Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Feb, 2023 | 12:31 PM மஹவ முதல் ஓமந்தே வரையான ரயில் பாதையை புனரமைக்கும் திட்டத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்புகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் இரும்பின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். https:…

  2. வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம்! நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட…

  3. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி! யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணி ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் இந்த கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323876

  4. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள…

  5. இந்திய இணையமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் மன்னாருக்கு விஜயம் Published By: Nanthini 11 Feb, 2023 | 11:01 AM இலங்கைக்கு கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்திருந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு வருகை தந்த இணையமைச்சர் எல்.முருகன், கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண இந்திய உதவித் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் ஜெயபாஸ்கரும் கலந்துக…

  6. இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் - இந்திய அமைச்சர் எல்.முருகன் Published By: T. Saranya 11 Feb, 2023 | 12:50 PM (எம்.மனோசித்ரா) அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார். இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க…

  7. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்க போட்ட முடிச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவிழ்க்க முயற்சிக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகனா என்பதை அவரது குடும்பத்தினர் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய தனியார் பிரேரணையை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை ஒன்றாக இயற்றப்பட்டதால் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு வெளயீட்டு சட்டமூலத்தை கொண்டு வந்…

  8. இலங்கைக்கு கடன்! IMF இன் புதிய அறிவிப்பு! இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன், உள்நாட்டுச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன், இலங்கைக்கான கடன் ஏற்பாட்டை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதலுக்காக முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட…

    • 2 replies
    • 420 views
  9. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார். ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்க மாட்டோம் என சுயாதீன உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கதைக்கின்றார். நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்று பாருங்…

    • 1 reply
    • 372 views
  10. பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். சஹ்ரான் அவமான சின்னம் பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று (பெப் 10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், க…

    • 1 reply
    • 192 views
  11. இலங்கைக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி? வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

    • 5 replies
    • 530 views
  12. துறைமுக நகரத்தை சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த முடியாது - சரித ஹேரத் கேள்வி By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 04:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. அதற்கான வழியை ஜனாதிபதியே காண்பித்துள்ளார். தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின் 13 ஆவது திருத்தத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை தவறாக பார்ப்பது நிர…

  13. "சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். "சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்ம…

    • 6 replies
    • 670 views
  14. தமிழர்களை சிங்களவர்களின் காலடியில் வைத்திருக்கவேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள் - இதனையா பௌத்தம் உங்களுக்குப் போதித்தது ? மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் By T. SARANYA 09 FEB, 2023 | 05:05 PM (நா.தனுஜா) தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்தா? வடக்கு - கிழக்குவாழ் தமிழர்கள் தனியாகப் பிரிந்து, தமது சொந்த 'தமிழீழத்தைக்' கட்டியெழுப்பிவிடுவார்கள் என்று அஞ்சுகின்றீர்கள். தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்…

  15. (எம்.ஆர்.எம்.வசீம்,.இராஜதுரை ஹஷான்) பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள். பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளதால் அவர்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இனவாதத்தை மூலதனமாக கொள்ளும் இனவாதிகள் தற்போது 13 ஆவது திருத்தத்தை தற்போது கையில் எடுத்து இனவாத பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் …

    • 2 replies
    • 236 views
  16. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின் ஆங்கில மொழியை அரச கரும மொழியாக அறிவிக்க வேண்டும். அப்போது எவரும் முரண்பட்டுக் கொள்ளமாட்டார்கள். விக்கினேஷ்வரன் சண்டித்தனத்தையும், விமல் வீரவன்ச இனவாதத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்று…

    • 2 replies
    • 692 views
  17. (எம்.மனோசித்ரா) பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை இல்லாதொழித்துள்ளார். 2009 இன் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்காக 13ஆவது …

    • 3 replies
    • 721 views
  18. ஜனாதிபதி ரணில் இன்று யாழ்.விஜயம் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஷேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் விஜயம் செய்வார் எனக் கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விஷேட கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/238881

  19. மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு தமிழ் பிரதிநிதிகள் அனைத்தையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.. ” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனவே, கடும்போக்…

    • 13 replies
    • 1.1k views
  20. யாழ். வந்தடைந்த இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு! இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இந்திய அரசின் நிதி பங்களிப்பில்…

  21. 13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து…

  22. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது - சிறிதரன் By Vishnu 09 Feb, 2023 | 12:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினால் பிரசவிக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் உயிருடன் உள்ளதா? அல்லது கொல்லப்பட்டு அஸ்தி கரைக்கப்பட்டு விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு வழங்குவதாக ஒருபுறம் குறிப்பிட்டு விட்டு மறுபுறம் சிங்கள பேரின வாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறார். ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த …

  23. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை பௌத்த நாடு, பௌத்தர்கள்,பௌத்த பிக்குகளை எதிர்த்து எதனையும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட கருத்து வருத்தத்திற்குரியது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையை அவர் மறந்து விட்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குகள் எரிக்கிறார்கள், அவர்கள் எரிப்பது 13 ஆவது திருத்த நகல்களை அல்ல இந்த நாட்டின் எதிர்காலத்தை என்பதை அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை …

    • 3 replies
    • 732 views
  24. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இடைக்கால ஜனாதிபதிக்கு இருக்கும் அவசரம் என்ன? அதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்? புதிய அரசியல் அமைப்புப்பொன்றை கொண்டுவரவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்து அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்…

    • 1 reply
    • 585 views
  25. மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில் By RAJEEBAN 08 FEB, 2023 | 04:36 PM இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நான் வெற்றிபெறவேண்டுமா அல்லது தோல்வியடையவேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 6.9 மில்லிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.