Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அடங்கிய குழுவினர் மாலை 5 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், அரச…

  2. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 10:58 AM தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் திங்கட்கிழமை (9) நடைபெற்றது. https://www.virakesari.lk/article/145381

  3. அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம் சாத்தியமில்லை – டக்ளஸ் அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிப…

  4. அரசாங்கத்திற்கு 7 நாட்கள் காலக்கெடு – தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு! அரசியலமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய(செவ்வாய்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன. அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தின. இந்தச் சந்திப்பில் இலங்…

  5. மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1319465

  6. இலங்கையின் வனப்பகுதி குறைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யாது - வனப் பாதுகாப்பு ஜெனரல் By T. SARANYA 09 JAN, 2023 | 03:11 PM இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வனப்பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் இதனை வலியுறுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே வனப்பரப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் 2020 ஆம் ஆண்டில் நடத்தப…

  7. மணிவண்ணன் அணியுடன் இணையவுள்ளோம் - விக்னேஸ்வரன் அறிவிப்பு 09 JAN, 2023 | 07:33 PM உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பதவி விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/arti…

  8. யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு. யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அம…

  9. பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு! வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது. https://athavannews.com/2023/1319424

    • 4 replies
    • 379 views
  10. பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டித்தார் ஜனாதிபதி ரணில் ! பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புக்கு முரணான ஜனநாயகக் கட்டமைப்புகளை கவிழ்க்கும் முயற்சியை இலங்கையும் அனுபவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விரோதப் போக்குக்கு மத்தியில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் இலங்கை ஒன்றிணைந்து நிற்பதாக தெரிவித்தார். உலகளவில் ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் எ…

    • 1 reply
    • 254 views
  11. ”சர்வக்கட்சி மாநாட்டை தமுகூ புறக்கணிக்கும்”: மனோ கணேசன் ” தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்.” – என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று நேற்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டப…

  12. தமிழரசு கட்சி பிரிந்து சென்றால் ஏனைய தமிழ் தரப்புக்களை கூட்டமைப்பில் இணைப்போம் என்கின்றது ரெலோ இலங்கை தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவோம் என ரெலோ அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் கூட்டமைப்பில் உள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை என்றும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளோராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார். தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென…

    • 3 replies
    • 482 views
  13. ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு! ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வடகிழக்கில் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் த.பிரபாகரன் தெரிவித்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈழவர் ஜனநாயக முன்னணியின் மத்திய குழு கூட்டம் இன்று கல்லடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தினை தொடர்ந்து ஈழவர் ஜனநாயக முன்னணியின் ஊடக சந்திப்பு நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் த.பிரபாகரன் கருத்து தெரிவித்தார். இன்று தமிழ் மக்கள் ஏமாந்த சரித்திரமே உள்ளது ஒழிய மக்களுக்கு எதரனையும் பெற்றுக்கொடுத்தில்லை. இன்று தமிழ் மக்களும் நாங்களும் மாற்றத்தினை எதிர்பார்த்த…

  14. சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்! சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் , செட்டிக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று ” கெத்து பசங்க” எனும் பெயரில் வட்ஸ் அப் குழு ஒன்றின் ஊடாக தொடர்புகளை பேணி வன்முறை சம்பவம் ஒன்றில் ஈடுபடவிருந்த சமயம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகு…

  15. சுமந்திரன் உட்பட ஏனைய இலங்கை அரசியல் சக்திகள் சிங்கள அரசுக்கு சமரசம் வீசும் கையோடு தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு இருப்பவர்களை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் பாரி மைந்தன் தெரிவித்துள்ளார். செல்லும் நாடுகள் எல்லாம் உலகத் தமிழர்களால் துரத்தி அடிக்கப்படும் சுமந்திரன், பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை பெரியார் திடலில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுக்கு எந்த அழைப்பு இல்லை என்கின்றனர். எனவே பொய்யான செய்திகளை பத்திரிகை செய்தியாக கொடுத்து விட்டு அதே நாளில் சென்னையில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியுள்ளார…

    • 3 replies
    • 441 views
  16. இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது - போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல By DIGITAL DESK 5 08 JAN, 2023 | 03:58 PM (இராஜதுரை ஹஷான்) சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு முக்கியமானதாக உள்ளதுடன்,வரவேற்கத்தக்கதாகவும் காணப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வடக்கு புகையிரத பாதையில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் வகையில் மதவாச்சி புகையிரத நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்…

  17. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும்-குருசாமி சுரேந்திரன் யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குருசாமி சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும் என குருசாமி சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1319253

  18. திருமலை துறைமுகத்தில் சீன ஆதிகத்தை தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு – விக்னேஸ்வரன் திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி…

    • 3 replies
    • 800 views
  19. தீர்வை பெற்றுத்தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது – சுமந்திரன் சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்குமாறு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய உரிமை இருக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தின் பிரகாரமே அதிகாரப்பகிர்வினை கோருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆகவே 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரந்…

    • 1 reply
    • 758 views
  20. ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின் படி, முழுமயான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழகத் தலைவர்கள் மூலமாக மாநில, மத்திய அரசாங்கங்களை கோரும் விசேட மாநாடொன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமி…

  21. குருநாகல் - வடகட வீதியில், பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்தது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையை விடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவத…

    • 6 replies
    • 593 views
  22. தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சுமந்திரன், உள்ளுராட்சிமன்ற தேர்தல் “உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரி…

  23. அமெரிக்க வைரஸ் குறித்து எச்சரிக்கை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்பிபி 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் பரவியுள்ள குறித்த வைரஸ் பிறழ்வு, அந்த நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது குறித்து எச்சரிக்கை நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த மாறுபாட்டின் எக்ஸ்பிபி பிறழ்வு இலங்கையில் கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட போதும் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட 1.5 உப பிறழ்வு இதுவரை அடையாளம் காணப்பட்டவில்லை. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-வரஸ-கறதத-எசசரகக/175-310293

    • 0 replies
    • 728 views
  24. யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில், வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார். இதனால் உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார். யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். …

    • 0 replies
    • 671 views
  25. கடவுச்சீட்டை பெற்றனர் இலங்கை அகதிகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.