Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமர் வீட்டுக்கு முன்பாக... கைதான 12 பேரும், பிணையில் விடுவிப்பு ! தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டிருந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் அதிகளவான போராட்டக்காரர்கள் தங்காலை நகரில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர். இதன்போது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்களை மேற்கொண்டபோதும் சிலர் கார்ல்டன் இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதன்போது பொலிஸார் 12 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1275024

  2. ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து... ஜீவன் தொண்டமானும், இராஜினாமா? இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கி இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த சந்தேகம் உள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தான் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொ…

  3. இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - அண்மைய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சாலைகளில் பலகைகளை எரிக்கும் போராட்டக்குழுவினர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி அரசு அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தொடங்கியிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சியினர் யாரும் ஆதரவளிக்கவில்லை. இலங்கையில் என்னெவெல்லாம் …

  4. அவன் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், குடும்பமும் நாட்டை விட்டுத் தப்பியோட்டம் மிதக்கும் ஆயுதக் கப்பல் ஒன்றினை நடத்திவந்தவரும், தனியான ராணுவத்தைக் கூலிக்கு அமர்த்தி பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தவருமான நிசங்க சேனாதிபதியும் அவரது குடும்பமும் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மாலைதீவுகளுக்கு தப்பியோடியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கோத்தாபாயவின் நெருங்கிய சகாவான நிசங்க, முன்னர் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும், இறுதியுத்தத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவு ஆயுதங்ககளை இவரூடாகவே கோத்தாபய விற்று வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. கோத்தாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான செயற்பாடுகளில் அதிகம்…

  5. இரவாகியும் இடம்பெறும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் ! நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையை அடுத்து மக்களின் அரச எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய அரசியல்வாதிகளை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், சுதந்திர சதுக்கம் போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதைவிட கண்டி, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, பிலியந்தலை பகுதியில் அமைந்துள்ள காமினி லொக்குகேயின் வீட்டுக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்…

  6. 113 எம்.பிக்களுடன் வந்தால்... அரசாங்கத்தினை, கையளிக்க தயார் – அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி! 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274929

  7. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடி சந்திவரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று (04) திகதி ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு எதிரான பேராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து ஒன்றிணைந்த மாணவர்கள் கோட்டா வீட்டுக்கு போ, மின்சாத் தடை எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தி ஜனாதிபதி உ…

  8. ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு! இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/125263

  9. ஜனாதிபதியை... சந்தித்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.. ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். நேற்றைய தினம் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ. காவின் திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. மலையக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இ.தொ.கா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனமை குறிப்பிடதக்கது . இதேவேளை அ…

    • 1 reply
    • 236 views
  10. 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன் இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார். ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங…

  11. சமல் ராஜபக்ஷவின்... வீட்டினையும், சுற்றி வளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்! திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1274899

  12. ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை... நிராகரித்தது, எதிர்க்கட்சி! தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் கட்சி ஒருபோதும் உடன்படிக்கையை ஏற்படுத்தவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என தெரிவித்தார். கோட்டா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள், என்றும் அந்த போ…

  13. அமெரிக்காவிலுள்ள, கோட்டாவின் மகனின்... வீட்டுக்கு, முன்பாகவும் ஆர்ப்பாட்டம்! அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274851

  14. புதிய அமைச்சரவை... புதிய போத்தலில், உள்ள பழைய மது – கம்மன்பில புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் இதை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது என்றும் அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே தமது கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274837

  15. புதிய அமைச்சர்கள், நியமனம் – நிதியமைச்சராக அலி சப்ரி..! அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுள்ளார். அத்தோடு, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். குறித்த நால்வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் …

    • 8 replies
    • 489 views
  16. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸாரின் தாக்குதலில்... உயிரிழப்பு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது! மிரிஹானவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயிருந்தன. இதற்கு பொறுப்பு கூறும் முகமாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போராட்டத்தின் போது பொலிஸாரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பொலிஸாரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட…

  17. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின்... போராட்டம் பலாலி வீதி வீதியிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி நகர்கின்றது! யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு கோரியே பல்கலைகழகம் முன்பாக இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த போராட்டம் தற்போது பலாலி வீதி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்வதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார் https://athavannews.com/2022/1274766

  18. மஹிந்த ராஜபக்ஷவின், இல்லத்திற்கு முன்பாக... தொடரும் போராட்டம்! தங்காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள முதல் தடை அரண்களை (barricades) உடைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ………………………………………………………………………………………………………………………………………………….. தங்காலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாட்டின் பெரு…

  19. அரசுக்கு... எதிராக, நாடளாவிய ரீதியில்... தொடர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன. அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய போராட்டங்களில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவொன்று இன்று காலை கொழும்பு நெலும் பொகுண திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஹோமாகம நகரிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சுதந்திரக் கலைஞர்க…

  20. பதவியை.. இராஜினாமா செய்தார், மத்திய வங்கியின் ஆளுநர். மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள சூழலில், இன்று தான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார். https://athavannews.com/2022/1274789

  21. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய தேசிய நெருக்கடிகளுக்குத் தீர்வுக்காணும் முகமாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் காரணமாகவே தற்போதைய தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ச…

  22. ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்திருந்தனர். இதனையடுத்து, அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு பிரதமரும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1274760

  23. இலங்கை புதிய அமைச்சரவையில் சேர அனைத்து கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடியை சமாளிக்கத் தவறியதாகக் கூறி கொழும்பில் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர்கள் இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை அவரது ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ளது. …

  24. யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் April 4, 2022 யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். https://globaltamilnews.net/2022/175010

  25. இடைக்கால அரசாங்கத்திற்கு... உடன்பட, சஜித் மறுப்பு! இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்ததை அடுத்து அவர் ருவிட்டரில் இந்த விடயம் குறித்து பதிவிட்டுள்ளார். இடைக்கால அரசு என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என தெரிவித்துள்ள அவர், புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும் வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274740

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.