ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசலையில் ஒரு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மருத்துவ முகாமில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 71 மாணவர்களுக்கு பார்வை பிரச்சினை இருப்பதாக பரிசோதனை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்தது. இதுவே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பாடசாலையில் கண் பரிசோதனை நடந்ததன் பின்னணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஒரு உயரதிகாரி மற்றும் கலாச்சார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் தர்மபுரம் பிரதேசத்தில் கலைஞர்கள், மதகுருமார்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று இடம்பெற்ற போது அதில் மேற்குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்…
-
- 1 reply
- 419 views
-
-
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்நோக்காத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலர் இந்த நெருக்கடியை அடையாளம் காணவில்லை. நெருக்கடியை அடையாளம் காணாது அதற்கு தீர்வு காண முடியாது. கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி என பலர் கூறுகின்றனர். இது உலக நெருக்கடி என்கின்றனர். இது பொய். இலங்கை வரையறைகள் இன்றி கடனை பெற்றதே இந்த நெருக்கடிக்கு காரணம். கடன் பொருளாதாரம். நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவத…
-
- 9 replies
- 749 views
-
-
சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள் . தமிழீழ விடுதலைப் புலிகள் February 2, 2022 மதிப்புக்குரிய தமிழீழ மக்களே ! மாசி 4ம் திகதி, ஈழத் தமிழர்களாகிய நாம் காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட அவலத்தின் ஆரம்ப நாளாகும். இதனால் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த நாளை தமிழீழத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் கரிநாளாக தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள். பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை விடுதலைக் காற்றைத் தமிழ் மக்கள் சுவாசித்ததே கிடையாது. ஏறத்தாழ 442 ஆண்டுகள் காலனித்து…
-
- 25 replies
- 1.5k views
-
-
நெற்றிக்கண் | 05.02.2022 | 13வது திருத்தம்: புலிகள் ஏற்றுக்கொண்டனரா? https://fb.watch/a-EYOC2vcH/
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 30 ஜனவரி 2022, 13:01 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PIB INDIA இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன – வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் தெரிவித்த கருத்து தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். எனவே, அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சலுகையை இலங்கை இழந்…
-
- 1 reply
- 281 views
-
-
"தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவோம்" - கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் - டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம் ரஞ்சன் அருண் பிரசாத் (யாழ்ப்பாணம்), பிரபுராவ் ஆனந்தன் (நாகப்பட்டினம்) பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், மீனவர்கள் கோ…
-
- 14 replies
- 919 views
- 1 follower
-
-
ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்குப் பயணம் – மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு! வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதுக் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/12656…
-
- 0 replies
- 194 views
-
-
சிறீலங்காவின் 74வது தேசிய சுதந்திர நாள் விழா சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அதில் பல்வேறு விதமான அணிவகுப்புகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்றவற்றில் ஒன்றுதான் 'சிறீலங்காவின் போர் நாயகர்கள்' என்ற முகப்புப் பதாகை தாங்கிய முன்னாள் சிங்களப் படைவீரர்கள் அமர்ந்திருந்த மூதறிவர் ஊர்தி(Veterans Vehicle). இவ்வூர்தியில் சிங்களத்தின் தமிழர் தாயக (தமிழீழம்) வல்வளைப்பின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பதாகைகளாக அடிக்கப்பட்டு ஊர்தியின் இரு மருங்கிலும் பூட்டப்பட்டிருந்தன. அந்நிழற்படங்களில் ஒன்றாக 02|09|2008 அன்று வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்…
-
- 0 replies
- 787 views
-
-
இலங்கைத்தீவின் அமைதி என்பது தமிழர்களுக்கான பரிகாரநீதியில் தங்கியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா தனது சுதந்திரநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இலங்கைத்தீவின் முழுஅமைதி என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பரிகாரநீதியில் தங்கியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் சுதந்திரநாளை, கரிநாளாக தமிழர்கள் எப்போதும் பார்ப்பதானது, இலங்கைத்தீவில் இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது எனவும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்நாள் தொடர்பில் தெரிவிக்கையில…
-
- 0 replies
- 233 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியிருப்பதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்…
-
- 1 reply
- 501 views
-
-
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை - சிரிக்கும் மனோ! " அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாவலப்பிட்டி கெட்டபுலா உச்சிமலை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (05) இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், " இந்த நாட்டிலே விஷயம் புரியாத…
-
- 0 replies
- 261 views
-
-
கட்டுவன் மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டார் (எம்.நியூட்டன்) அடாத்தாக அமைக்கப்படும் கட்டுவன் மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பாதையில் 400 மீற்றர் பாதையை அபகரித்துள்ள படையினர் வீதியை விட மறுத்து தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் ஊடாக தற்போது பாதை அமைக்கும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டதோடு சட்டப்படி சுவீகரிக்காது நில உரிமையாளரின் சம்மதம் இன்றி அவர்களி…
