Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பெரும்பான்மை மதத் தலைமைப் பிரதிநிதிகள் சந்திப்பு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பெரும்பான்மை மதத் தலைமைப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினர். கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. பெரும்பான்மை மதத் தலைமைப் பிரதிநிதிகள் குழுவுக்கு மைக்கல் டீ வாஸ் தலைமை வகித்தார். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களைத் தொடங்கி பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். மதத் தலைமைப் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றுப் பேசிய சு.ப.தமிழ்ச்செல்வன், அமைதி முயற்சிகளுக்காக அவர்கள் முன்முயற்சிகளை …

  2. 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர் [புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர். மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசாங்…

  3. சந்திரிகா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை மட்டும் 20 இலட்சம் ரூபா ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதிப் பதவி யிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் அவர் தொடர்¬பான எனது அனுபவங்களைத் தொகுத்து நூல் ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் 1999 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நேரத்தில் உதயமாயிற்று. அந்த நூலை எழுதுவதற்காகப் பெரு¬மளவிலான நேரத்தைச் செலவிட்டதுடன், நான் எதிர்பார்த்தபடி அந்தநூலின் 90 சதவீதமான வேலை¬கள் முடிவடைந்தன. அவ்வாறு தொகுக்கப்பட்ட விவரங்கள் 500 இற்கும் குறையாத தாள்களில் தட்டச்சிடப்பட்டன.ஆனால், எஞ்சியுள்ள 10 சதவீதப் பணிகளை ஏதோ காரணங்களால் என்னால் செய்துமுடிக்க முடியவில்லை. சந்திரிகா பற்றிய நூல் தொடர்பாக 90சதவீதப் பணிகள் முடிவுற்றிருந்த வேளையிலேயே பிரதம¬ நீதியரசர் குறி…

    • 0 replies
    • 911 views
  4. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டு அதனுடைய, நிதிமூலங்களான தொண்டர் அமைப்புகள் சர்வதேசம் எங்கும் முடக்கப்பட்டமையும் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே ஹமாஸ் இயக்கம் தான் இன்று பலஸ்தீன அரசை பொறுப்பேற்கிறது. உலகம் இவர்கள் மீதான தடையை என்ன செய்யப்போகின்றது? கா.வே.பாலகுமாரன் உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை அரசியல் அரங்கம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. ப…

    • 0 replies
    • 1.1k views
  5. முன்னாள் ரெலோ பொபி பிரிவின் தலைவர் பொபி மரணம். ரொலோ அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான பொபி காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 85, 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொலோ அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டவேளை தாஸ் (தாஸன்)தலைமையிலான குழுவும், பொபி தலைமையிலான குழுவுமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வாழ்ந்துவந்த பொபி சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரைச்சேர்ந்த பொபி, 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரொலோ இயக்கத்தில் இணைந்து, சாவகச்சேரி தாக்குதல் உற்பட பல்வேறு பட்ட தாக்குதல்களிலும் முன்னின்று செயற்பட்டவராவார். 85 ஆம் அண்டுகாலப்பகுதியில் எற்பட்ட பிளவுகளை அடுத்து ரொலோ அமைப்பின் இராணுவத்துறை தலைவராக இருந்த தாஸ் உற்பட அவரது கு…

    • 3 replies
    • 2.1k views
  6. திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர…

  7. விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் குழு சந்திப்பு [சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:21 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம்கள் குழு இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. மூதூரில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடந்தது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரது நடமாட்டம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பினர் சுட்டிக்காட்டினர். இந்த ஆயுதக் குழுவினரது செயற்பாட்டினால் தமிழ் மற்று…

  8. புலிகளுடனான சந்திப்பை உலக நிதி நிறுவனங்கள் ஒத்திப்போட்டன சுனாமி மற்றும் மோதலுக்கு பின்னரான மீள்கட்டமைப்புப் பணிகள் எதிர்நோக்கும் தடைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமுகமாக, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனுடன் தாம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன ஒத்திப்போட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றுடனான கலந்தாலோசனையை அடுத்து கிளிநொச்சிக்கான இந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்த மாதம் பிற்பகுதியில் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர…

  9. ஜெனீவாவில் பெப்ரவரி 22-இல் பேச்சு: நோர்வே அறிவிப்பு [திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2006, 22:58 ஈழம்] [ம.சேரமான்] ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே பெப்ரவரி 22ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23ஆகிய நாள்களில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன. ஜெனிவா பேச்சுக்களுக்கு நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருக்க சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு பெ…

