ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு January 15, 2022 ‘நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.’ இவ்வாறு கூறியிருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிக…
-
- 9 replies
- 885 views
-
-
இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது தம் தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்… ´நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நன்றியறிதலின் முக்கியதுவத்தை எடுத்துயம்பும் பொங்கல் நாளில்…
-
- 1 reply
- 502 views
-
-
தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன் தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நந்தவனம் முதியோர் இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த காலத்தில் அனைவரும் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். இதேவேளை, குறித்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/126…
-
- 12 replies
- 784 views
-
-
10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம் " இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின் கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவா…
-
- 0 replies
- 278 views
-
-
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பெரும் பிரச்சினைகளை இலங்கைஎதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பாரிய அளவில் உள்ள போதும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன என அந்த அ…
-
- 0 replies
- 239 views
-
-
பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை Posted on January 16, 2022 by தென்னவள் 13 0 பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வும் பாரம்பரிய தமிழர் விளையாட்டு நிகழ்வும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தமிழர்களின் பாரம்பரியத்தினையு…
-
- 3 replies
- 326 views
-
-
இலங்கையில் வாழும் கனடா பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக கனடா கூறியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து வகைகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், உணவு, குடிநீர், எரிபொருள் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், இலங்கையிலுள்ள தமது நாட்டு பிரஜைகளிடம் கனடா வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, உணவு மற்றும் எரிபொருள் தொடர்பிலான தகவல்களை அறிந்துக்கொள்ள உள்ளுர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் கனடா கேட்டுக்கொண்டுள்ளது. …
-
- 3 replies
- 694 views
-
-
முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு. வட தமிழீழம் தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பேரினவாத சிங்கள அரசுக்கான பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் களப்பு பகுதியில் குறித்த ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. http…
-
- 5 replies
- 808 views
-
-
1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது. இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொல…
-
- 6 replies
- 760 views
-
-
Published on 2022-01-15 14:53:00 (நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார இயங்குகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. கொவிட் - 19 வைரஸ் பரவலின் புதிய அலைகள், தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கை கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்ல வேண்டும் -சுனில் ஹந்துன்நெத்தி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இலங்கை செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய வளங்களை கடனை அடைக்கும் நோக்கில் விற்பனைச் செய்யக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நிதி தரமதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கை தரமிறக்கப்படுவது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் இயலாமையைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக இந்த தடையை …
-
- 0 replies
- 256 views
-
-
அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் வினோதம் அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வ…
-
- 0 replies
- 288 views
-
-
பாதுகாப்பு செயலாளர் வழங்கியுள்ள உறுதி பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகி 24 மணித்தியாலங்கள் கடப்பதற்குள் பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பில் விமர்சிப்பது நியாயமில்லை என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று (15) காலை மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=15…
-
- 0 replies
- 279 views
-
-
இரண்டு மாதங்களுக்கு மேலாக தேங்கிக்கிடக்கும் 1,700 கொள்கலன்கள்! கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது, மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு காரணம் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என அச்ங்கம் மேலும் கூறியுளளது. https://athavannews.com/2022/1262035
-
- 0 replies
- 302 views
-
-
சிறிசேனவை திட்டமிட்டு சிறையில் அடைக்க முயற்சி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். இந்த பின்னணியில் செயற்படுபவர்கள் ஹோடர்பாக தமக்குத் தெரியும் என்றும் சரியான நேரத்தில் விவரம் வெளியிடப்படும் என்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சித்துவருவதனால் அவரைச் சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சவாலை எதிர்கொள்ள மைத்திரிபால சிறிசேனவும் அவர் தலைமையிலான கட்சியும் தயாராக இருப்பதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை, தவறை…
