ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் ஆளும்கட்சி நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆளும்கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட தலைமையில் முன்னாள் விமான படைத்தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட குழுவை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். இவர்கள் மிரிஹான போராட்டம், காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல், அமரகீர்த்தி அதுகோரல படுகொலை, நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 102 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு – கம்மன்பில ! சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என உதய கம்மன்பில தெரிவித்தார். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே அவர் முயற்சி செய்கின்றார் என்றும் குற்றம் சாட்டினார். எனவே சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது என்றும் கட்சித் தலைவர் கூட்டத்திலேயே மாறுபட்ட பல கருத…
-
- 0 replies
- 538 views
-
-
ஏறாவூரில் மின்னல் தாக்கி 27 உயிர்கள் பலி By NANTHINI 25 DEC, 2022 | 10:42 AM நாட்டின் காலநிலை மாற்றம் காரணமாக இன்று (டிச. 25) அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி, மின்னல் தாக்கத்தினால் ஏறாவூரிலுள்ள வீடொன்றிலிருந்த பண்ணை மீது இடி, மின்னல் விழுந்ததில் அந்தப் பண்ணை முற்றாக கருகி சாம்பலாகியுள்ளது. கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே குறித்த பண்ணையை அமைத்து, ஆடு, கோழி மற்றும் வாத்து என்பவற்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலையிலிருந்து பாரிய இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்ததை தொடர்ந்து, இன்று…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம் By T. SARANYA 14 DEC, 2022 | 02:17 PM பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். கல்முனை பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார். இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்…
-
- 23 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியில் காணப்பட்டபோது யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவினை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த இந்த திட்டம், மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பசியினை ஆற்றிச்செல்கின்றனர். இந்நிலையில் சமையலறையில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவ…
-
- 10 replies
- 804 views
- 1 follower
-
-
இணைய வழி பண மோசடியுடன் தொடர்புடைய மூவர் கைது By T. SARANYA 24 DEC, 2022 | 03:38 PM (எம்.வை.எம்.சியாம்) கையடக்க தொலைபேசி செயலி மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று, அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அண்மையில் இது தொடர்பில் 12 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையவழியூடான பொருள் விற்பனைக்காக நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற்று அதன் மூலம் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு குறித்…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
அமெரிக்க டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு உதவுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்பதையும், அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. இந்திய ரூபாயில் இருதரப்பு…
-
- 0 replies
- 624 views
- 1 follower
-
-
வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.…
-
- 0 replies
- 737 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரின் வழக்குகள் விரைவுபடுத்தப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் சிறைச்சாலையில் உள்ளார்கள். அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து நிறைவு செய்ய நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். தலதா மாளிகை, மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல், கோட்டபய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சா…
-
- 0 replies
- 559 views
-
-
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புகள் இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 27 சோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 09 சுற்றிவளைப்புகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், 18 சுற்றிவளைப்புகளின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=169046
-
- 0 replies
- 327 views
-
-
309 கைதிகள் நாளை விடுதலை நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதில் 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=169052
-
- 0 replies
- 395 views
-
-
இரசாயன உர இறக்குமதிக்கான தடை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானி இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ் க்ளைபொசேட், யூரியா, அமொனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட இரசாயன உரங்களை திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும். இதேவேளை, சோள இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டு, கால் நடைக்கான தீவனம் தவிர்ந்த ஏனைய இறக்குமதியாளர்கள் ஜனவரி 15ஆம் திகத…
-
- 0 replies
- 227 views
-
-
கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல – சி.விக்கு அறிவித்தார் ரணில்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடு…
-
- 5 replies
- 334 views
- 1 follower
-
-
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவுகள் தொடர்பான தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியாகியுள்ளது மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவுகள் 200 கோடி ரூபாய்யைத் தாண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 3656 கோடி ரூபாய்வுக்கும் அதிகமான தொகையும் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் தொண்ணூற்றாயிரத்து எழுநூற்று நாற்பத்தேழு பயணிகளே வந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விமான நிலையத்தை…
-
- 0 replies
- 267 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வை வரவேற்கும் கோட்டாபய – ரணில் சிறந்த தலைவர் எனவும் புகழாரம் அரசியல் தீர்வை காணும் நோக்குடன் தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சை வரவேற்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேசி அரசியல் தீர்வை விரைந்து காணத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அது கைகூடவில்லை. தமிழ்க் கட்சிகளும் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை. பழையதைப் பேசுவது இப்போது உகந்ததல்ல. அனைவரும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.…
-
- 0 replies
- 329 views
-
-
நாங்கள் மூச்சை வழங்குவது - மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை! தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும்,சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி சேர்க்கும் விடயத்தில் எந்த வித பின்வாங்கலுமின்றி நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் போது சிலர் சிரிப்பதாகவும்,பாடசாலைகளுக்கு கணனி ஆய்வு கூடம் வழங்கினால் சிலர் சிரிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்நாட்டின் மருத்துவமனை கட்டமைப்புக்கு மூச்சு வேலைத்திட்டத்தின் மூலம் உதவும்போது கூட சிலர் சிர…
-
- 1 reply
- 233 views
-
-
125 நவீன ரக பொலிஸ் ஜீப்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா By DIGITAL DESK 2 23 DEC, 2022 | 04:36 PM (எம்.மனோசித்ரா) இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவினால் 125 நவீன ரக பொலிஸ் ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன உள்ளிட்டோரிடம் குறித்த ஜீப் வாகனங்கள் வியாழக்கிழமை (டிச. 22) கையளிக்கப்பட்டன. …
-
- 5 replies
- 749 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தீர்வு வழங்க எதிர்த்தவர் தற்போதைய ஜனாதிபதி! கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார். ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா தமிழ் மக்களின் அரசியர் தீர்வுக்கு ஆதரவு வழங்ககும் என்றதை வரவேற்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூச்சு என்னும் தொனிப் பொருளில் நேற்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி…
-
- 1 reply
- 239 views
-
-
5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி - அமைச்சர் விஜயதாஸ By DIGITAL DESK 5 23 DEC, 2022 | 04:38 PM (இராஜதுரை ஹஷான்) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மொத்த எண்ணிக்கையில் 74 சதவீதமானோர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையுடன் தொடர்புடையவர்கள். 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
16 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை துரிதமாக முன்னெடுக்க பரிந்துரை - நீதி அமைச்சர் By DIGITAL DESK 5 23 DEC, 2022 | 04:35 PM (இராஜதுரை ஹஷான்) பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். 16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் வெள்ளி…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். R Tamilmirror Online || வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்
-
- 1 reply
- 252 views
-
-
(எம்.நியூட்டன்) வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப் பிராணிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு, பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சைகளால் பெறுமதி மிக்க கால்நடைகள் அதிகளவில் இறந்துள்ளதாக அந்த மாவட்டங்களின் பண்ணையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்…
-
- 4 replies
- 649 views
- 1 follower
-
-
இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டவேளை உள்ளே 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்…
-
- 1 reply
- 219 views
-
-
பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொம்மைகள் கொண்ட பொதிகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு 7 பொதிகளை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த போதைப்பொருட்களில் 4,673 கிராம் குஷ் மற்றும் 9,586 மாத்திரைகளும் அடங்குவதாக சுங்கத்தினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 496 views
-
-
நாட்டில் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகளுக்கு தட்டுப்பாடு! மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிர…
-
- 2 replies
- 254 views
-