Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “விவசாய உபகரணங்களினால் அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள்” December 23, 2021 நாட்டு மக்களுக்காக அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும், அனைத்து மக்களும் அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அந்த பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்க தயாராகவுள்ளது என தெரிவித்தார். விவசாயிகள் தத்தமது கைகளிலுள்ள விவசாய உபகரணங்களை எடுத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள் என தெரிவித்த அவர், அதேபோல் இல்லத்தரசிகள் சமையலறையிலிருக்கும் உரல், கத்தி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீதியில் இறங்குங்க…

  2. அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுகின்றனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு! தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதிக்கு நேற்று(செவ்வாய்கிழமை) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலமீன்மடு, முகத்துவாரம் லைட்ஹவுஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது…

  3. வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு! “செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று(புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார். வடமராட்சியின் நுழைவாயில்களில் பிரதானமாகத் திகழும் வல்லைவெளியானது இயற்கை அழகும், இறை நம்பிக்கையும் நிறைந்த பிரதேசமாகும். நீண்ட பயணங்களின்போதான காவல்தெய்வ வழிபாட்டிடங்களை கொண்டுள்ள வல்லைவெளியானது, வருடம்முழு…

  4. வவுனியா வடக்கு பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு – திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரானார் பார்த்தீபன்! வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு சபையில் சர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இருதடவைகள் தோல்வியடைந்திருந்தது. இதனையடுத்து உள்ளூராட்சி சட்டங்களின் பிரகாரம் புதிய தவிசாளரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. குறித்த தேர்தல் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று(புதன்கிழமை) காலை வடக்கு பிரதேச சபையின் காலாசாரமண்டபத்தில் இட…

  5. (நா.தனுஜா) விவசாயத்துறையைக் கையாளும் பொறுப்பு அண்மையில் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் தொடர்பில் போதிய தெளிவற்ற கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை ஆள்வதற்குப் பொருத்தமானவர் அல்ல. அவரால் நியமிக்கப்படக்கூடிய இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகம் பற்றிய போதிய தெளிவில்லை. இவர்களால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்கமுடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரங்கமான ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஏற்பாட்டாளர் ஹேமகுமார நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்த…

  6. (நா.தனுஜா) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 11.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இம்முறையில் கணிப்பிடப்படும் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதேவேளை அண்மைய எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்படக்கூடிய அதிகரிப்பினால் எதிர்வரும் மாதங்களில் இப்பணவீக்கம் முன்னெதிர்வு கூறமுடியாத அளவிற்கு மேலும் உயர்வடையக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. நவம்பரில் 11.1 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம் | Virakesari.lk

  7. செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சம்பந்தன் விலகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மருத்துவ ஆலோசனைக்கமைய செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அவர் அரசியல் கலந்துரையாடல்கள், ஊடக சந்திப்புகள், விருந்தினர் சந்திப்பு ஆகியவற்றில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளார். எனினும் அவர் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவார். பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 1977 ஆம் ஆண்டு முதல் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார். …

    • 17 replies
    • 835 views
  8. தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கெதிரானதல்ல December 22, 2021 ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. இந்த தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. இது ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல. இம்மாநாட்டில், இறுதி வடிவமான தமிழ் பேசும் கட்சிகள் சார்பான ஆவண நகல் தயாரிக்கப்பட்டு தற்போது கட்சி தலைவர்களின், இறுதி உடன்பாட்டுக்காக அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவே இந்த செயற்பாட்டின் இந்த கட்டத்தின் உண்மை நிலை என்பதை கூற விருபுகிறேன். இந்த ஒருங்கிணைவை பிடிக்காதவர்…

    • 1 reply
    • 284 views
  9. நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை சீனாவுக்கு வழங்குகிறோம் - அரசாங்கம் (எம்.மனோசித்ரா) நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்திலான உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே குறித்த தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நாட்டில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் யாருடைய தவறின் காரணமாக சீன உரக்கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி ஏற்பட்டது? என்று நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் க…

    • 1 reply
    • 274 views
  10. பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமையாக்கப்படும் December 21, 2021 எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுக்திற்கான பயணத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படு…

  11. மரக்கறிகளின் தேவை அதிகரிப்பு… விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்பு பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் மரக்கறிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்த வியாபாரிகள் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். கரட் விலை 320 முதல் 480 வரையிலும், கோவா 230 முதல் 250 வரையிலும், வெண்டிக்காய் சுமார் 260 வரையிலும், பீட்ரூட் 370 வரையிலும், 370 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். மேலு…

  12. அடுத்த சில தினங்களில் சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் எனவும் அதன் மூலம் ஜனவரி மாதத்தில் கடனை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்ததில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. சீனா வழங்கும் இந்த கடன் நிதி எவ்வித செலுத்துதல்களுக்கும் பயன்படுத்த முடியாது என சீனா விதித்திருக்கும் நிபந்தனையே இதற்கு காரணம் என சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. சீனா வழங்கும் இந்த கடனை வைப்பு நிதியாக வங்கியில் வைத்திருக்க முடியுமே அன்றி செலுத்துதல்களுக்காக பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய கடனை வழங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த சீனாவின் பிரதிநிதிகள், இரண்டு வாரங்களுக்கு முன்னர…