    • 0 replies
    • 1.1k views
  10. புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனம் கண்டனம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமைக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனமான 'போரட்' கண்டனம் தெரிவித்துள்ளது. போரட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் கடத்தப்பட்டமைக்கு போரட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. கடத்தப்பட்டோரில் 5 பேர் கிளிநொச்சியில் போரட் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தவர்கள். இதுவரை விடுவிக்கப்படாத அனைவரையும் உடனே விடுவிக்குமாறு போரட் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. இந்தக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சிறிலங்கா காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும். …

    • 0 replies
    • 964 views
  11. ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை ஜெனீவா பேச்சுகளுக்கு புதிய வடிவில் தடைபோடப்படுகிறதா? இந்தப் பேச்சுகளுக்கு முன்னர், பேச்சுக்கான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலும், மோதல்களுக்கான புறச்சூழலே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கருணா குழுவென்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின்னாலும் அரசும், இராணுவமுமே இருப்பதாக தமிழ்த் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், அரசும் இராணுவமும் இவற்றை மறுத்தாலும் கிழக்கில் நடைபெற்றுவரும் ஒவ்வொரு நிகழ்வும், அரசும் படையினரும் கூறுவது பொய்யென்றே உணர்த்துகின்றன. எவ்வேளையிலும் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கலாமென்ற சூழ்நிலையில் நோர்வேயின் தலையீட்டால் பேச்சுகளுக்குச் செல…

  12. ஜெனீவாவில் முடிவெடுக்கக் கூடாது: மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்டளை! அதிர்ச்சியில் சுதந்திரக் கட்சி!! [ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2006, 18:42 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் பேச்சு நடத்த மகிந்தவுக்கு ஜே.வி.பி.அனுமதி அளித்ததற்கு விலையாக கொடுக்கப்பட்டிருப்பது 'சுதந்திரக் கட்சியின் அழிவு' என்று அக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரச தலைவர் தேர்தலின்போது இனப்பிரச்சனையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச. ஆசிய நாடு ஒன்றில் பேச்சு என்றும் நோர்வேயை மத்தியஸ்தராக அனுமதிக்கக் கூடாது என்றும் ஒற்றையாட்சிதான் தீர்வு என்றும் முழங்கிய மகிந்த ராஜபக்சவுக்கு சர…

  13. போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: தமிழகத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை இலங்கை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ வார ஏடான 'புரட்சி பெரியார் முழக்கம்' இல் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்த இதழின் ஆசிரியரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: சர்வதேச நாடுகளும்இ ஐ.நா.வும் அங்கீகரித்துள்ள தேசிய சுய நிர்ணய உரிமைக்காக ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தேசத்தைத் தாங்களே நியமித்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அரசியலில் ஜனநாயக அமைப்புகள் வழியாகஇ தொடங்கிய இந்த உரிமைப் போராட்ட…

  14. ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்! [புதன்கிழமை, 25 சனவரி 2006, ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர். இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் …

    • 10 replies
    • 1.9k views
  15. ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை [புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார். நன்றி: புதினம்

    • 6 replies
    • 1.8k views
  16. யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இலங்கை இராணுவத்திலும் பார்க்க மிகவும் மோசமான நடவடிக்கையில் நோயாளர்களுடன் நடந்து கொண்டுள்ளார் 4 ம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றும் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் அதிகாலை 2.45 மணியளவில் தனது பணம் மூவாயிரம் ரூபா களவு போய்விட்டதாகக் கூறி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நோயாளர்கள் உட்பட நோயாளர்களபை; பார்வையிட நின்றவர்களையும் உடல் பரிசோதனை உட்பட அவர்களுடைய மேசைகளின் லாச்சிகள் என பலவற்றையும் சோதனை செய்துளார். இதே நேரம் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் திடீரென இத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றா…

    • 0 replies
    • 999 views
  17. வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நிற்கும் இராணுவத்தினர் தமது துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு அதனை விடயம் தெரியாமல் எடுக்கும் இளைஞர்கள் மாணவர்களை விரட்டி வருகின்றார்கள். குறிப்பாக பலாலி வீதி மற்றும் காங்கேசன் துறை வீதிப் பகுதிகளில் இத்தகைய செயல்கள் இடம் பெற்று வருகின்றன.இராணுவத்தினர் நிற்கும் நிலைகளுக்கு அண்மையாக துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள். வீதியில் அநாதரவாக குறிப்பிட்ட ரவை கிடக்கின்றது என எண்ணி அதனைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் யாராவது எடுத்தால் அதனை அவர் வைத்திருந்ததாகக் கூறி விரட்டி வருகின்ற நிலமை காணப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரும் கவனத்துடன் வீதிகளில் செல்ல வேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள் …

