ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா ! மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது 2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே அவருக்கு தடை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரி, சித்திரவதை மற்றும் அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற வகையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1314873
-
- 24 replies
- 1.7k views
-
-
வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேக அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காலநிலை மாற்றங்கள் காரணமாக கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதனாலும், கரையோர மீன்பிடியில் ஈடுபடும் …
-
- 5 replies
- 798 views
-
-
மாவை தலைமையில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ! தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ள நிலையில், அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதில் கரிசனை கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, கடந்த மத்திய குழு கூட்டத்தில் இம்மாதம் 18ஆம் திகதி திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அத்தினத்தில் மாநாடு தாமதமடைவதற்கான …
-
- 1 reply
- 412 views
-
-
பாடசாலையில் போதைப்பொருள் : ஆயுர்வேத வைத்தியர் கைது By NANTHINI 11 DEC, 2022 | 12:17 PM மல்வத்துஹிரிபிட்டிய, புத்பிட்டிய பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலையில் போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் (68 வயது) 5,500 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான ஆயுர்வேத வைத்தியர் மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். கடந்…
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
மூன்று நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் யாழுக்கு விஜயம்! தாய்லாந்து , இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு இவர்கள் விஜயம் செய்தனர். இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டனர். அங்கு நெசவுப் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டதுடன், பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர். மேலும் குறித்த தூதுவர் குழு நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, யாழ் கோட்டைக்கும் விஜயமொன்றினையும் மேற்கொண்டிருந்தனர். https://athavannews.com/2…
-
- 0 replies
- 662 views
-
-
மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை ! மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக விலங்குகள் திடீரென மரணிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே பொது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1314933
-
- 0 replies
- 538 views
-
-
கொழும்பு மற்றும் யாழிலும் காற்று மாசுபாடு ! இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது. அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112, அம்பலாந்தோட்டை 105, கொழும்பு 103, நீர்கொழும்பு 97 ஆக பதிவாகியிருந்தன. 100 – 150 ற்குள் பதிவாகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. https://athavannews.com/2022/1314959
-
- 0 replies
- 343 views
-
-
யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்! யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விள…
-
- 34 replies
- 2.1k views
- 1 follower
-
-
சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை! சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டையின் பின் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்…
-
- 50 replies
- 3.7k views
- 1 follower
-
-
கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீன அரசு சோலார் விளக்குகளை வழங்கியது By NANTHINI 10 DEC, 2022 | 05:45 PM கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சூரிய மின் (Sollar power) விளக்குகள் வழங்கும் விசேட நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை (டிச. 😎 இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhehong Hong இந்த விளக்குகளை வழங்கியுள்ளார். சீனாவின் யுன்ஹான் மாகாண மக்கள் சங்கத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 பாடசாலைகளுக்கு இந்த சூரிய மின் விளக்குகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதன…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி By T. SARANYA 08 DEC, 2022 | 04:46 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக மாலைவேளை வரையும் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான மழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகின்றது. பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல இடங்களிலும், மரங்கள் முறிந்துள்ளதையும், மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது, நேற்று புதன்கிழமை(07) இரவு 11.30 மணியளவில் சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. அச்சூறாவளிப் புயலுக்கு “மாண்டஸ்” என பெய…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
வவுனியாவில் ஆர்ப்பாட்டம் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து கேள்வி ? By NANTHINI 10 DEC, 2022 | 05:43 PM வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று சனிக்கிழமை (டிச. 10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது. இப்போராட்டமானது பஜார் வீதியூடாக ஹோரவப்போத்தானை வீதி வழியே சென்று, ஏ9 வீதியூடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை வந்தடைந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 'மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு?', 'மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம்', 'மனித உரிமை மதிக…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் ஆர்ப்பாட்டம் By DIGITAL DESK 5 10 DEC, 2022 | 05:45 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 2023 ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தேசிய பாதீட்டில் விசேட தேவையுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாகொடுப்பனவை குறைப்தாக எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும். …
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியை கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு By DIGITAL DESK 5 10 DEC, 2022 | 04:55 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவிய கடும் குளிருடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் சுமார் 500 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://www.vir…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களையும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்நாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு மகா சங்கத்தினர் அனுமதித்து விடக்கூடாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கம்பஹா - குருண புனித பீட்டர் வித்தியாலயத்தில் புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , உயர்மட்டத்திலுள்ளவர்கள் முதல் அடிமட்டத்திலுள்ளவர்கள் என அனைவரும் இன்று மோசடிகளுக்கு அடிமையாகியுள்ளனர். இதன் காரணமாக 74 வருடங்களுக்குள் உண்மைகளை பொய்யாகவும் , ப…
-
- 0 replies
- 342 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியாவின் மேற்பார்வை அவசியம் – செல்வம் எம்.பி. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாத்தத்தின்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். மேலும் சர்வதேசமும் இந்த பேச்சுவா…
-
- 4 replies
- 404 views
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அழுகிய தக்காளிப்பழம் வீசி போராட்டம் By T. SARANYA 10 DEC, 2022 | 03:01 PM வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்…
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .
