ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
தங்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கோரி மேரக் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள். கடும் நோய்களால் சிறார்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு, மாபெரும் அவலத்தில் தவிக்கும் நிலையில் உலக சமுதாயம் ஒட்டுமொத்தமாக மெளனித்துக் கிடப்பதை உலகத் தமிழர்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இனியும் வாழ முடியாது என்று முடிவெடுத்து சிறிய கப்பலில் ஆஸ்திரேலியா நோக்கி பயணித்த அந்தத் தமிழர்களை, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் உத்தரவுக்கிணங்க இந்தோனேசிய கடற்படையினர் கடந்த 11-10-2009 அன்று நடுக் கடலில் மடக்கி, மேரக் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். அன்று முதல் இன்று வரை அந்த அப்பாவித் தமிழர்கள் கப்பலிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களி…
-
- 0 replies
- 354 views
-
-
தங்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கோரி மேரக் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள். கடும் நோய்களால் சிறார்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு, மாபெரும் அவலத்தில் தவிக்கும் நிலையில் உலக சமுதாயம் ஒட்டுமொத்தமாக மெளனித்துக் கிடப்பதை உலகத் தமிழர்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இனியும் வாழ முடியாது என்று முடிவெடுத்து சிறிய கப்பலில் ஆஸ்திரேலியா நோக்கி பயணித்த அந்தத் தமிழர்களை, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் உத்தரவுக்கிணங்க இந்தோனேசிய கடற்படையினர் கடந்த 11-10-2009 அன்று நடுக் கடலில் மடக்கி, மேரக் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். அன்று முதல் இன்று வரை அந்த அப்பாவித் தமிழர்கள் கப்பலிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்க…
-
- 0 replies
- 423 views
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கி, 2 பில்லியன் டொலர் கடன் உதவி! ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு இலங்கையின் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் சத்சுகு அசகவா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இந்த விடயத்தினைத் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த வருடம் இலங்கைக்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியது. நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் பின்னடைவைச் சந்தித்த நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும்…
-
- 2 replies
- 278 views
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கி! | இலங்கை துறைமுக அதிகாரசபை 2050ஆம் ஆண்டு வரை வரைந்துள்ள தேசிய திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. தேசியத் திட்டம் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் பல பிரிவுகளிலும் கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் செய்தி இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அமைச்சர் சாகல ரட்நாயக்க இதுபற்றி அறிவித்தார். கொள்கலன் ஏற்றி இறக்கல் நடவடிக்கைகளை அதிகரித்து, கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டத் திட்டங்கள் தய…
-
- 0 replies
- 251 views
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கி... ஆளுநர் சபையின், தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக நடைபெற்றது. இதன்போததே, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜோர்ஜியாவின் திபிலிசியில் முதலில் நடத்தத் திட்டமிடப்பட்ட வருடாந்த கூட்டம் தற்போதைய கொரோனா தொற்றுநோயால் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றுள்ளது. இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டுக் கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…
-
- 3 replies
- 521 views
-
-
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீ…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற உள்ளது. வீதி பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்துவரும் மற்றும் முழுமையடையாத வீதி பிரிவுகளின் முக்கியப் பணிகளைத் தீர்க்க இந்த நிதி ஒதுக்கப்படும். ADB இன் சலுகைக்குரிய சாதாரண மூலதன வளங்கள் வழங்கும் கடன், 4ஆவது தவணைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட முதலீட்டு செலவான 68.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியாகும். இந்த செலவில் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு ஏற்கும். https://thinakkural.lk…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து குறித்த வேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கொள்கை அடிப்படையிலான தலா 2 கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ், 2 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் 5 வருட சலுகைகாலத்துடன், 25 வருட மீள் செலுத்துகை தவணை காலத்துக்கான கடனை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. https://thinakkural.lk/article/274562
