Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கவலை! [Thursday 2014-09-25 23:00] ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து பேரவை சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இலங்கை விசாரணை தொடர்பாக கவுன்ஸிலின் இன்றைய அமர்வில் ஆணையாளர் சார்பில், பிரதி ஆணையாளர் பிலேவியா பன்சியர் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையிலேயே இந்தக் கவலை வெளியிடப்பட்டது. ஐ.நா.வின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார் எனவும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் ஐ.நா. அலுவலகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார் எ…

  2. சிறு­பான்மைக் கட்­சி­களின் ஒன்­றி­ணைந்த செயற்­பாடு அவ­சியம் நான்கு சிறு­பான்மைக் கட்­சிகள் ஒன்­று­கூடி தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஆராய்ந்­துள்­ள­துடன் பல தீர்­மா­னங்­க­ளையும் நிறை­வேற்­றி­யுள்­ளன. இந்தத் தீர்­மா­னங்கள் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி. ஆகிய நான்கு கட்­சி­களே ஒன்­று­கூடி தீர்­மா­னங்­கள…

  3. இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் தமிழ் ஈழம் மலரும்: வைகோ * Sunday, January 30, 2011, 13:44 பிரபாகரன் உயிருடன் வருவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று வைகோ கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 பேரின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் நேற்று இரவு நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க …

  4. ''நிறைவேற்றதிகார முறைமையினை இரத்துச்செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாது'' நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சிறப்பம்சம் வாய்ந்த இந்த முறைமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாதென பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சர்வதேசம் மட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் தீர்வுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு பக்க பலமாக காணப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப…

  5. கிளைமோர் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி! நேற்று செவ்வாய் கிழமை தென்மராட்சி வரணி ஞானியர் வளவு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் 52வது இராணுவ அணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும் 3 பேர் காயங்களுக்கும் உள்ளானதாகவும் இவர்களை பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை புதன்கிழமை மாலை 4 மணியளவில் வடமராட்சி வதிரி பகுதியில் இனம்தெரியாத நபர்களால் இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இத் தாக்குதல்கள் 5 நிமிடநேரம் நீடித்ததாகவும் பின்னர் அக்குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. www.pathivu.com

  6. Friday, February 4th, 2011 | Posted by admin அமெரிக்காவில் உத்தியோகபூர்வமற்ற முறையில் மகிந்தாவை சந்தித்ததாரா றொபேட் ஓ பிளேக்? – டெய்லி மிரர் எழுப்பிய கேள்வி!! சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் இடையில் குடும்ப ரீதியாக நெருங்கிய உறவுகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ராசில் தங்கியிருந்ததாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமா…

  7. மைத்­தி­ரியே 2020 இல் கள­மி­றங்­குவார் ஓய்வு பெற­மாட்­டேன் என ஜனா­தி­பதி தெரி­வித்­த­மைக்கு அதுவே அர்த்தம் என்­கிறார் அம­ர­வீர (ஆர்.யசி) ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனோ வேறு அணி­யு­டனோ இணைந்து அடுத்த ஆட்­சி­யினை அமைக்க நாம் தயா­ராக இல்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அர­சாங்­கமே அமைக்­கப்­படும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களின் மனங்­களை வெற்றி கொண்ட தலைவர் என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் மாத்­தி­ரமே ஜன­நா­யக ஆட்­சி­யினை முன்­னெ­டுத்து செல்ல முடி…

  8. மதிப்பிழந்த உயிர்த் தியா­கங்கள்: "மீண்டும் நாட்டைப் பாது­காக்க ஒன்றாக திர­ளுங்கள்"...! விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தில் கைச்­சத்­திட்ட போது நாட்டை சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­ப­தற்­காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்­காக செய்த உயிர்த் தியா­கங்கள் இன்று காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனவே மீண்டும் நாட்டைப் பாது­காக்க ஒன்­றி­ணைய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தெரி­வித்­துள்ளார். போர் முடி­வ­டைந்து 9 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் வெளி­யிட்­டுள்ள விஷேட அறிக்­கை­யி­லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­…

