ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142720 topics in this forum
-
இதுவரையில்... தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு! கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு- தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232521
-
- 0 replies
- 287 views
-
-
ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் உலகிலேயே மெக்சிக்கோவுக்கு அடுத்தபடியாக இலங்கையிலேயே நடைபெறுகின்றது என 26 ஆவது அனைத்துலக காணாமல் போனோர் நாளான இன்று சனிக்கிழமை எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர்களைத் தேடும் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முக்கிய பணியாகக் கொண்டு காணாமல்போன ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. ஊடகவியலாளர்கள் அரச முகவர்களாலோ உள்ளூர் குற்றவாளிகளாலோ கடத்தப்பட்டாலும் அவர்கள் அனைவரும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்பதையே அச்செயல்கள் காட்டுகின்றன. ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கு அவர்கள் கொடூரமான …
-
- 0 replies
- 326 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுக்கு தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு ஆண்டகை சகலருக்கும் அழ…
-
- 1 reply
- 321 views
-
-
விடுதலைப்புலிகளின் உதவியுடனேயே 2005இல் அரசாங்கம் ஆட்சி அமைத்தது: ஐ.தே.க 12 செப்டம்பர் 2013 ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் என்பது வெறும் வார்த்தையல்ல அடுத்த ஆண்டில் அரசாங்கத்தினை அமைப்பதற்கான ஒரு ஆரம்பமாகவே இம்முறை மாகாண சபைத் தேர்தல்கள் அமையப் போகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். வடக்கில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக்கட்சி முயல்கின்றதென அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால் கடந்த தேர்தலில் புலிகளின் உதவியோடே அரசாங்கம் ஆட்சி அமைத்தது என்பதையும் மறந்து விடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வரப்போவதில்லை; இந்திய ஆசிரிய பயிற்சியாளர்கள் பற்றியே கலந்துரையாடுகிறோம் அமைச்சர் மனோ இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள், மலை யக பாடசாலைகளுக்கு தருவிக்கப்பட போவ தில்லை. மலையக பாடசாலைகளில் விஞ்ஞான,கணித பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, நமது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதை, தமிழ் முற்போக்கு கூட்டணி கவனத்தில் எடுத்து உள்ளது. எனவே, கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, சிறப்பு தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைத்து அங்கே, இந்திய பயிற்சியாளர்களையே, பிரதமர் நரேந்திர மோடியிடம் நாம் வழங்கிய கோரி…
-
- 0 replies
- 179 views
-
-
ஹிஷாலினி உயிரிழப்பு – 5ஆவது சந்தேக நபராக, ரிஷாட் பதியுதீன் பெயரிடப் பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனி…
-
- 0 replies
- 539 views
-
-
சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல் உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. குறித்த நபரை சிறிலங்காவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. http:…
-
- 0 replies
- 814 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 17/09/2009, 11:51 போருக்குப் பின்னரான நிலைமைகளைப் பார்வையிட லின் பொஸ்கோ வவுனியா செல்கிறார் இலங்கைக்குச் சென்றடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பொஸ்கோ இன்று வியாழக்கிழமை வவவுனியாவுக்கு சென்ற தடுப்பு முகாங்களில் உள்ள ஏதிலிகளின் நிலைமைகளைப் பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரு நாட்கள் தங்கியிருக்கும் லின் பொஸ்கோ இலங்கையில் போருக்குப் பின்னராக நிலவும் சூழல், தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களை மீளக் குடிமயர்த்தல், போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி விவாதிப்பார் எனத் ஐக்கிய நாடுகள் சபையின் செய…
-
- 0 replies
- 564 views
-
-
வடமாகாண தேசியப் பட்டியல் ஆசனம் அடுத்ததாக எமக்கே – புளொட்! வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறையிலான தேசிய பட்டியல் ஆசனம் அடுத்ததாக தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்புக்கே கிடைக்கவேண்டுமென அந்தஅமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அவற்றுள் ஒன்று முஸ்லிம் இனத்தவர்களுக்கு என்ற ரீதியில் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விடயம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் இணைந்து எடுக்கப்பட்டது. அதற்கமைய, முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீல…
-
- 0 replies
- 304 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் பத்மநாபா பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, அகதிகள் நிவாரணம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததென கட்சியின் தலைவர் ஆர்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கட்சிகளின் தனித்துத்தைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒரே கூட்டணியாக சகல கட்சிகளும் இணைந்து கொள்ளவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சி கொள்கைகளுக…
-
