ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புளொட் உறுப்பினருக்கு ஆவாவுடன் தொடர்பா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா வன்முறைக் குழுவுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை காவல்துறையினர் இன்று முற்படுத்தினர். இதன்போதே நீதிமன்றிடம் இந்த விடயத்தைத் தெரிவித்தனர். ‘சந்தேகநபரிடம் துப்பாக்கிகள், அவற்றுக்கான ரவைகள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடும் ஆவாக் குழுவிடமும் …
-
- 0 replies
- 280 views
-
-
ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம் 2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது : கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமலாகே ரஞ்சித் (31 வயது)…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆயுதம் தாங்கிய தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்னும் சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை களுவாஞ்சிக்குடியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் கருணாவின் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாலைவேளை விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி அம்பாறை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 12.30 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த ஜீப் மற்றும் பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். பிக்கப் வாகனத்தில் சாரதியும் இரு தமிழ் இளைஞர்களும் ஜீப் வாகனத்தில் சாரதியும் மூன்று தமிழ் இளைஞர்களும் இருந்துள்ளனர்.…
-
- 0 replies
- 483 views
-
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ரி 56 ரக துப்பாக்கியுடன் முசக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18579
-
- 2 replies
- 615 views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோசித விளையாடும் இலங்கைத் தேசிய ரக்பி அணியினர் டி 56 துப்பாக்கிகள் சகிதம் குறிபார்த்துச் சுடும் விளையாட்டொன்றில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் சில வெளியாகியுள்ளன. இங்கு பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் உண்மையான துப்பாக்கிகள் என்பதோடு, ஊண்மையான ரவைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே, ஒரு தேசிய விளையாட்டு அணி ஆயுதங்களுடன் விளையாடியதென்றால் அது இலங்கையாகத்தான் இருக்க முடியும். screen shots
-
- 1 reply
- 483 views
-
-
ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண்ணை கடத்தி வன்புணர்வு - தேடுதலில் இரண்டு பேர் கைது நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்தவர்கள், கணவனைத் தாக்கி விட்டு அவரது மனைவியைக் கடத்தி வன்புணர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வேலணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட பெண்ணை அப்பகுதி முழுவதும் இரவிரவாகத் தேடிய பொலிஸாரும், பொது மக்களும் அதிகாலையில் காட்டுக்குள் இருந்து பெண்ணை மீட்டுள்ளனர். பெண்ணைக் கடத்திய - தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.கடத்தப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது பரிசோதனைகளின் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டது. யாழ். ஊர்காவற்றுறை, வேலணையில் நேற்றுமுன்தின…
-
- 2 replies
- 1k views
-
-
அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல் கண்ணாடிகள், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஆகியவற்றை அடித்து நொருக்கியுள்ளனர். அதனால் அச்சமடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவல குரல் எழுப்பினர். அதையடுத்து அயலவர்கள் ஒன்று கூட ஆயுத குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் குறித்து சுன்னாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்த…
-
- 0 replies
- 393 views
-
-
ஆயுதங்களும் வாகனங்களும் கைப்பற்று... மினுவாங்கொட உன்னாருவப் பிரதேசத்தில் இயங்கி வந்த பாதாள உலகத் தலைவர் சுசந்த பிரடி சில்வா எனப்படும் பிரடியின் படுகொலையுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுளளதுடன், மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, இன்று (04) தெரிவித்தார். (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்) - See more at: http://www.tamilmirror.lk/187447/ஆய-தங-கள-ம-வ-கனங-கள-ம-க-ப-பற-ற-#sthash.7t6qB5Mf.dpuf
-
- 0 replies
- 549 views
-
-
ஆயுதங்களை அகற்றித் தாக்குதலை நிறுத்த புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கண்காணிப்புக் குழுவிடம் வேண்டுதல். வாகரைப் பகுதியில் இருந்து ஆயுதங்களை அகற்றி படையினர் மீது தாக்குதலை நிறுத்தும்படி விடுதலைப் புலிகளுக்கு அழுத் தம் கொடுக்குமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தாம் கேட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவ்வாறு முடியாவிடின் இவ்விடயத்தை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும்படியும் தாம் கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்தார். கிழக்கில் தாக்குதல் நடக்கும் பகுதிக்கு செல்வதற்குப் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த இடங்களுக்கு செல்வதற்கான அனும…
-
- 0 replies
- 876 views
-
-
ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் ஏன் உக்ரேய்னில் மட்டும் வாங்க வேண்டும்?: ஐ.தே.க. [புதன்கிழமை, 6 யூன் 2007, 11:27 ஈழம்] [செ.விசுவநாதன்] ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் உக்ரேய்னில் மட்டுமே ஏன் வாங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலகத்தின் உதவியைக் கோர வேண்டும். அமெரிக்காவுடன் அரசாங்கம் தற்போது இரகசியமான முறையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டமைக்காக முன்னர் எம்மை விமர்சித்தவர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தது அமெரிக்காதான் என சந்தேகப்படுக…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆயுதங்களை இலங்கை வாங்கிக்குவிக்க இந்தியா ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் திடுக்கிடும் தகவல் "இராணுவத் தளபாடங்களை வாங்குவதற்காக இலங்கைக்கு இந்திய அரசு நூறு கோடி டொலர் (இலங்கைப்பணத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா) நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது.'' இவ்வாறு பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டியிருக்கின்றார
