ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் , யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டது. யாழ். மாநகர சுகாதாரத்தை மேம்படுத்துதல், குப்பைகளை பொது இடங்களில் வீசுவார்கள், பொது இடங்களில் துப்புவார்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தண்டம் விதித்தல், தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டது. குறித்த காவல் படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளின் க…
-
- 1 reply
- 728 views
-
-
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 575 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றைக் கைப்பற்றியதோடு 02 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நாட்டைச் சூழவுள்ள கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு கடற்படை எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்த முயற்சிகளின் பயனாக, நேற்று இரவு பழைய கசுவாரினா கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையானது, வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் கடலோர ரோந்துக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டன. இதன்போது கடலில் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்து 17 பொதிகளில் சுமார் 575…
-
- 1 reply
- 244 views
-
-
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களாக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் சேவைகளுக்காக தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தனது வாகனத்தில் இருந்து இறங்கி பாராளுமன்றத்திற்கு வெளியே கடமையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை பாதுகாத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் உழைத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முப்படையினர், …
-
- 1 reply
- 223 views
-
-
(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம் ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார். இனி ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று புதன்கிழமை 20 ஆம் திகதி ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் தோற்றம் பெற்றால…
-
- 11 replies
- 911 views
-
-
ரணில்.. பதவி விலக வேண்டும் என, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்... மீண்டும் கோரிக்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே தமது இரண்டாவது முக்கிய கோரிக்கை என குறிப்பிட்டனர். பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக …
-
- 3 replies
- 349 views
-
-
வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க Digital News Team 2022-07-20T12:41:23 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது . இதில் 223 எம் .பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்கவில்ல…
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவு : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இன்று சபை அமர்வில் கலந்து கொண்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களில் , அகில இலங்கை தமிழ் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரைத் தவிர அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும் , டலஸ் அழகப்பெருமவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக டிலான் பெரேராவும் , அநுரகுமார திஸாநாயக்கவின் …
-
- 3 replies
- 541 views
-
-
இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன், 1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர். 2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையி…
-
- 12 replies
- 819 views
-
-
இலங்கை நெருக்கடி: "அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை" - ஒரு போராட்டக்காரரின் கதை எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு நாட்களைக் கடந்து விட்ட இலங்கையின் காலி முகத்திடல் போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களைக் கேட்கலாம். ஆனால் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் பலரது வேதனைக் குரல்கள் வெளியே அதிகமாகக் கேட்பதில்லை. அப்படியொரு குரல்தான் ரிஃபாஸ் முகமதுவுடையது. "அன்று நான் சாப்ட்வேர் இன்சினீயர், இன்று உள்ளாடை கூட இல்லாமல் நிற்கிறேன்" என்கிறார் அவர். காலி முகத்திடலில் அதிபர் செயலகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் …
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
“எத்தனை பேருக்கு... முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ – பகிரங்க சவால் விடுத்தார் சுமந்திரன்! இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. “என்…
-
- 9 replies
- 836 views
-
-
ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்... ரணிலுக்கு ஆதரவு. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும் இன்றைய வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்க டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யும் முடிவு செய்துள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 176 views
-
-
புதிய ஜனாதிபதியினை... தெரிவு செய்வதற்கான, வாக்கெடுப்பு இன்று! இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. வாக்கு சீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் படமெடுத்தால்... அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை நாடாளுமன்றம் வர தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. டலஸ் அழகப்பெருமவுக்கான... ஆதரவு வலுத்துள்ளது. 10 இற்கு…
-
- 3 replies
- 326 views
-
-
முதலாம் தவணை பரீட்சை... நடத்தப்படாது, என அறிவிப்பு! 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தின…
-
- 0 replies
- 194 views
-
-
இறுதி நிமிட மாற்றங்களால் இவரே ஜனாதிபதியாகும் சூழல்
-
- 1 reply
- 320 views
-
-
கே .குமணன் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது. எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை…
-
- 2 replies
- 318 views
-
-
ஆர்.ராம்) ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை 5.30இற்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது, டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு உள்ள நன்மைகள் என்ன, தீர்மைகள் என்ன என்றும் அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவள…
-
- 23 replies
- 900 views
- 1 follower
-
-
ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த ரணிலுக்கே வெற்றி! – அடித்துக் கூறுகின்றார் மனோ ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகும் என்று தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே அவர் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார். இதேவேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்றும், அதற்கான சாதக நிலை தற்போது காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல…
-
- 8 replies
- 1k views
-
-
(நா.தனுஜா) புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் வேட்பாளர்களால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு கிட்டாது என்பதனால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் புதிய ஜனாதிபதித் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருப்பதற்குத் தமது கட்சி ஏகமனதாகத் தீர்மானித்திருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் வாக்களி…
-
- 4 replies
- 828 views
-
-
கூட்டமைப்பின், சில எம்.பிக்கள்... ரணிலுக்கு, ஆதரவு வழங்க தீர்மானம்? ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் க…
-
- 11 replies
- 738 views
-
-
ரணிலின், பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் : முன்னாள் பிரதி அமைச்சரின் மகன்... நாட்டை விட்டு தப்பி ஓட்டம். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனே இவ்வாறு தேடப்பட்டுவந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் டுபாய் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291660
-
- 0 replies
- 225 views
-
-
முன்னைய அரசாங்கம் மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தினார் ரணில் – சிஎன்என்னிற்கு ரணில் பேட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை நாடாளுமன்றம் வாக்களிப்பதை தடுப்பதற்கோ அல்லது பொதுகட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப்போவதில்லை - கோத்தபாய ராஜபக்ச மாலைதீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச்சென்றவேளை நான் அவருடன் பேசியுள்ளேன்ஆனால் அவர் தற்போதும் சிங்கப்பூரில் இருக்கின்றாரா என்பது தெரியாது - பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த நூல்கள் உட்பட 4000 நூல்களை அவர் இழந்தார். 125 வருடகால பியானோவும் அழிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இலங்கையின் முன்னைய நிர்வாகம் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்த உண்மைகளை மூடிமறைத்தது என பதில் பிரதமர் ரணில் விக்கிரம…
-
- 0 replies
- 206 views
-
-
டலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என மத்தும பண்டார தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு போதுமான ஆதரவு உள்ளது. அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும் என்றும் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
-
- 1 reply
- 207 views
-
-
ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்தில் எடுத்து முடிவெடுங்கள் July 19, 2022 ஜனாதிபதி தெரிவின் போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டு தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வட கிழக்கு தமிழ் தரப்புகளுக்கு இது ஒரு முக்கியமான தருணம். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை உ…
-
- 0 replies
- 191 views
-
-
நாளை, புதிய ஜனாதிபதி தெரிவு - மூன்று வேட்பாளர்கள் களத்தில்! நாளைய தினம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பிற்கு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இன்று நாடாளுமன்றில் பரிந்துரைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய நிலையில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார். இதனை முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார். இதனையடுத்து…
-
- 9 replies
- 897 views
- 1 follower
-
-
ஜனாதிபதி போட்டியில் இருந்து... பின்வாங்கினார், சஜித்!! புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கள் செய்ய போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அதன்படி வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். https://athavannews.com/2022/1291589
-
- 1 reply
- 300 views
-