ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அபிவிருத்தி லொத்தர் சபைக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் போது 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து அச் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண குணவர்தன செயற்பட்ட காலப்பகுதியில் வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது, 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தா…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
அரசாங்கத்துக்கு 5 ஆம் திகதி வரை கால அவகாசம்- அமைச்சர்களான திகா, மனோ குழு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொடர்பில் தீர்க்கமான ஒரு தீர்மானத்துக்கு அரசாங்கம் வரா விட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டிய ஒரு நிலை ஏற்படும் அமைச்சர் ப.திகாம்பரம் தெரிவித்தார் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் இவ் வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது. ஊக்குவிப்புக் கொடுப்பனவான 140 ரூபாய் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்றும் உறுதியா…
-
- 2 replies
- 427 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் இந்த ஆதரவை விலக்கிக்கொண்டு தேசிய அரசாங்கத்துக்கு அக்கட்சி ஆதரவளிக்க தயாராகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டைமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியும் வேறொருவருக்கு பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளன எனக் கூறப்படுகின்றது. தற்சமயம் 3 மாத விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்கும் தொண்டமான் விரைவில் நாடு திரும்பி ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேசிய பின்னர் அரசுடன் இணைவார் எனத் தெரிகிறது. இதேவேளை அண்மையில் நிதியமைச்சர் ரவி…
-
- 0 replies
- 341 views
-
-
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து. விலகுவதற்கு... 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்! அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதற்கு உரிய தீர்வுகாணுமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை என்றும் பைசல…
-
- 0 replies
- 101 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக 3 ஆலயங்களில் தேங்காய் உடைப்பு தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக ஆலயங்கள் 3 இல் தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் தீங்குகளை நிறுத்துமாறும், அவ்வாறு முடியாவிட்டால் புதிய அரசாங்கம் உருவாக ஆசிர்வாதம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த ஆலயங்களில் பூசை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனிகம, முன்னேஸ்வரம் மற்றும் நவகமுவ ஆகிய ஆலயங்களில் இந்த வேண்டுதல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசபற்றுள்ள மக்கள இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188926/அரச-ங-கத-த-க-க-எத-ர-க-…
-
- 0 replies
- 212 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறும் கட்சியின் உயர்ப்பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டார். முஸ்லிகளுக்கெதிராக அண்மைக்காலகமாக பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கடிகளுக்கெதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்ற பாரிய குற்றச்சாட்டு அந்தக் கட்சியி…
-
- 1 reply
- 578 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை February 24, 2019 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளமையினால் மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். மாகாணங்களின் ஆளுநர்கள் சிலர் நேற்றையதினம் காலியில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது கருத்து தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தற்போது காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேவேளை நாட்டில் 85 சதவீதமான நிர்வாக நடவடிக்கைகள் மாகாண சபைகள் ஊடாகவே ம…
-
- 0 replies
- 728 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக ஜூன் 9ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை! [Thursday 2015-05-28 19:00] அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்தானந்த, 'புதிய அரசாங்கத்துக்கு 100 நாட்களுக்கு மேலதிகமாக 50 நாட்கள் கொடுத்தாகிவிட்டது. அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் 9ஆம் திகதி சமர்ப்பிக்…
-
- 0 replies
- 365 views
-
-
ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டத்தை செயல்படுத்துவதை தாமதித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசார செயலாளர் விஜித ஹேரத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு கருத்து வெளியிட்ட விஜித ஹேரத், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாகவே ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களின் சகாக்களின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. இந்த குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிய…
-
- 0 replies
- 333 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக புத்தூரில் தீப்பந்தப் போராட்டம் 2023-03-18 09:57:32 ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என கண்டித்து தீப்பந்த போராட்டம் யாழ். புத்தூரில் இடம்பெற்றது. அரசாங்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு வலி.கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை (17) இரவு முன்னெடுக்கப்பட்டது. 200% மின்சார கட்டண உயர்வை கைவிடு. உணவு எரிபொருள் விலையை குறை, உழைக்கும் மக்களை பட்டினிக்குத் தள்ளாதே, அடக்குமுறைகளை ஏவி மக்களை ஒடுக்காதே!உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத…
-
- 0 replies
- 243 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக... பாரிய போராட்டத்திற்கு, அழைப்பு. அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(18) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்ட…
-
- 1 reply
- 365 views
-
-
March 11, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அரசாங்கத்துக்கு எதிராக கட்டியெழுப்பப்படும் எந்தவொரு கூட்டணிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்க தயாரென, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 164 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான சபைகளை நிறுவ எதிர்க்கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இலட்சத்தில் அதிகரித்துள்ள நிலையில…
-
- 0 replies
- 165 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானம் (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வந்த பின்னர் அவர்களதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்ட பின்னர் கையளிக்க இருப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள…
-
- 0 replies
- 222 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்... 25ஆவது நாளாகவும், தொடர்கிறது அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 25ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. சர்வமத தலைவர்கள், இளைஞர் – யுவதிகள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், பல்கலைகழக மாணவர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், நேற்றைய தினமும் பாரியளவான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆர…
-
- 0 replies
- 202 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான, ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில்... இருந்து. இன்று ஆரம்பம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. ‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்த பேரணி, 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது. தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் …
-
- 0 replies
- 151 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... ஆர்ப்பாட்டம், கொழும்பு – காலி முகத்திடலில்... 3ஆவது நாளாகவும் தொடர்கிறது அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கொள்கை அடிப்படையிலான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 143 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278535
-
- 0 replies
- 172 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... போராட்டக் களத்தில், ஒருவர் உயிரிழப்பு – கொழும்பில் சம்பவம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276360
-
- 0 replies
- 218 views
-
-
அரசாங்கத்துக்கு ஒரு சாதகமான சமிஞ்ஞையைக் காட்டுவதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுகிறது – சுரேஸ் பிரேமச்சந்திரன் அலரி மாளிகைச் சந்திப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் அதில் கலந்துகொள்வதன் மூலம் அரசாங்கத்துக்கான ஒரு சாதகமான சமிஞ்ஞையைக் காட்டுவதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுவதாகவே தெரிகின்றது.இதன் மூலம் அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துக்கொள்வதற்கு அவர்கள் முற்படலாம். நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தவர்களுள் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முக்கியமானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தின் மூலமாக எந்தப் பலனும் கிடைக்கப்போவ…
-
- 1 reply
- 346 views
-
-
அரசாங்கத்துக்கு காலக்கெடு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நாளை (08) காலை 8 மணிவரை, அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, விமானப்படை முகாமுக்கு முன்னால் மேற்கொண்டு வருகின்ற போராட்டம், 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, இன்றைய தினம், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது அம்மக்கள், “8ஆவது நாளாக தொடரும் போராட்டத்துக்கு, அரசாங்கம் எவ்விதப்…
-
- 0 replies
- 487 views
-
-
அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா? ''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்'' இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார். மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்) இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும்…
-
- 10 replies
- 1.3k views
-
-
பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு வெளிநாட்ட…
-
- 0 replies
- 255 views
-
-
அரசாங்கத்துக்கு நெருக்கமாக செயற்பட்டால்தான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும் – கருணா தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் ஊடாகதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்கள்பில் தற்போது பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மக்கள் யாருக்கு வாக்களிப்பதென்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நீங்கள் குழப்பமடையாமல…
-
- 2 replies
- 427 views
-
-
26 JAN, 2025 | 07:13 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …
-
- 1 reply
- 201 views
- 1 follower
-