Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published on 2022-03-20 13:56:28 பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றைய தினம் வருகைதந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர். நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் …

  2. Published on 2022-03-20 20:00:02 நேர்காணல் ரொபட் அன்டனி உலகில் எங்குமே மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் சில விடயங்களில் முரண்பாடுகள் இருக்கும். கப்பல் மூழ்கி விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி அதிகரிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமற்ற நிபந்தனைகளை அரசு நிராகரிக்கும் நான் ஜோதிடம் கூறமுடியாது. ரூபாவின் பெறுமதியை மிதப்பதற்கு இடமளித்து இருக்கின்றோம். எனவே டொலர் வருகை அதிகரிக்கும் என நம்புகிறோம். அத்துடன் டொலர் வருகைக்கு மேலும் பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதனூடாக மக்கள்…

  3. அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? – செல்வம் எம்.பி.கேள்வி ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். …

    • 0 replies
    • 242 views
  4. எரிபொருள் வரிசைகளுக்கு இவ்வாரம் முடிவு எரிபொருள் வரிசைகள் இவ்வாரம் முடிவுக்கு வருமென தெரிவிக்கும் அமைச்சர் காமினி லொக்குகே, அதிகளவில் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்வதே எரிபொருள் தட்டுப்பாட்டுக்குக் காரணமெனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் பவுசர்கள் ஊடாக நேற்றும் (19), இன்றும் (20) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் வரிசைகள் குறையும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் வரிசைகளுக்குக் காரணம் எரிபொருள் விநியோகத்தை விட எரிபொருளை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே. எரிபொருளை வாகனங்களுக்கு நிரப்பிக்கொள்வதைவிட பெரள்களிலேயே அதிக…

    • 0 replies
    • 243 views
  5. இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம் இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா இன்று (20) காலை பதுளை தபாற் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.வ…

    • 0 replies
    • 299 views
  6. தேசப்பற்று குறித்த பொய்யான போலியான கதைகள் மூலம் அரசாங்கம் நாட்டை அழிக்கின்றது தேசப்பற்று குறித்த பொய்யான போலியான கதைகள் மூலம் அரசாங்கம் நாட்டை அழிக்கின்றது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்திடம் அரசாங்கம் உதவியை பெற்றால் தான் பதவி விலகுவேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்,அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியுள்ளது வாசுதேவ நாணயக்கார இன்னமும் பதவி வகிக்கின்றார் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தற்போதைய நெருக்கடிகளிற்கு நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறு முயல்கின்றார் ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் உணவும் ஏனைய பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டன என அவர் குறிப்பி;ட்டுள்ளார். …

    • 0 replies
    • 170 views
  7. இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக்கப்பல்கள் இலங்கை வருகை நட்புறவு பாலங்களை கட்டியெழுப்பும் இந்திய கடற்படையின் பெரு முயற்சியின் தொடர்ச்சியாக 2022 மார்ச் 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 5 பாய்மரக்கப்பல்கள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தன. சுதேசிய முறையிலான இப்பாய்மரக்கப்பல்களில் மாதே, தரிணி, புள்புல், கடல்புறா மற்றும் ஹரியால் உள்ளிட்டவை அடங்குகின்றன. இலங்கை கடற்படைக்கு சமுத்திரத்தில் பாய்மரக்கப்பலோட்டும் பயிற்சிகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் நோக்குடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது. 2022 மார்ச் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் இக்கப்பல்கள் திருகோணமலையில்…

    • 0 replies
    • 199 views
  8. யுத்தம் காரணமாக... மூடப்பட்ட, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு... சென்றார் பிரதமர் மஹிந்த! யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் எஞ்சிய கட்டிடங்களை எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. எனினும் 80 வீதமான கட்டிடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என பிரதமரின் விஜயத்தின் போது தெரியவந்துள்ளது. அதன்படி காங்கேசன்…

  9. சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள... கூட்டமைப்பு தீர்மானம், பிரதான எதிர்கட்சிக்கு அழைப்பு கிடைக்கவில்லையாம் ! எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், புதன்கிழமை நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியும் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார். இதேவேளை, இந்த மா…

  10. உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி... உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ ! 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோவின் விலை 1,856 ரூபாயில் இருந்து 2,840 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1,359 ரூபாய் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 5 கிலோ சிலிண்டரின் விலையை 544 ரூபாயால் அதிகரித்து புதிய விலை 1680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 2 கிலோ சிலிண்டர் 672 ரூபாயாகவும் விற்பனை செய்ய லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் லிட்ரோ எரி…

  11. வடக்கு மக்களை பாதுகாத்து... அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துகின்றோம் – பிரதமர் மஹிந்த கடந்த காலத்தை போன்றே வடக்கு மக்களை இன்றும் பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதன்படி வடக்கில் அபிவிருத்தி பணிகளை விரிவுப்படுத்த ஜனாதிபதியும், அரசாங்கம் பொறுப்புடன் செய்யப்பட்டுவருவதாகவும் கூறினார். இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தினர் மத்தியில் வரலாற்று காலம் முதல் நல்லுறவு பேணப்பட்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கில் சிதைவடைந்த நி…

  12. போராட்டத்திற்காக யாழ். நோக்கி சென்றவர்கள் பொலிஸாரால் தடுப்பு யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்வத…

    • 2 replies
    • 261 views
  13. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்தது - இலங்கை மத்திய வங்கி (இராஜதுரை ஹஷான்) நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்ததாக அமையும் என வலியுறுத்தி அரசாங்கத்திடம் விசேட பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணசர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது அவசியமற்றது என ஆரம்பத்தில் குறிப்பிட்டதை ஏற்ற…

