ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142590 topics in this forum
-
கொழும்பில் குண்டு வெடிப்பு கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் சற்று நேரத்துக்கு முன் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபரங்கள் அறிந்தவர்கள் உடன் தகவல் தாருங்கள் தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்
-
- 52 replies
- 10k views
-
-
சிங்கப்பூர் தமிழ் முரசில் இருந்து -உயிர் பிழைக்க உயிரே பணயம் http://tamilmurasu.asia1.com.sg/25-06-2006...6/TM25PG8-9.pdf http://www.tamilnaatham.com/pdf_files/tami..._2006_06_25.pdf
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி? தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்ற…
-
- 3 replies
- 1.5k views
-
-
றொய்ற்றர் செய்தி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. http://www.alertnet.org/thenews/newsdesk/SP27609.htm
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கைப் பிரச்சினை - ஒரு யதார்த்தமான பார்வை Dr. Brian Senewiratne : பாகம் 1 மூலம்: Dr. Brian Senewiratne தமிழில் Dr. Brian Senewiratneவின் அனுமதியுடன்: புனிதன் (அவுஸ்திரேலியா) சர்வதேச சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள்; - 9 ஜுன் 2006 இலங்கைப் பிரச்சினை - ஒரு யதார்த்தமான பார்வை இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்ப் பகுதிகள் மட்டுமல்ல, தெற்குச் சிங்களப் பகுதிகள் கூட, ஏன்? இலங்கை முழுவதுமே ஒன்றாக அழிவதை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கைப் பிரச்சினையை தெளிவாக விளக்குதற்காக இது வரையப் படுகிறது. இலங்கை அரசு, பிரச்சினையே தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்தான் என்று சொல்லிக் கொள்கிறது. இலங்கை…
-
- 0 replies
- 1.3k views
-
-
எமது கனவு, மரண பயமற்ற தமிழ் ஈழம் - சு.ப.தமிழ்ச்செல்வன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/vika..._2006_06_23.pdf
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக முறையிடவுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பின்லாந்துக்கு பயணமாகி…
-
- 1 reply
- 1.4k views
-
-
வாத விவாதங்களிற்கிடையே தெரிய வரும் முக்கிய நிலைப்பாடுகள் -பீஷ்மர்- கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள், அதன் பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட விருந்த சூழலில் அது பற்றிய தனது கருத்து நிலைப்பாடுகளை இலங்கை அரசாங்கத்துடனிருந்து செயலமர்வு நிலையில் தான் எதையும் பேசமுடியாதென்றும் நோர்வே அரசாங்கத்திடம் அதனை நேரடியாகக் கூறுவதே தனது நிலைப்பாடென்றும் விடுதலைப்புலிகள் அண்மையில் எடுத்த நிலைப்பாடு ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகவுள்ளது. கண்காணிப்புக் குழுவைப் பற்றியோ ஒழுங்கு செய்த கூட்டத்தையே அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதி என்று எடுத்துகூறி புலிகள் பேச்சுவார்த்தைகளைக் குழப்பிவிட்டனர் என்ற குற்றச் சாட்டை அரசாங்கம் இப்போது சர்வதேச அரங்கிலும் குறிப்பாக உள்நாட்ட…
-
- 0 replies
- 989 views
-
-
இலங்கை- இந்திய உறவின் போக்கு மாற்றமடைய ஆரம்பித்துள்ளதா? -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- பொதுவாக வெளிவிவகாரக் கொள்கை என்பது மாற்றமடையக் கூடியதொன்றாகும். அதேபோன்று இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்பதும் எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பதன்று. இருந்த போதும் நீடித்து நிலைத்திருக்கின்ற உறவுகளும் இல்லாதிருப்பதில்லை. உதாரணமாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவையே கூட எடுத்துக் கொள்வோமாயின், அது அதிகம் மாற்றமுறுகின்ற ஒன்று அல்ல. இரு நாடுகளும் இந்நாட்டின் சுதந்திரத்தின் பின்னர் உறுதியான அதேசமயம் நட்புணர்வுடைய உறவைக் கொண்டுள்ளன. இப்போக்கு குறுகிய எதிர்காலத்தில் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதற்கில்லை. இருப்பினும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அவ்விதமானதல்ல. உண்ம…
-
- 0 replies
- 1k views
-
-
