ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
எமது கொள்கையுடன் ஏற்பட்ட இணைக்கப்பாடே த.தே.கூட்டமைப்பினர் இணையக் காரணம் எமது கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிணர்கள் பலர் தெற்கின் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமது அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையிலேயே எம்முடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளனர் என இடதுசாரி விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மேற்படி தெரிவித்தார். தற்போது நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சனைகள் அனைத்தும் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் உள்ளன …
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணம் எவ்வாறு அமைந்ததோ அவ்வாறானதொரு பயணத்தையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, இன்று அதனை முற்றாக நாசம் செய்து விட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதுவே ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணத்தின் ஆரம்பமாகவும் இருந்தது. மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முப்படைகளையும் பொலிஸாரையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறார். அரசுக்கு எதிராகச் செயற்படுவோர்கள் அடக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள். நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு காட்டுத் தர்பார் நடத்தப்ப…
-
- 3 replies
- 736 views
-
-
’20ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம்’ “அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தால்தான், கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். இந்தக் குழப்பத்தின் வெளிப்பாடுதான், த.தே.கூவின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாணசபையால் நிராகரிக்கப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூலத்தை, கிழக்கு மாகாணசபையில் உள்ள த.தே.கூ உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் (18) மாலை நட…
-
- 0 replies
- 189 views
-
-
எரிபொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களிடம்... மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்! எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. தற்போது மக்கள் அரசாங்கத்தை தூற்றுகின்றனர். இதுவே உண்மையான விடயம் என்பதோடு அதனை மறைத்து எந்த பயனும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் சென்று எமக்கும் சகல விடயங்களும் சரியாக இடம்பெறுகின…
-
- 1 reply
- 163 views
-
-
சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது. தேசியத்தை வலுவாக ஆதரித்ததற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ திரு. செல்வராஜா கஜேந்திரன்இ திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரினால் உருவாக்கப்பட்ட இந்த முன்னனியில் போட்டியிடும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடன் ஈழம் இ நியூஸ் (றறற.நநடயஅநநெறள.உழஅ) தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதனை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்…
-
- 14 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில்... ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் இந்திய உதவியுடன் ஏற்படுத்தப்படவுள்ள ஷங்ரி லங்கா அடையாள டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான உடன்படிக்கை, யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தங்களும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. பொரு…
-
- 0 replies
- 118 views
-
-
உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்: யாழிலிருந்து இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சை…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ் இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது. இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/arti…
-
- 1 reply
- 309 views
-
-
சம்பந்தன் கோரும் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களை ஏற்க முடியாது! – கூட்டமைப்பு பாதை மாறுவதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு. [Tuesday, 2014-02-11 07:18:36] இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வை இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்- இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பத…
-
- 5 replies
- 540 views
-
-
நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே.... கைகலப்பு – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது ஆளும் கட்சி மட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை எண் 79ன் கீழ் அவர்களை வெளியேற்றுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். குறித்த இரண்டு உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு வசதியாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன. https:…
-
- 3 replies
- 251 views
-
-
(க.கிஷாந்தன்) நுவரெலியா ராகலை தோட்டத்தின் லயன் குடியிருப்பொன்றிலுள்ள வீட்டின் மேல் நேற்று இரவு 11 மணியளவில் விண்கல் ஒன்று வீழ்ந்ததில் குறித்த வீட்டின் சமயலறைப்பகுதி சேதடைந்துள்ளது. டீ.எம். கருணாரத்ன வினுடைய வீட்டின் மீதே விண்கல் விழுந்துள்ளது. பாரிய சத்தம் கேட்டதை உணர்ந்த வீட்டு உரிமையாளர்அதனை அவதானித்த போது வீட்டின் சமையலறைப் பகுதி தீப்பற்றி எரிவதை கண்டுள்ளார். இதன்போது விண்கல்லை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக ராகலை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து பொலிஸார் உடனடியாக குறித்த வீட்டிற்கு விரைந்துசென்று நிலைமைகளை அவதானித்தனர். இதேவேளை, குறித்த பொருள் விண்கல்லா? அல்லது வேறேனும் பொருளா ? என ஆராய்வதற்காக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி மொரட்டுவை ப…
-
- 1 reply
- 599 views
-
-
வரலாற்றில் பெயர் பதிக்கும் பிரதமரின் பின்லாந்துப் பயணம் வரலாற்றிலேயே முதன்முறையாக பின்லாந்துக்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர் என்ற பெயரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிவுசெய்யவுள்ளார். பிரத்தியேக விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (5) வியாழக்கிழமை ஜேர்மன் பயணமாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார். பின்லாந்து விஜயத்தின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும், இரு நாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். வரலாற்றில் முதற்றடவையாக இலங்கை பிரதமர் ஒருவர் பின்லாந்து…
-
- 1 reply
- 402 views
-
-