-
- 0 replies
- 206 views
-
-
வாழ்வுரிமைக்கே எமது போராட்டம் தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல! மீனவர் சமூகம் அறிக்கை February 5, 2022 “எமது போராட்டம் எமது வாழ்வுரிமையை பாது காப்பதற்கே. இது தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல” என்று கடந்த ஐந்து நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் நடத்திய பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர் சமுதாய அமைப்பு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்கள், அதில் தெரிவித்தவை வருமாறு, “வட பகுதி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இந்திய படகுகளால் கடல் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. எமது த…
-
- 0 replies
- 160 views
-
-
முள்ளிவாய்க்காலில் “சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்” போராட்டம்! AdminFebruary 4, 2022 சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வடக்கு கிழக்கு வமௌஏஏலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கி செல்கிறது குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல்…
-
- 0 replies
- 190 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்! இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று(வியாழக்கிழமை) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை…
-
- 1 reply
- 201 views
-
-
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாது – பொன்சேகா ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார நிபுணர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு ஊழலற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தனது செயற்பாடுகளை தொடர முடியாது எனக் கூறியே பதவியை இராஜினாமா செய்தார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார். மேலும் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்தவர்கள் நாட்டில் இருந்தாலும் ஊழல் நிறைந்த சூழலில் அவர்க…
-
- 0 replies
- 109 views
-
-
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அதிரடி அறிவிப்பு வெளியானது தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி குறித்த வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 109 views
-
-
Published by J Anojan on 2022-02-02 07:45:13 (ஜெ.அனோஜன்) கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. அத்துடன் 2022 31 ஜனவரி திகதியிடப்பட்ட “கருப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை வாங்கினோம்’ – அமைச்சர் பசில் ஆர்” என்ற தலைப்பில் முன்னணி இணையதளத்தில் வெளியான செய்தியின் மீது வெளியுறவு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது அமைச்சரவை சகாவுடன் பேசியதாகவும், குறித்த செய்தியில் தமக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளவும் நிதியமைச்சர…
-
- 5 replies
- 613 views
-
-
வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் – பிரதமர்! வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம். ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் …
-
- 2 replies
- 283 views
-
-
நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஷ! தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் மத, ஊடக சுதந்திரம் இருக்கின்றது. கருத்து சுதந்திரம் இருக்கின்றது. பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது. அரசியல், பொருளாதாரம் நாட்டில் பலமாக இருக்க வேண்டும். நாட்டின் தலைவர் ஒருவர், பிரச்சினைகளை தினசரி எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஒரு இலக்கை நோக…
-
- 2 replies
- 375 views
-
-
2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் கவலையளிப்பதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை திருமதி. சற்குணநாதனின் சாட்சியம் முற்றாகப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்ந…
-
- 1 reply
- 354 views
-
-
இரா. சம்பந்தனின் அவசர கடிதம்! ஜெனீவாவிற்கு பறந்தது! February 3, 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதரக உயர் ஸ்தானிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த 31ஆம் திகதியன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். மேன்மை தாங்கியீர், 46/1 தீர்மானத்தின் ஏற்பாடுகளுக்கமைய மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் மேற்கொள்ளப்படும் எழுத்துமூல விளக்கத்திற்குப் பின்னர் இலங்கையின் நிலமை ஆராயப்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ((U.N.H.R.C) 49வது கூட்டத்தொடருக்கான ஒரு முன்னோடியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருக்கும் மிகப் பெரிய தமிழ் அரசியல் கட்சியின் …
-
- 3 replies
- 407 views
-
-
தொடர்ந்தும் ஒட்சிசனை வழங்க வேண்டிய நிலையில் பெரும்பாலான கொவிட் தொற்றாளர்கள் Published by T. Saranya on 2022-02-03 19:47:24 (எம்.மனோசித்ரா) தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான தொற்றாளர்களுக்கு தொடர்ந்தும் ஒட்சிசனை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபணர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்தார். நாட்டில் தற்போது பிரதான வைரஸாக ஒமிக்ரோன் காணப்படுகிறது. கொழும்பின் நிலைமையை அவதானிக்கும் போது , வைரஸ் பிறழ்வுகளை அறியும் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் போது 90 சதவீதத்திற்கும் அதிகமான ஒமிக்ரோன் பரவியுள்…
-
- 0 replies
- 154 views
-
-
Published on 2022-02-04 13:07:45 யாழ். வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31 ஆம் திகதி முதல் பருத்தித்துறை - பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவ…
-
- 0 replies
- 195 views
-