Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீனாவிடம் இருந்து இலங்கைக்கு டீசல் அன்பளிப்பு 01 NOV, 2022 | 09:47 PM இம்மாத இறுதியில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு டீசல் கிடைக்கும் என தான் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை (1) தெரிவித்தார். அபுதாபியில் தற்போது நடைபெறும் தொழில்துறை மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கைக்கான சீனாவின் டீசல் விநியோகம் தொடர்பில் இந்த தகவலை வெளியிட்டார். இந்நிலையில், இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்து…

  2. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் ! யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த வீதியை சிரமதானம் செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்தை தொடர்ந்து, இராணுவத்தினர் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர். எனினும் சில மணி …

    • 8 replies
    • 883 views
  3. நாளைய ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை By RAJEEBAN 01 NOV, 2022 | 03:58 PM நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து இலங்கையின் பல வர்த்தக சம்மேளனங்கள் கரிசனை வெளியிட்டுள்ளன. பேச்சு சுதந்திரம் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமைகளை அங்கீகரிக்கும் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஆர்ப்பாட்டங்களை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம் என வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன. இந்த தருணத்தில் இடம்பெறும் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை …

  4. குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறப்பு By DIGITAL DESK 5 01 NOV, 2022 | 12:03 PM தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புலத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/138839

  5. ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்குகள் நிராகரிப்பு By T. SARANYA 01 NOV, 2022 | 01:57 PM முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை நிராகரித்து, பிரதிவாதிகளை விடுவிக்குமாறுகோரி பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதா…

  6. எல்ல பகுதியில் மின்னல் தாக்கம் ; ஒருவர் காயம் ; இரண்டு வீடுகள் சேதம் By T. SARANYA 01 NOV, 2022 | 04:36 PM (க.கிஷாந்தன்) பண்டாரவளை - எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (31) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, வீட்டின் சுவர்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. …

  7. விலைகுறையும் என்ற எதிர்பார்ப்பு தட்டுப்பாட்டிற்கு காரணம் லிட்ரோ தெரிவிப்பு 01 NOV, 2022 | 04:41 PM எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் தற்போது மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை தங்களிற்கு விநியோகஸ்தர்களிடமிருந்து போதியளவு எரிவாயு கிடைக்கவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் இந்த வாரம் விலை குறைப்பு குறித்து எதிர்பார்ப்பு காரணமாக விநியோகஸ்தர்கள் எரிவாயுவை கொள்வனவு செய்ய தயங்குகின்றர் போல தோன்றுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பின் பல வியாபாரிகள் கடந்த இரண்டு வாரகாலமாக தங்களிற்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவ…

  8. டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன் - ஜனாதிபதி By T. SARANYA 01 NOV, 2022 | 11:04 AM போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூ…

  9. யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா! இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுடைய பிறந்த நாள் நேற்று (திங்கட்கிழமை) யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் பட்டேலின் கண்காட்சியை யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவலிங்கராசா திறந்து வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து, ஒற்றுமை மனித சங்கலியும் அதனை தொடர்ந்து ஒற்றுமை ஓட்டம் கலாச்சார மையத்திலிருந்து யாழ் இந்திய துணைத் தூதரகம் வரை இடம்பெற்றது. https://athavannews.com/2022/1308123

  10. 2023ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 7 ஆயிரத்து 885 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 7 ஆ…

    • 2 replies
    • 173 views
  11. கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு நாமலே காரணம் – சன்ன ஜயசுமன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார் என கட்சி எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும் அதன்பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்ததாகவும் …

  12. இலங்கை தன்னை திவாலானதாக அறிவித்து விட்டது. எனினும் நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும். – ஜனாதிபதி நம்பிக்கை ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பனிப்பாறையில் விழுந்த டைட்டானிக் கப்பலை தாம் கையகப்படுத்தியதாகவும் தற்போது கப்பலை பனிப்பாறையில் இருந்து நகர்த்த முயற்சிப்பதாகவும் பனிப்பாறையில் இருந்து டைட்டானிக் கப்பல் நகர்ந்தால் நாடு முன்னேற முடியும் என்றும் அ…

  13. பொம்மைவெளியில் ஹெரோயின் விற்கும் பெண்ணை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு! வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மாத்திரம் இன்றி விநியோகமும் அதிகமாக நடைபெறுகின்றன. யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் உளவள ஆசிரியர்கள் 54பேரே இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகமயப்படுத்தல் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனை போன்றவற்றுக்கு வருவது அதிகரிப்பு. வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு …

  14. போராட்டத்திற்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு! யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நவம்பர் 2ஆம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண…

  15. காணாமல்போனவர்கள் தொடர்பான முறைப்பாடு விசாரணைகள் ஒருசில மாதங்களில் முடிவுக்கு வரும் - நீதி அமைச்சர் By DIGITAL DESK 5 31 OCT, 2022 | 09:12 PM (எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும். அத்துடன் வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். இந்தியாவில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டி…

  16. வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு By VISHNU 31 OCT, 2022 | 05:38 PM வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம். கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக வடகிழக்கில் தொடர்ச…

  17. கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு By VISHNU 31 OCT, 2022 | 05:17 PM கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். அவரது அருகில் பிலேட் ஒன்றும் கையடக்கதொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகைபணமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் மக்களின் உதவியுடன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற…

  18. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல. அவர் வெளிநாட்டவர் – உதய கம்மன்பில சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் வெளிநாட்டவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பதைவிட வெளிநாட்டவர் நாடாளுமன்றத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1307999

  19. ஆகாயத்தில் இருந்து விதைக்குண்டுகளை வீசிய விமானப்படை By NANTHINI 31 OCT, 2022 | 05:10 PM 2030ஆம் ஆண்டில் பசுமை விரிவாக்கத்தை 27% முதல் 32%ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு, சியாம்பலா பிரதேச செயலகத்துக்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப் பிரதேசத்தில் கடந்த 29ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுபெற்றது. வீரவெல இலங்கை விமானப்படை த…

  20. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு By DIGITAL DESK 5 31 OCT, 2022 | 01:48 PM (எம்.வை.எம்.சியாம்) யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு வயதுக் குழந்தையும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைய…

  21. மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் By T. SARANYA 31 OCT, 2022 | 04:52 PM (எம்.வை.எம்.சியாம்) மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக தற்போது சுகாதார துறையில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குனர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இதுவரை காலமும் எமக்கு சிகிச்சை பிரிவுகளில் மருந்து தட்டுப்பாடுகள் மாத்…

  22. குறைகிறது பாணின் விலை By T. SARANYA 31 OCT, 2022 | 03:01 PM 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/138793

  23. எம்.பி.க்களின் இன்சூரன்ஸ் 500% உயர்கிறது அண்மையில் நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்பீட்டை 500 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதியை 500 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரி அமைச்சரவைக்கு முன்மொழிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மருத்துவக் காப்புறுதியின் பெறுமதியை 200,000 ரூபாவிலிருந்து 1 மில்லியனாக அதிகரிக்க அமைச்சரவைக்கு முன்மொழிவு செய்யப்படவுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை காரணமாக அனைத்து மருத்துவச் செலவுகளும் அதிகரித்து…

    • 0 replies
    • 221 views
  24. 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. …

    • 0 replies
    • 319 views
  25. முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த 6 அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடியுள்ளதாகவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நேற்று (30) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தங்களது வேண்டுகோளில், …

    • 0 replies
    • 422 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.