ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணி By DIGITAL DESK 5 15 OCT, 2022 | 02:33 PM (எம்.நியூட்டன்) சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று சனிக்கிழமை ஆரம்பமான பேரணி சுன்னாகம் பெருந்து தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது. வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுர…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயம் By T. SARANYA 15 OCT, 2022 | 01:52 PM முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்தபேருந்தின் மீது டிப்பர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/137707
-
- 2 replies
- 237 views
- 1 follower
-
-
யாழில் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு முன்னெடுப்பு இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1305076
-
- 7 replies
- 806 views
- 1 follower
-
-
தொழில் பெற்றுத்தருவதாக பணமோசடி ; ஆசிரியையொருவர் உட்பட 2 பெண்கள் கைது By T. SARANYA 15 OCT, 2022 | 11:30 AM ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி ஆசிரியையொருவர் உட்பட இரு பெண்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்களின் பேரில் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, இன்று (15) ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல விடம் வினவியபோது, குறிப்பிட்ட ஆசிரியையை இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், மாகாண கல்வி அமைச்சின் மட்டத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுறினார். பதுளைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரிய…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி By T. SARANYA 15 OCT, 2022 | 10:50 AM பட்டா வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (14) மாலை 4 மணியளவில் நாவாந்துறை சூரியவெளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் வாகனத்தில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த சகாயதாசன் பவா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கடலுணவு நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா வாகனத்தின் சாரதி விபத்தையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவாகினார். வாகனத்தை அங்கிருந்து எடுக்க சிலர் முற்பட்டதனால் பதற்றநிலை ஏற்பட்டத…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
மென் பொருள் ஊடான 1,500 கோடி ரூபா பண மோசடி : சீன தம்பதியினர் கைது By T. SARANYA 15 OCT, 2022 | 11:56 AM (எம்.எப்.எம்.பஸீர்) 'ஸ்போர்ட்ஸ் சைன்' எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் 1,500 கோடி ரூபா வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் சீன தம்பதியினர், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் அவர்களைக் கைது செய்து நேற்று முன்தினம் ( 13) கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் ஆஜர் செய்த போது அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து 100 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம் http://www.samakalam.com/wp-content/uploads/2022/10/beach-view.jpg வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செ…
-
- 4 replies
- 235 views
-
-
திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி அபிவிருத்திகளை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் இனியொரு போதும் எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது : ஜனாதிபதி By T. Saranya 15 Oct, 2022 | 10:14 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி அபிவிருத்தி ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியத்துவமுடையதாகும். 2003 இல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. எனவே இனியொரு போதும் இத்திட்டம் குறித்த எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது என்…
-
- 0 replies
- 160 views
-
-
விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் …
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி ! உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார். https://athavannew…
-
- 6 replies
- 304 views
-
-
இலங்கைக்கான சீன தூதுவருக்கும்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாகவும் இலங்கைக்கான சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அத்துடன் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை வெற்றிக் கொள்வதற்கு சீனா உதவிகளை வழங்குவதோடு சீன சுற்றுலா …
-
- 0 replies
- 249 views
-
-
வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்தும் சீனா , தமிழர்கள் பகடைக்காய் – சிறீதரன் சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நோக்கத்தை அடைய ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த சீனா நினைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்கு ஒருபோதும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என்றும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இ…
-
- 0 replies
- 215 views
-
-
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பினூடாக அரசியல் இலாபம் தேடுகின்றார் ரணில் – வாசுதேவ குற்றச்சாட்டு ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை காட்டி அதனூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவர் முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்தோம் என வாசுதேவ நாணயக்கார சுட்ட…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கபடவுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகின்றது. இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவட…
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி - செஞ்சிலுவை அதிகாரியின் எச்சரிக்கை என்ன? By RAJEEBAN 14 OCT, 2022 | 05:28 PM இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு கடன்வாங்குதல் குறைந்தளவு உணவை உண்ணுதல் நாளாந்த உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் இலங்கை குறித்த அறிக்கைகள் ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இலங்கையின் நலிவடைந்த மக்கள் எவ்வாறு விரக்தி நிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர் என்பதை நேரடியாக தெரிவிக்கும்…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
வடக்கில் கடலட்டை பண்ணைகளுக்கு பங்களிக்க இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம்! இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஒலைத்தொடுவாயில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் இன்று நடைபெற்றது. வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் மற்றும், கலட்டை குஞ்சு பாரமரிக்கும் நிலையங்களை நவீன முறையில் அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்திருந்தனர். இந்நிலைய…
-
- 4 replies
- 459 views
-
-
ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகாதமைக்கான நியாயமான காரணத்தை பாதுகாப்பு தரப்பு முன்வைக்கத் தவறியதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்தத…
-
- 2 replies
- 477 views
-
-
வடக்கு – கிழக்கு தவிர்ந்த நாட்டின் அனைத்து மாட்டங்களிலும் மஹிந்த தலைமையில் கூட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டம் நாவலப்பிட்டி நகரில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தவிர்ந்த நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1304849
-
- 1 reply
- 246 views
-
-
மஹிந்த மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது – லொகான் ரத்வத்த மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினைய…
-
- 0 replies
- 181 views
-
-
திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்க முடியாது - பனைசார் உற்பத்தியாளர்கள் By VISHNU 14 OCT, 2022 | 02:58 PM யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை, ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய, முழுமையான நிதியை தாம் வழங்குவதாகவும், பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 13 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தனர். திக்கம் வடிசாலையை, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்த, அரசியல் காரணங்கள் தடையாக இருந்தமையால், அங்கிருந்த …
-
- 0 replies
- 587 views
- 1 follower
-
-
தோட்ட ஊழியர் மரணம் ; 40 இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்க உறுதி By T. SARANYA 14 OCT, 2022 | 03:07 PM நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று (14) பேச்சுவார்த்தை நடபெற்றது. பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர் மனுச நாணயகார, அமைச்சின் செயலாளர், நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறுவாக இயக்குனர் பிரின்ஸ் குணவர்த்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணத்திற்கு கம்பனி நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்பதுடன்,உயிரிழந்த இளைஞ…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டவருக்கு அச்சுறுத்தல் By VISHNU 14 OCT, 2022 | 03:26 PM கரைச்சி நிருபர் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மராசா என்பவரே சட்டவிரோத மணல் அகழ்வோரால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். கடந்த…
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நாய் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. நாய் உயிரிழப்பு அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்து…
-
- 5 replies
- 458 views
-
-
யாழ். கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் By Vishnu 14 Oct, 2022 | 11:59 AM யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் யாழ்.கோட்டை பகுதியில் இன்று (14) வெள்ளி காலை 7.30 மணியளவில் ஆரம்பித்தது. இதன் மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 561 views
-
-
ஆறு கடற்படையினருடன் படகு மாயம் - போதைப்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தகவல் By RAJEEBAN 14 OCT, 2022 | 08:28 AM ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளையே கடற்படையினர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேள…
-
- 19 replies
- 973 views
- 1 follower
-