Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'கெத்து பசங்க' வட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த நால்வர் வவுனியா விசேட அதிரடிப்படையினரால் கைது! By NANTHINI 07 JAN, 2023 | 01:12 PM பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் வன்முறைகளை ஏற்பாடு செய்த 'கெத்து பசங்க' என்ற வட்ஸ்அப் குழுவை சேர்ந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்…

  2. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்! இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இக்கூட்டத்திற்கு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட…

    • 4 replies
    • 322 views
  3. 13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளு…

    • 5 replies
    • 521 views
  4. கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு! இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார். மேலும் குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், பூநகரி பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1319120

  5. போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை ! இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை ச…

    • 3 replies
    • 627 views
  6. சர்வதேச நாணய நிதியத்தின் நிதிஉதவி இந்த வருடத்தின் முதல்காலாண்டில் - ஜனாதிபதி நம்பிக்கை By Rajeeban 07 Jan, 2023 | 10:46 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிகள் இந்த வருடத்தின் முதல்காலாண்டில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா…

  7. ஒரு டொலருக்கு 2 ரூபாய் என்ற ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் ! வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல்; இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறை அறிமுகப்படுத்தபட்டது. எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை. இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க ட…

  8. இந்தியா தமிழ் மக்கள் தொடர்பாக வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்ல தெளிவு இருக்கின்றது” என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, இந்தியா தொடர்பாக சிங்கள மக்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இருக்கக்கூடிய அச்ச நிலையினை தான் சீனா இவ்வளவு காலமும் பயன்படுத்தி இருக்கின்றது. இந்தியா தமிழ் மக்களுக்கு சார்பான நாடு, வடக்கு கிழக்கை தனி நாடாக கொடுத்துவிடும் என்றெல்லாம் அச்ச நிலை சிங்கள மக்களுக்கு இருந்தது. இன்று வரை இருக்கின்றது. இந்தியாவை சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு சார்பான ந…

  9. டுபாயிலிருந்து நாடு திரும்பினார் கோட்டா இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, டுபாய் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை (5) காலை நாடு திரும்பினார். கோட்டாபய ராஜபக்ஷ டிசெம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தகவல் வெளியானது. அவருடன் மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையும் சென்றிருந்தனர். அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்கு…

    • 11 replies
    • 603 views
  10. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மா…

  11. சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? 17க்கு முன்னர் பதில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது. 1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில் இன்று (04) பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது. தகவலறியும் ஆணைக்குழு முன்பாக இலங்கை…

  12. இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 6 ஜனவரி 2023, 05:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,RANIL WICKREMESINGHE/FB இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தினத்தை - கடந்த புதன்கிழமை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றின் பதவிக்காலம் - மேலதிகமாக ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலதிகம…

  13. லாஃப் காஸ் சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டது! By NANTHINI 06 JAN, 2023 | 02:42 PM லாஃப் காஸ் சமையல் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபா என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப் காஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும். மேலும், மற்றைய மாவட்டங்களுக்கான புதிய விலைகளை அறிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவை இலக்கமான 1345 ஐ தொடர்புகொள்ளுமாறு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/145145

  14. கோட்டா அமெரிக்கா பயணம் By RAJEEBAN 26 DEC, 2022 | 04:45 PM கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று திங்கட்கிழமை (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி மருமகள் மகன் பேரப்பிள்ளையுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/144170

  15. கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில்! கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாள்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்க…

  16. வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தைப்பொங்கல் விசேட அறிவிப்பு? வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இங்கு அரசியல் கைதிகள…

  17. மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து! 15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம். இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். எனினும் ஆபத்த…

  18. மத நல்லிணக்கத்தினை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை! மத நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஸ்ரீதலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நபருக்கு தண்டனைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ தலதா மாளிகை இலங்கை மக்களின் கௌரவத்தை மட்டுமின்றி முழு உலகினதும் கௌரவத்தை பெற்றுள்ள முக்கி…

  19. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள், பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன. இத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகத…

  20. ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றம் இல்லை! – சுமந்திரன் தெரிவிப்பு “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பு அவ்வளவு நல்லதாக இல்லை. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் முன்னேற்றம் எதுவும் இன்று வரை இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையே இன்றைய சந்திப்பிலும் திரும்பச் திரும்ப அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உட…

    • 9 replies
    • 937 views
  21. தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டொலர்களில் பணம் செலுத்த அனுமதி Posted on January 4, 2023 by தென்னவள் 12 0 யால தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இம்மாதம் முதல் டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யால தேசிய பூங்காவில் இருந்து இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் தெரிவித்தார். நாட்டுக்கு தேவையான டொலர்களை ஈட்டிக் கொள்வதற்காக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்…

    • 3 replies
    • 310 views
  22. வடக்கு கிழக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம். நாட்டின் பொருளாதார நெருக்கடியில்…

    • 13 replies
    • 817 views
  23. அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் By Digital Desk 2 05 Jan, 2023 | 11:24 AM ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி வியாழக்கிழமை (05) மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த போராட்டத்தினை தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடகி…

    • 4 replies
    • 534 views
  24. கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம் தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (புதன்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முறை…

    • 1 reply
    • 240 views
  25. 2024 சித்திரைப் புத்தாண்டு வரை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது - லிட்ரோ நிறுவனத் தலைவர் By T. SARANYA 05 JAN, 2023 | 02:54 PM (எம்.மனோசித்ரா) லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் கடந்த 6 மாதங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிக இலாபமீட்டியுள்ளது. உள்நாட்டு வங்கிக் கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளன. 2024 தமிழ் - சிங்கள புத்தாண்டு வரை எந்த வகையிலும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தலைவர் முதித பீரிஸ் உறுதியளித்தார். அத்தோடு வியாழக்கிழமை (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் , பெப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை திருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.