  9. இந்திய இராணுவத்தை தோற்கடித்த விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா இராணுவம் பொருட்டல்ல: வினோதராதலிங்கம். இந்திய இராணுவத்தையே தோற்கடித்த விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா இராணுவம் ஒன்றும் பொருட்டல்ல. எனவே, விடுதலைப் புலிகளை தடை செய்து இந்நாட்டையும் மக்களையும் படுபாதாளத்திற்குள் தள்ளிவிடாதீர்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளதாவது: பேச்சுவார்த்தை காலத்தில் தமிழ் மக்களுக்கு எவ்விதமான விமோசனமும் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளை விட தமிழ்மக்…

  10. இலங்கையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு ருமானியர்கள் கைது [ பிரசுரித்த திகதி : 2011-02-17 07:05:45 AM GMT ] இலங்கையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இரண்டு ரூமானிய நாட்டுப் பிரஜைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் தன்னியக்க ரெல்லர் இயந்திரத்தின் ஊடாக மோசடிகளில் ஈடுபட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். கடனட்டை மோசடியில் ஈடுபடுவதற்கு மேலும் இரு ரோமானிய பிரஜைகள் இலங்கை வந்துள்ளனர் என அவர் வழங்கிய தகவலை அடுத்து குறித்த இரு ரோமானிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் நுட்பமான முறையில…

  11. பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால் குணரட்ணவை நீக்குமாறு பரிந்துரை செய்தாரா ருவான்- அவர் தெரிவிப்பது என்ன ? By RAJEEBAN 16 JAN, 2023 | 04:22 PM பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால்குணரட்ணவை நீக்கிவிட்டு முன்னாள் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவை அந்த பதிவிற்கு நியமிக்குமாறு தான் பரிந்துரை செய்யவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நான் தற்போதைய பாதுகாப்பு செயலாளரை நீக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது ஆனால் நான் அவ்வாறான யோசனையை முன்வைக்கவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். யார் இதனை தெரிவித்தது என எதனையும் குறிப்பிடாமல் இந்த செ…

  12. [Monday December 11 2006 08:07:58 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் கடும் ஷெல் தாக்குதல் தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, வவுணதீவு இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஷெல் வீச்சு தாக்குதல்களில் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வவுணதீவு இராணுவமுகாமிலிருந்து படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல்களில் புலிகள் பின்வாங்கிவிட்டதாக அந்த மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  13. வட மாகாணசபையின் ஆலோசனைகளைப் பெறாது கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப் பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது சட்டத்துக்கு முரணானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச காணிகளை பராதீனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்ற போதிலும், அவ்விடயத்தில் குறித்த மாகாணசபையின் ஆலோசனையைப் பெற்றே அதனை மேற்கொள்ள வேண்டும். எனினும், கிளிநொச்சியில் காணி உறுதி வழங்கலின்போது சட்டம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. வடமாகாண சபையிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் இங்கு சமர…

  14. கோத்தாவின் வழக்கை விசாரிப்பதில் இருந்து 4 நீதியரசர்கள் விலகினர் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து இதுவரை நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், காரணமின்றித் தாம் கைது செய்யப்படக் கூடும் என்று உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மிக் விமானக் கொள்வனவு மற்றும் சில விவகாரங்கள் தொடர்பாக, தமக்கு எதிராக காரணமின்றி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து முதலில் ஒரு நீதியரசரும், அதையடுத்து இரண்டு நீதியரசர்களும், நேற்…

  15. வடமராட்சியில் சிகையலங்கார நிலைய உரிமையாளர் சுட்டுக்கொலை நிஷாந்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ் வடமராட்சியில் சிகையலங்கார உரிமையாளரொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ள்ளார்.. கொல்லப்பட்டவர் அந்தோனிப்பிள்ளை பிரபகரன்(32) என்னும் குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார் தொண்டமனாறு- வல்வெட்டிதுறை வீதியில் ஆதியடி கோவிலிலுள்ள தனது சிகையலங்க்கர நிலையத்தில் நின்றபோது இரு இனந்தெரியாத நபர்கள் இவரை சுட்டு கொன்றுள்ளனர்.. http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3420

  16. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் விசா விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்திருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக அவரது பெயர்அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதால்தான் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டடிருக்கின்றது. அமெரிக்காவின் கலிபேர்னியா நகரில் இடம்பெறும் சர்வதேச உடற்பயிற்சிப் போட்டி ஒன்றில் பங்குகொள்வதற்காக இலங்கையின் சார்பில் பங்குபெறவிருந்த குழுவினரது விண்ணப்பமும் கருணாவின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால் நிராகரிக்கப்பட்டிருக்க…

