ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
நாடாளுமன்றத்திற்கு வந்த... கோட்டாவை, வெளியேறக்கோரி... சபையில் போராட்டம் ! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக கோஹோம்கோட்டா என கோஷமிட்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். https://athavannews.com/2022/1289664
-
- 0 replies
- 225 views
-
-
எனது வாயை.. மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு, பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்! நாட்டு மக்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்> தமது பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்க்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். அதற்கு பதிலளித்து சபாநாயகரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் உரையாற்றிய அவர், இவ்வாறு கருத்து வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “சபாநாயகரே மரபை உடைத்து அவரை பேச அனுமதித்தீர்கள். நியாயமாக இருங்கள். தயவுசெய்து எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள…
-
- 0 replies
- 196 views
-
-
ஜனாதிபதியையும்... பிரதமரையும், காணவில்லை – விமல் குற்றச்சாட்டு. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையில் ஜனாதிபதியையும் பிரதமரையும் காணவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல கிலோமீற்றர் தூரம் வரிசையில் நிற்பதாக குறிப்பிட்டார். குடிமக்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி வலிக்கு சற்று நிவாரணம் தர ஜனாதிபதி குறைந்தபட்சம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்டு வருவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற்றலாம் என நினைத்தமை தவறானது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார். …
-
- 2 replies
- 326 views
-
-
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக... இலங்கை, வியன்னா உடன்படிக்கையினை... மீறி செயற்படும் நிலை? நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்று, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தால் அலுவலகத்தை ஒரு வார காலத்திற்கு மூட வேண்டியுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. வியன்னா உடன்படிக்கையின்படி, வெளிநாட்டு தூதரகங்கள் சரியாகச் செயல்படுவதை அந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தநிலையில் தற்போது தூதரகங்…
-
- 1 reply
- 259 views
-
-
முல்லைத்தீவு பகுதியில், உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை... கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் பதற்றம் : இராணுவம் குவிப்பு. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியது. வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்குரிய ஏற்பாடாக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இருந்தபோதிலும் இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்திருக்கின்றனர். இதனை அடுத்து அங்கு…
-
- 0 replies
- 245 views
-
-
துருக்கி... சரக்கு விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து! துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றிக்கொண்டிருந்த கொள்கலன் ஒன்று 2ஆம் இலக்க விமானத்தின் இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு விமான நிலையத்தை சுற்றி பலத்த காற்று வீசியபோதிலும் விமான நிலைய நடத்துநர்கள் முறையாக பிரேக் போடாததால் இந்த விபத்து நடந்ததா என்பத குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விபத்துக்குள்ளான துருக்கி விமான சேவைக்கு சொந்தமான ச…
-
- 0 replies
- 298 views
-
-
நெருக்கடிக்கு... தீர்வு காண முடியாவிட்டால், இராஜினாமா செய்யவும் – ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்! நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அவரின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இரவு 7.30 மணியளவில் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 1½ மணிநேரம் பதாதைகளை ஏந்தி கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறுவதைத் தடுக்க, கலகத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் தெரி…
-
- 0 replies
- 262 views
-
-
IMF உடன்... நடத்தப்பட்ட, பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து... பிரதமர் இன்று அறிவிப்பு! சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதன்படி, “அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ஊடகங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்தன. உண்மை நிலையை அறிய விரும்புகிறோம். இன்று பேச்சுவார்…
-
- 0 replies
- 146 views
-
-
அரசாங்கம் தலையிட்டால்... ஒரு கிலோ அரிசியை, 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் – முன்னாள் விவசாயப் பணிப்பாளர். ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கமும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் உரிய முறையில் தலையிட்டால் ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1289587
-
- 0 replies
- 166 views
-
-
அரசுக்கு எதிரான... போராட்டங்களை, தொடருங்கள் – அனுர அழைப்பு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை விடுத்து தவறான தகவல்களை அரசாங்கம் பரப்பிவருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு முயற்சிப்பதாக தம்மீது அரசாங்கம் குற்றம் சுமத்துவதாக கூறினார். இலங்கையில் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசியல் இயக்கங்கள…
