Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கம் பராமுகமாக இருக்காது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன. முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில் கடல் வளங்கள் பலவற்றையும்…

    • 0 replies
    • 143 views
  2. அனுரவின் வாகனம் மீது முட்டைத் தாக்குதல் – பொலிஸில் ஜே.வி.பி. முறைப்பாடு! தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த வாகனம் மீது, முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜே.வி.பி. இன்று (புதன்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. கம்பஹா கலகெடிஹேன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த வாகனம் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகவே உரிய விசாரணை நடத்தி, சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோரி, இவ்வாறு முறைப்பாடு பதிவு ச…

    • 0 replies
    • 129 views
  3. யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக காணாமல் போனோரின் உறவுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, தலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் போனோரின் உறவினர்களுக்கு கடந்த ஒரு வார காலத்திற்குள் 100 மில்லியன் ரூபாயை அரசு வழங்கியுள்ளதாக அலி சப்ரி தெரிவிக்கின்றார். '…

  4. 2,292 மில்லியன் திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து பசில் விடுதலை ! திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான மற்றுமொரு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,292 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தி நாட்காட்டி அச்சிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற நிலையில் சாட்சிகளை அழைக்காமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டு…

  5. கிடைக்காத விடயத்திற்கு போராட்டம் என்கிறார் சப்றி! January 30, 2022 கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி, “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள்.கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள் அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம் எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கி…

  6. இந்திய மீனவர்கள் சுற்றி வளைப்பு – 21 தமிழக மீனவர்கள் கைது! February 1, 2022 பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்த இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (31.01.22) நள்ளிரவு இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்ற…

  7. Published by T. Saranya on 2022-02-01 10:16:03 (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாணசபை முறை நீக்கப்பட்டுள்ளதா இல்லையா என எமக்கு தெரியாது. என்றாலும் மாகாணசபை தேர்தல் இடம்பெறாததால் மக்கள் பிரதிநிகள் இல்லாமல் பாரியளவில் நிதி மாகாணசபை மட்டத்தில் பரிமாறப்படுகின்றமை நல்லதில்லை. அதனால் அந்த நிதியை விரைவாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதே உகந்தது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பில் மாகாணசபை தேர்தல் முறை நீக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாக…

  8. Published on 2022-02-01 11:59:29 கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் தங்களை பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுவதோடு, 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும்உள்ளடங்குகின்றனர். அத்தோடு இரண்டு கர்ப்பிணித் தாய்மாரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என மருத்துவர் நிமால் அருமைநாதன்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது தொற்று பரவும் வேகம் அதிகமாக காணப்படுகின்றமையால் பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடை…

  9. நாட்டின் பல பாகங்களில் திடீர் மின்வெட்டு! by Dhackshala in இலங்கை, பிரதான செய்திகள் 71 0 A A 0 32 SHARES 1.1k VIEWS Share on FacebookShare on Twitter நாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் முதல் செயலிழந்திருந்த நிலையில், சீர்செய்ய…

  10. யாழ். போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு! by shagan in இலங்கை, பிரதான செய்திகள் 70 0 A A 0 30 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிச…

  11. 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி January 30, 2022 ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமாகி கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2022/172475

  12. மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டம் கடந்த வியாழக்கிழமை காணாமல்போயிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரும் இன்று வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர்.இந்நிலையில் வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை வீதிக்கு குறுக்காக மீன்பிடி படகுகள், மரக்குற்றிகள் என்பன போடப்பட்டு வீதி முற்றாக மறுக்கப்பட்டு போராட்டம் இடம்பெறுகின்றது. எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா’ –…

  13. தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி அமைச்சு தீர்மானம் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். LIOC நிறுவனத்திடம் இருந்து நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1264456

  14. - க. அகரன் தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தயிகுழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்…

  15. (ஜெ.அனோஜன்) இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிமான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நேற்றை தினம் மேலும் 1,056 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகபடியான தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் மாறுபாடு இப்போது இலங்கையில் பெரும்பாலான கொவிட் தொற்றாள்கள் தோற்றுவிக்கும் முக்கிய மாறுபாடாக மாறி வருகிறது. தற்சமயம் நாட்டில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 610,103 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்ற…

  16. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பொய்யாக சில விடயங்கள் இருக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் 13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்ட…

    • 3 replies
    • 381 views
  17. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணைக்கு! வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக தன்னை பெயரிட்டமைக்கு எதிராகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்னை பிரதிவாதியாக பெயரிடும் தீர்மானம் ஆதாரமற்றது என்று சுட்டிக்காட்டும் வசந்த கரன்னாகொட அதனை இரத்து செய்யும் நீதிப் பேராணை கட்டளையொன்றை பிறப்பிக்குமாற…

    • 0 replies
    • 241 views
  18. தமிழக மீனவர்களின் செயலை கண்டித்து யாழில் போராட்டம்! தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட…

    • 0 replies
    • 202 views
  19. மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களை தெரிவிப்பதாகவும் அதற்கு பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்! – Athavan News

    • 0 replies
    • 213 views
  20. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிட்டுபூங்கா பிரகடனம் கிட்டுபூங்கா பிரகடனம் “தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சி…

    • 0 replies
    • 277 views
  21. யாழ் பலாலி விமான நிலையம், கொரோனா காரணமாகவே பூட்டிக்கிடக்கிறது – அதில் அரசியல் இல்லை! January 30, 2022 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன அதே போல் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன அதேபோ…

  22. ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் …

  23. Published by J Anojan on 2022-01-30 14:06:38 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட (அரசியல் கைதிகள்) 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், தனியார் விடுதியில் அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 'பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை என…

  24. (எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான அடுத்த கட்டம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரைக்கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி வெள்ளியன்று இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினரால் இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மன்றில்…

  25. Published by T Yuwaraj on 2022-01-30 16:04:27 பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில்நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரில், நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தவாது யுவதியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வரின் சடலங்கள் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். அட்டாம்பிட்டிய தோட்ட பகுதியை சேர்ந்த ராஜா டேவிட் குமார் (23), சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21), பவாணி (22), சிந்து (18) மற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.