Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எலி மொய்த்த உணவுகள் விற்பனை செய்ய இருந்த உணவகத்திற்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Published By: T. SARANYA 23 MAR, 2023 | 09:21 AM மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த நிலையில், குறித்த உணவகத்துக்கு எதிராக நேற்று (22) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் , விற்பனைக்காக வைத்திருப்பது தொடர்பாகவும் உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியை மன்…

  2. யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312

  3. மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் தி…

  4. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு நிவாரணமளிக்காது – மூடிஸ் பொருளாதார நிபுணர் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கையின் நிலைமை மேலும் கடினமானதாகவே இருக்கும் என மூடீஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் கண்டிப்பாக இந்த கடன் தொகை இலங்கை நினைப்பது போல் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது என மூடிஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறியுள்ளார். இலங்கைக்கு எவ்வளவு நிதியுதவி அல்லது ஆதரவு வழங்கினாலும், இலங்கையின் நிலைமை இன்னும் கட…

  5. முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதியமைச்சரின் பயணத்தடை நீக்கம் இலங்கையின் பொருளாதார முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை இனி நடைமுறைக்கு வராது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/245841

  6. மே மாதத்தில் 33,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை Published By: T. SARANYA 22 MAR, 2023 | 02:17 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 26,000 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நாடளாவிய 141 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 53,000 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது வசந்த யாப்பா பண்டார எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த…

  7. இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை - இந்தியா அவதானம் Published By: NANTHINI 22 MAR, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கு இடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை பெற்றுக்க…

  8. யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்! Published By: VISHNU 22 MAR, 2023 | 07:09 PM யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் இடம்பெற்றதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் மரணம் அடைந்துள்ளான். மரணமடைந்தவர் 27 வயதுடைய நிலக்காடு காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தையாவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை …

  9. வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை அநுராதபுரம் மோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் பிரதேச பொலிஸ் வாகனப் பிரிவு இணைந்து வாகன அனுமதிப்பத்திரம், போலி ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் தொடர்பில் கண்டறியும் விஷேட நடவடிக்கையொன்றை நேற்று (21) மாலை அனுராதபுரம் நகரை மையமாக வைத்து அமுல்படுத்தினர். அநுராதபுரம் நகருக்குச் செல்லும் பல வீதிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டது. அறுபத்தொன்பது வாகனங்களுக்கு பழுதுபார்த்தல் உத்தரவு, தடை உத்தரவு மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய 10 நாள் கால அவகாசம் அளிக்க அறிவுறுத்தப்பட்டதாக நடவடிக்கையை மேற்கொண்ட மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். …

  10. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது இலங்கைக்கு கடன் வழங்கும் யோசனைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று(20.03.2023) அனுமதி வழங்கியிருந்ததை அடுத்தே பொருளாதார ஆய்வாளர் இதனை கூறியுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான கடன் வசதியை இலங்கை பெற்றதால் மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்…

  11. கடினமான சூழ்நிலையிலும் வீதி ஒப்பந்ததாரர்களுக்கு 36,690 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது – பந்துல நாடு இக்கட்டான சூழ்நிலையிலுள்ள போதும் வீதி நிர்மாண ஒப்பந்ததாரர்களுக்கு 36,690 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “வீதி அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு அரசாங்கம் பணம் வழங்காமல் இழுத்தடித்ததாக நாளிதழில் செய்தி வெளியானது. திறைசேரியில் பணம் இல்லை. அதனால், வெளிநாட்டில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை என அறிவித்தோம். பின்னர் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இரண்டு நீண்ட கால பத்திரங்களை பெற்றுக்க…

  12. இலங்கையின் முதலீடுசெய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு, ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோவுடன் இணைந்து இலங்கை முதலீட்டுச் சபையுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இதன்போது, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இலங்கையில் உள்ள முக்கிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை முதலீட்டாளர்கள் மேற்கொண்டனர். இதன்போது, மருத்துவ உபகரண உற்பத்தி, மருந்துவம், பயணம் மற்றும் சுற்றுலாத் தொழில் குறிப்பாக கலாசார சுற்றுலா, ஹோட்டல் தொழில், சொத்…

