Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவிலாறு நீரை மாலைக்குள் திறந்துவிட புலிகள் இணக்கம் பவன் Sunday, 06 August 2006 மாவிலாறு நீரை சிங்கள மக்களுக்காக இன்று மாலைக்குள் திறந்துவிட விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற நோர்வே அரசும் சர்வதேச சமூகமும் உறுதியளித்திருப்பதை தொடர்ந்து இதற்கு தமது சம்மதத்தை தெரிவித்திருப்பதாக அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். நோர்வேயின் சமாதானத்துக்கான விஷேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவரையும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கரையும் விடுதலைப்புலிகள் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்…

    • 5 replies
    • 1.6k views
  2. ஞாயிறு 06-08-2006 13:32 மணி தமிழீழம் [மகான்] பிலியந்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைக்குண்டு வீச்சு: 7 பொதுமக்கள் படுகாயம். கொழும்பு பிலியந்தல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் சனி இரவு 8மணியளவில் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்

    • 0 replies
    • 857 views
  3. பாலசிங்கத்துடன் இந்தியப் பிரதிநிதி பேச்சுவார்த்தை: சிங்கள ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 08:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவின் அதிகாரி தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சிங்கள ஊடகச் செய்தி வருமாறு: கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி யுத்த நிறுத்தத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்க…

    • 0 replies
    • 1.1k views
  4. கிழக்கின் திருப்பமும் தெற்கின் திகைப்பும் -பீஷ்மர்- [06 - August - 2006] [Font Size - A - A - A] வடக்கே முகமாலையிலும் நாகர் கோவிலிலும் வடமராட்சியிலுமே நடைபெறப்போவதாக இருந்த விடுதலைப்புலிகளின் பதிற்குறிகள் சகல எதிர்பார்ப்புகளையும் மீறி திருகோணமலைப் பகுதியை அதுவும் கொக்கிளாய், புல்மோட்டை, சேருவில பகுதிகளையும், மூதூரையும் மையக் களங்களாக்கும் `நடவடிக்கைகள்' மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாக திருகோணமலை நகரப்பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச படையினர் மேற்கொண்டுவந்த நேரடி, மறைமுக செயற்பாடுகளின் போது கிழக்கில் விடுதலைப்புலிகளை தலைமையாகக் கொண்ட தமிழர் உரிமைப் போராட்டக் குரலுக்கு இடமிருக்காது என்ற நிலைப்பாட்டில் அரச இராணுவம் பல …

    • 0 replies
    • 1k views
  5. திருமலை இறுதிப்போருக்கான பரீட்சார்த்த களம் -இதயச்சந்திரன்- கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டது போல் லெபனான் விவகாரத்தில் உள்வாங்கப்படும் அனுபவங்கள், மாவிலாறு அணைக்கட்டில் பரீட்சித்துப் பார்க்கப்படுவது போல் தெரிகிறது. இரு இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டவுடன், லெபனான் மீது தொடர் விமான குண்டு வீச்சுக்கள் நிகழ்த்தப்படுவது போன்று, அணைக்கட்டு மறிப்பு விவகாரத்தை சாட்டாக வைத்து, திருமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மீது விமானத் தாக்குதல்களும் எறிகணை வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதலிற்கான பின்புலச் சதியில், மாவிலாறு சிக்கலை ஊதிப் பெரிதாக்கி திருமலை மாவட்டத்தை ஏனைய பகுதியிலிருந்து துண்டாடும் நீண்டகால பேரினவாதச் சிந்தனை தொழிற்படுவது போல் இருக்கிறது. இதனை …

