ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142887 topics in this forum
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை ! இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் காணப்படும் அசமந்தப்போக்கே தமது விசனத்திற்கு காரணம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். 49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இராணுவமயமாக்கல், இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார். இருப்பினும் பயங்…
-
- 1 reply
- 222 views
-
-
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!! இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலாத்துறையின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்பார்த்தபடி, இலங்கைக்கு வரும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2022/126…
-
- 0 replies
- 203 views
-
-
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் தொலைபேசியில் ,இலக்கம் இருந்தமையால் 20 மாதங்கள் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் February 26, 2022 இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் தமது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை மற்றும் அவரது தொலைபேசியில் தமது திருமண அழைப்பிதழ் இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக தான் தமது கணவன்மார் கைது செய்யப்பட்டனர் என சிறையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர். யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களின…
-
- 0 replies
- 260 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு எதிராக போராட தீர்மானம்! February 25, 2022 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். வலி தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. அதன் போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இடை…
-
- 0 replies
- 281 views
-
-
எரிபொருள் கொள்வனவிற்கு முன்னுரிமை வழங்கி தடையின்றி டொலரை வழங்குங்கள் - ஆலோசனை ஜனாதிபதி (இராஜதுரை ஹஷான்) எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், எரிபொருள் கொள்வனவிற்கு முன்னுரிமை வழங்கி அதற்கு தேவையான டொலரை தடையின்றி விநியோகிக்குமாறும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நிதியமைச்சருக்கும்,மத்திய வங்கியின் ஆளுநருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கை மின்சார சபை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவை தொகையை அரச திறைச்சேரி ஊடாக செலுத்தவும் ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.எரிபொருள் விலையேற்றம் குறித்து எவ்வித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை. மின்னுற்பத்தி மற்றும் எரிபொருள் கொள்வனவ…
-
- 1 reply
- 242 views
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் இலங்கையை சாடுவதாக வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு! இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான …
-
- 2 replies
- 307 views
-
-
வடக்கு ஆளுநருக்கு எதிராக வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம்! February 24, 2022 யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதன் போது, பிரதேச சபை உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தார். அதனை சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன் அதற்கு அவர் …
-
- 4 replies
- 465 views
-
-
(நா.தனுஜா) உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்றும் ஏனைய நாடுகள் இதனைப் பின்பற்றுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு அளவிலான படையெடுப்பிற்கு சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பொது கட்டமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் இணக்கப்பாட்டுடன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள …
-
- 3 replies
- 419 views
-
-
தற்போது இலங்கை வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0032.jpg உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0031.jpg ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனியர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
- 4 replies
- 555 views
-
-
நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் February 23, 2022 நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பகல் 12மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. https://globaltamilnews.net/2022/173332
-
- 7 replies
- 798 views
-
-
இந்தியாவுக்கு மீண்டும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் பசில்! நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய அவர்கள் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமையன்று) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்ததாக தெரிவித்த அரசாங்கம், இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு மீண்டும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1268495
-
- 6 replies
- 357 views
- 1 follower
-
-
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் ; அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் (சி.எல்.சிசில்) கலப்பு தேர்தல் முறையும் புதிய தேர்தல் முறையும் அமையும் வரை பழைய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண சபைகளை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட…
-
- 0 replies
- 185 views
-
-
உக்ரைனில்... அதிகரித்து வரும், வன்முறைகள் குறித்து இலங்கை கவலை! உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு, அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் விரோதங்களை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2022/1269…
-
- 2 replies
- 267 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்…
-
- 0 replies
- 177 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) உக்ரேன், ரஷ்யா மோதல் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான யுத்த நிலை காரணமாக, அதனால் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு எற்படும் பாதிப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்போகின்றது. எமது ஏற்றுமதியில் நுற்றுக்கு 1.49 வீதம் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று ரஷ்யாவுக்கு எமது ஏற்றுமதி வீதம் நூற்றுக்கு 9.57மாகும். சில நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க முயற்சிக்கின்றன. இவ்வாறான நிலையில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும…
-
- 6 replies
- 472 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 'பறிக்காதே பறிக்காதே காணிகளை பறிக்காதே ' என சபைக்குள் கோஷல் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில்இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த தமிழ் தேசியக்கூட்…
-
- 1 reply
- 305 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். அத்துடன் இப்போதுள்ள நிலையில் 92 ரக பெட்ரோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெட்ரோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கைவசம் உள்ளது. எனினும் எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கும். மேலும் ஆறு நாட்களுக்கு தேவையான டீசல் இப்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. எனினும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான த…
-
- 0 replies
- 243 views
-
-
Published by T. Saranya on 2022-02-24 15:28:30 (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் வனவள பாதுகாப்பு எனத் தெரிவித்து இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். எனினும் இதுவரையில் காணி அபகரிப்பு நிறுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்டமாக ஆரம்பித்துள்ள போராட்டத்தினை வடக்கு, கிழக்கிலும் பாரியளவில் தொடர்வோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அ…
-
- 0 replies
- 239 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-24 21:50:43 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல…
-
- 0 replies
- 177 views
-
-
யுத்தகாலத்தில் வடகிழக்கில் இருந்த நிலை இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைப் போல மிக விரைவில் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலிலும் ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து இடங்களிலும் வெற்றியை பெற்றுக் கொள்வது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் பாரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.அதே போன்ற ஒரு வெற்றியை இலங்கையில் அடுத்து வருகின்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றி பெறும் அந்த காலம் மிக தூரத்தில் இல்லை. இன்று…
-
- 9 replies
- 670 views
- 1 follower
-
-
நாடாளுமன்றில்... டோர்ச் லைட்களுடன், எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்! ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை (torches) கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையை அடுத்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2022/1268837
-
- 1 reply
- 200 views
-
-
உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில், உன்னிப்பாக... அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெ…
-
- 14 replies
- 722 views
-
-
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா -யாழ் நிருபர்- யாழ் தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது . இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன். யாழ் மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில், அதிலும் பெ…
-
- 8 replies
- 831 views
- 1 follower
-
-
யுத்தக் குற்றத்தில் இராணுவமும் ஈடுபட்டிருக்கலாம்! February 24, 2022 யுத்தக் குற்றத்தில் இராணுவ வீரர்கள் சிலர் ஈடுபட்டிருக்கலாமென தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (23.02.22) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்களும் எதுவும் அரசாங்கத்திடம்…
-
- 1 reply
- 311 views
-
-
நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிப்பு ; நாட்டில் முதலீடு செய்வதற்கு யார் முன்வருவார்கள்? - ரோஹினி கவிரத்ன (நா.தனுஜா) உள்நாட்டு கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கும் அவற்றை ஊக்குவிப்பதற்கும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார். ஆனால் நாளொன்றில் சுமார் நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்படும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு யார் முன்வருவார்கள்? அத்தோடு இறக்குமதிகளும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்…
-
- 0 replies
- 178 views
-