ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை - உகந்தை வீதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் உழவூர்தி மீது இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
அம்பாறையில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: மூவர் பலி [செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 10:29 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். காய…
-
- 0 replies
- 939 views
-
-
அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என அம்பாறை தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தால் இந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் …
-
- 31 replies
- 2.7k views
-
-
திங்கள் 15-10-2007 21:52 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாறையில் பதுங்கியிருந்து தாக்கியதில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் காயம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் காயமடைந்தவர்களை கண்டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப்பிரதேசத்தில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நான்கு மணிநேரம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 871 views
-
-
Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 12:50 PM அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களில…
-
- 2 replies
- 519 views
- 1 follower
-
-
அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 7 replies
- 2.4k views
-
-
அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!! [ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 01:50 PM - GMT ] அம்பாறை நகரப்பகுதியில் சற்று முன்னர் பாரிய குண்டுவெடிப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை நகரில் உள்ள நியு சிற்றி கபே என்ற விடுதியிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67
-
- 15 replies
- 3.9k views
-
-
அம்பாறையில் பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை அம்பாறையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 4 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். கு…
-
- 3 replies
- 923 views
-
-
அம்பாறையில் புத்திக்கூர்மையற்ற இளைஞன் மீது அதிரடிப் படையினர் தாக்குதல் சனி, 29 நவம்பர் 2008, 12:31 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை சோதனைச் சாவடி ஊடாக கஞ்சிகுடிச்சாறு நோக்கி சென்ற புத்தி கூர்மையற்ற இளைஞன் ஒருவனை விசேட அதிரடிப்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்வம் தொடர்பாக தெரியவருவதாவதுநேற்று முந்தினம் வியாழக்கிழமை தம்பட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது தங்கவடிவேல் ஜெகநாதன் என்ற இளைஞன் கஞ்சிகுடிச்சானாறு நோக்கி சென்ற போது அவரை சோதனைக்குட்படுத்திய விசேட அதிரடிப் படையினர் அவரிடம் எங்கு செல்லப்போகிறீர் என வினாவிய போது நான் மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற போகின்றேன் என்று கூறியதுடன் அவ்விடத்திலே கடும…
-
- 0 replies
- 439 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள புளுகுநாவைக்கும் தாந்தாமலைக்கும் இடையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை பயணித்த முச்சக்கர ஊர்தி மீது நடத்தபட்ட கிளைமோர்த் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 654 views
-
-
அம்பாறையில் புலிகளின் தாக்குதலில் மூன்று அதிரடிப்படையினர் பலி அம்பாறை வக்குமுட்டியாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இன்று வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதலில் மூன்று சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.puthinam.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: அதிரடிப்படையினர் இருவர் படுகாயம் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்த…
-
- 1 reply
- 1k views
-
-
(2ம் இணைப்பு)அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக…
-
- 0 replies
- 720 views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் பெருமெடுப்பிலான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பொறி வெடித்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவா் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 685 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.1k views
-
-
அம்பாறையில் பெரும் பதற்றம்- பேருந்து மீது கல்வீச்சு!! அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் பேருந்து ஒன்றை வழிமறித்த ஒரு குழு, அதில் பயணம் செய்த பயணிகள் சாரதி நடத்துனர் ஆகியோரை தாக்கிக் காயப்படுத்தியதுடன் பொதுப்போக்குவரத்திற்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி தப்பி சென்றது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்றது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் தொலைபேசிகள் குறித்த தாக்குதல் மேற்கொண்ட குழுவினரால் பறிக்கப்பட்டது. பேருந்தை அரை மணித்தியாலமாக மறித்து வைத்திருந்த குழு, சாரதி நடத்துனரை பல கேள்விகள் தொடுத்து தாக்கியது. சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் கூடியதை அறிந்த அக்குழு அவ்விடத்தில் இருந்து நழுவிச்ச…
-
- 0 replies
- 471 views
-
-
அம்பாறையில் புதிதாக பெளத்த விகாரை அமைக்கும் திட்டத்தை உடன் கைவிடுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பெளத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்ற பெளத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டையும் அரச மரம் நடும் செயற்பாட்டையும் நிறுத்த உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். 50 வருடங்களுக்கு தமிழ் மக்களை பெரும்ப…
-
- 0 replies
- 340 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
அம்பாறையில் பௌத்த பிக்குவை காணவில்லை வீரகேசரி இணையம் 11/12/2008 11:18:26 AM - அம்பாறை பகுதியில் பௌத்த பிக்குவொருவர் காணமல் போயுள்ளார். குடும்பிமலையிலுள்ள விகாரையை சேர்ந்த வணக்கத்துக்குரிய சிவுறுமுலே தர்மஸ்ரீ தேரரை நேற்று இரவு முதல் காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 9 replies
- 2.3k views
-
-
மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாறையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மஹிந்தர ராஜபக்ச உரையாற்றவிருந்தார். அதற்காக அலங்காரங்களுடன் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையே இன்று காலையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது. இதனையடுத்து குறித்த மேடையிலிருந்து சுமார் 300 மீற்றர் சுற்று வட்டத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சுற்றி வளைத்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையின் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்து கொள்வதற்கா…
-
- 5 replies
- 845 views
-
-
வழமை போன்றே இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் இன்று அதிகாலை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாக திகைப்புக்குள்ளாகிய படைத்தரப்பு தற்போது அப்பிரதேசத்தில் கடும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது. புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்ற விவாதங்களுக்கப்பால் இம்முறை உலகெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் களைகட்டியுள்ளன. புலிகளின் பலமான செயற்பாடு இருந்த காலத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையொத்ததாக இம்முறையும் அனுஷ்டானங்கள் பரவலாக நடைபெறுகின்றன. …
-
- 2 replies
- 1.1k views
-