-
- 1 reply
- 537 views
-
-
தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com…
-
- 1 reply
- 434 views
-
-
போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்…
-
- 0 replies
- 267 views
-
-
பிராந்தியத்திற்குள் பசுமை பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை - ஜனாதிபதி Published By: T. Saranya 28 Mar, 2023 | 04:51 PM (எம்.மனோசித்ரா) பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை பசுமை வல…
-
- 4 replies
- 324 views
-
-
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் Published By: T. SARANYA 28 MAR, 2023 | 03:06 PM (எம்.மனோசித்ரா) மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியா இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டு தொடக்கம் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் 70 சத வீதமானவை மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளல், வலுசக்தி விநியோகத்தில் சுயாதீனமடைதல், மற்றும் 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் வெளியீட்டை பூச்சியமாக்குதல் போன்றவற்றை அரசு கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட…
-
- 3 replies
- 648 views
- 1 follower
-
-
சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு மொழியும் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை. எனினும், அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு அப்பாற் சென்று கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அரச மொழியான தமிழ் மொழி அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. …
-
- 2 replies
- 755 views
- 1 follower
-
-
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு 'வட்டமான பர்வத விகாரை' எனும் பெயர் கூகுளில் காட்டப்படுகின்றது. வவுனியா - நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் அப்பகுதி மக்கள் நெடுங்காலமாக வழிப்பட்டு வந்த இடமாகும். இந்நிலையில் வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். தொல்பொருள் திணைக்களம் அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்த வெட…
-
- 3 replies
- 620 views
-
-
எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு-எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% – 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் எனவும் தற்போது அதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும் எனவும் ஒன்றியத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார். இந்நிலைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதிக வங்கி வட்டிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி Published By: RAJEEBAN 28 MAR, 2023 | 04:50 PM இலங்கையின் யுத்தகுற்றத்துடன் தொடர்புடைய நபர்களை நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி அறிந்துகொள்வதற்காக தென்னாபிரிக்க அரசாங்கம் அழைத்துள்ளமை குறித்து அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைச்சர் நலெடி பன்டுரின் அழைப்பி…
-
- 1 reply
- 617 views
- 1 follower
-
-
கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே கட்சியின் தலைவர் தெரிவு - இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் Published By: T. SARANYA 28 MAR, 2023 | 04:28 PM (எம்.நியூட்டன்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள். யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுவதாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்ப…
-
- 1 reply
- 550 views
- 1 follower
-
-
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் -சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இதுபோன்ற வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி வருதாகவும் அது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளது. கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு மற்றும் இருமலுடன் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய் அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச அறிக்கையின் பிராந்திய வெளியீட்டு விழா இன்று Published By: DIGITAL DESK 5 28 MAR, 2023 | 09:23 AM (எம்.மனோசித்ரா) சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை (28)இடம்பெறவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச அறிக்கையின் பிராந்திய வெளியீட்டு விழாவில் பங்குபற்றுவதற்காகவே அவர் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா சிறப்புரையொன்றையும் ஆற்றவுள்ளமை விசேட அம்சமாகும். …
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமை அரசினுடைய பின்னணியிலேயே – மணிவண்ணன் குற்றச்சாட்டு! வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காடையர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்பாடானது முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை இங்கு தூண்டி அதில் குளிர்காய எடுக்கப்படுகின்ற ஒரு அரசியல் கலந்த நடவடிக்கையாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இந்…
-
- 0 replies
- 525 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்! தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அர…
-
- 0 replies
- 255 views
-