Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய மூன்று கப்பல்கள் இலங்…

  2. பிரச்சினைகளைக் கையாள்வதற்கான உத்தியாக இராணுவமயமாக்கலைப் பயன்படுத்துகிறது அரசாங்கம் - அம்பிகா சற்குணநாதன் (நா.தனுஜா) நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஓர் உத்தியாக அரசாங்கம் இராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்புநிலையங்களில் இராணுவத்தினர் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் நேற்று செவ்வாய்கிழமை அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய…

  3. சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசியமா? பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வது தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மு…

  4. வீதியினை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டம் கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி வேரவில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி பொது மக்கள் நேற்று (22) நீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று காலை யாழ்ப்பாணம் மன்னார் ஏ32 வீதியினை பல்லவராயன்கட்டு பகுதியில் மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு போன்ற கிராம மக்கள் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்புகளுக்கு பிரதான வீதியாக காணப்படுகின்ற 22 கிலோமீற்றர் நீளமான பல்லவராயன்கட்டு தொடக்கம் கிராஞ்சி வேரவில் வரை செல்கின்ற வீதி மிக மோசமாக நிலையில் காணப்படுகிறது. வீதி புனரமைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டும் இதுவரை இழுபறி நிலையில் காணப்படுகிறது என்றும் எனவே பொது மக்களின் ச…

  5. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதகத் தன்மை சிங்கள மக்களுக்குப் புரியாது - ஹர்ஷடி சில்வா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள மக்கள் யாரும் கைதுசெய்யப்படாததால் அதன் பாதக தன்மை சிங்கள மக்களுக்கு தெரியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத சட்டத்தின் பாதக தன்மை மற்றும் அதன் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் எவ்வாறான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது தொடர…

  6. இந்தியா வழங்கிய கடனை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தத் திட்டம்? இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை தொகையை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். 14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹோம் சொப்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். http://www…

  7. சர்வ கட்சி மாநாட்டில், அரசியல் பேசும் இடமல்ல – கப்ராலை சாடினார் ரணில் – மன்னிப்பு கோரினார் கோட்டா! இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(புதன்கிழமை) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். சர்வகட்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவரின் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவ…

    • 1 reply
    • 190 views
  8. இந்தியா, சீனாவை அடுத்து... அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம், 200 மில்லியன் டொலர் கடன் கோரியது அரசாங்கம் பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த கடன் தொகை கோரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடனில் 1.5 பில்லியன் டொலரை மருந்துகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கைத்தொழிலுக்கான மூல்பொருட்கள் இறக்குமதிக்காக செலவிடப்படவுள்ளது. அத்துடன், ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்த பயன்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்…

  9. அரசின் சர்வகட்சி மாநாடு... பேருந்து போன பிறகு, கை காட்டும் வேலை ஆகும் – வேலு குமார் “அரசின் சர்வகட்சி மாநாடு, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்.” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும்…

  10. ஜனாதிபதிபதி தலைமையில், நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில்... 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநாட்டை புறக்கணித்துள்ளன. https://athavannews.com/2022/1273054

  11. ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இன்று – பிரதான கட்சிகள் சில புறக்கணிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வக்கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன…

  12. எரிபொருள் விநியோகத்தை... துரிதப்படுத்துமாறு, நாமல் கோரிக்கை! மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1272971

    • 3 replies
    • 202 views
  13. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !! தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் தெல்கந்த முதல் நுகேகொட வரை பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். அரசாங்கம் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உணர்வற்ற முறையில் செயற்படுவதாக…

  14. நிதியமைச்சரை... நீக்குவது குறித்து, நேற்று ஆளும்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டதா? நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஆளும் தரப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது. நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என்றும் மாறாக அவரது நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன என்றும் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்…

    • 1 reply
    • 179 views
  15. தியாக தீபம் திலீபனின்... இறுதி வார்த்தைகளை, நாடாளுமன்றில் பகிர்ந்துகொண்டார் விஜித ஹேரத்! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உ…

    • 3 replies
    • 319 views
  16. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில், வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும். மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது . 2007 ஆம் ஆண்டு தாய்லாந…

    • 25 replies
    • 1.6k views
  17. உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலாத்துறையினர் வருகை அதிகரித்துள்ளது. பெருமளவு டொலர்களும் வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகிய காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள…

    • 5 replies
    • 447 views
  18. பயங்கரவாதத் தடை... தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !! சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெள…

    • 4 replies
    • 385 views
  19. ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1272915

  20. பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார். 29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார். இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி…

    • 12 replies
    • 700 views
  21. மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Tamilmirror Online || மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்

  22. பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றுநாடளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் போது புலனாய்வு அமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகள…

    • 0 replies
    • 202 views
  23. சாப்பாடு இல்லை.. குழந்தைக்கு பால் கூட இல்லை.. தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் இலங்கை மக்கள்.. https://tamil.oneindia.com/ இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. …

  24. அரசியல் கைதிகளை விடுவிக்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் உத்தரவை பெற வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் நீண்ட காலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அடுத்த பேச்சு வார்த்தைக்கு முன்னர் விடுவிப்பதற்கான உத்தரவை நடக்கவிருக்கும் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாத…

    • 0 replies
    • 194 views
  25. வடக்கு கிழக்கு இளைஞர்கள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றார்கள்… 2009 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிலே இளைஞர்களை உரிமை, போராட்ட சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்காக திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கபடத்தனமான கைங்கரியத்தை அப்போது ஆட்சியில் இருந்த அரசு மேற்கொண்டது. விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை எதிர்கால இளைஞர்களை தப்பான வழியில் இருந்து ஒரு நல்ல வழிக்கு இட்டுச் செல்ல முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்குவில் பகலவன் விளையாட்டுக் கழக மைதான பெயர்ப்பலகைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் நேற்று (21)…

    • 0 replies
    • 208 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.