  18. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்…

    • 4 replies
    • 1.6k views
  19. மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: தப்பி வந்த சிறுவன் கூறுகிறான் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொலை செய்தது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் கும்பல்தான் என ஒட்டுப்படையிலிருந்து விடுதுலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவன் தெரிவித்துள்ளான். கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவனான செந்தில்நாதன் அருள்ராஜ் என்பவனே இந்தத் தகவலைத் தெரிவித்தான். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த மார்க்கன் தலைமையிலான ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. தன்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் மார்க்கனின் இடத்தில் நிற்கிறவர்கள் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டுப்போட்டார்கள் என ஒட்டுக்குழுவைச் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்…

    • 0 replies
    • 1.2k views
  20. விசுவடுமடு பகுதியில் பல இடங்களில் கடும் புயல் வீடுகள் சேதம். விசுவமடுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பரவலாக கடும் புயல் வீசிசயது இதனால் மக்கள் குடியிருப்புக்களையும் வீடுகளையும் புயல் அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது. தகவல்: பதிவு புள்ளி கோம் படங்கள்: pathivu.com

  21. விடுதலைப்புலிகள் - தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு- முக்கிய விடயங்கள் ஆராய்வு! தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விடுதலைப் புலிகளினை சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடினர். விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்துPவு, வவுனியா, மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்கள், சமாதான செயலகத்தை சேர்ந்த இளந்திரையன், ஆகியோர் விடுதலைப்புலிகள் தரப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் சி…

  22. குண்டுப் புரளி பரபரப்பின் மத்தியில் தமிழ்க்கூட்டமைப்பு - டக்ளஸ் சண்டை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் சபை சிறிதுநேரம் அமளிதுமளிப்பட்டது. குண்டுப் புரளியினால் சபை ஒத்திவைக்கப்பட்டதனால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த தமிழ்க் கட்சிகள் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்குமுள்ளாகின. இந்நிலையில் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கூட்டமைப்பினை ஏளனம் செய்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்க் கூட்டமைப்பின் கஜேந்திரன், ஈழவேந்தன், ரவிராஜ் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்…

  23. கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது கிளிநொச்சி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தடி கண்ணில் தாக்கியதால் இடது கண்பார்வை இழந்த சிறுவனுக்கு அவசர சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நாலாம் வாய்க்கால் மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய அருளம்பலம் நிரோஜன் என்ற சிறுவனே இடதுகண் பார்வையை இழந்துள்ளார். இடது கண் பார்வையின்மையால் வலது கண்ணும் இரவில் சிறுவனுக்குத் தெரியாமலுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு இரண்டு இலட்சம் ரூபா உடனடியாக தேவைப்படுகிறது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கான நிதியைத் திரட்டும் பணியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு உதவி…

    • 4 replies
    • 1.8k views
  24. யாழ் கொதிக்கின்றது யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மொத்தம் 7 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 4 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். சாவகச்சேரியில் பிற்பகலிலும் மாலையிலும் முதலில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பின்னர் தம்புத்தோட்டம் சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த மீசாலை மற்றும் அல்லாரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வலிகாமம் குப்பிலான் சந்தியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறிலங்கா இராணுவ வீரர் படுகாயமடைந்தார். யாழ்ப்பாணம் நகரத்தில் ப்ரவுன் சாலை-அரசடி சாலை சந்திப்பில் இந்து மகளில் கல்லுரிக்கு அண்மித்த பகுதியில் சிறிலங்கா இராண…

    • 19 replies
    • 3.9k views
  25. ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்ய நேரிடும்: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை! [சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2006, 01:04 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் நிலைமைகள் மோசமைடைந்தால் ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்க நேரிடும் என்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அசோசியேட்டெட் பிரஸ_க்கு தயா மோகன் அளித்த நேர்காணல்: அமைதிப் பேச்சுக்களில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினர் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களுடன் இணைந்து மறைமுக செயற்பாட்டில் இறங்கி உள்ளனர். ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்ட பின்னர் சிறிலங்கா காவல்துறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.