-
- 2 replies
- 373 views
- 1 follower
-
-
போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 150 மில்லியன் டொலர் அவசர கடனுதவியைத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (Asian Development Bank) சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த வேண்டுகோளை ஆசிய அபிவிருத்தி வங்கி சாதகமாக அணுகுவதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் றிச்சர்ட் வோக்ஸ் ((Richard Vokes), போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு கடனுதவி வழங்குவது பற்றி ஆய்வு செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராகவே இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை விட தேவை அதிகமாக இருந்தால், வடக்கில் மேற்கொள்ளப்…
-
- 0 replies
- 389 views
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:25 AM (எம்.மனோசித்ரா) நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் , மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 158 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்படவுள்ளது. இந்த நிதியைக் கொண்டு,யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறையிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையிலும், இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. மண்டைதீவில் படகுகள் நங்கூரம் பாய்ச்சும் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. மேலும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தலா 8 மீன்பிடித் துறைமுகங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மீன்ப…
-
- 0 replies
- 446 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான கருத்திட்டத்தை தயாரிப்பதற்கான தொழினுட்ப உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வடமாகாணத்திற்கான நிலைபேறான மீன்பிடித்துறை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஜக்கிய அமெரிக்கடொலர்கள் 62 மில்லியன் நிதியுதவியுடன் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறைமற்றும் குருநகர் மீன்பிடிதுறை முகங்களையும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை மீன்பிடித் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதாகும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடிய…
-
- 0 replies
- 268 views
-
-
ஆசிய அபிவிருத்தி வைப்பகம் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது சிறீலங்காவின் மாகாண, மற்றும் பிரதேச சபைகள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாக, மகாண - உள்ளுராட்சிகள் அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருக்கின்றார். இதனை நிவர்த்தி செய்வதற்காக பல வகையான கடன் திட்டங்களிற்கு ஆசிய அபிருத்தி வைப்பகம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வைப்பகத்தின் இந்த நிதி, தனிநபர் வருமானத்தைப் பெருக்கும் திட்டங்களிற்கு கடன் அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றும் அமைச்சர் தென்னக்கோன் மேலும் கூறினார். சிறீலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் தென்னிலங்கை மாகாண,…
-
- 0 replies
- 678 views
-
-
ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்! [Friday 2014-09-19 07:00] ஆசிய அரசியல் கட்சிகளின் 8 வது சர்வதேச மாநாடு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “ஆசிய நாடுகளுக்கிடையேயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள 8 வது சர்வதேச மாநாட்டிற்காக ஆரம்ப வைபவம் மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக கலையரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 33 நாடுகளிலுமுள்ள சுமார் 75 க்கும் அதிகமான கட்சிகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக…
-
- 0 replies
- 365 views
-
-
ஆசிய ஆபிரிக்க சட்டத்தரணிகள் மாநாடு கொழும்பில் _ வீரகேசரி இணையம் 6/27/2011 1:31:42 AM Share ஆசிய ஆபிரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சட்டத்தரணிகள் மாநாடு இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 10 நாடுகளின் நிதி அமைச்சர்களும், சட்டத்தரணிகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் 200 க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32384
-
- 0 replies
- 241 views
-
-
ஆசிய ஆயர் பேரவையின் இறுதி நாள் திருப்பலியானது புனித லூசியாஸ் கொழும்பு உயர்மறை மாவட்ட பேராலயத்திலே நடைபெற்றது. இந்த நிகழ்வானது இன்று (04) காலை இடம்பெற்றது. அனைத்து ஆசிய ஆயர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வில் பக்தர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/126993?ref=home
-
- 0 replies
- 254 views
-
-
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிய ஆயர்கள் மாநாடு முதல் முறையாக சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நொவம்பர் 28ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 5ஆம் நாள் வரை, ஆசிய ஆயர்கள் மாநாடு நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள 150 கத்தோலிக்க ஆயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஒழுங்கமைப்புப் பணிகள் தொடர்பாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். http://www.puthinappalakai.net/2016/07/23/news/17604
