ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக... "தேசிய பாதுகாப்பு" தொடர்பான புதிய சட்டம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1295854
-
- 0 replies
- 332 views
-
-
அதிகளவில் உணவு விலைகள் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆம் இடம்! உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளதாக உலக வங்கி மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் உணவுப் பொருட்களில் விலைகள் 200 வீதம் வரையான விலைகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 215 views
-
-
அரசாங்கத்தில் இணைய முடியாது : பாராளுமன்ற குழுக்கள் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பில் சஜித் By T Yuwaraj 23 Aug, 2022 | 06:14 AM (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரச கொள்கையாகப் பயன்படுத்துவதை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிர…
-
- 0 replies
- 280 views
-
-
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியம் - சட்டத்தரணி அம்பிகா 22 Aug, 2022 | 09:18 PM (நா.தனுஜா) பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் 'ஜனநாயகவாதியாக' கருதப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீண்டும் பழைய அடக்குமுறைகளை நடவடிக்கைகளையே பிரயோகிக்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான விடயமாக இருக்கக்கூடும். ஆனால் இதனாலேயே நாம் தனிநபர்களுக்கு அப்பால் செல…
-
- 0 replies
- 208 views
-
-
"பயங்கரவாதத் தடைச் சட்டம்" குறித்து.. பிரித்தானியா கவலை! பயங்கரவாதத் தடைச் சட்டப் பயன்பாடு குறித்த தகவல்கள் தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளிற்கான மதிப்பிற்கு முரணான விடயம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1295794
-
- 1 reply
- 215 views
-
-
"நீல உடை" அணிந்த... யாழ். மாநகரசபை ஊழியர்கள், மீண்டும் பணியில். நல்லூர் மகோற்சவ திருவிழாக்களின் போது, நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நல்லூர் மஹோற்சவம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் தற்போது …
-
- 0 replies
- 255 views
-
-
நாட்டின் ஜனநாயகம்... முற்றாக, அழித்துவிடும் – அமெரிக்கா விசனம். பயங்கரவாதத்தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையாத சட்டங்களைப் பயன்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்தை முற்றாக அழித்துவிடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்திருந்தார். இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகம் குறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 192 views
-
-
உணவு விலையேற்றத்தை சமாளிக்க 'மாற்றி யோசித்த' 5 நாடுகளின் கதைகள் ஸ்டெபானி ஹெகார்டியால் மக்கள்தொகை செய்தியாளர், பிபிசி உலக சேவை 21 ஆகஸ்ட் 2022, 10:30 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BEN GRAY படக்குறிப்பு, டோனா மார்ட்டினின் பள்ளி உணவு - வேர்க்கடலை வெண்ணெய்க்கு (peanut butter) பதிலாக பீன் டிப் உலகெங்கிலும் உணவு விலைகள் அதிகரித்துள்ளன, சில இடங்களில் பற்றாக்குறையும் நிலவுகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் புதிய சூழ்நிலைகளுக்கு மாற வேண்டிய நிலை காணப்படுகிறது.சில சமயங்களில் இது அவர்களின் உணவுப்பழக்கங்களின் மாற்றத்தைக் குறிக்கிறது. …
-
- 8 replies
- 627 views
- 1 follower
-
-
By T. SARANYA தற்போது மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் வாவி மாசடைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக சில இடங்களில் துர்நாற்றமும் வீசுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாவியில் வலைவீசி மீன் பிடிக்க முடியாமலுள்ளதாகவும் இந்தப் “பூங்கறை”யில் ஒரு வித பசைத் தன்மை உள்ளதால் அதில் வலைகள் ஒட்டிக் கொள்வதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். வருடாவருடம் இத்தகைய “பூங்கறை” எனும் பச்சை படர்தல் வாவியின் மேற்பரப்பில் சில நாட்களுக்குப் படர்ந்து பின்னர் இயற்கையாகவே மறைந்து விடுவதாகவும் ஆனால் இந்த வருடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் “பூங்கறை”ப் பச்சைப் பட…
-
- 1 reply
- 919 views
-
-
ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு... ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை! அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தொடரும் அடக்குமுறை குறித்து ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவசரகாலநிலை மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அண்மையில் அறிவித்ததைக் சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார். இவ்வாறான அடக்குமுறையானது ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில் நாட்டை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் நடந…
-
- 1 reply
- 445 views
-
-
By RAJEEBAN ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டதாகவும் காணப்படு;ம் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்க இந்த அலுவலகத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார் மோர்னிங்கிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பிற்கான மத்திய நிலையமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகம் என்பது புலம்பெயர் பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இலங்கை தொடர்பில் அவர்களுடன் ஈடுபாடுகள…
-
- 5 replies
- 746 views
-
-
By VISHNU (எம்.நியூட்டன்) நல்லூர் ஆலய சூழலை சுத்தமாக பேண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லூர் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்க பிரதிஷ்டை செய்யும் வீதி சுத்தமாக இருக்க வேண்டும். பொறுப்பற்ற சிலர் வீதிகளில் உணவு மீதிகளை வீசி செல்கின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , மாலை திருவிழாவிற்கு வரும் சிலர் ஆலய வீதிகளில் தாம் உண்ட உணவுகளின் மீதிகள் , கச்…