-
- 1 reply
- 357 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராணுவத் தளபதிகள் மீது சர்வதேச தடை தீர்மானத்தினைப் பாவித்து தடைகளைக் கொண்டுவருதல் அவசியம் - இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை முன்வைத்திருக்கும் மனிதவுரிமை அமைப்புக்கள். இங்கிலாந்துத் தமிழர்கள் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்கள் இணைந்து "உலக மக்னிட்ஸ்கி சட்டம்" முலன் இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு நேரடிக் கட்டளையினை வழங்கி பொறுப்பாகவிருந்த ராணுவத் தளபதிகள் மீது தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கத்தைக் கோரியிருக்கிறார்கள். உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு எனும் மனிதவுரிமை அமைப்பொன்று இலங்கையில் இடம்பெற்ற போற்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று தம்மால் வெளியிடப்பட்…
-
- 0 replies
- 192 views
-
-
நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். https://athavannews.com/2022/1261990
-
- 1 reply
- 579 views
-
-
கடந்த ஆண்டு மட்டும் 1,400 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்ட மதியவங்கி ! 2021 ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய் பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், பணம் அச்சடிக்கும் நடைமுறை புதிய நிகழ்வு அல்ல என குறிப்பிட்ட அவர் அந்த நடவடிக்கையை தற்போது குறைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1261971
-
- 1 reply
- 141 views
-
-
புதிய கடன் பெறுவதற்கான இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து ! சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமானதிலிருந்தே இரு நாடுகளும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்திவருகின்றன…
-
- 0 replies
- 115 views
-
-
(இராஜதுரை ஹஷான்) புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ந்து தூர புகையிரத போக்குவரத்து சேவை இரத்து செய்யப்பட்டதால் பொது பயணிகள் புகையிரத நிலையங்களில் பெறும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். தூரபிரதேச புகையிரத சேவைகள் தொடர்ச்சியாக பிற்போடப்படல்,சேவையில் நிலவும் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு கோரி நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 24 மணிநேர திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எல்ல, நுவரெலியா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களை நோக்கி செல்லதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று காலை கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக காத்திருந்தனர். தூரபிரதேச பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முழுமையாக இரத்து செய்யப்பட…
-
- 1 reply
- 338 views
-
-
கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – தாயகத்தில் பொங்கலுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு. Posted on January 14, 2022 by சமர்வீரன் 40 0 பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் போரின் வடுக்களுடன் உண்ணப் போதிய உணவின்றி உடுக்கத் துணியின்றி இருக்க இடமின்றி நோய்க்கு மருந்தின்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் அல்லல்படுகிறார்கள். மக்களை மீள் குடியேற்றம் செய்து விட்டோம் என்று சிங்கள அரசு சொன்னாலும் அவர்களில் பெரும்பானோர் தமது சொந்த கிராமத்தில் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் …
-
- 1 reply
- 347 views
-
-
“பழைய குருடி கதைவை திறடி” மீண்டும் கொழும்பில் பொலிஸ் பதிவு! January 14, 2022 வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக காவற்துறைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், அரச அல்லது தனியார் காணிகளில் இடம்பெறும் நிர்மாணங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விவரங்கள் திரட்டப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இ…
-
- 1 reply
- 348 views
-
-
மனித சமூகத்துக்கு இடையில் சுமுகமான தொடர்பை ஏற்படுத்த பொங்கல் துணையாக அமைகின்றது – எதிர்க்கட்சித் தலைவர்! மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலக வாழ் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை இறை பக்தியுடன் வெகு விமர்சையாக கொண்டாடும் நாள் இன்றாகும். விவசாயம் சார் சமூக கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்து சமூகம், செழிப்பான புத்தாண்டில் தனது முதல் அறுவடையை சூரியபகவானுக்கு பூஜிப்பதை அடிப்படையாகக் கொண்டு …
-
- 1 reply
- 239 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை January 12, 2022 வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது. இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் க…
-
- 26 replies
- 2.2k views
-
-
”13 ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சதியே”:கஜேந்திரகுமார் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சதியே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்த சதியில் இருந்து முப்பது வருடங்களுக்கு மேலாக உயிர்த்தியாகம் செய்து ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த சதியை நாங்கள் மக்களாலேயே முறியடிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அதன்போது …
-
- 3 replies
- 466 views
-