    • 1 reply
    • 1.2k views
  6. புலிகள் எந்தநேரமும் தாக்கலாம் படையினர் அச்சம் சிறிய படகுகள் மூலம் தரையிறக்கம். திருமலை நகரைக் கைப்பற்றுவதற்கான படை நகர்வை, எந்த நேரமும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மூதூர் - சேருநுவர ஆகிய பகுதிகள் மீது தொடுக்கப்பட்டமை போன்று, அதிரடியாக திருமலை நகர் மீது பாரிய வலிந்த படையெடுப்பொன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா அரச தரப்பினர் மத்தியில் நிலவுகின்றது. மூன்று நாட்கள் உக்கிர சமர்களை மேற்கொண்டு சிறீலங்கா படையினருக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அதிரடியாக பழைய நிலைகளுக்கு திரும்பியமை, தற்போது அரசாங்கத்தை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்க…

    • 0 replies
    • 1.2k views
  7. இளையோர் அணியின் முதலாவது அணிக்கான பயிற்சி அணியின் நிறைவு நிகழ்வு கிளிநொச்சியில் லெப். செல்லக்கிளி பயிற்சிப் பாசறையின் இளையோர் அணியின் 500 பேர் கொண்ட முதலாவது அணிக்கான பயிற்சி அணியின் நிறைவு நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சியில் உள்ள பயிற்சி மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமான நிகழ்விற்கு இளையோர் மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் நரேன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சக்தி ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார். லெப்.செல்லக்கிளியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்ப…

  8. படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…

  9. சின்னக்குட்டிகளின் மரதனோட்டம்...! முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மிரட்ச்சியுமாக நம்பிக்கையுடன் ஓடும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....! சலோம் சிறுவர் முன்பள்ளியின் மாணவர்களுக்கிடயேயான குறுந்தூர மரதனோட்டப்போட்டி தென்னிந்திய திருச்சபை குரு ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது..! 4 வயதுக்குட்பட்ட ஆண் பெண் சின்னகுட்டான்களின் ஓட்டம் தாயகத்தில் நடப்பது இதுதான் முதற்தடவை...! நண்றி சங்கதி

  10. தாயக உணாவுள்ளவர்களே! இதையும் கொஞ்சம் பாருங்கள். http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806

    • 0 replies
    • 1.1k views
  11. மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தளம் திரும்பினர். மூது}ர் பிரதேசத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட சில இராணுவ நிலைகள் மீது தாம் நடத்திய மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை நேற்று நள்ளிரவு (04-08-2006) 12.00 மணியுடன் பூர்த்தி செய்யப்பட்டுத் தமது துருப்பினர் தளம் திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் அவர்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் இங்கே (தாயகத்தில்) வெளியாகியுள்ளன. முஸ்லிம் மக்களுக்குரிய சகல உரிமைகளையும் தமது துருப்பினர் பேணவேண்டுமெனக் கடுமையான கட்டளையிடப்பட்டிருந்தது எனவும், அத்துடன் நேற்று நள்ளிரவு வரை மூது}ரில் தாம் நிலைகொண்டிருந்தவேளையில் முஸ்லிம் மக்களது உடம…

    • 33 replies
    • 5.9k views
  12. என்ன நடந்தது தமிழ்நெற்றுக்கு????... நேற்றிலிருந்து படுத்து விட்டது!!! உந்த ஆங்கில இணையத்தளம் மட்டுமல்ல, மட்டுஈழநாதம், புதினம், பதிவு, நிதர்சனம், .. சங்கதி எல்லாம் நல்லா நித்திரையடிக்கினம் போல!! ஈழ்பதீஸானே! அடியேன் நித்திரையை குழப்பி செய்தி பாம்பமென்டாம் டென்ஸனைக் கிளப்புகிறான்கள்!!