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆயுதங்களை ஏற்றிச்சென்ற கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் மீட்பு– மாலுமி இலங்கையர் என ஆவணம் தெரிவிப்பு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலொன்று இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக் கொடியுடன் இந்த கப்பல் பயணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிக்கிழமை காலி கடற்பரப்பில் வைத்து இந்தக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியுடன் பறந்த இந்த கப்பலில் 810 ஆயுதங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கப்பல் காலி துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும் விசாரணைகள் முடியும் வரையில் கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கு…
-
- 0 replies
- 386 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய தாக்குதல்களிலிருந்து கிராம மக்களையும், தம்மையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே கிழக்கு வாழ் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதாக மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களை களையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். பள்ளி வாசல் பேரவையின் ஊடாக ஆயுதங்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒப்படைக்குமாறு தாம் கிழக்கு இளைஞர்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வ…
-
- 0 replies
- 956 views
-
-
http://keetru.com/literature/interview/tamilnathy.php சென்று பாருங்கள்
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆயுதங்களை களைந்தால் பிரபாகரன் தேர்தலில் போட்டியிட முடியம் - ரோஹித்த: ஆயுதங்களைக் களைந்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான பிள்ளையானுக்கும், கருணாவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கரம் நீட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்கள் பிரபாகரனைத் தெரிவு செய்தால் அதனை அரசாங்கம் ஒருபோதும் நிராகரிக்காதென அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழீழம்: தமிழ் ஈழப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இலங்கைப் படையினருக்கு காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தமிழீழ எல்லாளன் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்: எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்திருந்த காலத்தில் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்…
-
- 2 replies
- 932 views
-
-
A key Tamil Tiger leader has spoken exclusively to Channel 4 News, saying their chief is still alive and they want a political solution. Alex Thomson reports. In an exclusive interview, LTTE Tamil Tigers head of international relations Selvarajah Pathmanathan said: - Tamil Tiger leader Velupillai Prabhakaran is in the beseiged zone with 2000 Tamil fighters - He spoke to by phone to Prabakharan for four hours and the orders to lay down arms came from him - This is not a surrender, they are laying down arms to protect 25,000 injured Tamils in the area - 3000 civilians have been killed in the area in the last 24 hours - The doctors who were spe…
-
- 2 replies
- 3k views
-
-
ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் நிராகரித்தனர் புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதாயின் ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர். இதுதொடர்பில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ரொய்ட்ரர் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் சமாதான பேச்சுவார்த்தையினை தொடர்வதற்கு படைவலுச்சமநிலையும் சமத்துவ நிலையும் அவசியமாகது எனவும் இதனைப் பாதிக்கும் எவற்றையும் மேற்கொள்ள தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் விடுதலைப்புலிகள் நோர்வேயின் விசேட சமாதான தூதுவர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறியபோது சிறீலங்கா அரசாங்கம் அதற்கு…
-
- 0 replies
- 874 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு கப்பல்கள் கடந்த சில வாரங்களில் ஆயுதங்களையும் மருத்துவ உபகரணங்களையும் தரையிறக்கியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு ஆய்வு இணையத்தளம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 584 views
-
-
ஆயுதங்களை பதுக்கி வைத்து, மாணவர்களை கைதுசெய்ய சூழ்ச்சி: இராணுவத்தைச் சேர்ந்த 160 பேரை அரசாங்கம் தயார் நிலையில் வைத்துள்ளது - மாணவர் ஒன்றியம் திகதி:08.11.2010 பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் ஆயுதங்களை வைத்து மாணவர்கள் பலரை கைதுசெய்யும் சூழ்ச்சியொன்று இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது. இந்த சூழ்ச்சியில் பிரிகேடியர் மனோ பெரேரா, பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார். இந்தப் பணியில் 160 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் பனாகொட இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது கம்பளைப் பிரதேசத்திலுள்ள இராணு…
-
- 0 replies
- 474 views
-
-
ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை 2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம் - அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த…
-
- 8 replies
- 3.2k views
-
-
சிறைச்சாலைகளில் உள்ள ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் சிறைச்சாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமாகக் காணப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும், பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி ரி 56 ரக துப்பாக்கிகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கடந்த 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 454 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைத்தால் பேசத் தயார் என்று சிறிலங்காவின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்ப தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-
-
ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பு…
-
- 7 replies
- 2.4k views
-