படைத்தரப்பின் அத்துமீறல்களை இறுக்கிப்பிடிக்க ஜனாதிபதி முடிவு. அவற்றை அம்பலப்படுத்த தமிழர்கள் தரப்பு முனைப்பு தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களினாலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மக்களுக்கு எதிரான அராஜகங்கள், அத்துமீறல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் என்று நம்பகமாக அறியவந்தது. அதேசமயம், படைத்தரப்பின் அடாவடித்தனங்களை சர்வதேச ரீதியில் திட்டமிட்ட வகையில் பிரசாரப்படுத்தி, அம்பலப்படுத்துவதில் தமிழர் தரப்பு முனைப்புக் காட்டியிருப்பதாகத் தெரிகின்றது. தமிழர் தாயகத்தில் இலங்கைப் படை யினராலும், ஒட்டுக்குழுக்களினாலும் மேற் கொள்ளப்படுகின்ற பல்வே…
-
- 0 replies
- 1k views
-
-
பிராயச்சித்தம் செய்யாமல் வேதம் ஓதும் பிரிட்டன் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமினிக் சில்க் கொட் கொழும்பில் நடந்த பகிரங்க நிகழ்வு ஒன்றில் இலங்கை அரசுக்கு அறிவுரையும், விடுதலைப் புலிகளுக்குப் புத்திமதியும் கூறியிருக்கின்றார். விடயம், விவரம் புரியாமல் சரித்திரம் தெரியாமல் அவர் "தத்துவம்" பேசியிருப்பதை அவதானிக்கும் போது ஈழத்தில் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாட்டின் இலங்கைத் தீவின் இன்றைய இழிநிலைக்கு வினை விதைத்தவர்களே பாவத்துக்குக் காரணமானவர்களே பாவவிமோசனத்துக்கான உபாயம் உரைப்பது நகைப்புக்கு இடமானது. சர்வதேச பொலீஸ்காரனுக்குக் காவடி தூக்கும் "சிறப்பை" வைத்துக்கொண்டு எதையும் எங்கும் உபதேசிக்கலாம் என்று ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க வேண்டும்: தமிழக 'தினமணி' நாளேடு வலியுறுத்தல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. தினமணி நாளேட்டில் இன்று புதன்கிழமை எழுதப்பட்டுள்ள தலையங்கம்: நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணி வெடித் தாக்குதலில் பலர் பலி... தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் குண்ட…
-
- 4 replies
- 2.4k views
-
-
கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கட…
-
- 7 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள் கண்டுபிடிப்பு வெலி ஓயா கல்யாணபுர சிறிலங்கா இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த முகாம் அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரைப் போன்று விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்த மேலும் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் என 28 பேரின் விவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக செயற்பட்ட இராணுவ காவல்துறையினர், மேலும் 5 பேரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கோமரன்கடவெல பிரதேசத…
-
- 1 reply
- 1.2k views
-
-
கண்காணிப்புக்குழுவை மீளமைக்க செப். 1 வரையிலும் காலக்கெடு நீடிப்பு நோர்வேயின் வேண்டுகோளை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து அகற்றி புதியவர்களை நியமிப்பதற்கான காலக்கெடுவை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடித்துள்ளனர். நோர்வேயின் வேண்டுகோளை ஏற்றே விடுதலைப் புலிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அனு சரணை வகிக்கின்ற நோர்வே மற்றும் ஐஸ் லாந்து, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய ஐந்து நோர்ட்டிக் நாடுகளின் பிரதிநிதிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் தற் …
-
- 0 replies
- 965 views
-
-
கெப்பிற்றிக்கொல்லாவில் நடந்தது என்ன? அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள் http://www.tamilnaatham.com/articles/2006_...lan20060624.htm
-
- 0 replies
- 1.5k views
-
-
அல்லைப்பிட்டி மக்களை நிவாரணத்தின் பெயரால் ஏமாற்றிய இராணுவம் யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டி பகுதியில் கட்டாயப்படுத்தி மீளக் குடியேற்றிய மக்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினர் நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தென்னிலங்கை மக்களுக்கு காட்டும் முயற்சியாக தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் யாழ். குடாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அல்லைப்பிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மக்கள் இருப்பதாக காட்ட முற்பட்ட இராணுவத்தினர் நிவாரணம் தருவதாக அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமைக்கு இண…
-
- 1 reply
- 1.1k views
-
-