-
- 22 replies
- 1.4k views
-
-
இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி வழங்க புதுடில்லி தீர்மானம்! By T. SARANYA 10 DEC, 2022 | 12:24 PM இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. உல்லாசப் பயணம், வணிகம், மாநாடுகள் மற்றும் பலவற்றுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/142720
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா பச்சைக்கொடி!! சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் சீனப் பிரதமருக்கும் இடையிலான பேச்சின் பின்னர் இந்த நம்பிக்கையான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1314855
-
- 1 reply
- 242 views
-
-
வெளிநாட்டு ஊழியர்களால் 3 பில்லியன் டொலர் !! 2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்ட நிலையில் அந்த மாதத்தைவிட 30 மில்லியன் டொலர் அதிகம் என அவர் கூறினார். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் டொலர் அதிகரிப்பு எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். புலம்பெயர்ந்த த…
-
- 0 replies
- 404 views
-
-
அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்கும் பயணத்தில் இலங்கை ! அணு ஆயுத சோதனைகள் இல்லாத உலகத்தை உருவாக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார். வியன்னாவில் நடைபெற்ற 3வது CTBTO அறிவியல் இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அணு ஆயுத சோதனை குறித்து 1996 ஆம் ஆண்டு கையொப்பமிட்டதற்கு அமைவாக இலங்கை செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த கருத்தரங்கில் சுமார் 80 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், வல்லுநர்கள், சிவில் சமூகம் மற்றும் தூதுவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் பின்னர் சர்வதேச அணுசக்தி…
-
- 0 replies
- 289 views
-
-
(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) நாடு தற்போதுள்ள எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறுகிய காலத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 3 பில்லியன் டொலராக அதிகரிக்கா விட்டால் எம்மால் மட்டுமல்ல எவராலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஊடகத்துறை,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்)சட்டமூலம்,உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. …
-
- 1 reply
- 343 views
-
-
இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு சட்ட மூலம் தயாரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் By T. SARANYA 09 DEC, 2022 | 03:05 PM (எம்.மனோசித்ரா) இந்து சமுத்திரத்தில் கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு திட்டத்திற்காக ஆசியாவில் முதலாவது சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , எம்மிடம் பாரிய கடற்படைய…
-
- 2 replies
- 625 views
- 1 follower
-
-
நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான பதிவாளர் கைது! 09 DEC, 2022 | 07:47 PM நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நான்கு இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மினுவாங்கொடை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மினுவாங்கொடை நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற பிரதான பதிவாளர் நீதிமன்றில ஆஜர்படுத்தப்பட்டபோது மினுவாங்கொடை நீதிவான் திலானி தேனபந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (09) உத்தரவிட்டுள்ளார். இதன்படி சந்தேக நபரை எதிர்வருபம் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். https://www.virakes…
-
- 4 replies
- 841 views
- 1 follower
-