Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…

    • 24 replies
    • 1.8k views
  2. அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 05:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரைஸர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்த…

  3. ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்று தீர்ப்பு SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும் ஒத்திவைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இனிமேலும் தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் மௌனம் காத்த வந்த வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின்…

    • 0 replies
    • 788 views
  4. கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு மத்தியில் தீவிரமடையும் நோய் கிளிநொச்சி – பூனகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளில் பெரியம்மை (இலம்பி) நோய் அதிகளவில் கால்நடைகளிடையே தாக்கம் செலுத்தி வந்துள்ளது என கால் நடைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இள வயதுடைய கால்நடை உயிரினங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை பெரும் புண்ணாக மாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிப்புக்கள் இதனால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்ற நிலமை காணப்படுவதாகவும், பால் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural…

  5. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ஆம் திகதி இடம்பெறலாம்? உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடு…

  6. நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை – பஷில்! நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் தொடர்ந்து பிற்போட முடியாது எனவும், மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வர…

  7. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது! உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த போது, எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானத்திற்கு 62 ஆயிரத்து 800 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த எரிபொரு…

  8. தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 05:31 PM (நா.தனுஜா) இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்க…

  9. பொதுஜன முன்னணி பதவியை இழக்கிறார் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நீக்க கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொருத்தமான பெயர்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவத…

  10. இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை: வளர்ச்சிக்கு உதவுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்த ஆண்டின் முதல் மாதம் தொடக்கம், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 102,545 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், கடந்த பிப்ரவர…

  11. இந்திய மீனவரைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம் பிடித்து கடற்படையினரிடம் ஒப்படையுங்கள் -டக்ளஸ் வடபகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால், அவர்களை எமது மீனவர்கள் பிடித்து கடற்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வைத்துக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். அத்துடன், “நான் ஏற்கெனவே எமது மீனவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. கடலில் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோ…

    • 6 replies
    • 833 views
  12. குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம் விஜயரத்தினம் சரவணன்,சண்முகம் தவசீலன் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமான…

  13. ஆளுமையுள்ளவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு - யாழ் பல்கலையின் சிரேஷ்ட பேராசிரியர் ரவிராஜன் Published By: NANTHINI 04 MAR, 2023 | 03:53 PM (எம்.நியூட்டன்) ஆளுமையுள்ள எம்மவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு என்பதை நான் உணர்கின்றேன் என யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். யாழ். ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் சமூக சேவையாளரும் கனேடிய அரசியல் செயற்பாட்டாளருமான கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் 'அணுவைத் துளைத்து' நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கல்லூரியின் குமார…

  14. கணபதி கனகராஜ், துரை மதியுகராஜா ஆகியோருக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய பதவிகள்! ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்விப் பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் துரை மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காகவும், தொழிற்சங்க ரீதியாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள…

    • 0 replies
    • 484 views
  15. அரசாங்கத்தின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது தேர்தலில் முறைகேடு செய்யும் அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் மேற்கொண்ட சதி இதன் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அக்மீமன பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக…

    • 0 replies
    • 584 views
  16. இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகப்பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் குறித்து உயர்மட்டப்பிரதிநிதிகள் ஆராய்வு Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 02:09 PM (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தகப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் தொடர்பில் இருநாடுகளினதும் வங்கிக்கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தகப்பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை (02) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில…

  17. வட மாகாணத்தின் கல்வியை முன்கொண்டு செல்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும் - சட்டத்தரணி செல்வஸ்கந்தன் Published By: NANTHINI 04 MAR, 2023 | 03:03 PM (எம்.நியூட்டன்) வட மாகாணத்தின் கல்வியை முன்கொண்டு செல்வதற்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் எங்கள் எதிர்கால சந்ததியை வட மாகாணத்தின் செல்வங்களாக உருவாக்க முடியும் என சட்டத்தரணி செல்வஸ்கந்தன் தெரிவித்தார். சட்டத்தரணியின் மறைந்த தாய் மற்றும் மனைவியான முறையே திருமதி. எஸ்.இராஜரட்ணம், திருமதி. பத்மபாஷினி செல்வஸ்கந்தன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக சட்டத்தரணி இ.செல்வஸ்கந்தனின் அனுசரணையுடன் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியினால் கடந்த 2022ஆம் ஆண்டு வட …

  18. இந்தியாவின் உதவிக்கு அலிசப்ரி பாராட்டு – உலகநாடுகள் அனைத்தும் செய்த உதவியை விட பெரியது என கருத்து Published By: RAJEEBAN 04 MAR, 2023 | 03:01 PM இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவியமைக்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து நாடுகளும் சேர்ந்து செய்த விடயங்களை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் மீட்சி நல்லிணக்க நடவடிக்கைகளில் இந்தியாவே மிகப்பெரிய சகா என குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய அனைத்து உலகநாடுகளும் இணைந்து கூட இந்தியா செய்த அளவிற்கு எங்களிற்கு உதவிகளை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். …

  19. நாணயக்கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானம் இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR) 15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, மத்திய வங்கியினால் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் (Standing Lending Facility Rate – SLRF) 16.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக மத்திய வ…

  20. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு! இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு, கடந்த பெப்ரவரிக்குள் 23.5 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1 சதவீதம் ஆகக் குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்…

    • 1 reply
    • 243 views
  21. அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி Published By: T. SARANYA 03 MAR, 2023 | 04:22 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க இடமளிக்க முடியாது. பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்களின் வாக்களிப்பு மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் ஒன்றை மாற்றியமைக்க முடியும். ஆனால் வீதி போராட்டங்களில் ஆட்சி மாற்றம் என்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளினாலும் நாடு அராஜக நிலைகளை எதிர்கொள்ளும். எனவே நாட்டின் அரசியலமைப்பை போன்று பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும். பொருளாதாரத்…

  22. பாராளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் : ஜனாதிபதி Published By: VISHNU 03 MAR, 2023 | 11:56 AM பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதை விடுத்து வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, விமானப்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/149598

  23. புலனாய்வு தகவல் பரிமாற்றம் மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் - கம்மன்பில Published By: DIGITAL DESK 5 03 MAR, 2023 | 04:43 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் 'புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்' ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். …

  24. கனடா வேலை வாய்ப்பு, விசா மோசடி தொடர்பில் பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட விசாக்களை பெற்று தருவதாக உறுதியளித்து நபர்களிடமிருந்து 5 – 20 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு பணம் செலுத்திய 25 பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு எதிராக இதுவரை 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதா…

  25. பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/2432…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.