-
- 0 replies
- 323 views
-
-
ஆசிய கிண்ண இறுதி போட்டியின் பின்னர், கிண்ணியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் கலந்து கொண்டு, இலங்கை அணி வெற்றி பெற்றதை கொண்டாடி வீதியில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு இளைஞர் குழு அவற்றை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் இரு குழுக்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கிண்ணியா துறையடி பிரதான வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. விடயம் அறிந்த பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து இரு குழுக்களையும் சமாதானப்படுத்தி விசாரணை செய்து அனுப்பியுள்ளனர். http://virakesari.lk/?q=node/362003
-
- 3 replies
- 541 views
-
-
ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி அறிவுறுத்து பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு அந்தநாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது. இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும் வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிய க…
-
- 0 replies
- 496 views
-
-
ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த மறுத்த முதல்வருக்குப் பாராட்டு - பழ. நெடுமாறன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது தமிழக மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும். எனவே இலங்கை வீரர்கள் இப்போட்டிகளில் பங்குபெறக்கூடாது என ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசு தெரிவித்திருந்தும் எவ்விதப் பதிலும் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டிருக்…
-
- 0 replies
- 285 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 06:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா பெரும் நெருக்கடி ஒன்றை சந்திக்கவுள்ளது. இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமா…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆசிய நாடொன்றே பொன்சேகாவுக்கு பெருமளவு பணத்தை வழங்கியிருந்தது: புலனாய்வுத்துறை SUNDAY, 28 MARCH 2010 03:32 RISHI இலங்கை செய்திகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆசிய நாடொன்றே அதிகளவு பணத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கியிருந்ததாக சிறிலங்காவின் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மையில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆசிய நாடு ஒன்றே பணத்தை வழங்கியிருந்தது. பொன்சேகாவின் உறவினர் ஒருவரின் வங்கி பாதுகாப்பு அறையில் இருந்து சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் 527,000 டொலர்களை கைப்பற்றியிருந்தனர். இந்த பணமானது ஆசியா நாடு ஒன்றின் த…
-
- 3 replies
- 1k views
-
-
ஆசிய பசுபிக் சிறுவர் இணைப்புத் திட்டம் தரம் 5 மாணவர்கள் ஜப்பான் பயணம் news ஆசிய பசுபிக் சிறுவர்கள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆறுபேர் ஜப்பானுக்கான பயணத்தை இன்று ஆரம்பிக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் ஜப்பான் மொழியை கொழும்பில் கற்றதுடன் ஜப்பான் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அந்த நாட்டின் பழக்கவழக்கங்களை அறியவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு மாணவியும் ஏனைய இடங்களைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுமாக மொத்தம் ஆறு மாணவர்கள் இந்தச் சுற்றுலாவில் இடம் பெற்றுள்ளார்கள்.இவர்களுடன் முகாமையாளராக ஸ்ரீயாணி ஹேவாஹடம் உதவியாளர்களாக …
-
- 1 reply
- 468 views
-
-
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதி அமைச்சராக ரவி தெரிவு ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சிறந்த நிதி அமைச்சராக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதனிலை நிதி சஞ்சிகைகளில் ஒன்றான தி பாங்கர் சஞ்சிகையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை ஒர் புதிய பொருளாதாரப் பரிமாணம் நோக்கி ரவி கருணாநாயக்க நகர்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1.5 பில்லியன் டொலர்கள் நிதியையும் சர்வதேச நாணய நிதியத்திடம் ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/13201
-
- 0 replies
- 290 views
-
-
சங்கிரிலா கலந்துரையாடல் எனப்படும் 11வது ஆசிய பாதுகாப்பு மாநாடு நாளைமறுநாள் சிங்கப்பூரில் ஆரம்பமாகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த பாதுகாப்பு மாநாட்டை அனைத்துலக மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்புச்செயலர் லியொன் பனெட்டா மற்றும் இந்தியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, திமோர், சீனா, மொங்கோலியா, கொரியா, ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அவர் தெற்காசியாவில் அதிகரிக்கும் பாதுக…
-
- 0 replies
- 601 views
-