ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர், அண்ணாமலை... யாழ். நல்லூர் கோயிலுக்கு விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை விஜயம் செய்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நல்லூர் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி, இன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற அவரை, யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279566
-
- 4 replies
- 397 views
-
-
காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகப்பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிப்பு காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயில் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (02) 24 ஆவது நாளாக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையிலேயே இன்று திங்கட்கிழமை காலையில் இருந்து குறித்த பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குறித்த பகுதியில் இதுவரை எவ்வித வன்முறைகள் இடம்பெற்றதாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை. இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளம…
-
- 3 replies
- 263 views
-
-
மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு Sayanolipavan ( துதி , சுதர்சன் ) தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச மேதின நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள மீனிசை பூங்காவில் நேற்று நடைபெற்றது. மேதின நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின பேரணியில் இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்,இலங்கை சமுர்த்தி கணிணி உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் இணைந்திருந்தன. இதன்போது மட்டக்களப்பு அரசடியிலிருந்து ஆரம்பித்த பேரணியானது கல்லடிப்பாலம் ஊடாக மீனிசைபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன. இலங்கை தமிழரசு…
-
- 0 replies
- 201 views
-
-
அரசுக்கு சார்பாக இருந்து பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சி.சந்திரகாந்தன் May 2, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாம் அரசுக்கு சார்பாக இருந்து எமது கடமைகளை நிறைவேற்றி தனி நபர் வருமானத்தை கூட்ட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசியாவிலே சனத்தொகை குறைந்ததும் அரசாங்க அதிகாரிகள் அதிகம் கொண்ட நாடு இலங்கையாகும். நாடு தரும் நல்ல விடயங்களை அனுபவிக்கும் அதேவேளை தீயவற்றையும் அனுபவிக்கவேண்டும். உலக நாடுகளிலும் இதே பிரச்சினை வந்துள்ள போதிலும் எமது நாட்டை சற்று அதிகம் தாக்கியுள்ளது. குண்டு வெடிப்பு தொடக்கம் தற்போதுவரை அனைவரும் சம்பளம் பெற்றனர். கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வரும் அபிவிருத்திகளை நாம்…
-
- 0 replies
- 150 views
-
-
நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை ; சுமந்திரன் எம் பி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். இன்று (02) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை காணப்படுகின்றது ப…
-
- 1 reply
- 310 views
-
-
எனக்கு... பிரதமர் பதவி, வழங்கப்பட்டது: நான்... அதை, ஏற்க மறுத்துவிட்டேன் – சஜித். இடைக்கால அரசாங்கத்தில் பங்குகொள்ளும்படி யாரேனும் என்னை செல்வாக்கு செலுத்த முயற்சித்தால், அவர்களின் பெயர்களை வெளிப்படுத்திவிட்டு வீட்டுக்குச் செல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “நாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும் பொது நிதியை கொள்ளையடித்தவர்களுடன் தொடர்புகொள்ளவும் விரும்பவில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சி அமைக்க மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அரசியலமைப்பு நெருக்கடியின்போது இது நடந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். மாற்ற…
-
- 1 reply
- 240 views
-
-
லிபியாவிற்கு.. இணையான நெருக்கடியாக மாற்ற, சிலர் முயற்ச்சி… சில குழுக்களும், குண்டர்களும்... பின்னணியில் என்கின்றார் விமல். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை லிபியாவிற்கு இணையான ஒன்றாக மாற்ற ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் பேசிய அவர், எந்த ஒரு ஆட்சி முறைமையும் இல்லாத நாடாக இலங்கை மாறுவதற்கு மக்கள் இடமளித்தால் ஒரு வரலாற்றுப் பிரச்சினை உருவாகும் என கூறியுள்ளார். மேலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் விடுத்த அழைப்பு, ஆட்சிக் கட்டமைப்பில் அரசியல் வெற்றிட…
-
- 1 reply
- 254 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை... பலர் வேண்டுமென்றே, மறைக்கிறார்கள் – பேராயர் தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை பலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவிர பலர் அறிந்திருந்தார்கள் என்றும் அதனை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அந்த மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும் சிலர் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பிய காரணத்தினால் மக்கள் பலியாக்கப்பட்டனர் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகவே ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அனைத…
-
- 0 replies
- 150 views
-
-
