ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ரணில் புதிய பிரதமரானார். News that Ranil Wickremesinghe is the new prime minister has been largely met with dismay and disbelief in Sri Lanka. His appointment is being viewed as yet another arrogant response by President Gotabaya Rajapaksa to weeks of protests over rising prices and shortages. Mr Wickremesinghe is seen as being close to the Rajapaksa family, and many think he has been chosen because he will be likely to guarantee their security. Protests flared up in early April in the capital, Colombo, and have grown in size and spread across the country. People are furious…
-
- 3 replies
- 333 views
-
-
திருகோணமலை, கடற்படை தளத்தில்... மஹிந்த, உள்ளிட்ட குடும்பத்தினர் ? முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து குறித்த பகுதியை மக்கள் தற்போது முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1281102
-
- 9 replies
- 722 views
- 1 follower
-
-
‘எனது தந்தைக்கோ, எனக்கோ... நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை’ – நாமல் அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷலுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்” என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281629
-
- 4 replies
- 293 views
-
-
பிரதமர் பதவியை... ஏற்கத் தயார் – சஜித் பிரேமதாச, ஜனாதிபதிக்கு கடிதம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு இரண்டு வாரங்களுக்குள் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவி விலகினால் நாளை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தான் தயாராக உள்ளேன் என அந்தக் கடிதத்தில் அவர் தெரி…
-
- 1 reply
- 542 views
-
-
ரணிலை... பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை, தவறானது – ஓமல்பே சோபித்த தேரர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281640
-
- 0 replies
- 160 views
-
-
கோட்டாவை... பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக... பாரிய தொழிற்சங்க போராட்டம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை இராஜினாமா செய்யுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 438 views
-
-
மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன்... உள்ளிட்ட, 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கே இவ்வாறு…
-
- 0 replies
- 204 views
-
-
ஜனாதிபதி மீதான... நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து... 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதனையடுத்தே, திட்டமிட்டபடி மே 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, இந்த தீர்மானம்…
-
- 0 replies
- 108 views
-
-
இலங்கைக்கான... அனைத்து, அத்தியாவசியப் பயணங்களையும்... ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் அறிவிப்பு! இலங்கையில் மோதல்கள் வெடித்ததையடுத்து, இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சிங்கப்பூர் அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியான ஆ…
-
- 0 replies
- 177 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின்... விற்பனை விலை, 380 ரூபாயாக பதிவு! இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (வியாழக்கிழமை) 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1281596
-
- 0 replies
- 133 views
-
-
கோட்டாவின் கீழ்... எந்தவொரு பதவியையும், ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா! தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பொய்ப் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோட்டாபய ராஜபக்ஷ தலைமையி…
-
- 4 replies
- 310 views
-
-
இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடு ஸ்திரதன்மை அடைந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் இன்று உறுதி வழங்கியுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரை…
-
- 16 replies
- 753 views
- 1 follower
-
-
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து... வெளியேறினார் ஹரீன்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். இன்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281503
-
- 3 replies
- 235 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் May 12, 2022 இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் வீதியால் வருகை தந்த விசேட அதிரடிப்படையினரும் அங்கு நின்ற புலனாய்வாளர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முள்ளிவாய்க்…
-
- 0 replies
- 185 views
-
-
நினைவேந்தல் வாரம் May 12, 2022 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது https://globaltamilnews.net/2022/176547
-
- 0 replies
- 328 views
-
-
தாக்குதலில்... இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, நாமல் அனுதாபம் – வன்முறையை நிறுத்துமாறு... அழைப்பு! பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக, அமரகீர்த்தி அத்துகோரல. எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். வன்முறையை நிறுத்துவோம்” என பதிவிட்டுள்ளார். https://athavanne…
-
- 0 replies
- 227 views
-
-
பிரதமர் பதவியை, வழங்குவதற்கு... சரத் பொன்சேகாவுடனும், ஜனாதிபதி பேச்சு? பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து…
-
- 0 replies
- 194 views
-
-
பிரதமர் பதவிக்காக... மூவரின் பெயர்களை, பரிந்துரை செய்தது... மைத்திரி தரப்பு! பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 11 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவினால் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக இதுகுறித்த அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்றத்திலுள்ள சுயேட்சை எம்.பி.க்கள் குழுவினைச் சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1281509
-
- 0 replies
- 191 views
-
-
விசேட... கட்சித் தலைவர்கள், கூட்டம் இன்று! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையவழியூடாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதுடன், மூன்று முக்கிய விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது. பிரதமரை நியமிக்குமாறும், அமைச்சரவையை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்…
-
- 0 replies
- 164 views
-
-
அமைதியின்மையை... ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு... எதிராக சட்ட நடவடிக்கை! நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள்…
-
- 0 replies
- 128 views
-
-
ஊரடங்கு உத்தரவு தளர்வு – 2 மணிக்கு மீண்டும், அமுல்படுத்தப்படும்! நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. முன்னதாக நேற்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரையில் அது நீடிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்க…
-
- 0 replies
- 120 views
-
-
சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும்... மோதல் சூழ்நிலைகளில், ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு! சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மோதல் நிலைமைகளில் புலனாய்வுத்துறையினரின் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆக…
-
- 0 replies
- 122 views
-
-
5 மணி நேர மின்வெட்டுக்கு... பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அனுமதி! நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. பகலில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில்1மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,LP,Q,R,S,T,U,V,W இல் காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. M,N,O,X,Y,Z வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்ப…
-
- 0 replies
- 157 views
-
-
ஜனாதிபதி... இன்று இரவு 9 மணிக்கு, நாட்டு மக்களுக்கு... விசேட உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இன்று இரவு 9 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1281490
-
- 2 replies
- 393 views
-
-