  14. எண்ணெய் கப்பலுக்கு செலுத்த வேண்டிய டொலர்களை விநியோகிக்க வங்கிகள் உடன்படவில்லை - வலுசக்தி அமைச்சு கவலை (இராஜதுரை ஹஷான்) நாட்டின் கடற்பரப்பில் கடந்த 6 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள எண்ணெய் கப்பலுக்கு செலுத்த வேண்டிய 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை விநியோகிப்பதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எண்ணெய் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் தரையிறக்கல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பொது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் நாட்டுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 4 எண்ணெய் கப்பல்கள் வருகை தர வேண்டும் என பொருளாதார நிபு…

  15. ஒரு கப், பால் தேநீரின் விலை... 100 ஆக அதிகரிப்பு, உணவகங்களில் பால் தேநீர் விநியோகம் நிறுத்தம் !! ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், உள்ளூர் பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள…

  16. இலங்கை முழுவதும் உணவகங்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ளதாக தகவல் March 20, 2022 சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடித்து வருவதனால் இலங்கை முழுவதும் உணவகத் தொழிலில் ஈடுபட்டுவதந்த சுமார் 5 இலட்சம் பேர் வேலையிழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றமை அத்துறைசார்ந்தவர்களுக்கு வேலையிழப்பு, வருமானமிழப்பு ஏற்படுவது ஒருபுறமிருக்க சாதாரண மக்களையும் இது பாதிக்கவே செய்கிறது. அதிகரித்த விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் உணவகங்களையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. இவை ஒருபுறமிருக்க எரிபொருளுக்கான விலையும் அதிகரித்து வர…

  17. புதுக்குடியிருப்பு மாணவர்கள் கடத்தல் சம்பவம் – நடந்தது என்ன- பொலிசார் விளக்கம்! முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் மாணவர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது உண்மை தகவல் தெரியவந்துள்ளது. மாணவர்கள் நேற்று(19.03.2022) மாலைநேர வகுப்பிற்கு செல்வதாக சொல்லிவிட்டு புதுமாத்தளன் கடற்கரைக்கு சென்றுள்ளார்கள். அங்கு போதை பாவனைக்கு உள்ளான மாணவர்களே வீதியில் வீழுந்துள்ளார்கள். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர்கள் உடன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள். மாணவர்கள் பெற்றோருக்கு ஒரு தகவலை வழங்கிட்டு மாலைநேர கல்விக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று ஞாயிற்று…

  18. நல்லூரை தவிர்த்து மாவிட்டபுர கந்தனை வழிபட்ட பிரதமர் மஹிந்த – இறுதி நேரத்தில் மாற்று ஏற்பாடு! பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார். நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளும் மூடப்பட்டு காணப்பட்டது. ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி கோவில் வீதி என்பன பொலிசாரினால் வழிமறிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப…

  19. நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை கௌரவ பிரதமர் வழங்கி வைத்தார் அன்றும் வடக்கு மக்களை பாதுகாத்த நாம், அந்த மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (19) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். யாத்ரீகர்களுக்குத் தேவை…

    • 2 replies
    • 660 views
  20. எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் கூறும் காரணங்கள்! 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரினால் லிட்ரோ நிறுவனம் தற்போது 2,000 ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே இதனைத் தெரிவித்துள்ளார். "12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டருக்கு நிகர இழப்பு 2,000 ரூபாய். அதுதான் இன்றைய நிலை. அதிகரிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் எரிவாயு சிலிண்டரின் செலவு12.50 ரூபாய் அதிகரிக்கிறது." " மார்ச் ஒப்பந்த அடிப்படையில் நாங்கள் மற்றொரு எரிவாயு கப்பலை வாங்கினால் அது லிட்ரோ நிறுவனத்தின் இறுதி பயணமாகும்." "லிட்ரோ நிறுவனம் இந்த விலையின்…

    • 0 replies
    • 316 views
  21. போராட்டத்தை அடுத்து.... கந்தரோடை விகாரைக்கு செல்லும், திட்டத்தை கைவிட்டார் பிரதமர் மஹிந்த ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார். கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீடிரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை இரத்து செய்தார். இதனை அடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கிருந்து…

    • 1 reply
    • 344 views
  22. நல்லூருக்கு வருகை தரும் மகிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு! March 19, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் நல்லூர் ஆலய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஆகியன இணைந்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில், இலங்கை பிரதமர்…

  23. இலங்கை பொருளாதார நெருக்கடி: தடைப்பட்ட காகித இறக்குமதி, வினாத்தாள் அச்சடிப்பதில் சிரமம் - ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை தற்போதே பாதிப்பை நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கடதாசி (பேப்பர்) இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை தேர்வுகளை நடத்துவதில் அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர். கடதாசி தட்டுப்பாடு காரணமாக, தேர்வு வினாத் தாள்களை அச்சிட முடியாத நிலைக்கு இலங்கை…

  24. ஜனாதிபதி செயலகத்திற்கு, முன்பாக... பதற்றம்! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athava…

  25. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின், விலை... 600 ரூபாயால் அதிகரிப்பு !! எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 260 ரூபாயினாலும் 01 கிலோகிராம் பால் மா பொதியின் விலை 550 முதல் 600 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி 01 கிலோகிராம் பால் மா பொதியின் புதிய விலை சுமார் 1845 ரூபாயாக இருக்கலாம் என்றும் 400 கிராம் பக்கெட்டின் விலை 800 ரூபாயாக இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகரிப்பு குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலையை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.