    • 2 replies
    • 1.6k views
  17. -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதிகளிலுள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலை திருட்டுக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி அநுர பாலித திங்கட்கிழமை (27) தெரிவித்தார். கடந்த வாரத்தில் மட்டும் 4 வாழைத்தோட்ட உரிமையாளர்கள் வாழைக்குலைகள் திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். 25 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் வாகனங்களில் வருபவர்கள் தோட்டங்களிற்குள் புகுந்து பெரிய அளவிலுள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்வதாகவும், குறிப்பாக மழை பெய்யும் தருணங்களிலே இவ்வாறான வாழைக்குலைகள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ள…

  18. விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன் செயற்படுகிறாராம்! சொல்கிறார் ஷானக ஜயசேகர வெள்ளி, 11 மார்ச் 2011 04:25 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தற்போது நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியை வகித்துவருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள பயங்கரவாத ஆய்வு அமைப்பின் ஷானக ஜயசேகர ‘பொஸ்டன் நியூஸ்” இற்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இறப்பிற்கு பின்னர் நிதிகள் அனைத்தும் நெடியவனிடம் கைமாறியுள்ளது. மற்றும் ருத்திரகுமாரனுக்கு வெளிநாட்டில் சொற்ப அளவினரே ஆதரவு தெரிவிக்கின்றனர் என ஷானக ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் மற்றும் ருத்திரகுமாரனுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்…

    • 25 replies
    • 2.6k views
  19. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள…

  20. வவுனியாவில் கிளேமோர்த் தாக்குதல். - பண்டார வன்னியன் Thursday, 04 January 2007 13:14 வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை 10.30மணியளவில் கிளேமோர்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளேமோர்த் தாக்குதலின் பின்னர் அப்பகுதயில் சிறிலங்காப் படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi.org

  21. தனது மார்பகங்களை சிறிதாக்கிக் கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்ட பெண்ணொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக வைத்தியரொருவர் 2 இலட்சம் ரூபாய் கேட்டதாகவும் அவரின் அவ்வளவு பணம் இல்லாமையினால் 50 ஆயிரம் ரூபாவுக்கு, குறித்த வைத்தியரின் களனியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அப்பெண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியரின் வீட்டில், சத்…

  22. 9 நாட்களில் 17 பேர் குடாநாட்டில் கடத்தல் யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் 17 பேர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. குடாநாட்டில் கடத்தப்படுவோரினது எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் காணாமல் போனவர்களில் ஐவர் வீடுகளுக்குள் புகுந்த ஆயுத பாணிகளாலேயே கடத்தப்பட்டிருக்கின்றார்கள

  23. வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்களும் வன்னியின் விடுதலைக்கான வாய்ப்புகளும். பேராசிரியர் இரா.சிவசந்திரன் சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், திரு சி.ரகுலேந்திரன், திரு கமலேஸ்வரன், திரு டேவிட் நாகநாதன் ஆகியோர் 11.03.2011 முதல் 14.03.2011 வரை வன்னிப் பயணத்தை மேற்கொண்டு வன்னியின் இன்றைய நிலை, மக்களின் அவல நிலை, பிரதேசத்திற்கான அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றி ஒரு மேலோட்டமான ஆய்வை மேற்கொண்டோம். அதன் ஆரம்ப அறிக்கையை சிந்தனைக்கூடத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்திருந்தோம்;. அவற்றில் சில முக்கியமான விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவிப்பது பொருத்தமென கருதுகின்றோம். …

    • 0 replies
    • 3.5k views
  24. புலிச்சீருடை, ஆயுதங்களை மீட்ட பொலிஸார் கௌரவிப்பு அண்மையில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர், உட்பட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மீட்ட சம்பவத்தில் சிறப்பாக செயற்பட்ட 12 பொலிஸ் அதிகாரிகள் வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் கௌரவிக்கப்பட்டுள்ளனனர். இந் நிகழ்வு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டவர்கள் என தெரிவித்து மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ…

  25. 'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு' [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பற்றிய இரகசியங்கள் வெளியாகியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் முகாம்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொண்டர் அமைப்புக்கள் சில விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியிருப்பதாகவும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.