  13. எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ப்ரோபைன் என்றழைக்கப்படும் இரசாயன வாயுவின் அளவு அதிகரித்தமையே இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்த ப்ரோபைனின் அளவு 30 வீதத்திற்கும் அதிகமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதாக அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஜன…

  14. எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் மேய்வதில்லை எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தன்னிடமிருந்து பட்டப்படிப்பு சான்றிதழை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் உரிமை. அதில் எந்த தவறும் இல்லை. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/எவவளவ-ப…

  15. எவ்வித இறுதி நிலைப்பாடும் இல்லாமல் இன்றும் கூட்டம் முடிவடைந்தது – புதிய ஆவணத்தை தயாரிக்க முடிவு ரெலோ தயாரித்த ஆவணத்தை ஏற்பதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 5 பக்க ஆவணமொன்றை இன்று கூட்டத்தில் ரெலோ கையளித்திருந்த நிலையில் அதில் வரலாற்று தவறுகள், விடுபடல்கள் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. இறுதியில் ரெலோ தயாரித்த ஆவணத்தையும், இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தையும் கொண்டு, புதிய ஆவணமொன்றை தயாரிப்பதென முடிவாகியுள்ளது. தற்போது புதிய வரைபை தயாரிக்கும் பணியில் சிறிகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.…

  16. அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) 13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும்…

    • 12 replies
    • 806 views
  17. பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாடு விலை இல்லை பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இன்று நள்ளிரவு முதல் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், வாடகை முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாயாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1257949

  18. எரிபொருள் விலை அதிகரிப்பு: பெட்ரோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவன தலைவர் இராஜினாமா! பெட்ரோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக பணிப்பாளர் உவைஸ் மொஹமட் பதவி விலகியுள்ளார். இந்நிலையில் குறித்த பதவிக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. உவைஸ் மொஹமட் பதவி விலகுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1257970

  19. மீண்டும் அமைச்சரவை மாற்றம்: இறுதிநேரத்தில் அறிவிக்கவுள்ள ஜனாதிபதி கோட்டா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மீண்டும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இது பெரும்பாலும் நடக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தை போன்று ஜனாதிபதியின் இறுதி நிமிடத்தில் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் நாடு திரும்பியதும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நேற்…

    • 1 reply
    • 160 views
  20. வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும் – விக்னேஸ்வரன் எச்சரிக்கை மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள அவர், இந்தநிலை ஏற்பட்டால் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே மலையக மற்றும் முஸ்லீம் தலைவர்களும் தம்மோடு இணைந்துள்ளதாக விக்னே…

  21. தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்: சித்தார்தனுக்கு சுகயீனம், சுமந்திரன், மாவை பங்கேற்பு தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். இரண்டாவது கூட்டத்தில் கடந்த கலந்துகொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தார். அத்தோடு ஸ்ரீகாந்தா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்றனர். மேலும் சுகயீனம் …

  22. காரைநகர் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு – இரு உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம் உடன் அமுலுக்கு வரும்வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். காரைநகர் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட காரணத்தினால் அவர்களை கட்சியிலிருந்து விலக்க முடிவு எடுக்கப்பட்டது என க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் த…

  23. இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (20) கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ் மொழி பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்து இந்திய பிரதமரிடம் ஆவணமொன்றை கையளிக்கவுள்ளன. தமிழ் மக்களிற்கு உச்சபட்ச அதிகாரங்களுடனான சமஷ்டி அடிப்படையிலான இறுதி தீர்வை ஏற்படுத்த விரைவான நடவடிக்கையெடுக்க வேண்டும், அந்த தீர்வுக்கு இடையில்- இடைக்கால ஏற்பாடாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்- என தமிழ் கட்சிகள் அந்த ஆவணத்தில் வலியுறுத்தவுள்ளன. ரெலோவின் முன்முயற்சியில் ஆரம்பித்த இந்த நகர்வினால், இலங்கை தமிழ் அரசு கட்சி மிகப்பெரிய ஈகோ பிரச்சனையில் சிக்கியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு அணியினர்- நாமே …

  24. சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம் – சுரேன் ராகவன் சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை சுயாதீனமான சுதந்திரமான நாடு என்ற ரீதியிலும் எங்களுடைய எதிர்காலத்திற்காகவும் வெளிவிவகார உறவினை எங்களுடைய நாட்டின் பெருமைக்காகவும் தனித்தன்மைக்காகவும் பாவிக்க வேண்டியதாக உள்ளது. இலங்கை ஒரு நாட்டின் பகடைக்காயாக மாறக்கூடாது. அண்மையில் இடம்பெற்…

  25. இந்தியாவிடம் எதைக் கோரவேண்டும் என்பதை தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டும் – காணாமல்போனோரின் உறவுகள் இந்தியாவிடம் எதைக் கோர வேண்டுமென்பது குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டியது அவசியமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாக ஈழத்தமிழர் உறவுகள் எதிர்பார்த்து நிற்பது சர்வதேச நீதியை. உள்ளகப் பொறிமுறையும் அல்ல. கலப்புப் பொறிமுறையும் அல்ல. வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கைத் தீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.