ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143570 topics in this forum
-
படுகாயமடைந்த முன்னாள் எம்.பியான பியசேன சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பொதுமயானத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலநறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதுண்டதனாலேயே இந்த இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடை…
-
- 5 replies
- 912 views
-
-
யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்! யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலகப் பி…
-
- 1 reply
- 257 views
-
-
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு! யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்…
-
- 0 replies
- 210 views
-
-
நாட்டுக்கு வருகைதந்தவர்கள் யார்? தகவல்களை கோரும் உதய கம்மன்பில ! நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி சீ 17 க்லோப்மாஸ்ட்டர் என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இதற்கமைய குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 08 காரணங்களை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார். இதற்கமைய, விமானங்களில் இந்நாட்டிற்கு வருகை தந்தவர்கள் யார்? வருகை தந்தவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி…
-
- 3 replies
- 807 views
- 1 follower
-
-
பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய கணக்கு மதிப்பீடுகள் குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் 13,037,934 மில்லியன் ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2022ஆம் ஆண்டில் 12,017,849 மில்லியன் ரூபாயாக குறைவடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,917,721 மில்லியனில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 3,331,073 மில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டு, 12.4 சதவிகி…
-
- 1 reply
- 817 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு சலுகையில் அப்பியாச புத்தகங்கள்! Published By: T. SARANYA 17 MAR, 2023 | 09:30 AM பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொசவின் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு சதொச நிலையங்ளில் இருந்து உயர்தர அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாச புத்தகங்கள் நாடு பூராகவும் உள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/150…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்! மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 23ஆம் திகதியு…
-
- 1 reply
- 353 views
-
-
நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் நாட்டை வந்தடைந்தது! நெற்செய்கைக்குத் தேவையான மண் உரம் அல்லது TSP உரம் நாட்டை வந்தடைந்துள்ளது. உரம் ஏற்றி வந்த MV INCE PACIFIC என்ற கப்பல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 03 பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் முதன்முறையாக இந்நாட்டு விவசாயிகளுக்கு 36,000 மெட்ரிக்டொன் மண் உரம் கிடைக்கவுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த மண் உரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு கப்பல் எதிர்காலத்தில் வரவுள்ளது. நாட்டிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்கள் 2022ஃ23 பெரும் போகத்தில் நெற்செய்கை செய்தாலும் இல்லாவிட…
-
- 0 replies
- 266 views
-
-
கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய தீர்மானம்! தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கழுவி தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலின் கனசதுரத்தை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ப…
-
- 0 replies
- 207 views
-
-
மரவள்ளிக்கிழங்குக்கு உயர்ந்த மவுசு! உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கையில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 60 – 70 ரூபாய் வரை பரவலாகக் கிடைத்து வந்த ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கின் விலை மிகவும் அதிகரித்து நுகர்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 200 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு இன்றைய தினங்களில் வீழ்ச்சியடைந்து வரும் பொருட்களின் விலைகளை ஒப்பிடுகையில் குறையாதது விசித்திரமான நிகழ்வு எனவும் …
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
இ.போ.ச வில் நீண்டதூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன் ஆசனப்பதிவு : இணையமும் தொலைபேசி இலக்கமும் அறிமுகம்! Published By: DIGITAL DESK 5 16 MAR, 2023 | 04:29 PM இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று (15) அறிமுகப்படுத்தப்பட்டது. மாகும்புர போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இணையம் திறந்து வைக்கப்பட்டது. இருக்கை முன்பதிவு தொடர்பான இணையதளமும் அங்கு திறக்கப்பட்டது. மேலும், மூன்று மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் 1315 என்ற தொலைபேசி மூலம் இருக்கைகளை மு…
-
- 5 replies
- 386 views
- 1 follower
-
-
13 வது திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக பௌத்தமதகுருமாரை சந்திக்க விக்னேஸ்வரன் விருப்பம் Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 04:40 PM அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை …
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
மருத்து தட்டுப்பாடு தொடர்பில் விசாரணை அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சமூகமளிக்காமையால், இந்த விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
பால்நிலை மாற்றம் கொண்டவர்களிற்கான பாதுகாப்பு - பொலிஸ் அதிகாரிகளிற்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 03:20 PM 1978ம் அரசியலமைப்பின் 12.1 பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தினால் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை கருத்தில் கொள்வதுடன் பொலிஸ் அதிகாரிகள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் அடையாளம் மற்றும் செயல்முறையை அங்கீகரிக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெவ்வேறு துறைகளில் உள்ள சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி யாழில் பண மோசடி Published By: VISHNU 16 MAR, 2023 | 12:22 PM சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோர்களையும், அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களையாம் இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது. புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் ப…
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
மட்டு.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு தங்கியிருந்த 17 பேர் கைது Published By: T. SARANYA 16 MAR, 2023 | 09:46 AM மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று புதன்கிழமை (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் ப…
-
- 1 reply
- 451 views
- 1 follower
-
-
யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்! பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில்…
-
- 0 replies
- 607 views
-
-
ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தகவல்! ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதருவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இல்லையா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோல் எந்த தேர்தலுக்கும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அரச அச…
-
- 1 reply
- 502 views
-
-
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – சாணக்கியன் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர். நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நா…
-
- 0 replies
- 213 views
-
-
ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை! Published By: VISHNU 15 MAR, 2023 | 06:35 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனை…
-
- 2 replies
- 650 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் Published By: VISHNU 15 MAR, 2023 | 08:44 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொட…
-
- 10 replies
- 794 views
- 1 follower
-
-
யுத்தத்தை விட வீதி விபத்துகள் பயங்கரமானவை - மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி Published By: VISHNU 15 MAR, 2023 | 04:35 PM தற்போதைய காலகட்டமானது, வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் கால கட்டம் என்பதினால், இளைஞர்கள் வீதி விபத்துக்கள் விடயத்தில் மிகவும் கரிசனையாக செயல்பட வேண்டுமென இலங்கை இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 18 வது விஜயபாகு காலாட்படையணி முகாமின் கட்டளை அதிகாரி மேஜர் உதித்த கலுஆராச்சி தலைமையில் (11) நடைபெற்ற இளைஞர் தன்னார்வ அணியின் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு உரையா…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போ…
-
- 1 reply
- 552 views
- 1 follower
-
-
சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்! Vhg மார்ச் 14, 2023 சர்வதேச அழகிப் போட்டியான Miss Globe 2023 ஐ நடத்துவதற்கான வாய்ப்பை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் 75ற்கு மேற்பட்ட நாடுகளின் அழகிகளின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எமது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைகிறது. இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறுவதுடன் அதனை சுற்றுலாத்துறை அமைச்சுடன் Tronic Entertainment நிறுவனம் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக Miss Globe 2023 இலங்கை அழகிப் போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பும் அங்குரார்பண நிகழ்வும் கொழும்பு ஹில்ட…
-
- 29 replies
- 2.2k views
- 2 followers
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று - தொல்பொருள் திணைக்களம் வசமானது! Vhg மார்ச் 15, 2023 திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 …
-
- 1 reply
- 1.5k views
-