துணை இராணுவக் குழுவினரின் சிறார் கடத்தலைத் தடுக்க யூனிசெஃப் வலியுறுத்தல் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் சிறார் கடத்திச் செல்லப்படுதலைத் தடுக்க வேண்டும் என்று யூனிசெஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. யூனிசெஃப் அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் சிறார்களை கடத்திச் சென்று தங்களது குழுக்களில் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்தில் இது தொடர்பில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 18 வயதுக்குறைவானோர் கடத்தப்படுவதும் கட்டாயமாக குழ…
-
- 1 reply
- 1.1k views
-
-
¿£Ã¡Å¢ÂÊ¢ø ¨Åò¾¢Â÷ Å£ðÊø ¦¸¡û¨Ç. ¡úôÀ¡½õ ¿£Ã¡Å¢ÂÊ¢ø À¢ÃÀÄ ¨Åò¾¢Â÷ ´ÕÅ¡¢ý ţΠ§¿üÚ ¿ûÇ¢Ã× ¬Ô¾À¡½¢¸Ç¡ø ¦¸¡û¨Ç¢¼ôÀðÎûÇÐ. ÐôÀ¡ì¸¢, ¸ò¾¢¸Ù¼ý ÒÌó¾ ¦¸¡û¨ÇÂ÷¸û ÐôÀ¡ì¸¢ôÀ¢Ã§Â¡¸ò¨¾ §Áü¦¸¡ñ¼Ð¼ý ÍÁ¡÷ ãýÚ Á½¢§¿Ãõ Å£ðÊÛû ¾¡¢ò¾¢ÕóÐ ¦ÀÕ󦾡¨¸ôÀ½ò¨¾Ôõ ¿¨¸¸¨ÇÔõ «À¸¡¢òÐî ¦ºýÚûÇÉ÷. þÅÃРţðÊø þÕóÐ áÚ Á¢üÈ÷ àÃò¾¢ø þáÏÅì ¸¡ÅÄÃñ þÕó¾§À¡Ðõ þÅÃРţðÊø ÐôÀ¡ì¸¢î ºò¾õ §¸ð¼ ¿¢¨Ä¢Öõ ¦¸¡û¨ÇÂ÷¸û «í¸¢ÕóÐ ¦ÅÇ¢§ÂÈ¢ ãýÚ Á½¢§¿Ãò¾¢ý À¢ýɧà À¨¼Â¢É÷ «íÌ ¦ºýÈ¢Õó¾É÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பில் சற்றுமுன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றது...! மேலதிக தகவல் தொடர்ந்து வரும்..
-
- 16 replies
- 4.7k views
-
-
கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த நோர்வே வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.opprop.no/opprop.php?id=ermedltte கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த டென்மார்க் வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.tamilernessag.underskrifter.dk/
-
- 5 replies
- 1.9k views
-
-
அஞ்சலி அரசியல் இவ்வாரம் பாராளுமன்றம் கூடிய முதல் இரு நாட்களிலும் அண்மைய வன்முறைகளின் போது படுகொலையுண்ட அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஒவ்வொரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சபை கூடிய போது கடந்த வாரம் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹெப்பித்திக்கொல்லாவையில் பயணிகள் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டுத்தாக்குதலைக் கண்டனம் செய்து விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச, அச்சம்பவத்தில் பலியான அப்பாவிக் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் அக்கறை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டுவதில் ஒரு தணிவு நிலையைக் கடைப்பிடித்து வந்த தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் துடிப்புடன் குரல் கொடுக்கும் சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்திருக்கும் வன்முறை நிகழ்வுப் போக்குகள் காரணமாக தமிழகத்தில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை அவதானித்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் , மாநில முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைவரங்கள் குறித்து ஆராய்வதற்காக தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கிறார். இன்று புதுடில்லி செல்லும் இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
தந்திரோபாய நகர்வுகளுக்கான மிக முக்கிய காலம் நெருங்குகிறது அமைதி முயற்சிகள் தோற்று செயலிழந்து போய், நாட்டில் மீண்டும் ஒரு பயங்கர யுத்தம் வெடிக்கும் ஆபத்து ஏது நிலை உருவாகி வருவதை இந்த நாட்டின் சாதாரண பிரஜை வரை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். விரும்பியோ, விரும்பாமலோ இந்த இலங்கைத்தீவு ஒரு கொடூர யுத்தத்துக்கு முகம் கொடுக்கும் அவலம் தவிர்க்க முடியாததாகி வருகிறது. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. இலங்கைத் தீவில் அகோர யுத்தம் நிலவும்போது முன்னரைப் போல சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு அதனைக் கைகட்டிப் பார்த்திருக்குமா என்ற வினாவும் எழுகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிந்தனையையும், யதார்த்தத்தையும் கொண்ட தமிழீழ அரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம். சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் யுP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரச…
-
- 6 replies
- 2.2k views
-