  13. மீண்டும் சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இராணுவ தலைமையகத்திற்குள் சரத் பொன்சேகாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மிகவும் சக்தி வாய்ந்த குண்டு அவருடைய வருகைக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டதால் சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலிருந்த பூச்சாடிக்குள் பாரிய சக்தி வாய்ந்த குண்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும் சரத் பொன்சேகா காரியாலயத்திற்கு வருவதற்கு சில வினாடிகளுக்கு முதல் அந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டதால் சரத் பொன்சேகா தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். எனினும் இந்த தகவலை வெளியே ஊடகங்களுக்கு வெளிவராதபடி இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்து வருகின்றது. http://www.nitharsanam.com/?…

  14. திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 12 கடற்படையினர் பலி! திருமலை மூதூர் இறங்குதுறை பகுதியில் சிறீலங்காப் படையினரின் டோரா பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மூதூர் இறங்குதுறைப் பகுதியில் தரையிறக்க முயற்றி ஒன்றை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போது கடற்புலிகளால் டோரா படகு மூழ்கடிக்கப் பட்டுள்ளது. pathivu.com

  15. வெருகலையும் திருமலையும் இணைக்கும் பாதை தகர்ப்பு http://www.nitharsanam.com/?art=19886

    • 1 reply
    • 1.6k views
  16. பேச்சுக்களை நிறுத்தி, தாக்குதல் தொடுக்கும் காலம் வந்துள்ளது: மகிந்த ராஜபக்ஷ [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 22:06 ஈழம்] [காவலூர் கவிதன்] இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற வைபத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேச்சுக்களை நிறுத்தி, செயலில் இறங்கும் காலம் வந்துவிட்டது என்று கூறினார். இவ்வளவு நாளும் நாம் நிறையப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நாம் செயலில் இறங்கி, எமது இமாலய சக்திகளை வெளிக்காட்டுவதற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் காலம் வந்துள்ளது என்றார் மகிந்த. நாட்டில் மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும், நாட்டு மக்கள் நேரடியாக பங்களிப்பது அவர்களது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். புதிதாக …

    • 16 replies
    • 3.2k views
  17. மாவிலாறு தாக்குதல்: சோமபுரத்திலிருந்து வெளியேறுமாறு சிங்களவர்களுக்கு உத்தரவு திருகோணமலையின் தெற்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமான சோமபுர கிராமத்தில், சிங்களக் குடியிருப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது மாவிலாறுப் பகுதியை நோக்கி படைகளை நகர்த்த முயற்சிக்கும் சிறிலங்காப் படையினர் அதற்கான இன்னுமொரு திட்டமிடலாக சோமபுர கிராமத்தையும் பயன்படுத்தவுள்ளனர். இதற்காக, சோமபுர கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிங்களக் குடியிருப்பாளர்களை, உடனடியாக வெளியேறி, வேறு இடங்களில் தற்காலிகமாகக் குடியேறுமாறு கோரியுள்ளனர். மாவிலாறு அணைக்கால்வாய்ப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க, சோமபுர பகுதியூடான படை நகர்வும் தங்கள் திட்டத்தில் அடங்குவதாகக் கூற…

  18. பொலநறுவையில் இராணுவம் - காவல்துறை மோதல்: 5 காவல்துறையினர் காயம் பொலன்னறுவை கதுருவெலயில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து காவல்துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் முன்னர் கதுருவெல காவல்துறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது விடுமுறையில் சென்ற இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினரால் இராணுவத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பழி தீர்க்கும் வகையில் 5 ட்றக் வாகனங்களில் வந்த இராணுவத்தினர் இந்தச் சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினரை தாக்க…

  19. எறிகணை வீச்சில் மேலும் 5 முஸ்லிம் அகதிகள் பலி [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 20:28 ஈழம்] [காவலூர் சங்கீதன்] மூதூர் பகுதிகளில் நடந்து வரும் உக்கிரமான சண்டைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அங்கிருந்து வெளியேறும் அகதிகள் மீது சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சுக்களை நடத்துவதுடன் முகாம்களிலிருந்து எறிகணை வீச்சுக்களையும் நடத்தி வருகின்றது. சிறிலங்காப் படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்படும் தொடர்ச்சியான எறிகணை வீச்சில், மூதூர்ப் பகுதியிலிருந்து தப்பிக்க முயன்ற 5 முஸ்லிம் அகதிகள் பலியாகினர். பச்சநூர் ஏ-15 தெருவின் 64வது மைல்கல் அருகே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முஸ்லிம் அகதிகள் வெள்ளைக் கொடியுடன் செல்லும் போது, எறிகணையொன்று அவர்களுக்கு அருகே வீழ்ந்து வெட…

