ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
ரணில் தொலைக்காட்சி உரை: 'ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்' 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித…
-
- 2 replies
- 456 views
- 1 follower
-
-
பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!
-
- 12 replies
- 557 views
-
-
கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர்... வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், உயிரிழப்பு! கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1291083
-
- 1 reply
- 264 views
-
-
ஜனாதிபதியின் இராஜினாமா... அமுலுக்கு வருவதற்கு முன்னர், ரணில் பதவி விலக வேண்டும் என.. ஏகமனதாக தீர்மானம்! ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1291091
-
- 0 replies
- 224 views
-
-
பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்காவிற்கு ? பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க அல்லது மத்தள விமான நிலையத்தின் ஊடாக செல்லவில்லை என எமது விசாரணையின் போது குடிவரவு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ஏ.எஸ் கனுகல தெரிவித்தார். இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=163389
-
- 3 replies
- 367 views
-
-
ரணில், என்ற தனி மனிதரின் பதவிப் பேராசைக்காக... நாட்டையும், மக்களையும்... பலிகொடுக்க வேண்டாம் – அநுர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாடு தீர்மானமிக்க இடத்துக்கு வந்துள்ளதால் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் மோசமான நிலையொன்று ஏற்ப…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்: பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் 13 ஜூலை 2022, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங். இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர். போராட்டக்…
-
- 4 replies
- 241 views
- 1 follower
-
-
சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்! கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி இருவரில் ஒருவரை நியமிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் இல்லத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 59 replies
- 2.3k views
- 2 followers
-
-
இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் - நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தெரிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் 37வது சரத்தின் முதல் பிரிவின் கீழ் இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாக இலங்கை அதிகாரிகள் கூறினார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பதவி விலகியவுடன்... புதிய ஜனாதிபதி பதவிக்கு, நானும் போட்டியிடுவேன் – சஜித் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரு வெற்றிடம் ஏற்பட்டால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயார் என பிபிசி இடம் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் திரும்ப ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் எடுக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க தன…
-
- 1 reply
- 282 views
-
-
ரணிலை பதவி விலக்குவதற்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் - சுமந்திரன் (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது. போராட்டகாரர்களின் அழுத்தம் வெற்றிப்பெற்றுள்ளது. ஆகவே இவ்விடயத்திலும் போராட்டகாரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் வகையில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய புத்தகசாலையில் இடம்பெற்ற நி…
-
- 0 replies
- 151 views
-
-
அரசாங்க ஊழியர்களுக்கு... இந்த மாத சம்பளம், வழங்குவதில் சிக்கல்! அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டுமாயின் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில…
-
- 0 replies
- 303 views
-
-
ஜனாதிபதி கோட்டா மற்றும் பசில்... நாட்டில் இருந்து வெளியேற, நாம் உதவவில்லை – இந்தியா அறிக்கை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியது என வெளியாகிய செய்திகள் ஆதாரமற்றவை என கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவ…
-
- 0 replies
- 227 views
-
-
கொழும்பு காலி முகத்திடல்... போராட்டக் களத்தில், மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி! கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பு -15ஐ சேர்ந்த... 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291020
-
- 0 replies
- 209 views
-
-
ஆளும் தரப்பின்... நாடாளுமன்ற குழு, மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தகவல்? பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழுவில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு குழுக்களைத் தவிர ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மற்றுமொரு குழு தனியான குழுவாக செயற்படுவதாகவும் …
-
- 0 replies
- 114 views
-
-
முக்கிய இரகசியங்களை... வெளியிட்ட, ஜனக ரத்நாயக்கவை பதவி விலக்க முயற்சிக்கும் ஆளும் தரப்பு? பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பிலான யோசனை ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் 113 பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை கடிதம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர்களிடம் …
-
- 0 replies
- 146 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டம், முழுமையாக... அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்! நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 142 views
-
-
R.Maheshwary / 2022 ஜூலை 12 , பி.ப. 06:59 - 0 - 0 FacebookTwitterWhatsApp 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசேடமாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனையில் முதலாம்,(கோட்டபய ராஜபக்ஷ ப…
-
- 1 reply
- 297 views
-
-
இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்தவேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது -- DINESHA DILRUKSHI WIJESURIYA, AMAL JAYASINGHE SBS இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட 15பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்களசேவைக்கு தெரிவித்துள்ளன. 9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் திருகோணமலைகடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமானநிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல்412 ஹெலிக்கொப்டர்களில் சென்றார். அவர் முப்படை தள…
-
- 1 reply
- 353 views
-
-
அலரிமாளிகையும் முற்றுகை கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அலரிமாளிகையும்-முற்றுகை/175-300064 அலரிமாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்…
-
- 33 replies
- 2.2k views
- 1 follower
-
-
வன்னியில் பிரபாகரன் மகன் உள்பட்ட லடசக்கணக்கான மக்களுக்கு பேரவலத்தினை தந்த ஒரு மனிதனின் அவல நிலை குறித்து சரவதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று அன்று இந்த படுபாவிக்கு புரிந்திருக்க வில்லை. சரி, யுத்தம், சண்டை தமிழர்கள் மரணம், ஓரளவுக்கு சரி என்பவர்கள் கூட, லசந்தா, பிரகதீப், தஜப்டீன் போன்றவர் கொலையில் இவரது நேரடி தொடர்பினால், இவர் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்க வேண்டியவர் என்கிறார்கள்.. Sri Lanka's beleaguered President and 14 family members blocked from leaving country by airport staff, senior military source says https://www.cnn.com/2022/07/12/asia/sri-lanka-crisis-gotabaya-rajapaksa-airport-intl/index…
-
- 1 reply
- 715 views
-
-
இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை - 'எங்கள் பணத்தில் அவர் சொகுசாக இருந்திருக்கிறார்' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 36 நிமிடங்களுக்கு முன்னர் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என்று அறிவித்துவிட்டார். அனைத்துக் கட்சி அரசு அமையுமானால், அதற்கு வழிவிட்டு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப் போவதாக அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கி…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
சுமந்திரன்... பிரதமர் பதவியை பெறுவதாயின், தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அவரால் அது முடியாதுபோனால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ஆகவே ஜனா…
-
- 22 replies
- 953 views
-
-
Published by Vishnu on 2022-07-12 19:44:10 (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி உபேந்ர குணசேகர இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டந…
-
- 0 replies
- 223 views
-
-
Published by Rajeeban on 2022-07-12 16:54:49 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை விமானநிலையத்திலகுடிவரவு துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட அவமானத்திற்கு பின்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கடற்படையின் ரோந்து படகினை பயன்படுத்துவது குறித்து ஆராய்கின்றார் என அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக ராஜபக்சாக்கள் அவசரமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியதால் பசில் ராஜபக்ச அங்கு தனது கடவுச்சீட்டை வைத்துவிட்டு வெளியேறிவிட்டார்இதன் காரணமாக அவர் புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெறவேண்டிய நிலையேற்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன ஒரு சூட்கேஸ் முழு…
-
- 0 replies
- 397 views
-