- 4 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் யுவதிஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது தமிழர்களின் கலாச்சாரத்தை சிரழிக்கும் வகையில் படையினரும் படைபுலனாய்வாளர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் காவல்துறையினரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது.. மாங்குளம் காவல்துறையினரும் படை புலனாய்வாளர்களும் சேர்ந்து இயங்குகின்ற கூட்டு நடவடிக்கை மூலம் தமிழர்களுடைய கலாசாரங்களுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு சில தமிழ் …
-
- 0 replies
- 711 views
-
-
எம்.நியூட்டன் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியில் , உள்ள வீடொன்றில் மதுபோதையில் இளைஞர், தாய் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தி, அட்டகாசம் புரிந்துள்ளார். அது தொடர்பில் அயலவர்கள் அவசர பொலிஸ் பிரிவு மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். இதன் போது, குறித்த இளைஞன் வீட்டில் இருந்த வாள் ஒன்றை தூக்கி பொலிஸார் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். அதனை அட…
-
- 0 replies
- 305 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் அமர்வுகளில் பங்கேற்பதனை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியா அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குர்ஷித் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை எட்டும் நோக்கிலான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்…
-
- 6 replies
- 680 views
-
-
பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமை…
-
- 12 replies
- 914 views
- 1 follower
-
-
இலண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தமக்கு எதிராக பிரித்தானிய அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் வெற்றி அடைந்துள்ளது.இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் கோவில் மற்றும் சிவயோகம் நம்பிக்கை நிதியமும் அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களும் விடுதலைப்புலிகளுக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் நிதி உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரித்தானிய அறக்கட்டளையினரால் அந்த அமிப்பிற்கும் அறப்பணிகளில் ஈடுபட மட்டுப்படுத்தப்பட்டதுடன். அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களை சிவயோகம் நிறுவனத்தில் இருந்தும் கடந்த ஆண்டு நீக்கியது. இந்த பிரித்தானிய அறக்கட்டளையினரின் தீர்ப்புக்கு எதிராக சீவரட்னம் அவர்கள் மேன் முறையீடு செய்தார் இந்த மேன் முறையீட்டு வழக்கு கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றது. இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
அயல்நாட்டின் உறுதிப்பாட்டை... இந்தியா உயர்மட்டத்தில் எதிர்பார்ப்பதாக, இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார். தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள்…
-
- 0 replies
- 168 views
-
-
யுத்தம் முடிவடைந்திருந்த போதிலும் ஜனாதிபதி வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்திலும், மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்திலும், நீர்கொழும்பு முதல் கொழும்பு வரையிலான கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட மீனவர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மீனவச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கரையோரப் பிரதேசங்களிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். இந்தத் தடைகள் திடீரென அவசர அவசரமாக பின்னிரவு 1 மணி, அதிகாலை 2 மணியளவில் அறிவிக்கப்படுவதாகவும் குறுகிய காலப்பகுதியில் அனைத்து மீனவர்களுக்கும் இதனைத் தெரியப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள்…
-
- 1 reply
- 738 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் - IUSF 21 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் மாதத்தில் போராட்;டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலவச கல்வி முறைமை நிதி ஒதுக்கீட்டு குறைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சலுகைகள் வழங்குதல், மாணவர் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற காரணிகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் எதிர்வரும் மாதத்தில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்த…
-
- 0 replies
- 476 views
-
-
யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளுக்கோ சிவில் நிருவாகிகளுக்கோ மக்களைச் சரியாக வழி நடத்த தெரியவில்லை: இராணுவமே அவசியம் ; புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் எனது நல்ல நண்பர். அவர் முன்வைக்கும் காரணிகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாகும். அவர் அரசியல் மேடைகளில் பொது மக்கள் முன்னிலையில் முன்வைக்கும் காரணிகள் குறித்து நாங்கள் குழப்பமடைந்ததில்லை. இனியும் குழப்பமடையப் போவதுமில்லை என புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அரசியல்வாதிகளுக்கோ, சிவில் நிருவாகத்தினருக்கோ மக்…
-
- 1 reply
- 309 views
-
-
ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 203 பேருக்கு அரச நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு. October 30, 2021 ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ன கருவிற்கு அமைய நாட்டின் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வருமானம் குறைந்த குடும்பங்களை சார்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(30) பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்…
-
- 0 replies
- 131 views
-