மஹிந்த.... பதவி விலகத் தயார் – புதிய பிரதமர், டலஸ்: டிலான் பெரேரா இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்குவதற்கு தானும் உடன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279532
-
- 1 reply
- 279 views
-
-
ஜனாதிபதி மாளிகையில்... இன்று, முக்கிய கலந்துரையாடல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது. https://athavannews.com/2022/1279518
-
- 0 replies
- 179 views
-
-
பாரிய கண்டனத்தை பெற்ற... முதலாவது அரசாங்கம், இதுவே – திஸ்ஸ நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேதின பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ச்சியாக கோஷமிட்டுவரும் நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் போராட்டங்கள் பலனளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இதனை அடுத்து சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 163 views
-
-
அரசியல் கட்சிகள் இன்றி... கோட்டா கோ கமவில், மேதினக் கூட்டம் – அலையெனத் திரண்ட மக்கள்..! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடல் போராட்டக்களத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி மேதினக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி, கருப்பு கொடிகளை ஏ…
-
- 0 replies
- 140 views
-
-
"ஆவா குழுவை" சேர்ந்த... 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!! வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1279475
-
- 0 replies
- 209 views
-
-
மற்றுமொரு... வர்த்தமானி அறிவித்தலினை, மீளப்பெற்றது... அரசாங்கம்! மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279446
-
- 0 replies
- 141 views
-
-
ஜனாதிபதிக்கு, எதிரான போராட்டத்தினை... நாமே ஆரம்பித்து வைத்தோம் – இரா.சாணக்கியன்! தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று காலை மரண வீடு ஒன்றிற்கு சென்றிருந்த போது தாய் ஒருவரை சந்தித்து பேசினேன். அவர் …
-
- 0 replies
- 127 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் – எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279402
-
- 0 replies
- 133 views
-
-
டொலர் நெருக்கடியால்... விமானங்களை, மட்டுப்படுத்த தீர்மானம் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன . இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை மட்டுப்படுத்துகின்றன என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனதன் விளைவுகள் இவை எனவும் சுட்டிகா…
-
- 0 replies
- 241 views
-
-
அமைச்சு பதவிகளுக்காக... நாம் பேரம் பேசவில்லை – செந்தில் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அசைத்து விடவும் முடியாது, அழித்துவிடவும் முடியாது என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே செந்தில் தொண்டமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று முதல் இன்றுவரை கொள்கை அடிப்படையிலேயே காங்கிரஸ் பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸின் உயரிய தலைவர்கள் காட்டிய வழியில் இருந்து நாம் மா…
-
- 0 replies
- 156 views
-
-
2 மாத கைக்குழந்தையுடன்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்! வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 5 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர். வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரே ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து …
-
- 0 replies
- 258 views
-
-
நாட்டில் இன்று... விசேட, பொது விடுமுறை தினம் நாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தொழிலாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில் கொண்டாடப்பட்டிருந்ததால் இன்று விசேட பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279496
-
- 0 replies
- 221 views
-
-
இலங்கையை... பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீட்டெடுப்பதற்கு இந்தியாவும்... போராடுகிறது – அண்ணாமலை இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உல…
-
- 0 replies
- 131 views
-
-
பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும் நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான எரிபொருள் பௌசர்களே இருப்பதாகவும் எரிபொருள் பௌசர்கள் நாளை முதல் இயங்காது என்றும் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கத் தவறியமைக்கு எதிராக இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. தனியார் எரிபொருள் பௌசர் உர…
-
- 0 replies
- 356 views
-
-
கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் – சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ் தேசிய மேநாள் நிகழ்வு பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை பிற்பகல் 3.30 மணியளவில் அடைந்தது.நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். …
-
- 2 replies
- 263 views
-
-
பிரதமர் பதவி தொடர்பாக... ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை, ஏற்க தயார் – மஹிந்த பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த தேரர்கள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்த…
-
- 3 replies
- 428 views
-
-
அலரிமாளிகைக்கு... முன்பாக, நடுவீதியில் மக்கள் போராட்டம்! அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1279368
-
- 1 reply
- 277 views
-