போட்டிகளில் கலந்து கொள்வதற்கென சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை றகர் அணி வீரர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சமந்த லக்சான் என்ற வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அங்காடியொன்றிலிருந்து பொருட்களைக் களவாடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வீரரை இலங்கைக்குத் திருப்பி அழைக்க உள்ளதாக இலங்கை றகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த அணியில் மகிந்தவின் புதல்வர் யோசித றாஜபக்சவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.eelamweb.com
-
- 10 replies
- 998 views
-
-
பிள்ளையான், வியாழேந்திரன் என... மேலும் நான்கு பேருக்கு, இராஜாங்க அமைச்சு பதவி! சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் ச.வியாழேந்திரன் இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சுரேன் ராகவன் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து மாற்றப்பட்டு உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் மொஹமட் முஷாரப் புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்…
-
- 0 replies
- 229 views
-
-
விமானப்படையின் 14 ஆவது புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வு பெறும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம நேற்று தனது பதவியினை புதிய தளபதியான கோலித்த குணதிலகவிடம் கையளித்ததை தொடர்ந்தே இன்று அவர்உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். நேற்றைய தினம் எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தனது பதவியை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலகவுக்கு கையளிக்கும் நிகழ்வானது விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது உத்தியோக பூர்வமாக தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம விமானப்படை தலைமை பொறுப்பை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த …
-
- 1 reply
- 240 views
-
-
பரிந்துரைகளை ஏற்கவேண்டிய கட்டாயம் அரசுக்கு கிடையாது ஐ.நா.விசேட நிபுணரின் விஜயம் குறித்து அரசாங்கம் அறிவிப்பு (ரொபட் அன்டனி) இலங்கை வருகின்ற ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லு டி கிரிப் முன்வைக்கும் ஆலோசனை கள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கடமைப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. அவர்களின் அனுபவ ஆலோசனைகளை யும் விடயங்களையும் அரசாங்கம் தேவை ஏற்படின் ஒரு வளமாக பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கியநாடுகளின் உண்மை,நீதி, நட்…
-
- 0 replies
- 300 views
-
-
பிரதமர், பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். SLPP கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ராஜினாமா செய்வது பற்றி விவாதிக்கவில்லை என்றும், இந்த கூற்றுக்கள் தவறானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் பிரதமர் பதவி விலகவுள்ளதாக சில குழுக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் …
-
- 2 replies
- 348 views
-
-
விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் என கைதுசெய்யப்பட்ட 1250 தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக அவர்களின் கல்வி உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உபுல் பிரேமரத்ன தெரிவித்துள்hளர். பம்பைமடு முகாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடத்துறைகளில் பயின்றுவந்த இவர்கள் சுமார் ஒருவருடகாலம் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிரட்டைகளில் மோதிரங்களைச் செய்ய பயிற்றுவிக்கப்படுவதாகவும் உபுல் பிரேமரத்ன கூறியுள்ளார். இதேவேளை, முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக…
-
- 0 replies
- 892 views
-
-
கோப்பாயில் கைதியை ஓட விட்ட நான்கு பொலிசார் பதவிநீக்கம்! [Thursday, 2014-03-06 07:27:22] கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கைதியொருவரை கடந்த திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் கொண்டு சென்றபோது, அக்கைதி தப்பியோடியிருந்தார். குறித்த கைதியினை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கொண்டு சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும், தமது கடமையினைச் சீராக மேற்கொள்ளாத காரணத்தினால் அவர்களைத் தற்காலிகமாக பதவி…
-
- 2 replies
- 321 views
-
-
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் இலங்கை பயணம் செய்ய உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா ( Tehmina Janjua ) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தற்பொழுது ஓமானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓமான் பயணத்தினை முடித்துக் கொண்டு அவர் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்வார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/archives/45511
-
- 0 replies
- 562 views
-
-
இன்று... ரணசிங்க பிரேமதாசவின், 29ஆவது நினைவு தினம் நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1279381
-
- 6 replies
- 611 views
-
-
இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பும், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் 1984 ம் ஆண்டு சண்டே இதழுக்காக, முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது ஊடகப் பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், தனது அனுபவங்கள் தொடர்பாக “இரத்தத்தீவு” என்ற நூலையும் எழுதியவர். இந்தியா ருடே மற்றும் ரைம் சஞ்சிகைகளில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார். இவர் தற்போது, ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைத் தொடர்ந்து, அ…
-
- 0 replies
- 430 views
-
-
நவாலி பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழு நவாலி பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு வாள்வெட்டுக் குழுவினர் தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 270,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழுவினரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், சி.சி.டி.வி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.(15) http://www.samakalam.com/
-
- 0 replies
- 355 views
-
-
ரணிலை... பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை, தவறானது – ஓமல்பே சோபித்த தேரர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281640
-
- 0 replies
- 159 views
-
-
ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது. குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவி…
-
- 6 replies
- 1.7k views
-