-
- 0 replies
- 182 views
-
-
ஜூலை, 5,6 குண்டுவெடிக்கும்: வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க, ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாக விருக்கும் கரும்புலிகள் தினத்தை இலக்காக வைத்து, வடக்கில் அல்லது தெற்கில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை குறிப்பிட்டு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் 27 ஆம் திகதியன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு பொலிஸ் மா அதிபர் சி.ரி.விக்ரமரத்ன…
-
- 3 replies
- 372 views
-
-
மின்சாரம் மற்றும் எரிபொருள்.. அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ! பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் அத்…
-
- 2 replies
- 373 views
-
-
சஜித்திற்கும், மைத்திரிக்கும் இடையில்... கொழும்பில் அவசர சந்திப்பு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ‘தேசிய சீர்த்திருத்தங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்’ தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்…
-
- 10 replies
- 591 views
-
-
எரிபொருள் நெருக்கடி: நாடளாவிய ரீதியில், இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை! நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வ…
-
- 1 reply
- 171 views
-
-
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் ஒரு விசைப்படகுடன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இந்திய-மீனவர்கள்-12-பேர்-கைது/71-299678
-
- 2 replies
- 522 views
-
-
மே 11 அன்று வழங்கிய... வாக்குறுதியை, ஜனாதிபதி கோட்டா மீறியுள்ளார் – எதிர்க்கட்சி அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை மீள அமுல்படுத்துவதாக பொது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நாட்டின் தலைவர்கள் மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டு வந்து, கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாக குறிப்பிட்டார். மே 11ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, 19 ஆவதை அமுல்பட…
-
- 1 reply
- 251 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றன. சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளு…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
ஜனாதிபதியாகும் கனவில் இருக்கும் ரணிலை வீட்டுக்கு அனுப்புங்கள் – ஜனாதிபதியிடம் போட்டு கொடுத்த மொட்டு கட்சி எம்.பிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான டொலர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொடுக்க வேண்டும் . ஆனால் அது முடியாத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க டொலர்களை வழங்காவிட்டால் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என ஜனாதிபதியை அண்மையில் சந்தித்த பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமராக இருக்கு…
-
- 0 replies
- 283 views
-
-
பிரதமர் பதவியை... ரணில் உடனடியாக, இராஜினாமா செய்ய வேண்டும் – சஜித் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதன்போது தொட்ர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்களை அழிக்கும் ராஜபக்ஷ ஆட்சியை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பிரதமர் பதவியில்…
-
- 0 replies
- 161 views
-
-
யாழ். – கொழும்பு இடையே சரக்கு ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை! யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக ரயில் சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் யாழ். கொழும்புக்கிடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ். வணிகர் கழக பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை…
-
- 3 replies
- 385 views
-
-
பாடசாலைகளிலிருந்து... மாணவர்கள், இடைவிலகும் அபாயம்... அதிகரித்துள்ளதாக கவலை. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போதைய எரிபொ…
-
- 1 reply
- 242 views
-
-
”இலங்கை கலவரங்களின் மையமாக இருக்கும்”: மைத்திரி எச்சரிக்கை! சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு திறமையும் அறிவும் இல்லை. இதனால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
-
- 2 replies
- 366 views
- 1 follower
-
-
நாடு முழுமையாக முடங்கும் நிலை! எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் முதல் முழுநாடும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதி நடக்கும் வரையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு நாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ம…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA IN COLOMBO, SRI LANKA இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (03/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
IMF உதவியைப் பெற... இலங்கை, இவற்றை... செய்ய வேண்டும் – அமெரிக்கா. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது. அதன்படி... முதலில் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், மேலும் தோல்வியடைந்த முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையையும் இலங்கை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என அக்குழு எச்சரித்துள்ளது. https://athavannews.com/2022/1289404
-
- 1 reply
- 327 views
-