ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சந்தேக நபர்களை கைது செய்ய... பொதுமக்களின் உதவியினை, நாடிய பொலிஸார்! மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இதற்கமைய, சந்தேக நபர்கள் தொடர்பில் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது. https://athavannews.com/2022/1293620
-
- 0 replies
- 131 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு... முழு வசதியையும், பாதுகாப்பையும்... வழங்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் இலங்கை பிரஜை என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறு…
-
- 8 replies
- 962 views
-
-
இங்கிலாந்திற்கு... விளையாட சென்ற, இரண்டு இலங்கையர்கள் மாயம்! 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பர்மிங்ஹாம் மெடோபொலிடன் பொலிஸார் மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1293382
-
- 12 replies
- 1.2k views
-
-
“கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளி…
-
- 10 replies
- 1.2k views
-
-
நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட் டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீளவும் கொழும்புக்கு ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னர் இரவு தபால் சாதாரண தொடருந்து சேவையாக நடத்தப்பட்ட இந்தச் சேவையில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து வடக்குக்கான சேவையாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை – கல்கிசை இரவுநேர ரயில்சேவை ஆரம்பம் (newuthayan.com)
-
- 2 replies
- 384 views
-
-
கைது வேட்டை தொடர்ந்தால்... பெரும் போராட்டம், வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழ…
-
- 5 replies
- 437 views
-
-
யாழ்ப்பாணம் வல்லை பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - கார் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்லை பாலத்தில் இன்று 04 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் பெய்து வரும் மழை காரணமாக குறித்த பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்பட்டமையால் பாலத்தில் பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய கார் பாலத்தில் இருந்து விழுந்த போதிலும் சாரதி காயங்கள்…
-
- 0 replies
- 269 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100,000 கிலோக்கிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் என்பன இன்று (04) கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100, 000 கிலோக்கிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் கனரக வானனமொன்றில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை இன்று வியாழக்கிழமை பகல் வந்தடைந்துள்ளன. உணவு ஆணையாளர் திணைக்களம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த நிவாரண பொருட்களை மாவட்ட அரசாங்க அதிபர் க.விலநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, பிரதேச செயலகங்களிற்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை…
-
- 0 replies
- 270 views
-
-
கல்கிஸ்ஸ.. நீதிமன்றத்திற்குள், துப்பாக்கி பிரயோகம். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்தும், துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர், நீதிமன்றத்திற்குள் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக…
-
- 1 reply
- 211 views
-
-
எதிர்வரும் 11ஆம் திகதி, மீண்டும்... நாடு திரும்புகின்றார் கோட்டா? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் திரும்புவார் என நம்பப்படுகிறது. நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் தீவ…
-
- 2 replies
- 272 views
-
-
அமைச்சர்களுக்கு இணையான... அதிகாரங்களுடன், தம்மிக்க பெரேராவிற்கு முக்கிய பொறுப்பு? தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காக உருவாக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுத்தல், டொலர்களை ஈட்டுவதற்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற பல பொறுப்புகள் இந்த குழுவிற்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு சமமாக பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின…
-
- 0 replies
- 170 views
-
-
பொருளாதார நெருக்கடி காரணமாக... நாட்டினை விட்டு வெளியேறும், இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையினை விட்டு மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று உயிரினை பணயம் வைத்து படகு மூலம் அவுஸ்ரேலியா மற்றும் இந்தியாவிற்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே தங்களது உயிர்களை பணயம் …
-
- 0 replies
- 287 views
-
-
ஜனாதிபதிக்கும், சீன தூதுவருக்கும்... இடையில் சந்திப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த சீனத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். ”ஒரு சீனா கொள்கை” தொடர்பில் இலங்கையின் கடைபிடிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தினார். “தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் ஆ…
-
- 0 replies
- 180 views
-
-
போலியான QR குறியீடுகளை பயன் படுத்துவோருக்கு, எதிராக... கடும் நடவடிக்கை. எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகமையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் டொலர்கள் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்…
-
- 0 replies
- 473 views
-
-
டீசல் கப்பலுக்கான... கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர். டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் ஜெட் எரிபொருள் கப்பல் 12 மற்றும் 14 ஆம் திகதிக்கு இடையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://…
-
- 4 replies
- 335 views
- 1 follower
-
-
நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வ கட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் அழைப்புக்கு இணங்க அவரைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுகவீனம் காரணமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, தவராசா கலையரசன் எம்.பியும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலு…
-
- 9 replies
- 612 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலுக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்ப்பார்துள்ளதாக இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை தொடர நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் எதிர்கால ஜனாதிபதி வகிபாகம் மற்றும் உங்கள் நாடு மற்றும் மக்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு எனது நல…
-
- 0 replies
- 297 views
-
-
நகர அபிவிருத்தி அதிகார சபையினரால்... வடக்கில், விசேட பொதுமக்கள் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நகர விருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் நடமாடும் சேவை ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிரதி பணிப்பாளர் கவிதா ஜூவகன் தெரிவித்துள்ளார். வடபகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்காக பொதுமக்கள் நடமாடும் சேவையானது இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்த எதிர்வ…
-
- 0 replies
- 243 views
-
-
எரிபொருள் உள்ளிட்டவற்றை... அத்தியாவசிய சேவைகளாக, பெயரிட்டு... அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் விநியோக சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் மற்றும் அது சார்ந்த பிரிவுகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டு குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப…
-
- 0 replies
- 183 views
-
-
ஒமிக்ரொன் திரிபுடன்... அடையாளம் காணப்படும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! நாட்டில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1293488
-
- 0 replies
- 171 views
-
-
(நமது நிருபர்) பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். பலாலிக்கு விஜயம் செய்திருந்த அவர் விமான நிலையத்தின் சூழலை களஆய்வு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயற்றிட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பலாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் வடிகால்கள், வாகனத் தரிப்பிடங்கள், ஓய்வுப்பகுதிகள், நடைபாதைகள், மருத்துவமனை வசதிகள், சூரியசக்தி மின்சார ஒளிவிளக்குள் உள…
-
- 6 replies
- 599 views
-
-
நாடாளுமன்ற அமர்வினை.. இன்று, ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி! அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் நாடாளுமன்ற படைக்கல சேவ…
-
- 6 replies
- 807 views
-
-
மக்கள் போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் கொழும்பில் அச்ச நிலை ( எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் அச்ச நிலை உருவாகியுள்ளது. கொழும்பு நகரில் காலி முகத்திடலை மையப்படுத்தி பாரிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் அடக்கு முறைமை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பரவாலக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான பின்னணியில், வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கரை ஒதுங்கிய சடலங்கள் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதி வெள்ளவத்தை …
-
- 12 replies
- 823 views
-
-
போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு: விசாரணை ஆரம்பம்! கொழும்பு காலிமுகத்திடலில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருக்கு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளொன்றுக்கு 600 வரையிலான உணவுப் பொதிகள் அந்த ஹோட்டல் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை இலவசமாக வழங்கப்பட்டனவா அல்லது ஏதேனும் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www…
-
- 2 replies
- 447 views
-
-
சரியான முறையில்... இலங்கைக்கு பணம் அனுப்பினால், மேலும் 02 நன்மைகள் – மனுஷ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சட்டப்பூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரு யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் யோசனைகளுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ள பணத்தின் அடிப்படையில் புதிய கடமையற்ற கொடுப்பனவை அறிமுகப்படுத்துவது ஒரு ஆலோசனையாகும். புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையர்களால் சட்டரீதியாக அனுப்பப்படும் பணத்தின் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அ…
-
- 1 reply
- 261 views
-