    • 0 replies
    • 855 views
  20. மூதூர் முஸ்லீம்களின் பள்ளிவாசல் குண்டு வைத்து தகர்பு http://www.nitharsanam.com/?art=19883

    • 0 replies
    • 1.2k views
  21. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முஸ்லிம்களுக்கு முழு அளவில் உதவி [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 19:55 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான அகதிகளுக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் நிவாரண உதவிகளையும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திருகோணமலை கிளை வழங்கி வருகின்றது. பல மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த அகதிகளைப் பராமரிக்க, சிறிலங்கா அரசின் பாரபட்சமற்ற உதவியையும், புனர்வாழ்வுக்கழகம் கோரியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கும் இதுபோன்ற கோரிக்கைகளை விடுத்துள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தம்மிடம் உள்ள அனைத்து சேமிப்புக்களையும் பயன்படுத்தி போதிய உதவிகளை வழங்கி …

    • 0 replies
    • 844 views
  22. யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு விமல் வீரவன்ச அழுத்தம் [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [து.சங்கீத்] விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து உத்தியோகபூர்வமாக உடனே வெளியேறுவதாக அறிவிக்குமாறு ஜே.வி.பி. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் விமல் வீரவன்ச சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடியபோது எதுவித உணர்ச்சியுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் வெள்ளைக்காரர்கள், பேசாலையில் ஒருசில மீனவர்கள் தாக்கப்பட்டபோது மட்டும் தங்கள் உணர்ச்சிக் கொப்பளிப்பை வெளியிட்டார்கள். எனவே வெள்ளைத் தோல் போர்த்திய ஏமாற்றுக்காரர்களை சிறிலங்…

  23. வெள்ளி 04-08௨006 19:22 மணி தமிழீழம் [நிலவன்] மனிதபிமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு புலிகள் இன்று மோதல் தவிர்ப்பு. இடம் பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகள் இன்று மோதல் தவிர்பை மேற்கொண்டனர். புலிகள் தாக்குதல்களை நிறுத்தி வைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி படையினர் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூதூர் பகுதிகளை நோக்கி தாக்குதலைத் தொடுத்தனர் இத்தாக்குதல் புலிகளால் முறியடிக்கப்பட்டது இதனை அடுத்து கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை அடுத்து விடுதலைப்புலிகள் படையினரை நோக்கி மட்டுப் படுத்தப்பட்ட அளவில் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். நன்றி-பதிவு

    • 2 replies
    • 1.4k views
  24. செஞ்சிலுவைச் சங்க வாகனத்தொடரணி மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்,நிவாரணங்களை எடுத்துச் செல்வதில் முட்டுக்கட்டை. விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டிருக்கும் மூதூர் பகுதிக்கு உடனடி நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்துள்ளதையடுத்து, உணவுப் பொருட்களுடன் மூதூர் நோக்கி பயணித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத் தொடரணி சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.மூதூருக்குள

  25. வெள்ளி 04-08௨006 18:44 மணி தமிழீழம் [சிறீதரன்] வட முனையில் பாரிய தாக்குதல் தொடங்க சிறிலங்கா படையினர் முன் ஏற்பாடு. மூதூரில் நடைபெற்றுவரும் தாக்குதலில் இருந்து விடுதலைப் புலிகளை திசைதிருப்பும் நோக்குடன் யாழ் கிளாலி நாகர் கோவில் படைதளங்களில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பாரிய படை எடுப்புகளை மேற் கொள்ளும் நோக்குடன் சிறிலங்கா படையினர் யுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள நோக்கி பாரிய யுத்ததளபாடங்கள் நகர்த்தப்படுவதுடன் பெருமளவு படையினரும் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி - பதிவு

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.