ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை 06 Sep, 2025 | 05:19 PM மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை (04) தீர்ப்பளித்தார். குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்க…
-
- 0 replies
- 142 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையின் ஆணையளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடு…
-
- 0 replies
- 90 views
-
-
Published By: Vishnu 05 Sep, 2025 | 07:25 PM செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது வியாழக்கிழமை (4) குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதியே இருந்த நிலையில் காணப்படுகிறது. செம்மணியில் இதுவரையில், கட்டம் கட்டமாக 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. …
-
-
- 3 replies
- 317 views
- 2 followers
-
-
Published By: RAJEEBAN 16 JUL, 2024 | 12:27 PM நான் அரசியலில் இருக்கும்வரை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தேர்தல்களில் தலையீடுகள் வன்முறைகள் குறித்த இலங்கையின் வரலாற்றை கருத்தில்கொள்ளும்போது இந்த அறிக்கையில் ஆபத்தான தொனி தென்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதை தடுப்பதற்கான உரிமை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொ…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae
-
-
- 22 replies
- 1.2k views
- 2 followers
-
-
செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு சனி, 06 செப்டம்பர் 2025 11:13 AM செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் - 1 மற்றும் அகழ்வாய்வு தளம் - 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது அகழ்வாய்த்தளம் - 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்ற…
-
- 0 replies
- 103 views
-
-
12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு! நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டா…
-
-
- 3 replies
- 137 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்! சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்ப…
-
- 0 replies
- 86 views
-
-
செம்மணி செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்! இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன. மொத்தம…
-
- 14 replies
- 613 views
- 1 follower
-
-
யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம் யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ்…
-
- 0 replies
- 180 views
-
-
17 MAY, 2025 | 11:02 AM யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி…
-
-
- 106 replies
- 4.7k views
- 3 followers
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை! விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதன்படி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பின்வரும் கேள்விகள் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டன? இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன? இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்…
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை! adminSeptember 6, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லி…
-
- 0 replies
- 69 views
-
-
05 Sep, 2025 | 03:30 PM (எம்.மனோசித்ரா) 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீ…
-
- 0 replies
- 75 views
- 1 follower
-
-
சந்நிதியான் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் பகல் கொள்ளை! 05 Sep, 2025 | 05:32 PM தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருவதோடு இன்று மாலை சப்பறத் திருவிழாவும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் நிலையில் தொண்டமனாறு தண்ணீர் தாங்கி அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை பாதுகாப்பதற்கு 50 ரூபாய் அறவிடப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கட்டணம் அதிகம் தொடர்பில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலைய ஊழியரிடம் வினவிய போது அவர் வல்வெட்டித்துறை நகரசபையினர் தான் 50 ரூபாய் அறவிட சொன்னதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம…
-
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
05 Sep, 2025 | 05:27 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர். மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை கோபுரங்களும்,தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2 காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது. குறித்த 5 காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின் கோபுரங்களும்,பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.குறித்த 8 காற்றாலை மின் கோபுரங்க…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 ஆகும். அதன்படி, அரிசி சந்தைகளில் 2,800 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பான 915 சோதனைகளும் அடங்கும். இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பது நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாவதுடன், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம்…
-
- 0 replies
- 74 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய…
-
-
- 17 replies
- 953 views
- 1 follower
-
-
05 Sep, 2025 | 02:39 PM மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, வருடந்தோறும் நன்நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோகிராம் வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் ம…
-
- 0 replies
- 101 views
-
-
05 Sep, 2025 | 04:41 PM கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளையில் இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (5) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் நடத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக க…
-
- 0 replies
- 130 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு adminJuly 20, 2025 சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும், அதற்கு நீதி கோரிய போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதன் போது, எட்டு மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நடுவதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காக குறித்த விடுதலை விருட்சம் நா…
-
- 4 replies
- 180 views
- 1 follower
-
-
05 Sep, 2025 | 02:06 PM கிளிநொச்சி ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வெள்ளிக்கிழமை (05) திடீரெனதீப்பற்றி எரிந்ததுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிஸார், தீயை அணைத்த பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒர…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
05 Sep, 2025 | 11:33 AM திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளிக்கிழமை (05) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இது எமது வைத்தியசாலை வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும், சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். களங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும், நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திரசிகிச்சைக்கூடம் இயக்கப்பட வேண்டும், எலும்பு முறிவுக்காக தனியான தனியான களம் வேண்டும், ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது,…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுசேர்க்கும் முகமாகப் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் நேற்றையதினம், காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரி…
-
- 0 replies
- 74 views
-
-
51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார் இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இத…
-
- 0 replies
- 110 views
-