  13. மட்டு. இந்துக்கல்லூரியில் மத பிரசாரம் -நீதிமன்றம் வழங்கிய பணிப்புரை! மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வினை வெபர் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றுவதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஜீசஸ் லீவ் என்னும் அமைப்பினால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர்,வலய கல்விப்பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்,பொலிஸாருக்கு எதிராகவும் எழுத்தாணை மனு கோரப்பட்டிருந்த நிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரகைள் முன்னெடுக்கப்பட்டது…

    • 5 replies
    • 719 views
  14. வடக்கில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன- மாகாண கல்விப் பணிப்பாளர் வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப்பகுதியில் மாண வர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும், கிளிநொச்சியில் 8 பாட சாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளுமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வவுனியாவில் வவுனியா வடக்கு கல்வி வல யத்திலேயே இந்த எண்ணிக்கை உயர்வாகப் பதிவாகியுள்ளது என்றார…

  15. நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் வர்த்தக மற்றும் பல்தரப்பு கடன் வழங்குநர்கள் பங்கெடுக்கவேண்டும் - சீனா Published By: RAJEEBAN 22 MAR, 2023 | 10:11 AM சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி இலங்கை நெருக்கடிகளில்இருந்து மீள்வதற்கும் தீர்வை காண்பதற்கும் உதவும் என சீனா கருத்து வெளியிட்டுள்ளது நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பல்தரப்பு கடன்வழங்குநர்களிற்கு அழைப்பு விடுப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இதனை தெரிவித்துள்ளார். இ…

  16. சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால் அழிக்கப்படுகிறது - செல்வராசா கஜேந்திரன் Published By: VISHNU 21 MAR, 2023 | 07:48 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும்.யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகம் இராணுவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றமை எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். பாராள…

  17. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியா நிதியுதவி! பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது. இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் ” கடந்த மாதம் 11 ஆம் திகதி, ய…

  18. இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது பிடிக்கப்பட்ட படங்கள். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள் | Virakesari.lk

  19. லிஸ்டீரியா குறித்து அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்! நாட்டில் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவரே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக வெளியான செய்தி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் இறப்புக்கான காரணம் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) நோய் என உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதேவேளை, காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி…

  20. சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கைக்கு கடினமான பாதை உள்ளதென Moody's Analytics இன் மூத்த பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவையிடம் கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Moody's Analytics சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறுகையில், நினைப்பது போல் இந்த கடன் வசதி என்பது, இலங்கையின் நெருக்கடிக்கு ஒரு வெள்ளி தோட்டா (silver bullet) அல்ல என குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எவ்வளவு நிதியுதவி அல்லது ஆதரவு வழங்கினாலும், இலங்கையின் நிலைமை இன்னும…

  21. (எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை கொண்டாடுகிறார்கள், உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் பாராளுமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் த…

  22. எரிபொருள் விலை குறைக்கப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் Published By: DIGITAL DESK 5 21 MAR, 2023 | 03:26 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) அமெரிக்க டொலர் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு, ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலை குறைக்கப்படும். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட…

  23. இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கவேண்டும் - ஜப்பான் பிரதமர் Published By: RAJEEBAN 20 MAR, 2023 | 03:06 PM இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படைதன்மையுடன் முன்னெடுப்பது அவசியம் என ஜப்பான் பிரதமர் பியுமோ கிசிடா தெரிவித்துள்ளார் புதுடில்லியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/150976

  24. பறிபோகும் தாய்நிலம் – எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிக்கப்படும் தமிழர் நிலம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசதிணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அத்துடன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனை அழைத்து அங்குள்ள நிலைமைகளைக் காண்பித்துள்ளனர். கொக்குத்தொடுவாய் – கோட்டக்கேணியிலிருந்து, அம்பட்டன் வாய்க்கால், தீமுந்தல், பணம்போட்ட கேணி, நாயடிச்ச முற…

  25. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரை சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் கடன் வழங்குபவர்களுடனும் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன. தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச நாணய நிதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.