-
- 0 replies
- 201 views
-
-
By T. SARANYA இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த 16 பேரிடமும் தமிழக கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தஞ்சம் கோரி சென்றவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் 16 நபர்களில் ஒருவர் கி…
-
- 0 replies
- 231 views
-
-
இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பின் போது இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த இந்திய மீனவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறைக்கு அழைத்து செல்லப்பட்டதோடு அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்…
-
- 0 replies
- 123 views
-
-
இலவசமாக... உணவளிக்க முடியாது : வேலை செய்ய முடியாத, அரச ஊழியர்கள் இருந்தால்... உடனே வெளியேறவும் – ஜனாதிபதி வலியுறுத்தல். கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கோரவில்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு காலதாமதம் செய்யாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் இன்று (…
-
- 3 replies
- 412 views
- 1 follower
-
-
அரசாங்கத்தை, வன்மையாக கண்டித்தார்... கரு ஜயசூரிய ! அரசாங்கத்தின் நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் ஒருமித்த கருத்தை எட்டுவது இன்றியமையாதது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அரசியல் மற்றும் சமூகக் குழுக்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் அத்தகைய ஒருமித்த கருத்துக்கான கதவுகளை மூடிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் புரிந்துணர்வோடு அதனைக் கையாள்வது மிகவும் அவசிய…
-
- 0 replies
- 191 views
-
-
நாட்டின் இந்த நெருக்கடி நிலைக்கு நானும் காரணம்; கோட்டாபய நாட்டை விட்டு சென்றது தவறு – மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல, நானும் முந்தைய அரசாங் கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் முன்னாள் பிரதமர் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது. எனினும், …
-
- 1 reply
- 307 views
-
-
60 அரசியல்வாதிகளுக்கான தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்படும் நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல்வேறு நிலைகளில் உள்ள 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. இந்த அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகும் . அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறியவர்களாவர் . மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய ஓய்வுபெற்ற அமைச்சர்களின் ஓய்வூதியத்தில் இருந்து நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பி…
-
- 4 replies
- 402 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலையில் குட்டையைக் குழப்பும் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார். அவர் ரணிலை ஆதரித்தபோதும் அதன் பின்னரான ரணிலுடனான சந்திப்புக்களின்போதும் “முதல்கட்ட நல்லிணக்கமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தியதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நடாத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். ஆனால் இடையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட கூட்டமைப்பினர் “அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதிய…
-
- 4 replies
- 420 views
-
-
ஐநா அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க கோரிக்கை நியூயோர்க் நகரில் கொவிட் நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், செப்டெம்பர் 20ஆம் திகதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை கட்டுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை தனது 193 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் பொதுவாக இலங்கையில் இருந்து 132 பிரதிநிதிகள்…
-
- 1 reply
- 248 views
-
-
நாட்டின் எதிர்காலத்திற்காக... அனைவரையும் ஒன்றிணைப்பதே, நோக்கம் – ஜனாதிபதி ரணில் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலகில் ஏனைய நாடுகள் சாதனைகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது... நாம், ஒன்றிணையாத காரணத்தினால் பின்னோக்கி செல்வதாக... ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வரலாற்று தவறை சரிசெய்து அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க…
-
- 6 replies
- 699 views
-
-
ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் விடுதலை சிறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதி அமைச்சு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஜனாதிபதி ஆவணங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரணில் விக்…
-
- 1 reply
- 376 views
-
-
இலங்கையின் கடனில் பாதி சீனாவிடமிருந்து: IMF உடன்படிக்கையை பெய்ஜிங்கின் நிலைப்பாடே தீர்மானிக்கும்! இலங்கையின் பெற்று வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவிடமிருந்தே பெறப்பட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு சீனாவின் நிலைப்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 2022, ஆகஸ்ட்டில், நிதி அமைச்சின் கடன் வழங்குநர் பட்டியல் இற்றைப்படுத்தலின்படி, இலங்கையின்…
-
- 0 replies
- 340 views
-
-
விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிமல் ஜி. புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, செப்டம்பர் 20 ஆம் திகதிக்குப் பிறகு தேர்…
-
- 0 replies
- 176 views
-
-
முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்! வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும், சிகப்பு முட்டை 45 ரூபாயாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1295484
-
- 5 replies
- 321 views
-